பகுதி-42
நண்பன் தன்னிடம் ஏதோ கூற வருவதை புரிந்து கொண்ட ஆதி,"என்ன மச்சான் எங்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?"என்று வினவ அதற்கு ஒரு பெருமூச்சு விட்டவன் ,"இல்லை ஆதி நான் உடனே டெஹ்ராடுன் (Dehradun) கிளம்பி போகனும்,"என்று கூற ஆதியோ,"ஓ....ஆம ல நீ ட்ரெயினிங் ஒரு வருஷம் போகனும் ல, ஆனால் அதுக்கு ஏன் தயங்குற?"என்றான் புரியாமல்.
"இல்லை ஆதி நான் இன்னும் நம்ம அபூ வோட ஆக்ஸிடென்ட் பத்தி கண்டு பிடிக்கல.இப்ப நான் ட்ரெயினிங் போனா ஒரு வருஷம் கழிச்சு தான் திரும்ப வர முடியும். இப்பவே எவிடென்ஸ் எல்லாம் அழிச்சிட்டாங்களோ னு கவலை யா இருக்கு.இதில இன்னும் ஒரு வருஷம் அப்பறமா என்ன நடக்கும்னே சொல்ல முடியாது.அதான் கொஞ்சம் கவலையாவும் கொஞ்சம் குற்ற உணர்ச்சியாவும் இருக்கு."என்று கூறினான். தன் நண்பனை பார்த்து புன்னகைத்த ஆதி ," மச்சான் இதில் நீ ஃபீல் பண்ண ஒன்னும் இல்லை டா.நம்ம என்ன தான் கஷ்டப்பட்டாலும் மறைக்கப்பட்ட விஷயம் எப்ப தெரியனுமோ அப்ப தான் தெரியும். உண்மைய ரொம்ப நாள் மறைச்சு வைக்கவும் முடியாது.ஒரு நாள் கண்டிப்பா வெளிய வரும்.இப்ப நீ எதை பத்தியும் கவலை படாம சந்தோஷமா உன் லட்சியத்தை நோக்கி போ." என்று கூற அப்பொழும் சமாதானம் ஆகாத ஜீவா ,"உனக்கு ஒன்னும்....."அவன் வாக்கியத்தை முடிக்கும் முன்பே அவனை தடுத்த ஆதி ,"நீ அடி தான் டா வாங்க போற."என்று கூற ஜீவா முகத்தில் குழப்பம் நீங்கி புன்னகை மலர்ந்தது.
"அப்பறம் நிலா எப்படி இருக்கா?"
"ம்.... மேடம் சூப்பரா இருக்காங்க."
"இப்ப எங்க நர்ஸரிலயா?எப்ப வருவா ? நான் பார்கனுமே,"
"ஈவினிங் கூட்டிட்டு வருவேன். நீ எப்ப கிளம்பனும்?"
"உன்னை பார்க்க தான் வந்தேன் . அடுத்த திங்கள் டெங்ராடுன் ல இருக்கனும். இப்பவே கோயம்புத்தூர் கிளம்பனும் மச்சி கொஞ்சம் வேலை இருக்கு.முடிஞ்சா நிலா வ பார்கலாம் னு நெனச்சேன் . பரவாயில்லை அப்ப நான் கிளம்பறேன்." என்று கூற ஆதியோ ,"இன்னைக்கு இருந்துட்டு போலாம் ல ஜீவா."
"இல்லை மச்சி தலைக்கு மேல வேலை இருக்கு.நான் கிளம்பறேன்."
"சரி வா நான் உன்னை வழி அனுப்பி வைக்கறேன்."
"ஏன்டா இங்க இருக்கிற வாசலுக்கு நீ துணைக்கு வேற வரணுமா?"
"உன்னை டெங்ராடூன்க்கு தான் வழி அனுப்பி வைக்க முடியாது அட் லீஸ்ட் கீழ வரைக்கும் வரேனே."என்று உணர்ச்சி பொங்க கூற தன் நண்பனின் நிலை அறிந்து கொண்டவன் அமைதியாக அவனை தொடர்ந்தான்.
பிரிவு துயரில் வாடுவது காதல் மட்டுமல்ல நட்பும் கூடத்தான்.நல்ல துணைவன் நம் அருகில் இல்லாமல் தொலை தூர பயணம் மேற்கெள்கிறான்.அதிலும் அவனால் ஒரு வருடம் தேவைக்கு தவிர செல்பேசியை உபயோகப்படுத்த முடியாத நிலை. இவை இரண்டுடனும் தன்னால் அவனை வழி அனுப்பி வைக்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி யும் சேர்ந்து கொள்ள ஆதி அமைதியாக நண்பனை கட்டி அணைத்து பிரியாவிடை வழங்கினான்.
அன்றைய தினம் முழுவதும் ஆதியின் மனதில் ஜீவா வை குறித்த எண்ணங்களே தோன்ற மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தான்.
மாலை எப்பெழுதும் போல நிலாவை நர்ஸரியிலிருந்து அழைத்து வந்தவன் மனம் நிலாவை கண்டதும் சிறிது தெளிவடைந்தது.
அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல நிலாவை நர்ஸரியில் விட்டவன் தன் அலுவலகம் நோக்கி விரைந்தான்.
**********
தன் தோழியுடன் சேர்ந்து மாமல்லபுரம் நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள் மதுமிதா.அவளது மனம் நேற்று இரவு தன் தாயிடம் தங்களது மாமல்லபுரம் பயணத்தை பற்றி கூறிய நிகழ்வை எண்ணியது.
"மாமல்லபுரமா? அது ரொம்ப தூரம் இருக்கே எப்படி போகபோறீங்க?"
"ம்...டூவீலர்ல தான்மா. நாங்க இரண்டு பேரு தானே.அதுவே போதும்.
"என்ன?டூ வீலர்ல போகப்போறீங்களா?அது எவ்வளவு தூரம் தெரியுமா? அவ்வளவு தூரம் வண்டியில் போறது சரி வராது."
அதற்கு மேல் பேச ஒன்னும் இல்லை என்று அவள் அன்னை அவ்விடம் விட்டு நகர வழக்கம்போல் தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்நாள் வஞ்சியவள்.
"அப்பா.....ப்ளீஸ்....."
"சாரிடா அம்மா சொல்றது ரொம்ப சரி.என்னால எதுவும் செய்ய முடியாது."கைவிரித்த தந்தையை இதழ் பிதுங்கி சோகமான முகபாவனையுடன் பார்த்தாள் மதுமிதா. இந்த செய்கை அவள் சிறுவயது முதல் தன் தந்தையிடம் காரியம் சாதிக்க கையாளும் யுக்தி. நினைவுகள் மறைந்து போயிருந்த நிலையில் இந்த அவளது செயல் மதுவின் தந்தையின் மனதை தென்றலென வருட அவர் மனம் இரங்கினார்.
"அம்மா சொல்றது கரெக்ட் தான் டா. மாமல்லபுரம் எங்க இருக்குனு தெரியுமா ?அங்க டூவீலர்ல தனியா நீங்க இரண்டு பேரும்போய்ட்டு வர்றதுனா என்னால் ஒத்துக்க முடியலைடா. ம்.....வேணா ஒன்னு பண்ணலாம்."
"என்ன பண்ணலாம் பா?"
"நீங்க இரண்டு பேரும் காலையில் ஓலா கேப் ல (ola cab) போங்க ஆனால் நம்ம டிரைவர நான் பின்னாடியே அனுப்பறேன். திரும்பி வரும்போது நம்ம கார்ல் வந்திருங்க, என்ன சொல்ற?"
"என்ன பா??"
"காலம் ரொம்ப கெட்டிருக்குமா ஒரு தகப்பனா எனக்கு பயம் இருக்கத்தான் செய்யுது."
"ம் சரிபா.."
அவர் கூறுவது சரியாக இருந்தாலும் ஏனோ தன் சுதந்திரம் பரிபோவது போலவே உணர முடிந்தது.
'மதூ............'
"ஆ.....என்னடி என்னடி இப்படி கத்துற?ஆ......காதெல்லாம் கொய்ங்...னு கேட்குது."
"ஏன்டிமா சொல்லமாட்ட எவ்வளவு நேரமா உன்னை கூப்பிடறேன் "
"சாரி சாரி டி ஏதோ ஒரு நியாபகத்தில இருந்துட்டேன்.சொல்லு தேவி எதுக்கு கூட்ட?"
"இல்லை நம்ம என்ன எழுதுறது எப்படி எழுதுறது?"
"இதுவரை நான் மாமல்லபுரம் போனதில்லை தேவி அதுனால எனக்கு எதுவும் தெரியலை. "
கூறியவள் மீண்டும் தன் நினைவுகளுக்குள் மூழ்கி போனாள். தன் நினைவு பெட்டகத்திலிருக்கும் தன்பழைய நினைவுகளை மீண்டும் கண்டுபிடிக்க முயற்சித்தாள் பேதையவள். ,
அவளின் மௌனம் கண்ட அவளது தோழி அவளை கைகள் கொண்டு உளுக்கினாள்,"ஆ....என்ன தேவி என்னாச்சு?"
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கவா என்னை தப்பா நினைக்கக் கூடாது சரியா?"
"நான் தப்பா நினைக்கிற அளவுக்கு நீ என்ன கேட்க போற? கேளு"
"அடிக்கடி பேசிட்டு இருக்கும்போது அமைதியாகிற நீ மட்டும் தான் இங்க இருக்க உன் நினைப்பெல்லாம் வேற எங்கையோ இருக்கு,ஏன் அப்படி என்னாச்சு?"
ஒரு நிமிடம் அமைதிகாத்த மதுமிதா தங்களுக்கு முன்னாள் அமர்ந்திருந்த ஓட்டுனரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தேவியை பார்த்தாள்.புரிந்துகொண்ட தேவி கண்களை மூடி திறந்தாள்.
அவர்களது இந்த சம்பாஷனைகளை தடை செய்த ஓட்டுனர்,"எந்த இடத்தில இறக்கி விடனும் மா ?"என்று கேட்டார்.
"அண்ணா அந்த கடற்கரை கோயில் கிட்ட இறக்கிவிட்டுடுங்க,"என்றவாறு அவருக்கு பணம் கொடுத்துவிட்டு இருவரும் கடற்கரை கோவில் நோக்கி நடந்தனர்.
நுழைவு வாயிலில் கடற்கரை கோவிலை பற்றியும் அதை கட்டிய இரண்டாம் நரசிம்மவர்மரை பற்றியும் சிறு குறிப்பு இருந்தது.
அதை கடந்து செல்கையில் நடுவில் தார்ரோடும் இரு பக்கங்களிலும் அழகிய புல்வெளியும் அமைக்கப்பட்டு மிகவும் அழகாக காட்சியளித்தது.
இருவரும் ஏதேதோ பேசியபடி அந்த கோவிலை அடைந்தனர்.நிறைய சிற்பங்கள் சிதைந்து போயிருக்க கோவிலின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருந்தது.
தாங்கள் கொண்டுவந்திருந்த குறிப்பேடில் குறிப்புகளை எழுத துவங்கினர் இருவரும்.தேவி கோவிலின் முன்புறமாகவும் மது பின்புறமாகவும் நின்றிருந்தனர். திடீரென மதுவின் பின்னாலிருந்து ," ஹேய் மது என்ன இது கோலம்?"என்று வினவியபடி ஒரு ஆண் அவளின் தோள்களில் கைபோட மருண்டு விழித்தாள் மதுமிதா.
அவள் மருண்ட விழிகளை பார்த்தவன்,"என்னாச்சு மது ஏன் முகமெல்லாம் வேர்க்குது?"என்று வினவி அவனின் கைக்குட்டையால் அவளின் முகத்தை துடைக்க முனைய அவனிடமிருந்து தன்னை வேகமாக விடுவித்த மது ,"ஹலோ மிஸ்டர் மைன்ட் யுவர் பிஹேவியர்( behaviour),"என்று எச்சரிக்க ,"ஹேய் கமான் மது (hey come on )"என்று அவளின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தவன் மீண்டும் அவளை தொட முயல இம்முறை அவளின் கைகள் பளாரென்று அவனது கண்ணத்தில் இறங்கியது.
"கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்க தெரியாதா உங்களுக்கு? எவ்வளவு தைரியம் இருந்தா பொது இடத்திலேயே ஒரு பொண்ணு மேல கையை வைப்பீங்க?"என்றாள் கோபம் கொப்பளிக்கும் கண்களுடன்.
இந்தப் நிகழ்வை பார்க்க சிறு கூட்டமும் அங்கே குழும தேவி மதுவின் அருகே விரைந்தாள்.
"என்னாச்சு ஒன்னும் பிரச்சினை இல்லையே ,"என்ற வண்ணம் தன் தோழியை ஆராய்ச்சி பார்வை பார்த்தவள் அவள் நலமாக இருப்பதை உறுதி செய்து கொண்டு,"மிஸ்டர் கொஞ்சம் வழி விடறீஙக்ளா நாங்க போகனும்,"என்று கூறினாள் வழியை மறைத்து நின்று கொண்டிருந்தவனிடம். அவனோ ," முடியாது இது என்னோட அத்தை பொண்ணு மதுமிதா ஏதோ நான் பொறுக்கிங்கிற மாதிரி எல்லாரும் பார்க்குறாங்க .நான் எந்தப் தப்பும் பண்ணலை ,"என்றான் பரிதாபமாக.
"அத்தை பொண்ணாவது சொத்தை பொண்ணாவது . எனக்கு மாமாவும் இல்லை அவருக்கு மகனும் இல்லை,"என்றாள் மதுமிதா.
"ஏன் என்பா தனியா வர பொண்ணுகிட்ட தகராறு பண்ற?"சிறு கூட்டமாக அங்கு நின்றுகொண்டிருந்த சிலரில் ஒரு பெரியவர் மதுவிற்கு ஆதரவு கரம் நீட்ட. எல்லாரும் அவனை திட்ட துவங்கினர்.
அவனோ யாரும் எதிர்பாராத வண்ணம் மதுமிதா வின் கைகளை பிடித்துக்கொண்டு,"மது என்ன விளையாட்டு இது.இங்க பாரு உன்னால எல்லாரும் என்ன ரோக்(rogue)மாதிரி பாக்குறாங்க,"
"கையை விடு நான் மதுமிதா இல்லை நீ வேற யாரோனு நினைச்சுகிட்டு என்கிட்ட பேசுற நான் போலீஸ்க்கு ஃபோன் பண்ணிடுவேன் ,"என்றாள் அவனிடமிருந்து திமிரியவாரே அவனோ அவளின் எதிர்ப்புகளை எளிதாக புறக்கணித்து அவளை தர தர வென்று இழுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நகர முயன்றான்.
"அய்யோ...ப்ளீஸ் யாராவது காப்பாத்துங்களேன்,"என்று மது கத்த அவளது தோழியோ செய்வதறியாது அவளின் பின்னாலேயே சென்றாள்.
ஒரு நிமிடம் நின்றவன்,"மது உனக்கு என்னாச்சு ஏன் இபப்டி பண்ற ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான் சென்ஸ் அன்ட் கம் வித் மீ(please stop this non sense andcome with me)."என்றான்.
அவளோ அவனிடமிருந்து விடுபட போராடினாள்.திடீரென்று ஒரு வலிய கரம் அவளை அவனிடமிருந்து இழுத்து தன்னுடன் அனைத்து கொண்டு அதே நொடி அங்கிருந்தவனின் கண்ணத்தில் பளாரென்று அறைய மது உள்பட அனைவரும் அந்த புதியவனை கண்டு கண்கள் விரித்தனர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro