பகுதி -32
மதுமிதாவிற்கு தனிமை ஏற்படுத்தி கொடுத்த விக்ரம் தனது ராயல் என்ஃபீல்ட் பைக்அருகே சென்றான்.அதை பார்க்கும் போது மதுமிதாவுடன் கழித்த பொழுதுகள் அவன் நினைவை தழுவ சில மாதங்கள் முன்னோக்கி நினைவலையில் பயணப்படதுவங்கினான்.
அன்று அலுவலகத்தில் அவசர வேலையில் இருந்தவனை கலைத்தது அவன் செல்பேசி அழைப்பு.அதில் மின்னிய பெயரை கவனிக்காதவன் அதை உயிர்பித்து செவிகளில் வைக்க," ஹாய் தனூ.....பிசியா??" என்ற தேன்குரல் அவன் சிந்தனையை சிதற செய்ய
" ஹாய்........,ம்...ஒரு அரை மணிநேரத்தில திரும்ப கூப்பிடவா??"என்று கூறினான் முகத்தில் சிரிப்புடன்." ம்........"என்ற சொல் மட்டும் அந்தபுறம் இருந்த கேட்க ," ஏய் வாலு சீக்கிரம் சரினு சொல்லு நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன்."
" இருங்க இருங்க தனூ...நான் யோசிட்டு இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க."
தனக்கு இருபுறமும் திரும்பி நோக்கியவன் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டு," என் அம்முகுட்டி ல ப்ளீஸ்டா....,"என்று கூறிக்கொண்டே ரிசீவரில் ஒரு உம்மா வைக்க ,அடுத்த நொடி ," சரி சரி தனூ...நான் வைக்கிறேன்," என்று அவள் ரிசீவரை வைக்க ஆதியோ வாய்விட்டு சிரித்துக்கொண்டே தன் வேலை யை தொடர்ந்தான்.
அவன் கூறியது போலவே அரைமணிநேரத்தில் அவளை அழைத்தவன்," ஹாய் அம்மு சொல்லுடா..."என்றான்.
" ஐயோ...தனூ கரெக்டா ஹாப் அன் அவர்ல யே கூப்பிட்டீங்க, எப்படி எப்பவும் சொன்ன டைம கீப் அப் பண்றீங்க?"
" ரொம்ப சிம்பிள் டா எனக்கு காத்திருக்கிறது ரொம்ப கஷ்டம் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமா கழியும் அதனால அந்த கஷ்டத்தை உனக்கு கொடுக்க எனக்கு எப்பவும் விருப்பம் இருக்காது.சோ எவ்வளவு நேரம் கழிச்சு என்னால கூப்பிட முடியும்னு உண்மைய சொல்லிடுவேன். சோ ஈஸில?'
" ம்....சே போங்க தனூ ஏன் லேட்டுனு சொல்லி உங்க கூட சண்டை போட.முடியாம போச்சு."
" ஹா......ஹா...ஹா....அவ்வளவு தான இனிமே உன்னை காக்க வைச்சிட்டா போச்சு.அது இருக்கட்டும் என்ன மேடம் இன்னைக்கு அதிசியமா ஆஃபிஸ் டைம்ல கால் பண்ணியிருக்கீங்க??"
" ஏன் பண்ணகூடாதா?"
" சே..சே...நான் எப்ப அப்படி சொன்னேன்?"
" ம்...சொல்லிதான் பாருங்களேன்."
" ஏன்மா நான் தான் ஆரம்பத்திலயே ஜகா வாங்கிட்டேனே அப்பறம் ஏன்.நீ விஷயம் இருந்தாலும் கால் பண்லாம் விஷயமே இல்லாட்டியும் கால் பண்லாம் உனக்கில்லாத உரிமை வேற யாருக்கு இருக்க முடியும்?"
" ம்...அந்த பயம் இருக்கட்டும்.தனூ எனக்கு நாளையில இருந்து ஸ்டடி லீவ் ஆரம்பிக்குது."
" ஐய்யய்யோ.....அப்பறம் எப்படி உன்னைபாக்குறது? எப்ப எக்ஸாம்"
" அடுத்த மாசம் ஃபஸ்ட் வீக்.."
" அதுக்கு இன்னும் இருபது நாளைக்கு மேல இருக்கே.அவ்ளோ நாள் உன்னை பார்க்காம எப்படி இருக்கிறது?"
" ம்....அதான் என்ன செய்யுறதுனு புரியலை தனூ."
" நீ என்னை தனூ... தனூ...னு கூப்பிடும்போது யாரோ பொண்ண கூப்பிடுறமாதிரியே இருக்கு அம்மு."
" அதில்லை தனூ இப்போ எங்க வீட்ல யாராவது ஒட்டுகேட்டா நான் ஏதோ பொண்ணு கூட பேசிட்டிருக்கேனு நினைப்பாங்க.அது மட்டும் இல்லாம உங்களை இப்படி என்னைதவற யாரும் கூப்பிட முடியாதுல அது எனக்கான ஸ்பெஷல் பேரும் கூட உங்களுக்கு பிடிக்கலையா தனூ.."
" சே சே அப்படியெல்லாம் இல்லைடா உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படியே கூப்பிடு.சரி அது இருக்கட்டும் ஸ்டடி ஹாலிடேஸ்ல என்ன பண்ண போற?"
"ப்ளீஸ் ப்ளீஸ் தனூ எதாவது ஐடியா சொல்லுங்களேன்..."
" ம்...சரி அப்போ இப்ப ரெடியா இரு ஆஃபிஸ் ல பெர்மிஷன் போட்டு வரேன்."
" எங்க வரணும்?"
" உங்கவீட்டுக்கு பக்கத்தில இருக்குற பஸ் ஸ்டாப்புக்கு வந்திரு நான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்."
" ஐய்யய்யோ.... பட்டபகல்ல உங்க கூட பைக்கில நான் வரலைபா?"
" என் கூடவராம வேற யாருகூட போகப்போற?"
" தனூ ப்ளீஸ் பா எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க நெறைய பேர் இருக்காங்க யாராவது என்னை பார்த்துட்டா நான் அவ்வளவு தான்."
" அப்ப என் கூட பைக்கில வரமாட்ட ?"
" சே சே ஒரேடியா அப்படி சொல்லிட முடியாது.அவுடர் பக்கம்னா ஒன்னும் பிரச்சினை வராது ப்ளீஸ் தனூ புரிஞ்சுக்கோங்க,"
" ஹம்......" என்று பெருமூச்சு விட்டவன், " நிலா ஓட ஸ்கூலுக்கு பக்கத்தில இருக்கிற பீச்சுக்கு வந்திடு மா நான் வெயிட் பண்றேன்" ,என்றவாறு கால் ஐ கட் செய்தான்.
அவன் அப்படி வைக்கவே அவனது கோபத்தை உணர்ந்த மது மீண்டும் அவனை அழைத்தாள்.இம்முறை அவளது அழைப்பை எதிர்பார்த்தது போல உடனே அட்டெண்ட் செய்த ஆதி," ம்....." என்று மட்டும் கூறினான்.
" கோபமா என்மேல?"
" சே சே...நான் ஏன் உங்க மேல கோபப்பட போறேன்?"
" தனூ ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க நான் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும் அப்பறம் என்னால உங்களை பார்க்க வர முடியாம போயிட்டா என்ன செய்ய முடியம் சொல்லுங்க உங்களை பார்க்காம என்னால இருக்க முடியுமா இல்லை உங்களால தான் இருக்க முடியுமா சொல்லுங்க ."
தன் காதலி வேற ஒருவருக்கு பயந்து தன்னை காண தயங்குகிறாள் அல்லது தாமதப்படுத்துகிறாள் என்பதை எந்த காதலனாலும் தாங்கிக்கொள்ள முடியாது அது அவனது தன்மானத்தை பாதிக்கும் அது அவளின் தந்தையாகவே இருப்பினும்.அதை புரிந்து கொண்ட மது நிமிட நேரத்தில் சுதாரித்தே ஆதியை இவ்வாறு அனுகினாள்.அவளது யுக்தி சரியாக வேலை செய்ய ," ஓகே..ஓகே...மேடம் நான் உங்கிட்ட சரண்டர் சரி சீக்கிமா கிளம்பி வாங்க ,சரியா??"
" கோபம் போயிடுச்சா தனூ?"
" கோபமா??நான் எப்ப கோபப்பட்டேன்,"
" நான் நம்பிட்டே.....ன்.சரி தனூ நேரம் ஆகிடுச்சு நான் கிளம்பும்போது உங்களுக்கு கால் பண்றேன்." என்றவாறு கால் ஐ கட் செய்துவிட்டு விரைவாக கிளம்பினாள்.
அவள் கால் ஐ கட் செய்தவுடன் அவளது சாமர்தியத்தை நினைத்து வியந்த ஆதி தனது அலுவலகத்தில் விடுமுறை கூறிவிட்டு ஒரு.மணி நேரத்தில் அந்த கடற்கறையை அடைந்தான்.
அங்கே அவனுக்கு முன்பாகவே வந்த மது அவர்களின் மகளான நிலாவை அவளது நர்சரியில் இருந்து அழைத்து வந்து அந்த கடற்கரை யில் நின்றிருந்தாள்.
இரு மலர்களும் இவன் சில அடிகள் பின்னே நிற்பதை கூட கவனிக்காமல் தங்களுக்கே உரித்தான உலகில் சஞ்சரிக்க அவர்களது அழகிய நிலையை கலைக்க விரும்பாத ஆதி அவர்களை ரசிக்க துவங்கினான்.அப்பொழுது ஒரு பெரிய அலை வர அதுவரை நிலாவை கைகளில் பிடித்தாருந்த மது வேகமாக அவளை தன் மார்ப்புடன் அணைத்துகொள்ள தடுமாறி மதுவை தன்னுடன் அணைத்துக்கொண்டான் அவளவன்.
சட்டென கனவு கலைந்தது போல பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த ஆதியின் மனதில் அது போல ஒரு பொழுது திரும்ப கிடைக்காத என்ற ஏக்கம் தோன்ற கண்களோ தன்னவளை தேடி அலைபாய்ந்தது.அவனவளோ கடலில் கால்கள் நனைய ஏதோ நினைவில் நின்றிகொண்டிருந்நாள்.அவளுக்கு கொடுத்த தனிமை போதும் என்று எண்ணிய ஆதி அவளை நெருங்கினான்.அவன் நெருங்கவும் ஒரு பெரிய அலை அவளை நோக்கி வரவும் சரியாக இருக்க இம்முறையும் அவளை பின்புறமிருந்து ,"பார்த்து மிதூ..." என்றவாறு தன்னுடன் அணைத்துகொண்டான்.
அவன் அணைத்த அதே வேளையில் அவளை திரும்பி நோக்கிய மது குழப்பத்துடன் கண்மூடினாள்.அவள் மயங்கி விட்டாளோ என்ற பதட்டம் ஆதிக்கு தோன்ற அவளது கண்ணத்தில் மெதுவாக தட்டி ," மதூ...மதூ...." என்று அழைக்க ," ம்....' என்று மெலிதான முனங்கல் மட்டுமே கேட்டது.அவள் மயங்கவில்லை என்ற எண்ணமே அவனை ஆசுவாசப்படுத்த தண்ணீரை விட்டு சற்று தள்ளி அமர்ந்து அவளை தன்னுடைய தோள்களில் சாய்த்துக்கொண்டான்.
" என்னாச்சு மது ? ஏன் ஒரு மாதிரி இருக்கிற?"
" தெரியலை ஆதி ஏதோ மாதிரி இருக்கு இந்த இடத்துக்கு ஏற்கனவே வந்த மாதிரி ஒரு உணர்வு கொடுக்குது அதனாலயோ என்னவோ தலை ரொம்ப வலிக்குது."
அவளது ஆதி என்ற அழைப்பு ஆதி @ விக்ரமை திக்பிரம்மை அடைய செய்ய ," மதூ....நீ. நீ.....இப்ப என்னை எப்படி கூப்பிட்ட?"
" என்னாச்சு விக்ரம் உங்களுக்கு ?" கண்களை திறக்காமலே கூலாக அவள் வினவ ," ஒன்னுமில்லை மது.எங்கூட வா உன் தலை வலிக்கு நல்ல மறந்து தரேன். அநது மருந்து சாப்பிட்டதும் தலைவலி இருக்குற இடம் தெரியாம காணாம போயிடும்," என்று கூற , எந்த வித மறுப்பும் கூறாத மது எழுந்து அவனுடன் நடக்கலானாள்.ஆதிக்கு மிக அருகே நடந்தாலும் அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இரேப்பதை ஆதியால் உணரமுடிந்தது.அது மட்டுமின்றி சற்று முன்பு அவள் மயங்கிடாத பொழுதும் தன் மீது சாய்ந்து கொண்து தன்னை ஆதி என்று அழைத்தது முதலியன அவனையும் குழப்ப அவனும் அமைதியாகவே நடந்தான்.
பைகில் அவளையும் ஏற்றிக்கொண்டு இயந்திரம் போல வண்டியை ஓட்டினான் ஆதி.சிறிது நேர பயனத்திற்கு பிறகு ஒரு சிறு ஹோட்டல் அருகே வண்டியை நிறுத்தியவனை பார்த்த மது," இங்க ஏன் வந்தோம் விக்ரம்?"
" நீ வா நான் சொல்றேன் ," என்றவாறு அவளது கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றவன் ஆடர் செய்து வந்து அவளின் எதிரே அமர்ந்தான்.அவனைபுரியாத குழப்ப பார்வை பார்த்த மதுவை ," கொஞ்சம் வெயிட் பண்ணு ,"அவன் கூறி முடிக்கும் முன்பே சூடாக இரண்டு கப் காபி அவர்கள் முன் வைக்கப்பட அதை பார்த்த மது ஒரு பெரு மூச்சுடன்," என்ன விக்ரம் இது ?"
" காபி மது இங்க இது ஸ்பெஷல் பயங்கர டேஸ்டா இருக்கும்."
" அது சரி நான் உங்ககிட்ட கேட்கவேயில்லையே?"
" நீ கேட்கனுமா என்ன? நீதான் பயங்கிரமா தலை வலிக்குது சொன்ன அதான் இந்த காபி. குடிச்சி பாரு தலைவலி பஞ்சா பறந்து போயிடும்."
" ஏன் விக்ரம் தலைவலிக்கு மாத்திரை வாங்க வேணாமா??"
" நீ அதெல்லாம் சாப்பிட மாட்டலை அதான் ஏனிஅகு பிடிச்ச காஃபி,"
" அதான் நானும் கேட்குறேன் நான் தலைவலி வந்தா மாத்திரை போட மாட்டேன் சூடா காஃபிதான் குடிப்பேனு உங்களுக்கு எப்படி தெரியும்?"
அவள் அவ்வாறு கேட்டவுடனே தன் தவறை உணர்ந்தவன் என்ன கூறுவது என்று தெரியாமல் சிலையாக சமைந்தான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro