Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி - 28

" ஹலோ...."என்று அந்த புறம் குரல் கேட்க ஃபோனை நழுவவிட்ட மதுமிதா அடுத்த நொடி அதை கைபற்றினாள் ," இஸ் திஸ் மிஸ்டர்‌.ஆதித்யன்(Is this Mr.Aadhiyan)?"என்று அவள் வினவ அந்த ஆண் குரல் கூறப்போகும் பதிலுக்காக படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தவள்," சாரி மேம்.ஐ திங்க் யூ ஹேவ் தி ராக் நம்பர்( I think u have the wrong number)" என்று அவன் கூற குழப்பமடைந்தாள்.

" ஒரு நிமிஷம் மிஸ்டர்."

" சொல்லுங்க ,"

" ம்.......," என்று பெருமூச்சு விட்டாள் மேலும் தொடர்ந்தாள் ," நாலு வருஷத்துக்கு முன்னாடி கோயமுத்தூர் சென்னை ஹைவேல நடந்த ஒரு ஆக்ஸிடென்ட்ல ஒரு பொண்ண ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணது நீங்கதானே?"

" நாலு வருஷத்திற்கு முன்னாடியா?..ம்....ஆமா யெஸ் ஆனால் அவங்களை அட்மிட் பண்ணினது நான் இல்லை என் ப்ரெண்ட் ஆதி." என்று கூறியவன் ," அது இருக்கட்டும் நீங்க யாரு இதை பத்தியெல்லாம் ஏன் நீங்க கேட்கறீங்க?" என்று தன் சந்தேகத்தை கேட்டான்.

" அந்த ஆக்ஸிடென்ட்ல நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணதே என்னைதான்."

" ஓ....இப்ப எப்படி இருக்கீங்க அந்த ஆக்ஸிடென்ட் ல உங்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்னுமில்லையே?"

" இல்லை தாங்கஸ் ஐஅம் ஃபைன்(I'm fine)"

" உங்களுக்கு என்ன தெரியனும் மிஸ்....?"

" நான் மதுமிதா.நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்ஸிடென்ட் ல என்னாச்சு னு எனக்கு தெரிஞ்சுக்கனும்.அதனால ஹாஸ்பிடல்ல டீடெய்ல்ஸ் கேட்டேன் உங்க நம்பர் கொடுத்தாங்க.ஆக்சுவல்லி என்னதான் ஆச்சுனு உங்களுக்கு தெரியுமா?

" இல்லை மிஸ்.மதுமிதா. அன்னைக்கு தான் என் ஃபிரென்ட் ஆதித்யன ஏர்போர்ட்ல இருந்து பிக் அப் பண்ணிட்டு வீட்ல டிராப் பண்ண போய்கிட்டு இருந்தேன்.அப்பதான் வழியில கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க. நாங்க கீழ இறங்கி பார்க்கும்போதே நீங்க கீழ மயங்கி கிடந்தீங்க உங்களை நாங்கதான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி உங்க விசிட்டிங் கார்ட் ல இருந்த உங்க அப்பாவோட நம்பருக்கு கால் பண்ணி சொன்னோம்.அவங்க வந்ததும் நாங்க கிளம்பிட்டோம் மிஸ்.மதுமிதா இதான் அன்னைக்கு எனக்கு தெரிஞ்சது.

" தேங்கஸ் மிஸ்டர்...?"

" ஷங்கர்."

"தேங்கஸ் மிஸ்டர்.ஷங்கர்.நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்டா நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கலே?"

" நோ ஃபார்மாலிட்டீஸ் சிஸ்டர்."

" ம்....மிஸ்டர்.ஆதித்யன் ன பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்ல முடியுமா? அவரோட கான்டாக்ட் நம்பர் கிடைக்குமா??"

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஷங்கர்," ம்....." என்று பெருமூச்சுவிட்டான் பின் தொடந்தவன்,"சிஸ்டர் உங்களை அவனைக்கு ஏற்கனவே தெரியும் னு சொன்னான்."

" என்ன???என்னை அவருக்கு முன்னாடியே தெரியுமா??"

" ஆமா சிஸ்டர் ஆதித்யனும் நானும் ஒன்னாதான் கோயம்புத்தூர் ல யூ.ஜி.(U.G.) படிச்சோம்.அவனை அப்போதான் எனக்கு தெரியும்.அவன் படிச்சு முடிச்சிட்டு கேம்பிரிட்ஜ் ல பி.ஜி.(P.G.) படிக்க போய்டான்.பி.ஜி முடிச்சிட்டு அன்னைக்கு தான் திரும்பி வந்தான்.அவனை ஏர்போர்ட் ல இருந்து வீட்டுக்கு போய்கிட்டு இருக்கும்போதுதான் உங்களை பார்த்தோம்."

" ஓ......அப்போ அவங்க ஃபேமிலியெல்லாம் எங்க இருக்காங்க?"

" அவங்க எல்லாரும் கோயம்புத்தூர் ல தான் இருந்தாங்க."

" இருந்தாங்க னா என்ன அர்த்தம்?இப்போ எங்க இருக்காங்க?"

" எனக்கு தெரியலை சிஸ்டர்.அன்னைக்கு உங்களை அட்மிட் பண்ணதும் அவனுக்கு ஏதோ மெசேஜ் வந்துச்சு.அப்போ அன்னைக்கு அவசரமா போனவன் தான் அதுக்கபுறமா நான் அவனை பார்கவே இல்லை."

"ஓ.....ஏன் என்னாச்சு?"

" எனக்கு தெரியலை சிஸ்டர் அவனோட லக்கேஜ கூட அவன் என் கார்ல இருந்து எடுக்கலை.ஒரு வாரத்துக்கு அப்பறம் அவனோட .ஃப்ரெண்ட ஜீவா தான் வந்து எடுத்திட்டு போனான்."

" ஏன் நீங்க அவங்க வீட்ல.போய் கொடுத்திருக்கலாமே?"

" நான் போய் பார்தேன்.வீடு பூட்டி இருந்துச்சு அவன் வீட்ல யாரும் இல்லை."

"ஓ....."

" ஆமா சிஸ்டர் நீங்க ஆதியை பார்த்தீங்களா??"

" அது ஒரு பெரிய கதை மிஸ்டர்.ஷங்கர் .அவரோட கான்டாக்ட் நம்பர்?"

" என்கிட்ட எதுவும் இல்லை சிஸ்டர்."

" கடைசியா ஒரே ஒரு கேள்வி எதுக்காக ஹாஸ்பிடல்ல அவரோட நம்பர் கொடுக்காம உங்க நம்பர் கொடுத்தாரு.?"

அவன் கூறப்போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள் மது , அவன் செயல் முன்கூட்டி யே திட்டமிட்டதா என்பது அவன் கூறப்போகும் பதிலில் இருப்பதாக அவள் உணர்ந்தாள்.

" இல்லை சிஸ்டர் அவன் அப்போதுதான் இந்தியா வந்தான் அதனால அவன் கிட்ட லோகல் சிம் இல்லை.அதனால.என் நம்பர் கொடுத்தான்."

அந்த பதில் அவளை.வெகுவாக ஆசுவாசப்படுத்தியது.

" ரொம்ப தாங்கஸ் மிஸ்டர். ஷங்கர்"

" யு ஆர் வெல்கம் சிஸ்டர்.நான் எனக்கு தெரிஞ்ச சோர்ஸ்ல அவன் நம்பர் கிடைக்குதானு பார்க்கிறேன்." என்று கூறி கால் ஐ கட் செய்தான்.

ஷங்கருடன் பேச தொடங்கிய சில நொடிகளிலே உள்ளே வந்து அமைதியாக தன் தமக்கையின் அருகில் அமர்நதிருந்த மதியோ,"என்னாச்சுகா??ஏதாவது தெரிஞ்சதா?"

" ம்......." என்று பெருமூச்சு விட்டவள்," இல்லை மதி தொடங்குன இடத்தில தான் இன்னும் நிக்கறேன்.என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவரு பேரு ஆதித்யன். அவ்ளோதான் இப்போதைக்குதெரிஞ்சிருக்கு.மத்தபடி அவரோட எந்த அடையாளமும் தெரியலை."

ஏமாற்றமாக உணர்ந்த தன் தமக்கையை பார்க்க பார்க்க மதியின் மனம் வேதனை கொண்டது அவளை தேற்றும் நோக்கத்தோடு ," அக்கா....நீ சீக்கிரமா என்கூட கிளம்பு நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்."

" இல்லை மதி நான் எங்கயும் வரலை.வரவும் பிடிக்கலை."

" அக்கா.....சொன்னா கேளு அங்க வந்தா உன் மனசு ரொம்ப அமைதியாகிடும்.உன் மனபாரம் குறைஞ்சிடும்."

" அப்படி ஒரு இடமா?என்ன இடம் அது?"

" அது நீயே வந்து தெரிஞ்சுக்கோ.போ..போ..சீக்கிரமா கிளம்பி கீழ வா உனக்காக நான் கீழ வெயிட் பண்றேன்." என்று கூறியவள் தன் தமக்கையை சிந்தனையில் விட்டுவிட்டு சென்றாள்.

அரை மணி நேரத்தில் சகோதரிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

" மதி உனக்கு கார் இல்லையா?"

"........"

" உன்னைதான் கேட்கறேன் உனக்கு அப்பா கார் வாங்கி தரலையா??"

" இல்லைகா உனக்கு ஆக்ஸிடென்ட் ஆனதால உனக்கும் எனக்கும் டூ வீலர் தான் வாங்கி தந்தாங்க.கார் ஓட்ட அப்பா என்னை அனுமதிக்கலை."

" சாரி மதி என்னோட அஜாக்கிரதையால நீயும் கஷ்டப்பட்டிருக்கல"

" அக்கா எதுக்கு பழசெல்லாம் பேசிகிட்டு வா என்னோட டூ வீலர்ல யே போலாம் உனக்கு வழி தெரியாது எனக்கு கார் ஓட்ட தெரியாது."தன் சகோதரியின் மனம் நோகாத வாறு அவளை அழைத்துக்கொண்டு சென்றாள்.

" எங்கதான் கூட்டிட்டு போற?"

"அவ்ளோதான் வந்தாச்சு பாரு ," என்வாறு இடதுபுறம் திரும்பி அந்த பெரிய காம்பவுண்டிற்குள் நுழைந்தாள்.

" சன் ஷைன் ஃபவுன்டேஷன்ஸ்" என்ற பெரிய எழுத்துக்கள் அந்த காம்பவுண்ட் வாசலை அலங்கரிக்க மதியின்.வாகனமோ இருபுறம் செழுமையான மலர்.தோட்டத்திற்குள் போடப்பட்டிருந்த தார் சாலையில் ஒய்யாரமாய் சென்றது. அங்கு நிலவிய சூழல் மிகவும் இதமானதாக இருக்க மதுவின் மனம் உண்மையிலே அமைதி கொண்டது.

" அக்கா.........."

" ம்....என்ன மதி கூப்டியா??".

" சரியா போச்சு போ ரொம்ப நேரமா கூப்பிடறேன்.நீ இங்க வெயிட் பண்ணு நான் போய் வண்டியை பார்க் பண்ணிட்டு வந்திடறேன்."

" ஹே...நில்லு...நில்லு...இது என்ன இடம்? சென்னையில இப்படி ஒரு இடமா?"

" ம்...ஆமா கா இது சன் ஃபௌன்டேஷனோட இடம் இதுதான் மெயின் ரோட் மாதிரி இங்க இருந்து நாலு ரோடு பிரியுது பாரு.இதுல ஒரு ரோடு பார்கிங்க்கு போகும் இன்னொரு ரோட டே கேர் க்கு அப்பறம் மூனாவது ரோடு.நர்ஸரி ஸ்கூல்க்கு அப்பறம் கடைசி ரோடு முதியோர் இல்லத்துக்கும் போகுது."

"அடேங்கப்பா அவ்ளோ பெரிய ஃபௌன்டேஷனா?"

" ஆமா கா."

" சரி என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க."

" எல்லாம் காரணமா தான் .இங்க பாரு இந்த நாலு ரோடு சந்திக்கிற இடத்தில ஒரு.சின்ன பார்க்க இருக்கு.அங்க வெயிட் பண்ணு நான் வண்டியை பார்க் பண்ணிட்டு உனக்கு விளக்கமா சொல்றேன்."என்று மதுவிடம் கூறிவிட்டு மதி தன் வாகனத்துடன் சென்றாள்.

தன் தங்கை கூறியது போல அங்கிருந்த சிறிய பூங்காவில் அமர சென்ற மதுமிதா அங்கு ஒரு குழந்தை தனியே விளையிடுவது கண்டு அதனிடம் சென்றாள்.

சிவப்பு வண்ண காட்டன் ஃப்ராக் போட்டு ஓடி ஆடிய விளையாடிய அந்த குழந்தை மதுவின் கவனத்தை ஈர்த்தது.அக்குழந்தையை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவள் ," ஹாய்....பேபி..."என்று ஆவலை அடக்க முடியாமல் அதனிடம் பேச்சு கொடுத்தாள்.

அதுவரை விளையாட்டில் கவனமாக இருந்த அக்குழந்தை மதுவின் குரல் கேட்டு திரும்பி பார்த்தாள்," ஹாய்....."என்று கூறி புன்னகை பூத்தாள் அந்த குட்டி தேவதை.

"இங்க வாங்க....."மது கூப்பிட அக்குழந்தை தயங்கி தயங்கி மதுவிடம் வந்தது.மதுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த குட்டிபெண் ," சொல்லுங்க...அம்....ஆண்டி." என்றாள் புன்னகையுடன்.

" நீங்க ஏன் தனியா விளையாடறீங்க உங்களுக்கு க்ளாஸ் இல்லையா??"

" எனக்கு க்ளாஸ் முடிஞ்சிடுச்சு எங்க அப்பா வந்துட்டாங்க பைக் எடுக்க போயிருக்காங்க அவங்களுக்காக இங்க காத்திருக்கேன்."

" ஓ.....ஒகே ஒகே டா.ஆனால் இப்படி தனியாலாம் வர கூடாது சரியா??"

"ம்...ஓகே அம்.ஆண்டி."
பேசிக்கொண்டிருக்கையில் பைக் ஹார்ன் கேட்க ," அப்பா வந்துட்டாங்க நான் போயிட்டு வரேன் ," என்று கூறியவள் மதுமிதா சுதாரிக்கும் முன் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டாள்.

ஒரு நொடி உரைந்து போன மது வேகமாக அக்குழந்தையை பின்தொடர அதற்குள் பைக் கண்ணை விட்டு மறைந்துவிட்டது.

" அக்கா..... வா போலாம்." தன் குரலுக்கு பதில் கூறாமல் வாயிலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மதுவை உலுக்கிய மதி ," அக்கா.........." என்று கத்த ," ஆ......என்னாச்சு " அதுவரை வேறு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த மது என்ற சிலைக்கு உயிர் வந்தது.

" என்னாச்சுகா??"

" மதி அந்த குழந்தை.... குழந்தை..."

"எந்த குழந்தை கா இங்க யாருமே இல்லையே."

"இப்பதான் மதி எங்கிட்ட நின்னை பேசிகிட்டு இருந்துச்சு."

" அக்கா நீ உன் மனசை போட்டு நல்லா குழப்பிக்கிற வா...." என்று அழைத்து செல்ல.

" மது......" என்ற குரல் கேட்டு.இரு சகோதரிகளும் திரும்பி பார்தனர்.அங்கே முப்பது வயதில் மதிக்கத்தக்க பெண் புன்னகை யுடன் நின்று கொண்டிருந்தார்.

" ஹாய் மது எப்படி இருக்கீங்க?"

ஒரு.நிமிடம் குழம்பிய மது பின் ," நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?"

" நானும் நல்லா இருக்கேன் உங்களை.பார்த்துதான் ரொம்ப நாள் ஆச்சு."

" ம்...ஆமா கொஞ்சம் பெர்சன் வேலை அதிகமாயிடுச்சு."

" ம்.ஆமா உங்க ஹெல்த் எப்படி இருக்கு? நேத்துதான் நிலா வோட அப்பா உங்களுக்கு உடம்பு சரியில்லை னு சொன்னாரு.

சகோதரிகள் இருவரும் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொள்ள மதி ஏதோ கூற முயல அவள் கையை பிடித்து தடுத்த மதி ," ,ம்...இப்ப பரவாயில்லை .தேங்காஸ்."

" அதுசரி நீங்க நிலாவை கூப்பிட வந்தீங்களா? ஆனால் நிலா வை அவங்க அப்பா வந்து இப்பதான் கூட்டிட்டு போனாரு.

" அவங்க இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க ளா??"படபடக்கும் இதயத்துடன் வினவினாள் மதுமிதா.

" ம்...இப்பதான் ஒரு ஐஞ்சு நிமிஷம் தான் ஆகியிருக்கும்."

"ஓ...." அவளது ஏமாற்றம் குரலில் அப்பட்டமாகவே தெரிந்தது.

" நீங்க பெங்களூர் ல தானே இருக்கிறதா நிலாவோட அப்பா சொன்னாரு?"

"ஆமா இன்னைக்கு தான் ஒரு வேலையா சென்னை வந்தேன்.எனக்கு ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?"

" சொல்லுங்க மதுமிதா."

" நிலாவோட ஸ்கூல் ஃபோடோஸ் எல்லாம் மிஸ் ஆகிடுச்சு.கொஞ்சம் என் நம்பருக்கு அனுப்ப முடியுமா?"

" ஓ...கண்டிப்பா உங்க நம்பர்??"

" நோட் பண்ணிக்கோங்க....*********"என்று கூறி அந்த நபரிடமிருந்த விடை பெற்றனர் இரு சகோதரிகள்.

" அக்கா ..........இங்க என்ன நடக்குதுனு கொஞ்சம் எனக்கு சொல்றியா???"என்று கோபத்துடன் வினவிய தங்கையை பார்த்த மதுவினால் புண்பட்ட சிரிப்பையே பதிலாக கொடுக்க முடிந்தது.







Bạn đang đọc truyện trên: Truyen247.Pro