பகுதி -34
காரிருள் சூழ்ந்த இடங்கள் கதிரவனின் ஒளிக்கதிர்கள் பட்டு மெல்ல மெல்ல நீல நிறமாக மாறத்துவங்கி இருந்த நேரம் தன் செல்பேசியில் ஒலித்த அலாரமை நிலா எழும்முன்பு வேகமாக நிறுத்தினான் விக்ரம்.
நெட்டி சோம்பல் முறித்தவன் தன் காலை பணிகளை நிறைவேற்றிவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தான்.ஒரு அடுப்பல் பால் ஐ காய்ச்சியவன் மற்றொரு அடுப்பில் இட்லியையும் அடுத்த அடுப்பில் பருப்பையும் வேக வைத்தான்.பால் காய்வதற்குள்ளாக வேக வேகமாக உருளைக்கிழங்கை நறுக்கியவன் பால் காய்ந்தவுடன் அந்த உருளைகிழங்கை வானலியில் வதக்கிவிட்டு சூடா காஃபி கப்புடன் பால்கனியில் அமர்ந்தான்.
பெங்களுரின் மிதமான காலை பனி உடலை சில்லிட அவன் பருகிய காஃபி மிக இதமானதாக இருந்தது.காஃபியை சிறுக சிறுக ரசித்து குடித்தவன் அது விரைவில் காலியாகவும் சிறு ஏமாற்றதுதடனேயே மீண்டும் அடுக்க்ளைக்குள் தன்னை புகுத்தி கொண்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் சூடான இட்லி சாம்பாரை சாப்பாட்டு மேஜையில் வைத்தவன். அதன் அருகே நிலாவிற்கான மதிய உணவையும் பாக் செய்து அதன் அருகே வைத்துவிட்டு நிலா உறங்கும் அறைக்கு சென்று நிலாவின் அருகே அமர்ந்து," குட் மார்னிங் அம்முகுட்டி ஸ்கூலுக்கு டையமாகிடுச்சு எந்திரிங்க," என்று அவள் காதுகளில் கூறி கண்ணத்தில் முத்தமிட அந்த பிஞ்சு கைகள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கண்ணத்தில் முத்தமிட்டு ," குட் மார்னிங் பா."என்றது.
" குட்டி ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க .உங்களோட டவல் அப்பா வாஷ்ரூம்ல போட்டுட்டேன்,"என்றான்.
மிகவும் சமத்து பாப்பா வான நிலா சிறிதும் அடம்பிடிக்காமல்," ஓகே பா ," என்றவாறு கட்டிலை விட்டு கீழே இறங்கி தன் பிஞ்சு கால்களால் வாஷ்ரூமை அடைந்தாள்.அவள் நடக்கும் அழகை என்றும் போல் அன்றும் ரசித்தவன் தன் வழக்கமான கேள்வியை கேட்டான்," அப்பா வந்து குளிக்க வைக்கட்டா டா?" அதற்கு அவனது மகளோ இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவாறு,"லேடீஸ் குளிக்கும்போது ஜென்ட்ஸ் வரக்கூடாது னு அம்மா சொன்னதை மறந்துட்டீங்களா?"என்று கூறிவிட்டு ," அப்பா அம்மா எப்போ வருவாங்க ," என்று கேட்க நினைத்ததை வழக்கம்போல தொண்டைக்குள் விழுங்கினாள்.அவளுக்கு தெரியும் இந்த கேள்வி தகப்பனை சோர்வடைய செய்யும் என்பது.
" அவளது கேள்வியில் ஸ்தம்பித்தவன் ," சீக்கிரமாவே நான் கூட்டிட்டு வரேன் டா," என்றவாறு அவளிடம் விரைந்து அவளை அள்ளி மார்போடு அணைத்து கொண்டான்.
" பா ஸ்கூலுக்கு டையம் ஆகிடுச்சு நான் போய்ட்டு.வரேன் ," என்றவாறு அவனிடமிருந்து இறங்கி வாஷ்ரூம் நோக்கி விரைந்தாள்.அவள் வெளியே வருமுன்பு அவருக்கு தேவையான பள்ளி சீருடையை மெத்தைமேல் வைத்தவன் நிலாவிற்கான உணவை யும் அவளது பள்ளிகாலனிகலையும் எடுத்து வைத்தான்.அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் நிலா தயார் நிலையில் இருக்க வேகமாக லுங்கியை கலைந்து டிராக் அணிந்து அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.
பள்ளி வாகனத்திற்காக அவர்கள் காத்திருக்க அவர்களை எதிர்கொண்டார் டாக்டர் ஹரிபிரசாத்.
"ஹாய் விக்ரம் குட் மார்னிங். வான்டு குட் மார்னிங்.."
" குட் மார்னிங் தாதா.." " குட் மார்னிங் சார்" என்று இருவரும் ஒரு சேர கூற அதைக்கேட்ட ஹரிபிரசாத் சிரித்தவாரே ," என்ன மணி 8.15 ஆகிடுச்சா??" என்று வினவ
" இல்லை சார் நீங்க லேட் மணி இப்போ 8.25 " என்ற விக்ரமை பார்த்த ஹரி," எப்படி விக்ரம் கரெக்டா டயம் கீப் அப் பண்ற?"
" அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை சார்.எங்க அப்பா ரொம்ப கரார்.அவருக்கு ஒரு நிமிஷம் தாமதமானாலும் பயங்கர கோபம் வரும்.அதனால சின்ன வயசில இருந்தே பழகிடுச்சு ," என்றான் தந்தை நினைவில் ,"ம்....வெரி குட் ஆமா சூர்யா எங்கே?" என்று வினவ," இதோ தாத்தா வந்துட்டேன்," என்றவாறு நிலா வயதுடைய சிறு பெண் வந்து நின்றாள்.
" ஏன்டா கண்ணா லேட்டு ?"என சூர்யா வின் பின்னால் வந்த தன் மகனை பார்த்து ஹரிபிரசாத் வினவ," கொஞ்சம் லேட் ஆகிடுச்சு பா ," என்றவாறு அசடு வழிந்தான்.
" இதையே தினம் சொல்லு ,விக்ரம பார்த்து கத்துக்கோ" என்று அவர் கூற அதற்கு அவரின் மகன் கண்ணணோ ," அப்பா விக்ரம் சொன்னதை கவனிச்சீங்களா ? இந்த நல்ல பழக்கம் அவரோட அப்பா கிட்ட இருந்து வந்துச்சாம்.எங்க அப்பா பத்து மணி ஹாஸ்பிடலுக்கு பதினோறு மணிங்கு போறவரு அப்பறம் நான் எப்படி இருப்பேன்."என்று கூற அங்கே சிரிப்பலை பொங்கியது.சிறிது நேரத்தில் பள்ளி வாகனம் வரவும் இரு குழந்தைகளையும் வாகனத்தில் ஏற்றி விட்டனர்.
" சரி சார் ஆபிஸீக்கு டையம் ஆகிடுச்சு நான் கிளம்பறேன் ," என்றவாறு கழன்டு கொண்டான் விக்ரம். அவன் எப்பொழுதும் யாரிடமும் தேவைக்கு அதிகமாக பேசுவதில்லை வீணான கேள்விகளை அடுத்தவரின் சொந்த விஷயங்களை தூண்டி துருவுவதில்லை என்பதாலும் அவனின் அமைதியினாலும் ஹரிபிரசாதிற்கு அவன் மீது தனி பிரியம் இருக்கும் இப்பொழுதும் அந்த பிரியம் தலைதூக்க ," பார்த்து பத்திரமா போயிட்டு வா பா ," என்றார் வாஞ்சையுடன்.அவரின் அக்கறையை பார்த்த விக்ரமிற்கு தன் தந்தையின் நினைவு வந்தது.ஹரிபிரசாத் விக்ரம் வீட்டின் எதிர் வீட்டில் தன் மகன் கண்ணண் மருமகள் விஜி மற்றும் பேத்தி சூர்யா வுடன் வசித்து வருகிறார்.தினமும் சந்தித்தாலும் நிலாவின் அம்மா குறித்து ஒரு முறை கூட கேட்டதில்லை அவரின் இந்த குணமே விக்ரமிற்கு மிகவும் பிடித்திருந்து அதனாலேயே அவரிடம் கூடுதல் பிரியம் வைத்தான்."சரிங்க சார்," என விடை பெற்றான் புன்னகையுடன்.
வீட்டிற்குள் நுழையும் போது மணி சரியாக எட்டு மணி 45 நிமிடம் என காட்டியது விரைவாக அடுக்களைக்குள் நுழைந்தவன் எல்லா பாத்திரங்களையும் துலக்கிவிட்டு வேலையை முடித்து விட்டு விரைவாக குளிக்க சென்றான் குளித்து முடித்து உணவருந்திவிட்டு தயாராகி வீட்டை பூட்டும் போது மணி சரியாக 9 என காட்டியது. இன்னும் அரை மணி நேரத்தில் ஆபீஸில் இருக்க வேண்டியதால் விரைவாகவே எங்கும் நிற்காமல் கிளம்பினான் போகும் வழியில் எதிர் பிளாட்டில் உள்ள டாக்டர் ஹரிபிரசாத் வீட்டின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்தி அவரது வருகைக்காக காத்திருந்தான்.
"அடடே விக்ரம் கிளம்பியாச்சா" என்றவாறு வெளியே வந்தான் கண்ணன்.
"ஆமாம் கண்ணன் ஆபிசுக்கு லேட்டாயிடுச்சு நிலாவுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்துட்டு போகலாம் னு வந்தேன்"
" என்ன விக்ரம் இது.நானும் தினமும் சொல்றேன் நிலா சாப்பிடுற இரண்டு பிஸ்கட் கூடவா நாங்க தரமாட்டோம்."
" நோ நோ கண்ணன்.நிலா ஸ்கூல் விட்டு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவா அப்போ இருந்து நான் ஆபிஸ் விட்டு வர வரைக்கும் அவ உங்க கூட உங்க பாதுகாப்பு ல தான் இருக்கா.ஒரு நாள் இரண்டு நாள் னா பரவாயில்லை. தினமும் அதான் நடக்குது.ஏதோ ஸ்நாக்ஸ் மட்டும் தான் நான் கொடுக்குறேன்.இது கூட செய்யலைனா எனக்கு ரொம்ப சங்கடமா போயிடும்."
" அட இதுல எங்க சுயநலமும் கூட இருக்கு.சூர்யாவுக்கு நல்ல கம்பெனி நிலா.அதனால நீங்க சங்கடபட வேண்டாம்."என்றான் சிரித்தவாறு.விக்ரமின் மனமோ மது தன்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நினைப்பை விட்டு வெளிய வர முடியவில்லை," சரி கண்ணன் இந்தாங்க இது மதுவோட....சாரி நிலாவோட பேக் அவகிட்ட கொடுத்திருங்க.எனக்கு லேட் ஆகிடுச்சு."என்றவாறு மின்னலென விடைபெற்றான்.
அவன் கூறிய மது என்ற பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்தான் கண்ணன்.இதுவரை அதிகம் பேசிறாத விக்ரம் அன்று சற்று அதிகமாகவே உறையாடியதாக அவனுக்கு பட்டது.மது என்ற பெயர் கூட அவன் மனைவியின் பெயராக தான் இருக்க வேண்டும் என்று யூகித்தவன் கையில் பையுடன் உள்நுழைந்தான்.
" என்னாச்சுங்க ஏன் ஒரு.மாதிரி இருக்கீங்க ?"என்று அவன் மனைவி வினவ ," விக்ரம் நிலாவோட பேக் கொடுக்க வந்தாருமா, அவரு இன்னைக்கு கொஞ்சம் நார்மலா இல்லாத மாதிரி தெரிஞ்சுது அதைபத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.அவரோட மனைவி ரொம்ப மிஸ் பண்றாரு னு நினைக்கிறேன்."
" என்னாச்சுங்க ஏன் அப்படி சொல்றீங்க?"
" பேச்சுவாக்குல நிலானு சொல்றதுக்கு பதிலா மதுனு சொன்னாரு அதான் அவரு மனைவி பேரு மது வா இருக்கும் னு நினைக்கிறேன்.பாவமா இருந்துச்சு."
" ம்....என்ன செய்றது அவரோட மனைவி எங்கனு நமக்கு தெரியலையே.தெரிஞ்சா கூட கொஞ்சம் சேர்த்து வைக்கலாம்."என்றாள் பெருமூச்சுடன்.
வீட்டை விட்டு கிளம்பிய விக்ரம் மனம் ஒரு.மாதம் முன்பு பயணித்தது . நிலாவுடன் பெங்களூர் வந்து சேர்ந்து ஒரு.மாத காலத்தில் ஒரு.முறைகூட மதுவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.இருவரும்செல்பேசியில் கூட தொடர் கொள்ளவில்லை. விக்ரம் பல முறை மதுவை தொடர்பு கொள்ள சில் சமயம் எண்ணியதுண்டு இருப்பினும் ஏதோ ஒன்று அவனை தடுத்தது.இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்பொழுது முடிவு பெரும் இன்று இருவரும் அறியார். பத்தே நிமிட பயணத்தில் அலுவலகம் அடைந்தவன் லிஃப்டை நோக்கி வேக எட்டுகள் எடுத்து வைத்தான்.
மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க லிப்டிற்குள் நுழைந்தவன் தான் செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்திவிட்டு அமைதியாக லிஃப்ட் வாசலை வெறிக்கலானான்.அவன் அணிந்திருந்த கருநீல நிற முழுகை சட்டையும் க்ரீம் கலர் ஃபார்மல் பேன்டும் அணிந்திருந்தவனின் ஆண்மை பின்னால் நின்றிருந்தவளை சுண்டி இழுத்தது. இருப்பினும் அவன் தன்னை திரும்பி பார்காமல் நின்றதால் கோபம் கொண்டவள் அவனை கண்டு முறைத்த வண்ணம் இருந்தாள்.அவன் லிஃப் தளத்தை அழுத்திவிட்டு லிஃப்ட் மூடப்போகும் கடைசி தருணத்தில் லிஃப்ட் கதவு திறக்கபட இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்.அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர் அங்கே நின்றிருந்தனர்.உள்ளே மதுவை எதிர்பார்காதவர்கள் ," குட் மார்னிங் மேடம்..," என்று கூற சட்டென்று திரும்பி நோக்கியவன் அங்கே தன்னவளை காண முகம் நூறு வாட்ஸ் பல்பென மின்னியது."சாரி மேடம் நீங்க இருந்தீங்கனு தெரியாது நாங்க அடுத்த லிஃப்ட் ல போயிக்கறோம்," என்று கூற," பரவாயில்லை உள்ளே வாங்க ," என்றாள் மது விக்ரமை முறைத்தவாறு.
" அதான் மேடமே சொல்லிடாங்க அப்பறம் என்ன யோசிக்கறீங்க உள்ளே வாங்க உள்ளே வாங்க," என்று கூறியவன் மெதுவாக நகர்ந்து மதுவின் அருகே அவள் கை உரசுமாறு நின்று கொண்டான்.அவன் செயல் யதார்த்தமாக அமைந்ததனால் அங்கிருந்தவர்களுக்கு அது தவறாக தெரியவில்லை.
அவள் அணிந்திருந்த மெரூன் கலர் லாங் டாபும் கரு நிற பேன்டும் அவள் அழகுக்கு அழகு சேர்த்தது.
இருவரும் பின்னே நின்றிருக்க அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டவன் மது வின் இடையில் கை போட்டு தன்னுடன் இறுக்கிக்கொண்டான்.அவனது இச்செயலை சற்றும் எதிர்பார்காத மது அவனை முறைத்தவாறு அவன் கைகளை தட்டி விட முயன்றாள்.அவன் பிடியோ இரும்பாக இருந்தது.அவனை முறைத்தவள் கண்களால் அவனிடம்," நான் எல்லாருமுன்னாடியும் கத்திருவேன்," என்று கூற அதற்கு அவனோ மிக சாதாரனமாக தோளை குழுக்கினான்.
அவன் இறக்க வேண்டிய மூன்றாவது தளம் வந்துவிட லிஃப்டை திட்டிய வண்ணம் உதட்டை குவித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுத்தவன் கண்ணடித்து விட்டு லிஃப்டை விட்டு வெளியேறினான்.வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த மனபாரம் மதுவை பார்த்த நொடி பறந்து போக சீட்டியடித்தவாறே தன் அலுவலகத்தில் நுழைந்தான்.
எதிர்பட்ட அனைவரின் வணக்கத்தையும் சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டவன் தன் கேபினிற்குள் தன்னை புகுத்திக்கொண்டான்.வேலைகளில் மூழ்கி இருந்தவனை கதவு தட்டும் சத்தம் கலைத்திட ," யெஸ் கம்மின்,"என்ற அவனை குரலை தொடர்ந்து உள்நுழைந்தாள் தாரிகா அவனது அந்தரங்க காரியதரசி," குட் மார்னிங்.சார்,"
" ம்...குட்.மார்னிங் எனிதிங் இப்பார்டெடன்ட் டுடே(Anything important today?),."
" யெஸ் சார் , இப்போது தான் எம்.டி ஆஃபிஸ் ல இருந்து மெயில் வந்துச்சு.இன்னைக்கு பதினோறுமணிக்கு ஜி.எம்.மீட்டிங் இருக்கு சார்."
" ஓ...நான் இங்க ஜாய்ன் பண்ணதுக்கு அப்பறமா வர முதல் மீட்டிங் தானே இது? இந்த மீட்டிங் ல அப்படி என்ன ஸ்பெஷல்?"
" பொதுவா ஜி.எம் எம்.டி சேர்மன் இரண்டு பேரையும் டைரெக்டா மீட் பண்றது கஷ்டம் சார்.அதனால ஆறு மாசத்துக்கு ஒரு தடவை இந்த மீட்டிங் நடக்கும்.கரெண்டா நடந்துட்டு இருக்கிற ப்ராஜெக்ட் பத்தி பேசுவாங்க, அப்பறம் எதாவது புது ஐடியா டைரெக்டா எம்.டி கிட்டயோ.இல்லை சேர்மன் கிட்டயோ தெரிய படுத்துறதா இருந்தா தெரிய படுத்துவாங்க.மத்தபடி எதுவும் இருக்காது சார்."
" ஓ...ஐ சீ.., சரி நீங்க போலாம்,வேற இன்னைக்கு எதுவும் அபார்ட்மெண்ட் இருக்கா?"
" இல்லை சார் எம்.டி மீட்டிங் வந்தா எல்லாமே கேன்சல் பண்ணிடுவோம் .இனி மதியானத்துக்கு மேல தான் இருக்கு சார்."
"ம்....சரி நீங்க போலாம்," என்று அவன் கூற தாராவோ," சார் நான் உங்க கூட வரட்டுமா?"
" வேண்டாம் நான் ஹான்டில் பண்ணிகிறேன்.இப்ப போயிட்டு இருக்குற ப்ராஜெக்ட் டீடெய்ல்ஸ் ஃபைல் கொண்டு வந்து கொடுங்க."
" யெஸ் சார்..."என்றவாறு வெளியேறினாள்.
சரியாக பதினோறு மணி அளவில் ஆறாம் தளத்திலிருக்கும் கான்ஃபிரெஅன்ஸ் ஹாலை அடைந்தவன் அங்கே அமர்ந்திருந்த மற்ற ஜி.எம் களுடன் சேர்ந்து கொண்டான். தன்னை பார்த்து முறுவலித்த திரு.நரசிம்மன் அருகே அமர்ந்து கொண்டான்.அவர் முதல் தளத்தின் ஜி.எம் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
( மொத்தத்தில் ஆறு தளங்களில் அமைந்திருந்தது A.K.Homes .ஒவ்வொரு தளத்திலும் கட்டுமானத்திற்கு தேவையான ஒவ்வொரு துறை அமைந்திருக்க.விக்ரம் மூன்றாவது தளத்தில் இருக்கும் இன்டீரியர் மற்றும் டிசைன் டிபார்ட்மென்டிற்கு ஜி.எம்.இது போல ஒவ்வொரு.தளத்திற்கும் ஒரு.ஜி.எம்.எல்லா ஜி.எம் களும் தங்கள் தலைமை ஜிஶ்ரீஎம்மிடமே ரிபோர்ட் செய்ய வேண்டும்.ஆறு.மாதத்திற்கு ஒரு முறை இது போல எம்.டி சேர்மன் மீட்டிங் நடைபெறும்.)
அதிக நேரம் காக்க வைக்காமல் உள் நுழைந்தனர் மதுமிதாவும் ஆனந்தகிருஷ்ணனும்.நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அந்த இருவரும் அமரந்து கொள்ள மீட்டிங் இனிதே துவங்கியது.
முதலில் பேசிய மது அனைவரது திறமைகளையும் பாராட்டி கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்றவை குறித்து பேசினாள்.பின்பு அடுத்த துவங்கவிருக்கும் புது ப்ராஜெட் குறித்து மீட்டிங்கில் முடிவெடுக்கப்பட்டது.ஒன்றை மணிநேரம் நீடித்த மீட்டிங்கில் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் நடை பெறவில்லை.இறுதியாக அனைவரும் விடை பெற்றுக்கொள்ள கிளம்புகையில் விக்ரம் மதுவை நோக்கி தலையசைத்தான்.அவளும் பதிலுக்கு கண்களை மூடி திறக்க இதை கவனித்துவிட்டார் இரண்டாம் தள ஜி.எம்.அவருக்கு விக்ரமின் மேல் ஏற்கனவே ஒரு வித காள்புணர்ச்சி உண்டு மூன்றாவது தளத்தான் ஜி.எம் அவனது மாமனார்.அவர் மிகவும் நல்லவர் இந்த கம்பெனி காக நிறைய உழைத்திருக்கிறார்.மதுமிதாவுடன் கருத்து வேறுபாடு கொண்டதால் அவர் ரிசைன் செய்ய நிர்பதிக்கப்பட்டார்.அதனால் மதுவின் மீதும் அவரின் இடத்தை நிறப்பிய விக்ரமின் மீதும் பகை உணர்வு கொண்டான்.இப்பொழுது இருவிரின் கண்ஜாடை பேச்சை கண்டு கொண்டவனின் மனம் ஏதோ ரகசியத்தை கண்டவன் போல் துள்ளி குதிக்க ஆனந்தகிருஷ்ணனிடம்," சார் எப்போ உங்களுககும் மேடத்துக்கும் கல்யாணம்?" என்றான் மதுவை பாரத்து கொண்டே.
அவனது கேள்வி ஆனப்தகிருஷ்ணனிற்கு சந்தோஷம் கொடுக்க தன் அருகில் நின்ளிருந்த மதுவின் தோள்களில் உரிமையுடன் கை போட்டவன் அவளை தன் பக்கம் இழுத்துக்கொள்ள விக்ரமின் முகத்திலோ கோபம் தாண்டவம் ஆடியது.விக்ரமின் முகத்தை பார்த்த மதுவோ அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் அச்சம் கொண்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro