Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி-30

கால்கள் அவர் அருகே செல்ல அவரோ," நல்லா இருக்கீங்களா??? தம்பி நீங்க பாட்டி வீட்ல இருக்கீங்கனு சொன்னாரு இப்ப உடம்பு எப்படி இருக்கு?"என்று அவர் வினவ மதுமிதா வின் மனமோ ," மீண்டும் ஆதித்யனா????" என்று உறைந்தது.

"-ஆ.....நல்லா இருக்கு சார்."

" அட எப்பவும் போல அண்ணேணே கூப்பிடுங்க மதுமா."என்று கூறியவர் பின் நினைவு வந்தவராக ," நான் ஒருத்தன் உங்களை வெளியவே நிக்க வைக்கிறேன், உள்ள வாங்க மா ," என்று வற்புறுத்த ," இல்லை இல்லை நான் இப்ப அவசரமா போகனும்," என்று கூறியவள் அவ்விடம் விட்டு வேகமாக நடந்தாள் இல்லை.இல்லை கிட்டதட்ட ஓடினாள் என்றே கூறலாம்.மூச்சிறைக்க ஒஓரடி தூரமே ஓடியிருந்தவள் முன்பாக வேகமாக வந்த ஒரு வாகனம் சடன் ப்ரேக் போட்டு நிறுத்த திடுக்கிட்டு திரும்பியவள் அங்கே விக்ரமை பார்த்ததும் சிறு ஆசுவாசமடைந்தாள்.

"மது ஏன் ஓடி வர என்னாச்சு?"

" ஒ...ஒ...ஒன்னுமில்லை ஒரு செக்யூரிட்டி என்னை ஃபாலோ பண்ற மாதிரி இருந்துச்சு அதான்."

" யாரும் வரலையேமா," அவள் பின்னால் பாரத்தவாறு கூறினான் ஆதி.

" ம்...இப்ப காணோம் ஆனால் என்னை கூப்பிட்டு பேசுனாரு."

" உன்னை வேறு யாரோனு நினைச்சிருக்கலாம் டேக் இட்.ஈஸி."

" ம்.... ஆமா நீங்க எங்க இங்க ? என்னை ஃபாலோ பண்றீங்களா??"

" பார்ரா.....இது என்ன புது பழி?"

" ஆமா எப்போலாம் நான் ஆபத்துல இருக்கேனோ அங்கலாம் நீங்க கரெக்டா வந்திடறீங்களே?"

" ம்...பக்கத்தில என் ஃப்ரெண்ட பார்க்க வந்தேன்.....அப்படியே பக்கத்தில இருக்கிற பீச்சில கொஞ்ச நேரம் உட்காரனும்னு தோனுச்சு " என்றவனை இடைமறித்தவள்  ,"  பீச்சா இங்கயா??"

" ம்....உனக்கு தெரியாதா இது சென்னை இ.சி.ஆர். தமிழ் ல கிழக்கு கடற்கரை சாலைனு சொல்லுவாங்க."

" ஓ.....எனக்கு தெரியலை விக்ரம் சென்னை பத்தி ரொம்பலாம் தெரியாது."

"ம்....பரவாயில்லை இப்ப தெரிஞ்சுக்கோ.அது இருக்கட்டும் நீ இங்க எங்க??"

" இங்க  பக்கத்தில ஒரு வேலையா தங்கச்சி கூட வந்தேன்."

" தங்கச்சியா ? எங்க காணோம்."

" கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்னு தோனுச்சு அதான் அவளை போக சொல்லிட்டு கொஞ்ச நேரம் நடக்கலாம்னு இங்க வந்தேன் அதுக்குள்ள செக்யூரிட்டி வந்து பேசவும் பயந்துட்டேன்."

" உங்கிட்ட அவரு பேசதானே வந்தாரு அதுக்குபோய் யாராவது பயப்புடவாங்களா?? உன் தைரியம் எல்லாம் எங்க போச்சு?"

" அவருகிட்ட நான் பேசத்தான் செஞ்சேன்.வீட்டுக்குள்ள வாங்க வெளியவே நிக்கறீங்களேனு சொன்னதும்  கொஞ்சமா கொஞ்சூன்டு பயந்துட்டேன்." என்றபடி அசடு வழிந்தாள்.அவளது முகபாவனை    ஆதித்யனை கவர அவள் மூக்கில் பெருவிரலையும் ஆள்காட்டிவிரலையும் வைத்து நன்றாக கிள்ளியவன் பலமாக சிரித்தான்.

" ஆ.....வலிக்கிது விக்ரம்.கேலி பன்றீங்க பார்த்தீங்களா??"என்று கூறி திரும்பி நடக்க முயல ," ஹே....நில்லு நில்லு உனக்கு தனியா தானே இருக்கனும் எங்கூடவா நான் உன்னை கூட்டிட்டு போறேன். வா வந்து வண்டியில ஏறு," என்று அழைத்தான்.

" இந்த வண்டிலையா?"

" ஏன்மா ராயல் என்ஃபீல்ட் பைக் வச்சிருக்கேன் இப்படி கேட்குற?? ஓ...என் கூட பைக்ல உட்கார்ந்து வர தயக்கமா இருக்கா?"

" ஐயே....ரொம்பதான் நினைப்பு உங்களுக்கு இதுவரை நான் பைக்ல  போனது இல்லை அதான்..."

" ஒன்னும் பெரிய விஷயமில்லை.தைரியமா பின்னாடி ஏறு,"என்று அவன் கூற மதுமிதா  பயத்துடனேயே அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.

முதன் முதலில் பைக்கில் ஏறிய பயம் ஒருபுறம் விக்ரமின் பின்னே பைக்கில் அமர்ந்த பதட்டம் ஒரு புறம் இருக்க பிடிமானம் ஏதுமின்றி கைகள் தடுமாறிய பொழுது விக்ரமை பிடிக்க எண்ணிக்கைகளை அவனிடம் கொண்டு சென்ற பொழுது பைக் நின்றது.வேகமாக கைகளை பின்னே இழுத்தவள்," அதுக்குள்ள வந்திருச்சா," என்று விக்ரமிடம் வினவினாள்.

"ஆமா நடக்கிறது தூரம் தான் பைக் இருந்ததால பைக்கிலேயே உன்னை கூட்டிட்டு வந்துட்டேன்  கீழே இறங்கு," என்று விக்ரம் கூறினான்.

நண்பகல் நேரம் ஆகி இருந்தபோதிலும் வெயில் அவ்வளவாக இல்லாமல்  மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வானிலை மிகவும் ரம்மியமானதாக இருந்தது.மற்ற பீச் போன்று கூட்டமாக இல்லாதபோதிலும் சில இடங்களில் சிறு சிறு குழுவாக மக்கள் அமர்ந்து பேசிய வண்ணம் இருந்தனர்.

"இங்கு அடிக்கடி வருவீங்களா விக்ரம் "

"அடிக்கடி இல்ல ஆனா அப்பப்ப வருவேன் சில சமயம்  மனசுக்கு ரொம்ப அமைதி தேவைப்படும் அப்ப வருவேன் சிலசமயம் முடிவெடுக்க முடியாமல் ஒரே குழப்பமா இருக்கும் அப்ப முடிவெடுப்பதற்காக இந்த இடத்திற்கு வருவேன்."

"ஓ....இப்போ என்ன பிரச்சினை உங்களுக்கு  முடிவெடுக்க முடியாமல் வந்தீங்களா இல்ல மனசுக்கு அமைதி தேடி வந்தீங்களா."

மதுவை பார்த்து புன்னகை செய்த விக்ரம் "ரெண்டுமே இல்லை ,"என்று கூறினான் பின்பு சிறிய புன்னகையுடனேயே தொடர்ந்தான் ,"பெங்களூர் போயிட்டா அப்புறம் இந்த கடற்கரையை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் அதனால இங்க வந்து கொஞ்ச நேரம் இருக்கனும்னு தோணுச்சு, இரண்டாவது பிரெண்ட் பார்க்க வந்த இடத்ததுக்கு பக்கத்துலதான் இருக்கு அப்படியே பாத்துட்டு போலாம்னு  நினைச்சேன் அவ்ளோதான் வேற ஒன்னும் பெருசா விஷயமில்லை, "

"எப்போ பெங்களூர் கிளம்புறீங்க"

"இன்னைக்கு மதியம் கிளம்பலாம் இருக்கேன் "

"மதியமா ?என்கிட்ட சொல்லவே இல்லை"

" ஆமா இது திடீர்னு எடுத்த முடிவுதான் நான் நாளைக்கு கிளம்பலாம் நினைச்சேன் பட் வேலை முடிஞ்சுது அதான் இன்னைக்கு கிளம்பறேன் பெங்களூர்ல போய் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் இங்க இன்னைக்கு கிளம்பினால் தான் எனக்கு அங்க போயி வேலைய முடிச்சுட்டு நான் மன்டே ஆஃபிஸ் வரதுக்கு சரியா இருக்கும் சரி உன்னோட பிளான்ஸ் என்ன ?"

"இதுவரை எனக்கு எந்த ஐடியாவும் இல்ல விக்ரம் "

"என்ன ஆச்சு வந்த வேலை முடிஞ்சுதா முடியலையா?"

"ம்......"என்று அமைதியாக  இருந்த மது ," நான் சில கேள்விகளுக்கு பதிலை தேடி தான் முக்கியமா சென்னைக்கு வந்தேன் விக்ரம். "

"சரி  அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கலையா? "

"பதில் கிடைக்கலைன்னு  சொல்ல முடியாது பதில் இருக்கு ஆனா அந்த பதில் ஒரு புதிரா தான் வருது.சரின்னு  அடுத்த கேள்வியை எடுத்து அந்தக் கேள்விக்கான பதிலை தேடி போனா அந்த பதிலும் அதே  புதிர்ல கொண்டு  வந்து நிப்பாட்டுது. இப்படி இருக்கிற எல்லா கேள்விகளும் ஒரே புதிரை நோக்கி கொண்டு போகுது அந்த புதிருக்கான விடை எனக்கு தெரியல அந்த புதிருக்கான விடையை நான் தேடிப் போகவும் எனக்கு வழி தெரியல ஒரு விதமான இடியாப்ப சிக்கல்ல மாட்டித் தவிச்சிட்டு இருக்கேன்  இதுக்கு மேல நான் எப்படி சொல்றது எனக்கு தெரியல. "

அவள் அதுவரை கூறியதை பொறுமையாக கேட்ட விக்ரம், "நீயே மது புதிருக்கான விடையை தேடிப் போற இல்ல கேள்விக்கான பதிலைத் தேடி போற அந்த பதிலோ புதிரோ அதற்கான விடையைத் தேடி வர்ற வரைக்கும் நீயேன் காத்திருக்கக் கூடாது அப்படி அவசரமாக தேடி போக வேண்டிய அவசியம்தான் என்ன? "

"என்ன விக்ரம் இப்படி சொல்றீங்க எனக்கிட்ட  இருக்குற நிறைய சந்தேகங்களுக்கு விடை தெரிய வேண்டாமா அதற்கு பதில் தெரியாம தலை வெடிச்ச மாதிரி இருக்கே நான் என்ன பண்றது சொல்லுங்க ?"

"எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் மது காரணம் நீதான் அந்த கேள்விக்கான பதிலை கண்டு பிடிச்சு தீரனும் அப்படியே மனசுல உறுதியா இருக்க அதனால் அதை தேடிப் போற ஒருவேளை அதை சந்தேகங்களையும் கேள்விகளையும் ஒதுக்கி வச்சுட்டா உனக்கு பதிலை தேட வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடுமே.  முடிஞ்சது முடிஞ்சது தான் நடந்தது எதுவும்  மாற்ற முடியாது இதை மட்டும் நல்லா மனசுல பதிய வச்சிக்கிட்டா இப்ப இருக்கிற நாட்களை அமைதியா தொடரலாம் இல்லையா??"

விக்ரமன் பேசியதை கவனமாக கேட்ட மது அதை பற்றி சிந்திக்க தொடங்கினாள்,"விக்ரம் அப்படி இருக்க முடியாது நீங்க சொல்றது  பொதுவா எல்லாருக்கும் சரியா வரும் ஆனால் என் விஷயத்தில சரி வருமானு தெரியலை. ஆனால் ஒன்னுமட்டும் நிச்சயம் இனி நான் பதில தேட போறது இல்லை.பதிலுக்காக காத்திருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்."

மதுமிதாவை ஆழமாக பார்த்த ஆதி ," ம்.......ஆல் தி பெஸ்ட் மது.சரி வா கிளம்பலாம்," என்று கூறி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றவன் மது எழுந்து கொள்வதற்கு கையை நீட்டினான்.அவன் கையை பற்றி எழுந்த மதுவை அவள் உணருமுன்பாக தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் விக்ரம்.

அவனது இந்த செயலை சற்றும் எதிர்பார்த்திராத மது முதலில் திடுக்கிட்டாலும் அவன் அணைப்பு குழம்பிய மனதிற்கு தேவையானதாகவே இருந்தது.புதிதாக ஒரு ஆணை அணைக்கும் உணர்வு கொடுக்காமல் பழக்கப்பட்ட உணர்வு தோன்ற மது திகைத்தாள்.

" எதைபத்தியும் யோசிக்காத மனச தேவையில்லாம குழப்பிக்காத நீ பயப்படுற அளவு எதுவும் இல்லை.ஜஸ்ட் ரிலாக்ஸ். உன் கூடவே நான் இருக்கேன் எதுனாலும் என்கிட்ட சொல்ல  தயங்க வேணாம்.நான் இன்னைக்கு பெங்களூர் போறேன் பத்திரமா இரு சரியா??"

அவன் அணைப்பில் இருந்துகொண்டே மேலே நிமிருந்து பார்த்தவள் ," ம்......" என்று தலையாட்டினாள்.அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவன் தன்னை ஒரு நொடி மறந்தான் அவளின் நெற்றியில் மென்மையாக இதழை ஒற்றி எடுத்து இறுக்கமாக அவளை பற்றிக்கொண்டான்.

" இதோபாரு நல்லா கவனமா கேட்கனும். நான் ஊர்ல இருக்க மாட்டேன்.எங்க போனாலும் கவனமா இருக்கனும் யாரையாவது துணைக்கு அழைச்சிட்டு தான் போகனும் . அப்பப்ப எனக்கு கால் பண்ணி பேசனும் புரியுதா??"

" ம்......நானும் சீக்கிரம் வேலையைமுடிச்சிட்டு பெங்களூர் வரப்பார்க்கிறேன்."

" ம்...சரி வா நேரமாகிடுச்சு" என்றவண்ணம் இருவரும் கிளம்பவும் மதுவின் தொலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

" ஹலோ....ம்....சொல்லு மதி. நானா நான் இதோ வீட்டுக்கு கிளம்ப போறேன்."

"......"

"இல்லை இல்லை நீ வர வேண்டாம்.எனக்கு வழி தெரியும்."

"  ........."

" இல்லை மதி நான் என் பழைய ப்ரெண்ட பார்த்தேன்.அவங்களுக்கு அட்ரஸ் தெரியும். நான் அவங்க கூட வந்திடறேன்"

"............"

" சொன்னா கேளு மதி உனக்கு தெரியாது அந்த ப்ரெண்ட்."அவளிடமிருந்து ஃபோனை வாங்கிய விக்ரம்," ஹாய் மதி நான் தான் உங்க அக்கா சொன்ன அந்த ப்ரெண்ட். கவலைபடாம இரு நான் பத்திரமா உங்க அக்காவை வீட்டில கொண்டு வந்து விடறேன்.

"........." விக்ரமின் முகத்தில் ஒரு வித சங்கடம் தெரியவதை பார்த்த மது," என்னாச்சு மதி என்ன சொன்னா??"

" ஒன்னும் சொல்லலை.சரினு.தான் சொன்னுச்சு."

"இல்லை வேற ஏதோ சொல்லியிருக்கா,"

" மதிகிட்ட என்னை பத்தி இதுவரை எதுவும் சொல்லியிருக்கியா?"

"இல்லையே...ஏர்போர்ட்ல ஒரு ப்ரெண்ட பார்த்தேனு தான் சொன்னேன்.வேற எதுவும் உங்களை பத்தி நான் சொல்லலை ,ஏன் என்ன சொன்னா?"

" சரிங்க மாமானு சொன்னா,"

" என்ன???????????"மதுமிதாவின்.முகம் ஒரே நேரத்தில் சங்கடத்தையும் வெட்கத்தலயும் பிரதிபலிக்க விக்ரம் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.









Bạn đang đọc truyện trên: Truyen247.Pro