தேடல்
மதுவின் பெயர் செல்லில் மின்ன அதை உயிர்பித்த ஆதி," ஹாய் .....எப்படி இருக்கீங்க??"என குரலில் எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் வினவினான்.
" ஹாய் விக்ரம் நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ?"
" ம்...நானும் ஃபைன் மது. எனக்கு உங்கிட்ட இருந்து கால் வந்துச்சு அப்போ அட்டென்ட் பண்ண முடியலை,"
" ம்.....பரவாயில்லை திடீருனு ஒன் வீக் லீவ் கேட்டிருந்தீங்க அதான் என்னாச்சுனு கேட்க கால் பண்ணேன்."மதுவின் வாய் அவ்வாற கூற அவளது மனமோ அப்ப நான் கால் பண்ணலைனா நீ பண்ணிருக்க மாட்டியா என்று எண்ணியது தன் எண்ணம் அவளுக்கே வினோதமாய் தெரிய அதை உதறியவள் விக்ரமை கவனிக்கலானாள்.
" ஆமா மது ஒரு பெர்சனல் வேலையா நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன் வந்துட்டேன்.வர எப்படியும் ஒன் வீக் ஆகிடும்."
"ஓ........ஆமா அந்த க்ளைன்ட் மீட்டிங் எப்படி போச்சு?"
" அது சக்ஸஸ் மது நமக்கு சாதகமா தான் முடிஞ்சது."
" ஓ...சூப்பர் கங்கராட்ஸ்....."
" இதுல என்னோட பங்கு எதுவும் இல்லை.நான் என் கடமையை தான் செஞ்சேன்."
" அது உங்க தன்னடக்கம் விக்ரம் ஏனோதானோனு வேலை பார்காம..."என்றவளை தொடரவிடாமல் இடையிட்ட விக்ரம்," மது ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா??"
" சொல்லுங்க விக்ரம்."
" இல்லை இப்ப தான் அந்த ப்ராஜெக்ட் சைன் ஆகியிருக்கு பட் என்னால ஒன் வீக் அங்க வர முடியாது. சோ இஃப் யூ டோன்ட் மைன்ட் கொஞ்சம் அதை பாத்துக்க முடியுமா?"
ஒரு நொடி மௌனத்திற்கு பின்,"சாரி விக்ரம்...நானும் இங்க இருக்க மாட்டேன்."
" ஓ...."அதன் பின் சில நொடிகள் அங்கே மௌனம் ஆட்சி செய்தது அதை கலைத்தாள் மது," என்னாச்சு?"
" ம்...நத்திங் மது இது திடீர் முடிவா?"
" ம்....அப்படியும் சொல்லாம் ஆனாலும் யோசிச்சு எடுத்த முடிவுதான்."
" ம்...ஓகே மது ஆஃபிஸ்ல நான் பேசிக்கறேன் நீ எவ்ளோ நாள் லீவ்ல போற?"
" இதுவரை எதுவும் முடிவாகலை இன் ஃபேக்ட்(in fact) லீவ் அப்ளிகேஷன் கூட இன்னும் சம்மிட் பண்ல,"
" எதாவது பிரச்சினை யா மது உன் குரல்ல குழப்பம் தெரியுது?"
அவளது நிலையை அவன் சரியாக யூகிக்க அதை கண்டு ஆச்சரியப்பட்டவள்," ஆமாம் விக்ரம் என் லைஃப்ல சில பிரச்சினைகள் இருக்கு"
"ம்...எனக்கு புரியுது மது. புதுசா பழகுற என்கிட்ட உன்னால சொல்ல முடியாது . கவலைபடாத நான் உன்னை என்னனு கேட்டு தொந்தரவு பண்ண மாட்டேன்.ஆனால் எப்பவும் ஒரு விஷயத்தை மட்டும் நல்லா மனசுல பதிய வெச்சுக்கோ உனக்கு எப்ப என்ன பிரச்சினை னாலும் தயங்காம எனக்கு கால் பண்ணு புரியுதா,"
அவனது நீண்ட பேச்சு அவள் மனதிற்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்க புது தெம்பு வந்தது போல உணர்ந்த மது ," தாங்க்ஸ் எ லாட் விக்ரம். நெஜமாவே ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு , நான் அப்பறம் பேசறேன்."
" ம்...டேக் கேர் டா." என்றவாறு கால் ஐ கட் செய்த விக்ரம் தன் அருகே கண்களை கசக்கிக்கொண்டு நின்றிருந்த நிலாவை பார்த்து," ஹே...பேபி நீங்க எப்போ வந்தீங்க??" என்றவாறு அவளை தூக்கி கொண்டான்.
" அப்பா....எனக்கு அம்மா வேணும்பா...."என்று அழுத குழந்தையை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் திகைத்தான் அந்த தகப்பன்.
*********
ஆதியிடம் பேசிய மது தொடக்கத்தில் அவன் கொடுத்த மரியாதை இறுதியில் இல்லாமல் போனதை கவனித்தாலும் அதை கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாதவளாக இருந்தாள். மாறிக்கொண்டிருக்கும் தன் எண்ணங்களை கண்டு வியந்தவள் லாவகமாக காரை வீட்டினுள் நுழைத்தாள்.
தனக்கு தேவையானவற்றை பேக் செய்தவள் கீழே இறங்கி வர அவளது வருகைக்காக காத்துக்கொண்டிருந்த பாட்டியை கண்டு பெருமூச்சு விட்டவள்," பாட்டி எனக்கு சில முடிக்கபடாத வேலைகள் இருக்கு அதுக்கு ஊருக்கு போறேன் சீக்கிரமாவே வேலையை முடிச்சிட்டு வந்திடுவேன்." என்று கூறி அவரது பதிலுக்காக காத்திருப்பது போல அமைதியாக அவரை பார்த்து நின்றுகொண்டிருந்தாள்.
" உன்னையே நீ ஏன் வருத்திக்கிறனு எனக்கு புரியலைடா ஆனால் உன்னுடைய எந்த செயலுக்கும் நான் குறுக்க நிக்க மாட்டேன்.பத்திரமா போயிட்டு சீக்கிரமா வா," என்றபடி ஆறுதல் வார்த்தைகள் கூறியவர் அவளது தலையை மெல்ல தடவினார்.
அவரிடம் சிறு புன்னகையுடன் விடை பெற்றவள் சென்னையை நோக்கிய தன் பயனத்தை தொடர்ந்தாள்.
கைகள் அதன் பாட்டின் வண்டியை இயக்க கண்கள் வழியை அலசிக்கொண்டிருக்க அவளது எண்ணங்களோ தான் செய்ய வேண்டியவைகளை குறித்து யோசித்த வண்ணம் இருந்தது.
இரவு பயணத்தைதொடங்கியவள் விடியலில் சென்னையை அடைந்தாள் தன் வீடாய் இருந்த போதிலும் அதில் நுழைய தைரியம் வராமல் சில நிமிடங்கள் விட்டின் முன்னே காரை நிறுத்தியிருந்தவள் சிறு தயக்கத்திற்கு பிறகே உள்நுழைந்தாள்.
" மது......"பாசத்துடன் தன் மகளை கட்டிக்கொண்ட மதுவின் தாய்," ஏன்மா இப்ப தான் அம்மாவை பார்க்கனும்னு தோனுச்சா?? நீ போய் ஆறு மாசம் ஆச்சு போன்லயும் பேசலை நேர்லயும் வர வேணாம்னு சொல்லிட்ட ....." இன்னும் அவர் என்னவெல்லாம் சொல்லிருப்பாரோ அதற்குள் மது," மாம் ப்ளீஸ்.....டோன்ட் பிகேவ் ஸில்லி( don't behave silly)."என்றவாறு வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.
வீட்டினுள் செல்பவளை அதிர்ச்சியுடன் பார்த்தவர் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தார்.
நேரம் காலை ஆறை தாண்டியிருக்க இரவு பயணம் செய்த களைப்பும் சேர்ந்துகொள்ள உள்ளே சென்றவள் நேரே தன் அறையினுள் தன்னை புகுத்திக்கொண்டாள்.
குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்க களைப்பு நீங்கி புத்துணர்வு கொடுத்தது. உடையை மாற்றி அறையை விட்டு வெளியே வந்தவள் அந்த நீண்ட காரிடரின் முடிவில் அமைந்திருந்த நீண்ட பால்கனியல கண்டதும் அங்கே சென்றாள்.
சென்னையில் உள்ள வீடு அவர்கள் வாழந்த கோயம்புத்தூர் வீட்டை விட பல மடங்கு பெரிதாக இருந்தது.பிரம்மாண்டத்திலும் பெரிதாக தோற்றமளித்தது.அந்த பால்கனியில் நின்று தோட்டத்தை பார்க்க அதிலோ பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கியது.இளஞ்சூரியனின் மெல்லிய கதிர்கள் இரவின் பனியுடன் சேர்ந்து உடலை அணைக்க அந்த காலை வேளை மிகவும் இதயமானதாக மதுவிற்கு தோன்றியது.
" குட் மார்னிங் மது...." என்ற குரல் கேட்டு திரும்பியவள் அங்க அவளின் தந்தை கையில் இரு காபி கோப்பைகளுடன் புன்னகைத்தார்.
" குட் மார்னிங் டாட்... எப்படி இருக்கீங்க"
" ம்..ஐ அம் ஃபைன் நீ எப்படி இருக்க என்ன திடீர் விஜயம்..."
" ....ம்......இங்க பேசலாமா இல்லை உங்க ரூம்க்கு போயிடலாமா டாட்,"
" இங்க தாராளமா பேசலாம் மாடிக்கு யாரும் வர மாட்டாங்க ,"
" ம்.... சரி நான் நேரா விஷயத்துக்கு வரேன்.நாலு வருஷமா என் வாழ்க்கையில நடந்த விஷயம் எல்லாமே ஒன்னு விடாம என்ககு தெரிஞ்சாகனும்."
" ஹம்........அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற மது?"
" டாட் நீங்க புரிஞ்சு தான் பேசறீங்களா?"
" நீதான் மது புரியாம பேசற, முடிஞ்சுபோனதை நெனச்சு நீயன் உன்னையே வருதிக்கிற, எப்பவுமே முடிஞ்சது முடிஞ்சது தான் அதை யாரலையும் மாத்த முடியாது.அதனால அதை அப்படியே மறந்துட்டு ஆகுற வேலையை பார்க்லாம்.இன் ஃபேக்ட்(in fact) நீ பழைச மறந்தது ரொம்ப நல்ல விஷயமா தான் எனக்கு இப்ப தோணுது."
" டாட் நீங்க என்ன பேசறீங்க??உங்களுக்கு என் நிலைமை புரியுதா புரியலையா னு எனக்கு தெரியலை. என்னால வெளிய போகவே முடியல யாராவது என்னை அடையாளம் தெரிஞ்சு வந்து பேசுனா கூட எனக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா இல்லை தெரியாதா அவங்க என்னோட வெல் விஷ்ஷரா இல்லை எனிமியா இப்படி எதுவும் தெரியாம புரியாம அவங்க கிட்ட என்னால எப்படி பதில் சொல்ல முடியும் . ஒரு மாதிரி பயமா பதட்டமா வே இருக்கேன் ஏன் வீட்டை விட்டு வெளிய போகவே பயமா இருக்கு. எனக்கு கண்டிப்பா என்னோட தொலைஞ்சு போன நாலு வருஷம் தெரிஞ்சுக்கனும்.ப்ளீஸ்........."
" இல்லை மது நீ என்னவேனா காரணம் சொல்லிக்கோ ஆனால் இதெல்லாம் விட நீ வேற ஒரு காரணத்துக்காகதான் பழைச தெரிஞ்சுக்க விரும்பறதா எனக்கு தோணுது."
" அப்படியே இருந்தாலும் அதில என்ன தப்பு டாட்."
" நோ மது என்னால அதை ஒத்துங்க முடியாது. அந்த நாலு வருஷமும் நீ என்ன பண்ணின னு அவ்ளோ முக்கியம் இல்லை.அந்த ஆதித்யன் உண்மையான வனா இல்லை உங்கிட்ட இருக்கிற பணத்துக்காக உன் கூட பழகுனான நிஜமாவே அப்படி ஒருந்தன் இருக்கானா இல்லை உன்னோட நிலைமை தெரிஞ்சு யாரோ வேணும்னே ஆதித்யன் அப்படீங்கிற பேற உன் கூட சம்மந்தபடுத்தி பேசுறாங்களா? இப்படி எதுவும் உறுதியா சொல்ல முடியாது. ஆதித்யனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தமும் இல்லை நீ போட்டிருக்கிற செயினை கழட்டி வைச்சிட்டு உனக்கு நிச்சயம் பண்ணியிக்க ஆனந்தோட கல்யாணம் பண்ணிக்கிற நேரம் வந்தாச்சு. உனக்காக ஆறு மாசம் டையம் கொடுத்தாச்சு இனி ஆனந்தும் பொறுத்துக்க மாட்டான்.பழைய குப்பையெல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு பழைய கம்பீரமான மதுமிதாவா எழுந்து வா."என்று கூறியவர் அத்துடன் பேச்சு முடிந்தது என்று சொல்லாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
தன் சிறு வயதுமுதல் தன்னிடம் கராராக பேசிராத தந்தை யின் சொற்கள் கேட்ட மது அவ்விடத்திலே சிலையென அமர்ந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்தாள் என்பதை அவள் அறியாள்.தன் தோளில் யாரோ தொடும் உணர்வு ஏற்பட சுய உணர்வு கொண்டவள் தன் அருகே தங்கை மதியை கண்டதும் ஒரு புன்முறுவல் கொண்டாள்.
" ஹாய் கா குட் மார்னிங்...."
" குட் மார்னிங் டா எப்படி இருக்கிற?"
" என்ன பலமான யோசனையா இருக்கு கையில இருக்கிற காஃபி ஆறிடுச்சு பாரு ," என்றவள் தன் தமக்கையின் கையிலிருந்த காஃபியை வாங்கி ஓரமாக வைத்தவள் வேறொரு கோப்பையை அவள் கையில் கொடுத்தாள்.
" எதுவும் பேசாம முதல்ல இத குடி ."
தன் தங்கையின் அன்பில் மனம் நெகிழ்ந்தவள் கலங்கிய கண்களை அவளுக்கு காட்டாமல் தன் கோப்பையை காலி செய்தாள்.அவள் அருந்தும் வரை காத்திருந்த மதி ," நைட்டெல்லாம் டிரைவ் பண்ணியா??"
" ம்....அவசரமா வர வேண்டியது இருந்துச்சு டா அதான் வேற வழியில்லாம நானே டிரைவ் பண்ணிட்டேன்."
" அக்கா நீ நல்லா கார் டிரைவ் பண்ணுவ அதை நான் இல்லைனு மறுக்கலை ஆனால் இப்பதான் நீ கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வர இந்த நிலைமையில நைட் டிரைவ் பண்ணலாமா ஏன் ரிஸ்க் எடுக்கிற??" என்று வினவ மதுமிதாவிற்கோ தன் தங்கை மதிக்கு பதிலாக காலையில் விக்ரமுடன் நடந்த உரையாடல் நிறைவிற்கு வந்தது.
" மது நீ எப்படி போகப்போற?"விக்ரம் வினவ ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு ," கார்ல தான் போறேன்,"
" வாட்.....ஆர் யு மேட்? செல்ஃப் டிரைவிங் சேஃப் இல்லை மது அதுவும் இப்ப நீ இருக்கிற உடல் நிலைக்கு அது சரியா வராது."
" விக்ரம் ப்ளீஸ் நான் பாத்துக்கறேன்."
அவளது பதிலுக்கு மௌனமே விடையாய் கிடைத்தது.
" மது உன் சொந்த விஷயத்தில தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை ஆனால் எனக்கு உன் சேஃப்டி முக்கியம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கால் பண்ணி பேசிட்டு போ, இதை நீ செய்வனு நம்புறேன்." என்று கூறியவன் மேலும் எதுவும் கூறாமல் காலை கட் செய்திருந்தான்.
அவனது சொல்படியே ஒரு மணி நேர இடைவெளியில் அவனிடம் பேசியவள் இப்பொழுது அதை நினைவு கூர்ந்தாள்.
விக்ரமுடன் தனக்கிருக்கும் உறவிற்கு பெயர் என்ன என்பதை அவளால் உணர இயலவில்லை. அவளையும் அறியாமல் அவள் மனம் அவனது சொல்லிற்கு கட்டுபடுகிறது.அவனுடன் இருக்கும் பொழுது ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது இதற்கு பெயர் தான் காதல் என்பதா என்பதை அவளால் கூற இயலவில்லை.
ஆதித்யன் என்பவனுடன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருக்கும் நிலையில் தன் மனம் வேறு ஒரு ஆணின் மீது மையல் கொள்ள துவங்கியிருப்பது அவளால் ஏற்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை தன் தந்தை கூறியது போல நாலு வருடங்களை பற்றிய தேடல் ஆபத்தானதோ என்று எண்ண தொடங்கியது அந்த பேதையின் நெஞ்சம்.
தான் கேட்ட கேள்விக்கு தன் தமக்கையிடமிருந்து எந்த வித பதிலும் வராமல் போக ," அக்கா........" என உலுக்கினாள் மதி.
" ம்.....என்ன மதி என்ன சொன்ன??"
" சரியா போச்சு உன் நினைப்பெல்லாம் இங்க இல்லையா ? நைட் டிரைவ் ஏன் பண்ண னு கேட்டேன்."
" அவசரமா சென்னைக்கு வர வேண்டியது இருந்துச்சு மதி அதான் ,"
" அக்கா....."
" ம்...என்னாச்சு மதி.."
" சாரி கா நான் நீயும் அப்பாவும் பேசினதை கேட்டுடேன்."
" நாங்க ரகசியம் எதுவும் பேசலையே மதி அதனால அதில தப்பில்லை "
" அக்கா ஆதித்யன்னா யாரு??"
திடீரென ஆதித்யனின் பெயர் கேட்ட மது அதிர்ச்சியடைந்தாள்." உனக்கு எப்படி அந்த பெயர் தெரியும்?"
" நீ என்கிட்ட அவரை பத்தி சொல்லியிருக்ககா"
" என்ன நான் உன்கிட்ட ஆதித்யனை பத்தி சொல்லியிருக்கேனா?? அவரு யாரு எங்க இருக்காரு உனக்கு அவரை பத்தி வேற என்னலாம் தெரியும் சொல்லு மதி சொல்லு சீக்கிரமா சொல்லு....."ஆதித்யனின் அடையாளம் குறித்து தந்தை எழுப்பிய சந்தேகத்தை பொய்யாக்கும் விதமாக தன் தங்கை ஆதியை பற்றி கூற மது கலவரமடைந்தாள்
பதட்டத்துடன் வினவிய தன் தமக்கையை பார்த்த மதி குழப்பமடைந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro