Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -35

தன்னவளின் மீது உரிமையுடன் ஒருவன் கைவைக்க கொதி நிலையை அடைந்தான் விக்ரம்.விக்ரம் ஏதாவது ஏடாகூடமாக செய்து விடுவானோ என்று பயந்தாள் மது.இருப்பினும் அவளது துணிச்சலும் எதையும் எதிர்கொள்ளும் மனமும் அந்த எண்ணத்தை தள்ளி வைத்தது.தன் மீது உரிமையுடன்.கை.போட்டவனை  சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவள் அவன் கை மீது தன் பார்வையை செலுத்தினாள்.அவள் பார்வை உணர்த்தியதை புரிந்து கொண்டவன்," ஹா...ஹா....ஹா..அதுக்கென்ன பண்ணிடா போச்சு,"என்றவாறு யாருக்கும் சந்தேகம் வராமல் தன் கையை அவள் மீதிருந்து விலக்கினான்.

ஆனந்தகிருஷ்ணனிடம் கேள்வி கேட்டவனை நோக்கியவள்,"எப்போ இருந்து இந்த மீட்டிங் ஹால் கதை பேசுற இடமா மாறுச்சு?"என்றாள் குரலில் சீற்றத்துடன்.

" சாரி மேடம் ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன்."

" உங்க ஆர்வத்தை நான் பாராட்டுறேன் .அந்த ஆர்வத்தை வேலையில காட்டுன நான் சந்தோஷப்படுவேன்.மீட்டிங் ஓவர் எல்லாரும் கிளம்பளாம்."என்று அவள் கூறி முடிக்கவும் புயலென விக்ரமன் வெளியேறினான்.அது மற்றவர்களுக்கு சாதாரணதாக தோன்றினாலும் மதுவிற்கு அவன் கோபம் புரியவே செய்தது.

அதே கோபத்துடன் தன் கேபின் நோக்கி சென்றவனை கலைத்தது தன் முன்னே சென்று கொண்டிருந்த  இரு  பெண்களின் சிரிப்பு சத்தம் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்த அந்த இரு பெண்களின் பின்னே அமைதியாக  வந்தவனை கவனிக்க தவறினர்.அவர்கள் மெதுவாக பேசி சிரித்து நடந்து போக அவர்களை வெறித்த வண்ணம் அவர்கள் நடைக்கு ஈடாக விக்ரமும் நடந்தான்.

இந்த காட்சியை பார்த்த மற்ற ஊழியர்கள் அவர்களை எச்சரிக்க தொடங்க அவர்களை தடுத்த விக்ரம்  அவர்கள் பேசட்டும் என்று கண்ஜாடை காட்டினான்.அவர்களின் நல்ல நேரம் விக்ரமின் செல்பேசி ரிங் செய்தது.பதறி திரும்பி நோக்கிய இருவரும் தடாரென விலகி அவனுக்கு வழி விட அவர்களை முறைத்த வண்ணம் தன் செல்பேசியில் மின்னிய மதுவின் பெயரை பார்த்துக்கொண்டு தன் கேபினிற்குள் தன்னை புகுத்தி கொண்டான்.

மதுவின் பெயர் மின்னுவதை வெறித்த  விக்ரம் அட்டெண்ட் செய்யவில்லை. அவன் இப்பொழுது மதுவிடம் பேசினால் பிரச்சினை வருவது உறுதி என்பதை அவன் நன்றாக அறிவான் அதனால் செல்பேசியை வைத்துவிட்டு அடுத்து நடக்க வேண்டியதை பார்க்கலானான்.

"மே ஐ கம் இன் சார்?"என்ற தாராவின் குரல் கேட்டு ," யெஸ் கம் இன்,"என்றான்.

" யெஸ் சார்?"

" தாரா இப்ப போயிட்டு இருக்குற ப்ராஜெக்டோ பேஸ் ப்ளான் என்னாச்சு?"

"அது வந்து சார்..."

" என்னாச்சு??"

" ஹெட் ஆர்கிடெக்ட் மெடிக்கல் லீவ் ல போயிருக்காரு சார். அதனால இன்னும் கம்ப்ளீட் பண்ணலை சார்."

" வாட் ரப்பிஷ்( rubbish) ஒருத்தர் வரலைனா வேலை நடக்காத இவ்வளவு பெரிய கம்பெனி ஒரு ஆர்கிடெக்ட நம்பிதான் நடக்குதா??"இன்னும் என்ன என்ன கூறியிருப்பானோ அவனை தடை செய்தது இண்டர்காம்,அதை காதில் வைத்து "ஹலோ...."என்று கூற அந்தபுறமோ " விக்ரம்." என்று மதுவின் குரல் கேட்டது.

" ம்..."

" என்ன கோபமா??"

"ம்..."

" பேச மாட்டீங்களா??"

"ம்....நீ கட் பண்ணு நான்  ஒரு ஐஞ்சு நிமிஷத்தில செல் ல உன்னை  கூப்பிடறேன்."என்றபடி கால் ஐ கட் செய்தவன்," தாரா இந்த ஆபிஸ் ல மொத்தம் எத்தனை டிசைன்.டீம் இருக்காங்க?"

"மூனு டீம் சார்."

"மத்த இரண்டு டீமோட மெம்பர்ஸ் ஒரு பத்து நிமிஷத்தில மீட்டிங் ஹால் ல இருக்கனும்."

"சார் பட் இன்னும் பத்து நிமிஷத்தில லஞ்ச் ப்ரேக் வந்திடுமே."

"ஓ...யாரெல்லாம் சாப்பிடனுமோ அவங்க சாப்பிடட்டும் நான் பத்து நிமிஷத்தில மீட்டிங் ஹால் ல இருப்பேன் ,எனி டவுட்ஸ்(any doubts)"

அவன் கூறியதற்கு கண்டிப்பாக மீட்டிங் ஹாலில் இருக்க வேண்டும் என்ற பொருள் ஒளிந்திருக்க  வேகமாக ," சரி சார் ஓகே சார்," என்று தடுமாறி வெளியே வந்து மூச்சு விட்டாள்.

வெளியே வந்த தாராவை அனைவரும் சூழ்ந்து கொண்டனர்," என்னாச்சு தாரா சார் என்ன சொன்னாரு?" என்று எல்லோரும் வினவ அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அந்த இரு பெண்களோ ," எங்களை பத்தி எதுவும் சொன்னாரா?"என்றனர் திகிலுடன்.

" யாரைபத்தியும் எதுவும் சொல்லலை .இன்னும் பத்து நிமிஷத்தில எல்லா டிசைன் டீமையும் மீட்டிங் ஹால் க்கு வர சொன்னாரு.முக்கியமா செம கோபத்தில இருக்காரு அது யாரு மேல னு ஒன்னும் புரியலை."என்றவள் பின்பு நினைவு வந்தவளாக," யாரோ கால் பண்ணாங்க பா இண்டர்காம் ல"என்று கூற ," அது எம்.டி ஆபிஸ் ல இருந்து வந்த கால் நான் தான் சாருக்கு ஃபார்வாட் பண்ணேன்," என்றாள் ஒரு பெண்.

" ஓ.....ஏதோ பிரச்சினை நடந்திருக்குனு நினைக்கிறேன் மீட்டிங் ல,"என்றாள் மற்றொருவள்.

" சரி சரி எல்லாரும் வேலையை பாருங்க . சார் இப்ப வெளிய வருவாரு,"என்று கூறிய தாரா மீட்டிங் குறித்து அனைத்து டிசைன் டீமிற்கும் மெயில் செய்தாள்.பின்பு தனக்கான வேலையை கவனிக்கலானாள்.

தாரா வெளியேறியதும் தன் செல் ஐ எடுத்தவன் மதுவை அழைத்தான்.

" ம்...சொல்லுமா.."

"என்னாச்சு விக்ரம் கோபமா?"

" பின்ன இருக்காதா அவன் அவ்ளோ உரிமையா உன் மேல கை வைக்கிறான் பார்த்த அடுத்த நொடியே தட்டி விட்டிருக்க வேணாமா?"

" விக்ரம் இது ஆஃபிஸ் எல்லாரும் நம்மை கவனிக்கிறாங்க.நான் அப்படி எதாவது பண்ணியிருந்தா மொத்த ஆஃபிஸோட கவனமும் என் பக்கம் திரும்பிடும்.அதனாலதான் நாசுக்கா புரிய வைச்சேன்."

"ம்....எல்லாம் புரியுது இருந்தாலும்...."

"பாத்தீங்களா எல்லா புரிஞ்சும் இப்படி பேசலாமா?"

"ம்...சரிடா இப்ப ஆபிஸ் ல ஒரு.சின்ன மீட்டிங் அதை முடிச்சிட்டு உன்கிட்ட வரேன்."

"எங்கிட்ட வரீங்காளா ? அதெல்லாம் வேணாம் நீங்க மீட்டிங் முடிச்சிட்டு கால் பண்ணுங்க போதும்."

"ம்.....ஹா...ஹா....ஹா..பார்கலாம் டேக் கேர் டா," என்றவன் மீட்டிங் ஹால் நோக்கி விரைந்தான்.

அங்கே கூடியிருந்த அனைவரும் அவனது கோப பார்வையை எதிர்பார்க்க உள்ளே நுழைந்த விகர்மோ ஒட்டு மொத்த புன்னகையையும் குத்தகைக்கு எடுத்தது போல சிரிப்புடன் இருந்தான்.

" என்னபா இது பயங்கர கோபத்தோட வருவாரு னு பார்த்தா இப்படி புன்னகை அரசனா வராரே.." என்றாள் ஜாக் அவனது அழகை ரசித்தவாரு அவளை கனவுலகிலிருந்து விடுவித்தது அடுத்து விக்ரம் பேசிய வார்த்தைகள்," என்ன மிஸ் ஜாக் ரசிச்சு முடிச்சாச்சா??"

"சா....சா....சார்?"

"என்னை ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டே இருக்கீங்களே.அதான் ரசிச்சு முடிஞ்சுதா னு கேட்டேன்??"

" இல்லை சார்..வந்து சார்...ஆமா சார்....ஏதோ ஒரு நியாபகத்தில அந்த பக்கம் பார்தேனே தவிர உங்களை பார்க்கலை சார்."

" ம்...."அதுவரை மிருதுவாக இருந்த அவன் முகம் மீண்டும் கடுமையை பூசிக்கொண்டது," அடுத்த வாரம் கிளையண்ட மீட்டிங் இருக்கு அதுக்கு டிசைன் ரெடி பண்ணியாச்சா? அங்கிருந்த அனைவரையும் நோக்கி கேட்டான்.

"சார் அது மிஸ்டர் .வெங்கட் அன்ட் டீமோட ப்ராஜெக்ட்."என்றாள் ஜாக்.

"ஓஹோ....சரி அவரோட டீம் எங்கே?"என்று கேட்க மூவர் கை தூக்கினர் அவர்களிடம் அதே கேள்வியை கேட்டான் விக்ரம்.

" சார் அது இன்னும் முடிக்கலை.வெங்கட் சார் மெடிக்கல் லீவ் ல இருக்காரு,"

"ஓ....அப்ப க்ளையண்ட் கிட்ட சொல்லி மீட்டிங் ஒரு வாரம் தள்ளி வைக்க சொல்லலாமா?"

அவன் கேட்ட கேள்விக்கு பதில் வராமல் அனைவரும் அமைதியாக இருக்க," ம்...சொல்லுங்க சொல்லிடலாமா?"

"சரி அவரு ஹெட் ஜீனியர் ஆர்கிடெக்ட் யாரு?"

" நான் தான் சார்," என்றவாறு கூறினான் மற்றொருவன் ,"ம்..சரி நீங்க என்ன பண்றீங்க மிஸ்டர்.வெங்கட் க்கு கால் பண்ணி ஸ்பீக்கர் ஆன் பண்ணி எப்ப வருவீங்க னு கேளுங்க," அவன் கட்டளையை மீற முடியாமல் கால் செய்த அந்த நபரின் மனதில் பயமே மேல் ஓங்கி இருந்தது.ஏனென்றால் வெங்கட் பேச்சில் எப்பொழுதும் மரியாதை இருந்தது இல்லை. நடுக்கத்துடனேயே கால் செய்தான் அந்தபுறம் கால் ஐ ஆன் செய்தவன்," ஹலோ...சொல்லு டா.."என்று முதலிலே மரியாதை இல்லாமல் தொடங்க வேண்டும் விக்ரமின் முகம் உணர்ச்சிகளற்று காணப்பட்டது.

" சார்...எப்போ வருவீங்க சார்?"

"இந்த வாரம் நான் வரமாட்டேன்..ஏன் என் மேல திடீர் பாசம் என்னை பார்காம இருக்க முடியலையா??"

" அது இல்லை சார் அடுத்த வாரம் க்ளையண்ட் மீட்டிங் இருக்கு அதுக்கு நாளைக்கு பேஸ் டிசைன் கொடுக்கனும்."

"எனக்கு புரியுது ஆனால் என் மச்சினச்சிக்கு இன்னும் ரெண்டு நாள் ல கல்யாணம் . அதை விட்டுட்டு நான் எப்படி அங்க வர முடியும்?அது மட்டுமில்லாம முத்த மாப்பிள்ளை நான் தானே முன்னாடி நின்னு நடத்தி வைக்கனும்."

இதற்கு என்ன பதில் சொல்வதென அந்த ஜீனியர் விக்ரமை பார்க்க , ஃபோனை தன்னிடம் தருமாறு வாங்கிய விக்ரம் ," அப்போ நீங்க பொறுமையா எல்லா விஷேஷத்தையும் முடிச்சிட்டு வாங்க ஒன்னும் அவசரமில்லை வேணும் னா இன்னும் பத்து நாள் சேர்த்து எடுத்துக்கோங்க,"என்று கூறி அத்துடன் அந்த தலைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தவன்," சரி அடுத்த டிசைன் டீம் மிஸ் ஜாக்கலின் நீங்க தானே ஹெட்?"

" யெஸ் சார்." அவள் கூறி முடிக்க ஜீனியரின் செல் அழைத்தது,அவனை நிமிர்ந்து பார்த்த விக்ரமிடம்,"சார் தான் சார் கூப்படுறாரு ,நான் வேணா நாளைக்கே வர முடியுமா னு கேட்கட்டுமா சார்?"

" தாராளமா போய் பேசுங்க . செகண்ட்
டிசைன் டீமை தவிர எல்லாருமே போகலாம், "என்றவன் ஜாக் கிடம்  திரும்பி ,"உங்களுக்கு எத்தனை நாள் டயம் வேணும் ,"என வினவினான்.

அவள் அவளது குழு உறுப்பினர்களை பார்வையால் கேட்க அவர்கள் ஒரு விரல் இரண்டு விரல் மூன்று விரல் என்று காட்ட ," இரண்டு நாள் சார்,"என்றாள் இறுதியாக.

" ம்...சரி அப்ப மூனாவது நாள் பத்து மணிக்கு மீட்டிங் ஹால் வந்திடுங்க." என்றுவிட்டு ," எனி டவுட்ஸ்?"என்றான்.
அங்கிருந்த அனைவரும் ஒரே போல இல்லை என்று தலையாட்ட வேகமாக அந்த ஹாலை விட்டு வெளியேறினான்.

புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்த அந்த மீட்டிங் ஹால்.எங்கும் அமைதியே பிரதானமாக இருக்க அதை முதலில் கலைத்தது ஜாக்கலின் தான்,"என்ன பா இது வெங்கட் சாரோட ப்ராஜெக்ட நமக்கு கொடுத்திட்டாரு அவரு என்ன சொல்லுவாரு என்ன என்ன பிரச்சனை வரப்போகுதோ தெரியலையே,"என்று புலம்ப அதற்கு ஆறுதல் கூறினான் அந்த ஜீனியர் ஆர்கிடெக்ட்,"நீங்க என்ன மேடம் பண்ணுவீங்க இன்னைக்கு எங்க சாருக்கு நேரம் சரியில்லை ம்...சரி வாங்க ஆகுற வேலையை பார்க்கலாம்."என்றவாறு அவன் வெளியேற அவனை தொடர்ந்து மற்றவர்களும் ஒரு பெருமூச்சுடன் வெளியேறினர்.

மீட்டிங் ஹாலில் இருந்து வெளியே வந்த விக்ரம் தன் அறைக்குள் நுழைந்து மதுவிற்கு கால் செய்தான்,"மது சாப்டியா??"

"இல்லை விக்ரம் இனி தான் சாப்பிடனும்."

" சரி இரு நான் வரேன்."என்ற வாறு கால் ஐ கட் செய்தவன் தன் உணவை எடுத்துக்கொண்டு லிப்டை நோக்கி சென்றான்.அங்கே அவன் அலுவலக ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்க அவர்களுடன் இணைந்து கொண்டான்.சாப்பிடும் தளம் நாலாவது மாடியிலிருக்க விக்ரம் மதுவின் அலுவலகம் இருக்கும் ஆறாவது தள எண் ஐ அழுத்தினான்.அந்த லிஃப்டில் இருக்கும் மீராவும் ஜாக் கும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாற்றி கொள்ள மற்றவர்கள் புரியாமல் விழித்தனர்.

ஆறாவது தளத்தை அடைந்த விக்ரம் மதுவின் அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த அவளின் அந்தரங்க காரியதரசியிடம்," மேடம் இருக்காங்களா?"என வினவினான்.

" விக்ரம் சார் நீங்க உள்ள போகலாம் மேடம் உங்களுக்கு தான் வெயிட்டிங்."

" தேங்க்ஸ்"என்றவாறு புன்னகை யுடன் மதுவின் அறைக்குள் நுழைந்தான்.

அறையினுள் முகமெல்லாம் புன்னகையாக அமர்ந்திருந்த மது விக்ரமின் கையிலிருக்கும் பையை கேள்வியாக நோக்கினாள்.

" உனக்கு சாப்பாடு நானே சமைச்சது ,"

"அட உங்களுக்கு சமைக்கலாம் தெரியுமா?"

"சாப்பிட்டு பார்த்துட்டு நீயே.சொல்லு ,"என்று கூறியவாறு அவள் அமர்ந்திருந்த சுழல் நாற்காலிக்கு எதிரே இருந்த டேபிளின் மீது அமர்ந்து அவள் முன்னே அவன் கொண்டு வந்த உணவை பரத்தினான்.

அவன் அவளுக்கு மிக நெருக்கமாக அமர்ந்தது மதுவை சங்கடப்பட செய்தது."நானே சாப்டுக்கிறேன் நீங்க அங்க உட்காருங்க விக்ரம்."

"ஏன் நான் இங்க இருந்தா உனக்கு என்ன கஷ்டம்?"

"கஷ்டம் இல்லை நீங்க ஃப்ரீயா உட்காரலாமே னு தான் சொன்னேன்."

"எனக்கு ஒரு சிரமும் இல்லை,இந்தா இதை சாப்பிடு,"பேசிக்கொண்டே அவன் கொண்டுவந்த உணவை அவளுக்கு அளித்தான்.

"ம்.....செமயா இருக்கு உண்மையை சொல்லுங்க நீங்க தான் சமைச்சீங்களா?இல்லை எதாவது ஹோட்டல் ல வாங்கிட்டு வந்தீங்களா?"

"பா...எவ்ளோ நம்பிக்கை சரி உனக்கு சமைக்க தெரியுமா?"

"ம்ஹீம்....தெரியாதே ,நீங்க சாப்பிடலயா?"

"பரவாயில்லை எனக்கு பசிக்கலை நீ சாப்பிடு,"என்று அவள் உண்ணும் அழகை ரசிக்கலானான்.அவன் கண்சிமிட்டாமல் மதுவை பார்க்க அவளுக்கு உள்ளே ஏதோ செய்தது ,உண்ணாமல் உணவில் கோலம் போடத்துவங்கினாள்.

" என்ன சாப்பிடாமா கோலம் போடுற?"

"இப்படி என்னை பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி சாப்பிடுறதாம்?"

"ஏன் நான் பார்குறதால உனக்கு என்ன பிரச்சனை?"

"விக்ரம்......, போங்க,"என்றவாறு இருக்கையில் இருந்து எழுந்து ஓட முயன்றவளது கைகளை பற்றி தன் பக்கம் இழுத்தவன் அவளது இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்தான்.

இந்த எதிர்பாராத  தாக்குதலால் முதலில் திகைப்படைந்தவள் பின் மெல்ல அவனுக்குள் புதைந்தாள்.கண்கள் மூடிய வேளை அவள் கண்களுக்குள் அவளது மூடப்பட்டிருந்த நான்கு வருட வாழ்க்கை மெல்ல மெல்ல விரியத்துவங்கியது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro