நினைவு
எப்படிபட்ட துன்பம் வந்து சூழ்ந்த போதும் மனதைரியம் இருக்கும் வரை யாராலும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. அதே நேரம் நம் மிகப்பெரிய எதிரி சுயபச்சாதாபம். அந்த எதிரியை நம்மை விட்டு விலக்கி வைப்பது சாலச்சிறந்தது. ஆனால் மதுவோ தன் நிலையை எண்ணி வருந்தி தன் மீதே சுயபச்சாதாபம் கொண்டாள் அதன் விளைவாக தன் கால் போன போக்கில் வீட்டை விட்டு வெளியே சென்றவள் அந்த வீட்டின் தோட்டத்தை அடைந்தாள். அதன் அழகான பூக்கள் அவளது மனதை கவரவில்லை அந்த பூக்களை ரீங்காரமிட்டு சுற்றிவரும் வண்டுகள் அவளை ஈர்க்கவில்லை அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாதவள் நேரே வாசலை அடைந்து தன் நிலை மறந்து வீட்டின் வெளி வாயிலை கடந்து செல்ல துவங்கினாள்.
கால்களில் செருப்பு இல்லாமல் கண்களில் கண்ணீர் வரவா வேண்டாமா என்று உத்தரவிற்காக காத்திருக்க வாடிய மலரை போன்ற தோற்றத்தில் வீட்டின் வெளிவாசலை கடந்த மதுவை கண்ட பரமுவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற ," மதுமா.....," என அலறினார்.
அவரின் அலறல் கேட்டு சுய உணர்வு கொண்டவள் தான் அந்த ரோட்டின் நடுவில் நிற்பதையும் வேகமாக ஒரு வாகனம் தன்னை நோக்கி வருவதையும் உணர்ந்து விலக நினைக்கையில் அந்த வாகனம் அவளை இடித்து தள்ளியது.இடித்த வேகத்தில் ஒரு நொடி நின்ற அவ்வாகனம் மறு நொடி அவ்விடம் விட்டு பறந்து மறைந்தது.அதுவரை இருந்த மனதின் வலியும் உடலின் வலியும் சேர்ந்து கொள்ள மது மயங்கி கீழே விழுந்தாள்.
இவை அனைத்தும் கண் இமைக்கும் நொடி நடந்து முடிந்திருக்க வேகமாக மதுவிடம் விரைந்த பரமு அவளை எழுப்ப முயற்சித்தார் அதே நேரம் வீட்டினுள்ளே திரும்பி ," ஆதி ஐயா.....ஆதி ஐயா.....இங்க சீக்கிரமா வாங்களேன்," என்று பதட்டத்துடன் கத்தவும் மறக்கவில்லை.
கையில் நிலாவுடன் வேகமாக ஓடி வந்த ஆதி அங்கே பார்த்தது ரத்த வெள்ளத்தில் இருந்த மதுவை , ஒரு நிமிடம் அவனது இதயம் அதன் துடிப்பை நிறுத்தியதை உணர்ந்தவன்.நிலாவை கீழே இறக்கிவிட்டு ," மிது....மிது....என்னாச்சு மிது உனக்கு" , என்று அவளது தலையை தன் மடியில் வைத்து அவளது கண்ணங்களை தட்டி தட்டி அவளை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தான்.
"பரமு அண்ணே என் மிது க்கு என்னாச்சு??" என்று புலம்ப துவங்கிய வேளை ," ஆதி தம்பி அதெல்லாம் அப்பறமா பேசலாம் முதல்ல வாங்க ஆஸ்பத்திரிக்கு போகலாம்," என்று கூற அதுவரை செயலிழந்த அவனது மூளை விழித்து கொள்ள நிதர்சனம் உணர்ந்து வேகமாக தன் காரை எடுத்து அதில் அவளை பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு நிலாவும் பரமுவும் முன் சீட்டில் அமர புயலென மருத்துவமனை நோக்கி சென்றான்.
வழியில் யாருக்கும் வழி விடாமலும் எந்த சிக்னலிலும் நில்லாமலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மது வை மருத்துவரிடம் ஒப்படைத்தவன் கண்களில் வலியுடன் அறை வாசலில் காத்திருந்தான்.
கண்கள் இரண்டும் அறைவாயிலை விட்டுநகர்த்தாமல் அங்கே நிலை குத்தி இருக்க முகத்தில் சொல்லொன்னா துயரம் மண்டி இருந்தது.
அவன் அருகில் வந்து அவன் காலை கட்டிக்கொண்ட நிலாவின் இருப்பை அவன் உணரும் நிலையில் இல்லை.சில வருடங்கள் அவனுடம் இருந்தாலும் அவனது இந்த செய்கை புதிதானதாக இருக்க அந்நிலையை சமாளிக்க பரமு திணறினார்.
தன் நிலையில் இல்லாத ஆதியிடமிருந்து நிலாவை தூக்கியவர் மனது குழம்பியிருந்தது.பின்பு நினைவு வந்தவராக ஆதியின் தோழன் ஜீவாவிற்கு இங்கிருக்கும் நிலையை சுருக்கமாக கூறி விரைய சொன்னவர் நிலாவை தன்னுடனே வைத்துக்கொண்டார்.
ஆதியை ரொம்ப நேரம் காக்க வைக்காமல் விரைவிலே வெளியே வந்த செவிலியர்," இந்த பேஷன்ட் கூட வந்த அட்டென்டர் யாரு??"என்று வினவ
அதுவரை சிலையென சமைந்திருந்தவன் வேகமாக முன்னே சென்று," என்னாச்சு சிஸ்டர்??" என்று பதட்டத்துடன் வினவினான்.
" நீங்க பேஷன்டுக்கு யாரு ??"
" நான்...நான்...அவங்களோட ஹஸ்பன்ட், சொல்லுங்க மிது க்கு இப்ப எப்படி இருக்கு??" என்று பதட்டத்துடன் வினவினான்.அவனது பதட்டம் எதையும் கண்டுகொள்ளாத அந்த செவிலி பெண் ," டாக்டர் உங்களை உள்ள வந்து பார்க்க சொன்னாங்க ," என்று கூறி விட்டு வேகமாக உள்ளே விரைந்தார்.
அவரது பின்னே சென்றவன் அங்கு நின்றிருந்த மருந்துவரை ஒரு.வித பயம் கலந்து பார்த்து," டாக்டர் அவங்களுக்கு இப்ப எப்படி இருக்கு???என்று வார்த்தைகளை தேடி வினவினான், அவனை ஏறிட்டு பார்த்த மருத்துவர்," கை கால்கள் இரண்டுலயும் லேசான சிராய்ப்பு இருக்கு வலது கால்ல நல்ல அடி அது போக தலையில நல்லா அடி பட்டிருக்கு காயம் கொஞ்சம் ஆழம் தான்.அதனால நிறைய ரத்தம் வெளியேறி இருக்கு. அதுமட்டுமில்லாம அவங்க சரியா சாப்பிடாம இருந்திருக்காங்க.என்னோட கனிப்பு சரியா இருந்தா அவங்களோட காய்ந்து போன உதடுகள் நேத்து இருந்து பச்சை தண்ணி கூட குடிக்கலைனு உணர்த்துது , அதோட மன உளைச்சல் வேற சேர்ந்திருக்கு சோ சுகர் குறைஞ்சு போய், ,இரத்த அழுத்தும் அதிகமாகி, இரத்தம் வெளியேறுனதனால உடல் மேலும் சோர்வடைஞ்சு போயிருக்கு. இரத்தம் வரது தற்காலிகமா நிப்பாட்டிருக்கோம் ஒரு வேளை அது இதுக்கப்பறம் வரலைனா ஒன்னுமில்லை ஆனால் இதுக்குமேலயும் இரத்தம் வந்தா கொஞ்சம் ஆபத்து தான் சர்ஜரி பண்ணி தான் பார்க்கனும்,இதுவரைக்கும் அவங்க நினைவும் திரும்பல இரண்டு மணி நேரம் கழிச்சு தான் எதுவும் சொல்ல முடியும்" என்று தன் நீண்ட உரையை முடித்துவிட்டு உள்ளே சென்றார்.
அவர் சென்ற திசையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவனை நினைவுக்கு கொண்டு வந்தது அவனை அழைத்து வந்த செவிலியரின் குரல்," இது அவங்க போட்டிருந்த நகை இந்தாங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க," என்றுகூறிவிட்டு உள்ளே சென்றார்.
அவர் கொடுத்த நகைகளில் , அவள் காதுகளில் ஊஞ்சலாடும் ஒரு ஜோடி ஜிமிக்கி அவன் பரிசளித்த இதய வடிவ மோதிரம் இவைகளுடன் அன்று காலையில் அவன் வேண்டாவெறுப்பாக கட்டிய அந்த தங்கத்தாலியும் இருந்தது.
அவன் மனம் ," இத நான் நல்ல மனசோட கட்டாதனாலதான் திரும்பி என் கைக்கே வந்திடுச்சோ," என்று ஊமையாக அழுதது.
அந்த அறையை விட்டு கைகளில் நகையை ஏந்திவாறு வெறித்த பார்வையுடனும் உணர்ச்சியற்ற முக்ததுடனும் வெளியே வந்தவனை கட்டிக்கொண்ட நிலா," அப்பா....அம்மாக்கு என்ன ஆச்சு ,எனக்கு அம்மா வேணும் ," என்று அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை தன் தந்தையை கண்ட அடுத்த நொடி வெளிப்பட, இது நேரம் வேறுஉலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தவன் விழித்து எழுந்ததை போல் உணர்ந்து தன் மகளை கைகளில் வாரி அணைத்துக்கொண்டான்.
எந்த நிலையிலும் நிலாவை மறக்காத அவன் இவ்வளவு நேரம் தன் மகளை கண்டுகொள்ளாததை நினைத்து தன் மீது வெறுப்பும் தன் மகளை மறக்க செய்தவள் மீது கோபமும் ஒருங்கே உணர்ந்தவன் ," அழக்கூடாது நிலா நிலா பெரிய பொண்ணு இல்லையா , அம்மாக்கு ஒன்னும் இல்லை லேசான மயக்கம் தான் சீக்கிரம் சரியாகிடுவாங்க ," என்று கூறி மகளை தேற்றியவன்.அப்பொழுது தான் சுற்றுபுறம் நோக்கினான்.
தன்னை கவலை அப்பிய முக்ததுடன் பார்த்துக்கொணட்டிருந்த பரமுவை பார்த்தவன் அவரிடம் சென்று," நீங்களும் எங்க கூடவே வந்துடீங்களா அண்ணே....பரவாயில்லை இங்க நான் பார்த்துக்கிறேன் நீங்க வீட்டுக்கு போங்க," என்று அவரிடம் கூற அதை மறுத்துவர்," தம்பி மது க்கு இப்ப எப்படி இருக்கு?டாக்டர் என்ன சொன்னாரு?? என்று அக்கரையுடன் வினவினார்.
அவரிடம் எல்லாவற்றையும் கூற வேண்டாம் என்று நினைத்தவன்," இன்னும் நினைவு திரும்பலை அண்ணே அதுக்கப்பறம் தான் எதுவும் சொல்ல முடியும் னு சொன்னாங்க," என்று கூறியவனிடம்," தம்பி இங்க நம்ம நிலா பாப்பாவை வைச்சுக்க வேணாம் ஆஸ்பத்திரியை பாரத்து ரொம்ப பயப்புடுது நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ,"என்று கூறியவரை தடுத்த ஆதி,"இல்லை அண்ணே நிலாக்கு பசிக்குது னு சொன்னுச்சு நான் அதை சுத்தமா மறந்துட்டேன் பாவம் பாப்பா நான்இங்க கேன்டீன் கூட்டிட்டு போய் முதல்ல சாப்பிட எதாவது வாங்கி கொடுக்கிறேன் வீட்ல நிலாவை பார்த்துக்க யாரு இருக்கா??" என்று கூறியவனின் வார்த்தையில் இருந்தது என்ன என்பதை உணர முடியவில்லை பரமுவால்.
அவன் அவ்வாறு கூறி முடிக்கவும்," ஏன் நாங்களாம் இல்லையா, நாங்க நிலாவை பார்த்துக்க மாட்டோமா?? நிலா எங்களுக்கு சொந்தம் இல்லையா?? இல்லை அந்த சொந்தம வேண்டவே வேண்டாம் னு முடிவு பண்ணிட்டியா??" என்று குரல் வந்த திக்கை நோக்கிய நிலாவும் ஆதியும் ஒரு சேர திகைத்தனர்.அவர்களை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்கவில்லை என்பது இருவரின் முகமும் அப்பட்டமாக காட்டியது.
அதே நேரம் மருத்துவமனையின் மற்றொரு புறமிருந்த ஒருவன் தன் கைபேசியை எடுத்து," ஹலோ..நான் தேவா பேசறேன் உங்க பொண்ணுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு எங்க ஹாஸ்பிடலதான் அட்மிட் பண்ணிருக்காங்க உடனே வாங்க," என்று கூறி தன் கைபேசியை அணைத்தான்.
(தொடரும்....)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro