பகுதி-37
" மது இன்னுமா தூங்குறா?"என்று சத்தமாக கேட்டவாரு உள்நுழைந்த மதுவின் தந்தையை,"உஷ்....,மெதுவா பேசுங்க அவ நல்லா அசந்து தூங்குறா,"என்று தடுத்தார் அவளின் அன்னை.
" மதியம் சாப்பிட கூட இல்லையே மா.இபாப மணி எட்டாகுது.எழுப்பி விடு அப்பறம் இராத்திரி தூக்கம் வராது."
" வேணாங்க அவளாவே எந்திரிக்கட்டும்.நீங்க சாப்டீங்களா?"
"இன்னும் இல்லைமா நான் உங்களுக்கு சாப்பிட லேட் ஆகிடுமேனு அவசரமா வந்தேன்."
" ம்...சரிங்க நீங்க கிளம்புங்க.நான் பாத்துக்கறேன்."
"ம்...பத்தரம் ஏதாவது னா உடனே எனக்கு கால் பண்ணு.வெளிய இரண்டு பேர காவலுக்கு போட்டிருக்கேன்.தெரியாதவங்க யாரையும் உள்ள விட வேணாம்."
" ம்...சரிங்க பெரிய பிரச்சினை யா?"
"சே..சே...பிரச்சினை அப்படீங்கிற பேச்சுக்கே இடமில்லை.எல்லாதையும் நான் கவனிச்சிட்டேன்.இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணேன்,சரி அப்ப நான் கிளம்பறேன்."என்று கூறி அவர் விடை பெற்றார்.
தன் இரவு உணவை முடித்துவிட்டு மதுவின் அன்னையும் மதுவிற்கு அருகே கொடுக்கப்பட்டிருந்த படுக்கையில் உறங்கலானார்.
யாருக்காகவும் எதற்காகவும் காத்திராமல் ஆதவன் அதன் வேலையை செய்ய கோவை மாநகரம் தன் இருளை விலக்கிக்கொண்டு செங்கதிர்களை பூசிக்கொண்டது. மதுவின் தாயார் வழக்கமாக அதிகாலை எழும் பழக்கம் கொண்டமையால் சீக்கிரம் விழித்துக்கொண்டார்.அவர் கண்கள் மதுவின் படுக்கையை நோக்கி திருப்ப அவள் இன்னும் தூங்குவதை கண்டு குழம்பினார்.விரைவாக செவிலியர் ஒருவரை அழைத்து வர வந்ந அந்த பெண்ணோ," கவலைபடாதீங்க மேடம் இவங்களுக்கு ஸ்லீபிங் டோஸ் கொடுத்தாருக்காங்க அதான் தூங்குறாங்க என்று கூற,"அது சரிமா ஆனால் அவ நேதங மதியம் இருந்தே தூங்கிட்டே இருக்காளே மா,"
"அப்படியா?"என்று கூறி அவள் மதுவை டெஸ்ட் செய்து பார்த்தவள் வேகமாக டாக்டரை அழைத்து வர , அவரோ ," கவலைபட ஒன்னுமில்லை. அவங்க மனக்குழப்பமும் நாங்க கொடுத்த மருந்தும் சேர்ந்து அவங்களை நல்ல தூக்கத்தில் வைச்சிருக்கு.இன்னும் கொஞ்சம் நேரத்தில முழிச்சிடுவாங்க,"என்று கூறிவிட்டு வெளியேறினார்.
அவர் கூறியது போலவே சில நிமிடங்களில் கண் விழித்த மது தன் தொண்டையை லேசாக செருமினாள்.
"மது....எந்திரிச்சிட்டியாடா நாங்க பயந்தே போய்டோம்,"என்று கூறியவாறு அவளருகில் வந்தார் அவள் அன்னை.
"எனக்கு டாக்டர பார்த்து தனியா பேசனும்,"
"என்னமா பேசனும் எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுமா."
"இல்லை கொஞ்சம் டாக்டர வர சொல்லுங்க ப்ளீஸ்.."அதற்கு.மேல் பேச எதுவும் இல்லை என்பது போல கண்களை மூடி படுத்துகொண்டாள்
சிறிது நேரத்தில் டாக்டரை அழைத்து வந்த மதுவின் தாயார் அவர்கள் இருவரையும் தனியே பேச விட்டு அறையை விட்டு வெளி சென்று காத்திருந்தார்.
"டாக்டர் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள் சுத்தமா இல்ல நான் யாரு என் பெயர் என்ன என சுத்தி உள்ளவங்க யாரு இவங்க நல்லவங்களா கெட்டவங்களா எதுவுமே என்னால புரிஞ்சுக்க முடியல எனக்கு உன்னோட நினைவுகள் திரும்ப கிடைக்குமா?"
"உங்களுக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தாச்சு எந்த விதமான பிரச்சினையும் இல்லை ஒரு சில பேருக்கு விபத்து நடந்ததற்கு அப்புறமா தற்காலிகமா இம்மாதிரி நினைவுகள் தவறி போறது நடக்கும் .அது ஒரு நாள்ளயோ இரண்டு நாள்ளயோ ஒரு வருஷத்திலயோ ரெண்டு வருஷத்துலயோ திரும்பி வந்திரும் திரும்ப வராமல் கண்டிப்பாக இருக்காது அது வரைக்கும் நீங்க உங்களை சுற்றி உள்ளவங்ள நம்ப ட்ரை பண்ணுங்க."
"சரி டாக்டர் ஒரு சின்ன உதவி எனக்காக உங்களால் செய்ய முடியுமா."
"தாராளமா சொல்லுங்க "
"சீக்கிரமாவே எனக்கு நினைவு திரும்பிவிடும் அப்படின்னு அவங்க ரெண்டு பேர் கிட்ட சொல்லுங்க ரொம்ப டீடெய்ல்ஸ் இதுவும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ் " அவள் கூறியது மருத்துவ தர்மத்திற்கு எதிரானதாக இல்லை என்பதால் அந்த மருத்துவரும் உடனே அவளது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
கையில் ஏறிக்கொண்டிருந்த சலைன் தீர்ந்தவுடன் அதை கழற்றுமாறு கூறிய மருத்துவர்.எழுந்து மெதுவாக நடக்க கூறினார் காலிலும் கைகளிலும் சிறிய சிராப்புகள் இருக்க பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.மேலும் இரண்டு
நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று உறுதி அளித்தார்.
மது மிகவும் அமைதியாக காணப்பட்டாள்.எந்த நேரமும் சிந்தனையில் மூழ்கி இருந்தவள் அவளது அன்னை தந்தையிடம் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தையும் பேசவில்லை.எப்பொழுதும் போல இப்பொழுதும் கண்கள் மூடி அமர்ந்திருந்தவள் ஏதோ நினைவு வந்தவளாக ,"என்னோட ஃபோன் எங்க?"என்று தன் தாயாரிடம் வினவ ,"அது அப்பா கிட்ட இருக்குனு நினைக்காறேன்மா,"என்று கூறியவரிடம் மேலும்,"அவங்க வரும்போது மறக்காம எடுத்திட்டு வரசொல்லுங்க, இப்ப உங்க ஃபோன் இருந்தா தாங்க,"என்றுகேட்டு வாங்கா கொண்டவள் . அந்த செல்பேசியின் மூலம் அவள் தங்கியிருக்கும் மாவட்டத்தின் பெயரை தெரிந்து கொண்டாள்.அந்த செல்பேசியின் கேலரியில் அவளது புகைப்படம்,தாயார் தந்தையாரின் புகைப்படங்களுடன் வேறு ஒரு பெண்ணின் புகைப்படமும் இருப்பதை பார்த்தவள் ,"இந்த பொண்ணு?"
"உன் தங்கச்சி மா மதியழகி.உனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்."
"ம்...என்னை பார்க்க வரலையே?"
"ம்..அவ இப்ப பரீட்சைக்கு படிக்கிறா பத்தாவது முழுபரீட்சை நடக்குது."
"ஓ....நீங்க போக வேணாமா?"
"இல்லைமா வீட்ல இருக்கிறவங்க பார்த்துப்பாங்க,"என்று கூறியவர் ,"எதாவது சாப்பிடுறியா?"என்று வினவ,"வேணாம்..."என்று ஒத்த வரியில் பதிலளித்தாள்.அதற்கு மேல் அவள் பேசவில்லை.
மதிய உணவு நேரத்தில் வந்த அவளது தந்தை அவள் கையில் ஒரு புதிய செல்பேசியை ஒப்படைக்க அதை குழப்பத்துடன் பார்த்தவளிடம்,"பழைய ஃபோன் ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு அதான்,"என்று கூற அதற்கு மேல் ஒன்றும் கூறவில்லை அவள்.
அடுத்த வந்த நான்கு நாட்களும் அமைதியாக வே கழிய மது மட்டும் தன் செல்பேசியில் எதையோதேடிக்கொண்டும் பார்ரத்துக்கொண்டும்இருந்தாள். விரைவாகவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்திட ஒருவாரத்திற்கு பிறகு முதன்முறையாக சூரிய வெளிச்சம் கண்களில் பட கண்கள் கூசியது.வெளியிலுள்ள எதையும் காணும் மனநிலையில் இல்லாதவள் காரில் ஏறி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரத்திற்கு பிறகு கண்கள் திறந்து பார்த்தவளை வரவேற்றது 'தங்கள் வரவு கண்டு மகிழ்ந்தோம் மீண்டும் வருக' என்ற பலகையே.
"எங்க போறோம்?"தன் தந்தையிடம் வினவியவளுக்கு அதைவிட சுருக்கமாக பதில் வந்தது,"வீட்டுக்கு தான் மா".
இடையில் உணவிற்காக நிறுத்தப்பட்டிருந்த உயர்தர ஐந்து நட்சத்திர உணவகத்திலிருந்தே அவர்களின் வாழ்க்கை தரத்தை ஓரளவுக்கு அவளால்உணரமுடிந்தது.
காலை பத்து மணிக்கு தொடங்கிய பயணம் மாலை ஐந்து மணிக்கு பளிங்கு போல பிரம்மாண்டமான மாளிகையில் முன்னே முடிவடைந்தது.தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையினுள்ளே சென்றவளின் மனம் பெரும் குழப்ப்த்தில் இருந்தது. அவள் அழைத்து வரப்பட்டிருந்தது புத்தம் புதிய இல்லம் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் புதியவர்கள் என்பதைஒருமார்வைறிலேயே உணர்நது கொண்டவள் அதற்கான காரணம் புரியாமல் குழம்பினாள்.
"அக்கா...."எஅனறவாறு ஒரு சிறுமி தன்னிடம் ஓடி வருவதை பார்தவள் ஒரு சினேகமற்ற பார்வையை வீசினாள்.
"அக்கா...எப்படி இருக்க ?அடி ஒன்னும் பெருசா இல்லையே ?ரொம்ப வலிக்குதா?"தன் கேள்விகளுக்கு விடை வராததை பார்த்தவள் ,"என் மேல கோபமா உன்னை வந்து பார்கலைனு இந்த அம்மா தான் கூட்டிட்டு வர மாட்டேனு சொல்லிட்டாங்க,நான் என்ன பண்றது?"
அப்பொழுதும் அவள் அமைதி காப்பதை கண்டவள்,"சாரி கா...."என்றவாறு ஏமாற்றத்துடன் வெளியேறினாள்.
நாளும் பொழுதும் யாருக்கும் நிற்காமல் அதன் போக்கில் ஒரு காலை வேளை தன் அறையைக்குள் நுழைந்த தந்தையை ஏறிட்டு நோக்கியவள் மீண்டும் தன் சிந்தனைக்குள் புகுந்தாள்.
"மது..எத்தனை நாளைக்கு இப்படி இந்த ரூம் ல அடைஞ்சு கிடைக்கப்போற?நம்ம வீட்டுக்கு ழந்து ஒரு.மாசம் ஆச்சு சாப்பிட கூடவெளியவர.மாட்டேங்கிற?ஏன்மா உனக்கு என்ன பிரச்சனை அப்பா கிட்ட சொல்லுமா."
"எனக்கு இந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை."சுருக்கமாக வந்தது பதில்.
"ஏன்மா."குரலில் வேதனையுடன் கேட்டவரைஏறிட்டு பார்த்தவள்,"இங்க எதுவுமே வெளிப்படையா இல்லை.எல்லாமே மூடி மறைங்குறீங்க."
"உங்கிட்ட நாங்க என்னமா மறைக்கப்போறோம்?"
"இது எந்த ஊரு?"
"சென்னை"
"இதுக்கு முன்னாடி எங்க இருந்தோம்?"
"ம்.....கோயம்புத்தூர் ல"
"அங்கு இருந்து ஏன்.இங்க வந்தோம்.ஏன் இவ்வளவு ரகசியமா எல்லமே செய்யறீங்க?"
"மதுமா எதையும் ரகசியா லாம் செய்யலைமா உன்னோட நன்மைக்கு தான்ஒன்னு ஒன்னும்பார்த்து பார்த்து செய்றோம்.உனக்கு பழைசெல்லாம் மறந்திடுச்சு உன்னால அந்த ஊருல இருக்கிறது ரொம்ப கஷ்டம். உன்னை தெரிஞ்சவங்க அந்த ஊருல நிறைய பேரு இருப்பாங்க அவங்களை நீ சந்திச்சனா அவங்களை உன்னால அடையாளம் படுத்த முடியாது உனக்கு தேவையில்லாத மனக்கஷ்டம் தான் வரும்.
அதனால தான் என்னோட மெயின்பிரான்ச் அங்க இருக்கும் போது பரவாயில்லை னு இந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆகிட்டேன்.உனக்கு படிப்பு கூட அங்க போகுறது கஷ்டம் னு இந்த ஊருல வேற காலேஜ் ல சீட் கூடவாங்கிட்டேன்.உன் கூட்டுக்குள்ள இருந்து வெளிய வா.நினைவு மறந்து போச்சுனா உலகம் நின்னு போயிடாது . உனக்குனு புதிய உலகத்தை நான் உனக்கு உருவாக்கி கொடுத்திருக்கேன். இந்த உலகத்தோட ஒன்றிய வாழ முயற்சி பண்ணு.உன் கஷ்டம் எனக்கு புரியாம இல்லை. ஆனால் நீ இப்படியே இருந்தா உனக்கு மன அழுத்தம் தான் வரும்."என்று கூறியவர் தலை குனிந்து அமர்ந்திருந்த தன் மகளின் அருகே வந்து அவள் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தார்.கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்த அவளின் கண்களை பார்த்ததும் தன் கண்ணும் கலங்க
அதை மறைத்தவர் அவளின் இண்களை துடைத்துவிட்டார்" நீ னா எனக்கு உயிருடா .உனக்கு ஒன்னும் வர விடமாட்டேன்.நான் பண்றதெல்லாமே உன்னோட நன்மைக்கு மட்டும் தான்.உனக்கு பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வந்திடும் கவலைபடாத."என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்,"நீ பி.பி.ஏ.படிச்சிட்டு இருந்த இப்ப இரண்டாவது வருஷம் படிக்கனும் என்ன செய்யனு நீ சொல்லு.அவசரம் இல்லை பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு."என்றவர் அவள் கைகளில் ஒரு கோப்பை ஒப்படைத்தார் ,"இதில உன்னை பத்தின எல்லா விஷயமும் இருக்கு."மேலும் எதுவும் கூறாமல் அவளின் தலையை வாஞ்சையுடன் வருடியவர் அவள் அறையை விட்டு வெளியேறினார்.
அது நாள் வரை அவரை பற்றி அவள் மனதில் இருந்த பிம்பங்கள் உடைய தொடங்கியது அவர் கொடுத்துவிட்டு போன கோப்புகளை திருப்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.
அந்த கோப்புகளில் அவளது பெயர் பிறந்த தேதி பிறந்த இடம் படித்த பள்ளி பிடித்த நிறம் போன்றவை எழுதிருயிருக்க மேலும் அவளை சுற்றி யுள்ள அடுத்த உறவினர்கள் தப்தை தாயார் தங்ககை அத்தை மாமன், மாமன் மகன் ஆகியோர் பற்றிய விபரங்களுடன் அவர்களின் புகைப்பட்மும் இணைக்கப்பட்டிருந்தது.எவற்றை அவள் கேட்க தயங்கினாளோ அவை எல்லாம் அந்த கோப்புகளில் இருந்தது.ஒன்னொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் இவரா தன்னை ஏமாற்றப்போகிறார் என்று எண்ணியவள் மனம் தெளிவடைந்தாள்.அவர்களை தனது பெற்றோர்கள் என்று ஏற்றுக்கொள்ள தொடங்கியது அவளின் மனம்.
நாட்கள் யாருக்காகவும் காத்திராமல்அதன் போக்கில் சென்றது.சென்னை வந்து மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் மதுவின் தாயாரின் வற்புறத்தலினாள் யோகா சென்டர் செல்லத்தொடங்கி இருந்தாள் மதுமிதா.காலை பத்து மணி முதல் நண்பகல் பன்னிரண்டு மணி வரை இருக்கும் வகுப்பை பிடிக்காவிட்டாலும் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்ல அது தான் ஒரே வழி என்பதால் அவள் அதை தவறியதில்லை.
அன்றும் அதே போல பத்து மணி வகுப்பிற்கு ஒன்பதறைக்கு சென்ற மது அந்த சென்டர் பூட்டியிருப்பது கண்டு காவலாளியிடம் விசாரித்தாள் அவரோ,"ஒரு.வாரம் லீவ் மா அந்த டீச்சர் அவசர வேலையா ஊருக்கு போயிட்டாங்க உங்களுக்கு தெரியாதா?"என கூற ,"ஐயோ மறுபடியும் வீட்டுக்கு போகனுமா?"என்று எண்ணிய அவள் மனம் சோர்வடைந்தது.
" அண்ணா இங்க பக்கத்தில பார்க் எதாவது இருக்கா?"என வினவ அவரும் சில நொடிகள் யோசனை செய்த பின் ,"இருக்கு ஆனா அவங்க உங்கள உள்ள விடுவாங்களானு எனக்கு தெரியலையே ,"என்று கூறினார்.
"ஏன் நான் எனது பாஸ் வச்சிருக்கணுமா."
" அப்படி இல்ல மா அது ஒரு நர்சரி ஸ்கூல் மாதிரி அங்க ஒரு சின்ன பார்க் இருக்கு அங்க உங்ளை உள்ள விடுவாங்களா அப்படின்னு எனக்கு சரியா தெரியல மா," எனக் கூறினார்.
"ஓ..... சரி ணா நான் போய் பார்க்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் நான் வரேன் ,"என்று அவரிடம் இருந்து விடை பெற்றாள்.
தனது இந்த ஒரு முடிவால் தன்னுடைய பிற்கால வாழ்க்கையும் அர்த்தமும் மாறிப்போகும் என்பதை சிறிதும் அறியாதவள் சன் சைன் பவுண்டேஷன் பள்ளி வளாகத்தை நோக்கி விரைந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro