சந்திப்பு
மதுமிதாவின் நிலையை பார்த்ததிலிருந்தே ஆதித்யனின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது.
மதுவை நெருங்க முடியாத தனது இயலாமை ஆதித்யனை தன் நிலை மறக்கச்செய்தது. புயலென கான்ஃபிரன்ஸ் ஹாலை விட்டு வெளியேறியவன் தனது கேபினுக்குள் நுழைந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்கலானான் .நேரம் ஓடியதே தவிர அவனால் நிதானத்திற்கு வர இயலவில்லை. தான் இருப்பது அலுவலகம் என்பதை உணர்ந்தவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் முயற்ச்சித்தான் அவனால் முயல மட்டுமே முடிந்ததேயொழிய அதில் வெற்றி பெற இயலவில்லை. ஒரு பெருமூச்சுடன் வேகமாக அலுவலகம் விட்டு வெளியேறியவன் பார்க்கிங்லாட் சென்று தனது வெள்ளை நிற இடியோஸ் (etios)வாகனத்தை உயிர்பிக்க அவனுக்கு எதிரே இருந்த காரையும் ஒருவன் உயிர்பிக்க அதன் பின் கதவை திறந்து வைத்திருந்து யாருக்கோ காத்திருந்தான் மற்றவன்.அவர்கள் செயலை கவனித்துக்கொண்டிருந்த ஆதியின் கவனத்தை கலைத்தது தன் மனைவியை கைகளில் ஏந்தி வத்துக்கொண்டிருந்த ஆனந்தின் பதட்டமான குரல்," பாட்டி நீங்க முன்னாடி ஏறிக்கோங்க , டிரைவர் சீக்கிரம் வண்டியெடு," என்றபடி கட்டளையிட்டான் அவன் மதுவை தூக்கி வந்தது ஆதிக்கு மேலும் சினத்தை கொடுக்க ஆக்ஸகலேட்டரை வேகமாக மிதித்தவன் அதிவேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான். அவனது வேகம் அங்கிருந்த அனைவரையும் திரும்பி நோக்க வைத்தது.
கற்பகதேவியோ முகத்தில் சினத்துடன்," யாரு இவ்ளோ திமிரா போறது?" என வினவ அவரை தடுத்த ஆனந்த்," பாட்டி ப்ளீஸ் முதல்ல மதுவ கவனிப்போம்," என்று அவரை அழைத்து சென்றான்.
அதிவேகமாக வண்டியை ஓட்டிய ஆதி அரைமணி நேரத்திற்கு பிறகு அலுவலகம் திரும்பினான் .நிதானமாக வண்டியை பார்க் செய்துவிட்டு அலுவலக தளத்தில் நுழைந்தவன் முகத்தில் பழைய நிதானமும் புன்சிரிப்பும் குடியிருந்தது. அன்று முழுவதும் அவன் முகத்தில் தங்கிவிட்ட சிரிப்பை பார்த்த ஜாக்கின் மனம் சிந்தனை வயப்பட்டது.
அன்று முழுவதும் அவன் நிதானமான மனநிலையிலேயே இருந்தான் அடுத்த நாள் காலையில் மதுவை பார்க்கும் வரை.
அலுவலக நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்ட ஆதி காலைவேளை சுறுசுறுபுபுடன் காணப்பட்டான்.முந்திய நாள் நினைவு அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கம் முற்றிலும் காணமல் போக விசிலடித்தவாறே தன் வாகனத்தை பார்க் செய்துவிட்டு லிப்டை நோக்கி முன்னேறினான்.லிப்டின் கதவுகள் மூடப்போகும் கடைசி நொடி காலால் அதை தடுத்தவன் வேகமாக உள்நுழைந்து நிமிர தேவதையென மதுமிதா அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
அவளின் சிவந்த நிறத்திற்கு கருப்பு டாப்ஸ் மிகவும் பாந்தமாக பொருந்தியது அவளது அழகில் ஒரு நொடி தன்னை இழந்தவன் விரைவாக தன்னை மீட்டெடுத்து தான் செல்ல போகும் தளத்தின் எண்ணை அழுத்தினான்.
அலைகடலென பொங்கிய மனம் அமைதி நிறைந்திருக்க அவளது முகத்தை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.மதுமிதா ஏதேதோ கோபமா பேசிக்கொண்டிருந்தாள் அவை எதுவும் அவன் செவிகளில் ஏறவில்லை நீண்ட நாட்களுக்கு பின்னால் தன்னவளை மிக அருகில் பார்த்த சந்தோஷம் மட்டும் முகத்தில் பிரதிபலிக்க," காலையிலயே எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற மதுமா?? உடம்பு என்ன ஆகும்??ரிலாக்ஸ் ரிலாக்ஸ்," என கூற அதற்கும் அவள்," ஹவ் டேர் யூ என் பேர சொல்லி கூப்பிட?? என்று பொரிய ," உன் பேரை நான் சொல்லயே உன்னை ஷார்டாதான் கூப்டேன்,"
" யூ..யூ..உன்னை என்ன பண்றேனு பாரு," என சபதம் போட அவன் இறங்க வேண்டிய தளமும் வந்தது.
"பை டியர் அப்பறம் பார்கலாம் ," என்று கூறி அவள் எதிர்பார்காத நேரம் கண்ணத்தை செல்லமாக தட்டிவிட்டு அவளை கொதிநிலையில் விட்டுவிட்டு கூலாக இறங்கி சென்றான் விக்ரமாதித்தன்.
(இந்த அலுவலகத்தில் அவனை அனைவரும் விக்ரமன் என்றே அழைப்பதால் நாமும் இனி அவனை விக்ரமன் என்றே அழைப்போம்..)
நல்ல மனநிலையின் வெளிப்பாடாக சிரித்த முகத்துடன் அலுவலகம் நுழைந்த விக்ரமன் எதிர்பட்ட ப்யூனின் காலை வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்.
" இன்னும் நேரம் இருக்கு கந்தா நான் சீக்கிரமே வந்துட்டேன், உன் வாட்ச் சரியாதான் ஓடுது," என்று சொல்லிப்போவனை அசடு வழிய பார்த்தவன் ஹி...ஹி..,இளித்தான்.
" கந்தா...."ஒரு காலை உள்ளே வைத்திருந்த நிலையில் லேசாக தலையை மட்டும் திருப்பி விக்ரம் கூப்பிட
" சொல்லுங்க சார்..."
" எனக்கு ஒரு காஃபி கிடைக்குமா??"
" ஒரு நிமிஷம் சார்.." என்றவன் வேகமாக உள்ளே செர்றான்.அவன் காஃபியை எடுத்துக்கொண்டு விக்ரமின் அறைக்குள் நுழையும் அதே நேரம் ஜாக்கும் மீராவும் சிரித்தபடி அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
" என்ன கந்தா யாருக்கு காஃபி??"
" நம்ம விக்ரம் சாருக்கு தான் மீரா மேடம்."
' விக்ரம் சாரா இவ்வளவு சீக்கிரமே வந்துட்டாரா??"
" ஆமா மேடம் சார் அப்பவே வந்துட்டாரு முகத்தில பயங்கர சந்தோஷம் வேற விசிலடிச்சிட்டே வந்தாரு," என்று கூறிய வாறு காஃபியுடன் விக்ரமின் அறையினுள்ளே நுழைந்தான்.
" ஹலோ..மேடம் என்ன பகல் கனவா??"
" மீரா........" என்ற ஜாக்கின் குரலில் கோபம் மருந்துக்கும் இல்லை என்பதை உணர்ந்த மீரா ஒரு பெருமூச்சுடன்," நீ போற போக்கு எனக்கு நல்லதா படல அவ்ளோதான் நான் சொல்வேன் ," என்றவள் தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
" மீரா.....என்னாச்சு மீரா???" என்று அவள் பின்னே சென்றவள் ," என் செல்ல மீரால?"
" ஜாக் ப்ளீஸ் எனக்கு இது சுத்தமா பிடிக்கலை,"
" பட் மீரா.."என்றவளை
" ஜாக் மேடம் விக்ரம் சார் உங்களை வரசொன்னாரு,"என்ற ப்யூன் கந்தசாமியின் குரல் தடைசெய்தது.
" இதோ...."அதிவேகமாக விக்ரமின் அறையுள் நுழைத்தாள்.
" வாட் இஸ் திஸ் மிஸ்.ஜாக்? கதவை தட்டுட்டு உள்ளே வரனும் பேசிக் மேனர்ஸ் தெரியாது உங்களுக்கு," சுறுக்கென்று தைத்தது விக்ரமின் குரல்.
" சா..சா..சாரி சார் நீங்க கூப்டீங்கனு அவசரமா உள்ள வந்துட்டேன்," அவளது குரல் கம்மியது அதை எதையும் கண்டுகொள்ளாத விக்ரம்," இட்ஸ் ஓகே இனி இப்படி பிகேவ்(behave) பண்ணாதீங்க, ம்..தென் (then) உங்களை ஏன் வரசொன்னேன் னா இன்னைக்கு மதியம் கிளயன்ட் மீட்டிங் ( client meeting) தேவையான பேப்நர்ஸ் அக்ரிமென்ட் எல்லாம் ரெடிதானே?"
எந்த கிளயன்ட் மீட்டிங் என்று புரியாமல் ஒரு நொடி யோசித்த ஜாக்," இதோ செக் பண்ணிடறேன் சார்," என்று கூற.
" வாட்??? இன்னும் செக் பண்ணலையா? ஹவ் இர்ரெஸ்பான்ஸமில்(irresponsible)??" என கத்தியவன் பின் தன்னை நிலைப்படுத்தி அமைதியாக," இன்னைக்கு மதியம் மீட்டிங் யாரோட ரெஸ்பான்ஸிபிளிட்டி( responsibility) ?," என வினவ அதுவரை அவனை பார்த்திருந்தவளின் தலை கவிழ்ந்தது அதிலிருந்தே உண்மையை கண்டுகொண்டவன் பின் மெதுவாக," உங்களுக்கு அரைமணி நேரம் தான் கொடுக்க முடியும் அதுக்குள்ள அந்த மீட்டிஙோட பேப்பர்ஸ் என் டேபிள் ல இருக்கனும், கமான் க்விக்( come in)"என்றவன் தன் கையிலிருந்த ஃபைலில் மூழ்கினான்
சரியாக அரைமணி நேரத்தில் அவன் அறை கதவு தட்டப்பட்டது.
" யெஸ் கம் இன் ."
" குட் நூன் சார் "என்றஜாக்கின் குரலில் நிமிர்ந்து பார்த்து தலை அசைத்தவன்," குட் நூன் ஃபைல் எங்கே " என கேட்டான்.
" சார் அது வந்து."
" டோன்ட் குக் அப் ஸ்டோரீஸ்( don't cook up stories) சொல்ல வந்தத திக்காம சொல்லுங்க."
" சார் நம்ம டிபார்ட்மென்ட் ல ஃபைல ரெடி பண்ணி ஹெட் ஜி.எம் டிபார்ட்மென்ட க்கு(head. G.m department) அனுப்பியாச்சு சார். ஆனால் எம்.டி கிட்ட இன்னும் அப்ரூவல் வாங்கல இன்னைக்கு ஹெட் ஜி.எம் லீவாம் ," அவள் முடிக்கவில்லை," வாட்....இன்னும் நாலு மணக நேரத்துல நடக்கிற மீட்டிங்க்கு இன்னும் அப்ரூவல் வாங்கலையா? வெரி குட் ? இப்ப என்ன செய்ய போறீங்க?"
அவன் கேள்விக்கான பதிலை கூறினாள் அவன் என்ன சொல்லுவானோ என்று அபைதி காத்தாள் ஜாக்.
" மிஸ்.ஜாக் இன்னைக்கு நடக்குற மீட்டிஙோட இம்பார்டன்ஸ் உங்களுக்கு தெரியும் தானே? அதுக்கு அப்ரூவல் வேற யாரயாவது வச்சு வாங்க சொல்லி பேப்பர்ஸ் ரெடி பண்ணுங்க போங்க , டோன்ட் மேக் மீ இரிடேடட்,"
" சார் எம்.டி ஆபிஸ் க்கு ஜி.எம் மட்டும் தான் போக முடியும் அவரு இல்லைனா நீங்கதான் நேர்ல போய் அப்ரூவல் வாங்கனும்."
அவன் தன்னை திட்ட போகிறான் கோப பட போகிறான் என்று பயந்த ஜாக்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
" ஓ.....சரி எம்.டி கூட அபான்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க, இப்ப நீங்க போலாம்,"
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஜாக் அவனும் அதே நொடி அவளை பார்த்தான்," என்னாச்சு என் முகத்தையே பார்த்திட்டு இருந்தா என்ன அர்த்தம் மேக் இட் ஃபாஸ்ட்," என்று முடிக்க அவனிடம் விடைபெற்று வெளியே வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள் தன் அருகே இருந்த த்ண்ணீர் பாட்டிலை முழுவதும் ஒரே மூச்சில் காலி செய்தாள்.
" ஹே....என்னாச்சு ஜாக் இஸ் எவ்ரிதிங் ஃபைன்?"
" ஐ ஹோப் சோ மீரா இந்த விக்ரம் சாரை என்னால புரிஞ்சுக்கவே முடியல காலையில வரும்போது நல்ல மூடில.இருந்ததா தானே நம்ம ப்யூன் சொன்னாரு ஆனால் ஒரே திட்டு ஒரே கத்து பத்தாததுக்கு அப்ரூவல் வேற வாங்கலை நீங்கதான் எம்.டி கிட்ட போய் வாங்கனும் னு சொல்றேன் மனுஷன் ஒஅன்னுமே சொல்லாம அமைதியா சரினு சொல்லிட்டாரு மீரா அதான் ஒன்னுமே புரியலை,"
" அவரை அவரோட வைஃப் புரிஞ்சுகிட்டா போதும் நீ சீக்கிரம் எம்டி ஆஃபிஸ் ல அப்பாய்ன்மென்ட் வாங்கிற வழிய பாரு,"என்றவாரு தன் வேலையில் மூழ்கினாள்.
*********
லிப்ட்டிற்குள் ஏறியதிலிருந்து அவன் தன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை கவனித்த மதுமிதா கடுங்கோயத்தில் இருந்தாள் போதாக்குறைக்கு தன் கண்ணத்தை தட்டி விட்டு சென்றவனை அவள் மன்னிக்க தயாராகவே இல்லை அவன் யாரென்றும் தெரியாததால் பொறுத்திப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தவள் ககோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்து லிஃப்ட் அவள் தளத்தை அடையும் பொழுது உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்ஞுவந்து புன் சிரிப்பை பூசிக்கொண்டாள் , எதிர்பட்டவர்களின் காலை வணக்கங்களை ஒரு சிரிப்புடன் ஏற்றுக்கொண்டவள் தன் கேபினுள் சென்று அன்றைய வேலைகளில் மூழ்கினாள்.நேரம் யாருக்கும் நில்லாமல் வேகமாக செல்ல அவள் அறைக்கதவு தட்டப்பட்டது," யெஸ் கம் இன்,"
" மேம் குட் நூன்," என்றவாறு ஆவி பறக்க காஃபியை அவள் முன் வைத்தாள் மதுவின் செக்ரட்ரி(secretary) தீபா.
"குட் நூன் தீபா இன்னைக்கு எதுவும் அப்பாயான்மென்ட் இருக்கா??"
காஃபியை ஒரு மிடற் குடித்தவாறு வினவினாள் மதுமிதா.... ஆமா மேம் இன்னைக்கு பதினோரு மணிக்கு டிசைன் டிபார்ட்மென்ட ஜி.எம் ஓட மீட்டிங் இருக்கு சார் வந்துருக்காரு வர சொல்லவா??"
" ம்ம்....யெஸ் யெஸ் லெட் ஹிம் இன்," என்றவாறு காலி கோப்பையை தீபாவிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
தட் தட் என்ற தட்டும் ஒலிக்கு பின் கதவு திறக்கப்பட கருப்பு நிற ஃபார்மல்ஸ் ஆகாய நிற ஃபுல் ஹான்ட் சட்டையுடன் உள்ளே நுழைந்த ஆதியை கண்டவள் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் அதிர்ச்சியை காட்டினாள்.அடுத்த நொடி பரிச்சியமற்ற முகபாவனையை பூசிக்கொண்டவள் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
அறை வாயிலிலிருந்து அவள் இருக்கும் மேஜையை அடைய எடுத்துக்கொண்ட சில நொடிகளில் அவளின் செய்கையை கண்டுகொண்டவன் மனதிற்குள்,"அவ்வளவும் திமிரு திமிரு " என பொரிய உதடோ விரைப்பாக,' குட் நூன் மேம் ," என்றது.
" குட் நூன் மிஸ்டர்....."
" விக்ரமன்."
' ஓ யெஸ் மிஸ்டர். விக்ரமன் டேக் யுவர் சீட்.சொல்லுங்க ."
" இன்னைக்கு ஆஃப்டர்னுன் நடக்குற கிளியன்ட் மீட்டிங்கு உங்க அப்ரூவல் வேணும் ,"என்றவனை ," யூஷ்வலா...."
" லெட் மீ ஃபினிஷ் மேம்(let me finish mam)," என்றவன் மேலும் தொடர்ந்தான்," யெஸ் யூஷ்வலா இது ஜி.எம் டிபார்ட்மென்ட மூலமா தான் வரும் பட் அவரு லீவ்ல இருக்காரு, சோ நோ அதர் கோ மீட்டிங் இன்னைக்கு ஆஃப்டர்நூன் ," என்று கூறியவன் அவளிடம் தான் கொண்டுவந்த ஃபைலை அவள் முன்னே நகர்த்தினான்.
தனக்கு கீழ் பணிபுரிவபவர்களை விட்டுக்கொடுக்காமல் பேசியவனை ஒரு நொடி வியந்தவள் அதல வெளிக்காட்டாமல் அவன் கொடுத்த ஃபைலை புரட்டினாள்.
அவள் கவனமாக ஃபைலை பார்க்க அவனோ மிக மிக கவனமாக அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.அவளோ கருப்பு நிற டாப்ஸ் ஆகாய நீல நிற ஜீன்ஸ் அனிந்திருக்க அவனோ கருப்பு நிற ஃபார்மல் பேன்ட் மற்றும் ஆகாய நீல நிற ஃபார்மல் ஷர்ட் அனிந்திருந்தான். ஆடைகளின் ஒற்றுமை அவனை மேலும் ச்நதோஷப்படுத்த அவன் பார்வையின் கூர்மை கூடியது.
தன் கையில் இருந்த ஃபைலில் கவனமாக இருந்தவள் நிமிர்ந்து," நீங்க ப்ரொஸீட் பண்ணுங்க மிஸ்டர் விக்ரம் எல்லாம் டீடெய்ல்சும் பக்காவா இருக்கு , மீட்டிங் எங்க ஆஃபிஸ்லயா ?
" இல்லை மேம் ஸைட் (site) ல , "
" ம்..குட்..சரி நீங்க கிளம்பலாம் நான் இதுல் சைன் அன்ட் சீல் வைச்சு உங்களுக்கு சென்ட் பண்றேன், ஏதாவது டவுட்னா என்னை கான்டாக்ட் பண்ணுங்க என் பெர்சனல் நம்பர் உங்ககிட்ட இருக்குல?"
" இல்லை மேம் நம்பர்.சொல்லுங்க ,"
" **********"
" ஓகே மேம், "என்று கூறியவன் தடாரென கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டான், திறந்த கதவின் உள்ளே புயலென நுழைந்தான் ஆனந்த்.
" என்ன மது இது வீட்டில உன்னை காணாம்னு பாட்டி தேடிக்கிட்டு இருக்காங்க இப்படியா வீட்டில சொல்லாம வரது?"சினத்துடன் வெளி வந்தது அவன் குரல்
அவனை அலட்சியத்துடன் நிமிர்ந்து பார்த்தவள்," கதவை தட்டி பெர்மிஷன் கேட்டு உள்ள வரனும் பேசிக் மேனர்ஸ் கூடவா உனக்கு தெரியாது?" வார்த்தைகளை முள்ளாக தைத்தாள்.
" யாருகிட்ட பேசறேனு தெரிஞ்சு தான் பேசறியா? ஐ அம் யூர் ஃபியான்சி இந்த ஆஃபிஸ்ல எனக்கு உனக்கு இருக்கிற உரிமையை விட பல மடங்கு எனக்கும் இருக்கு மைட் யுவர் டங்," வேறு ஒருவன் முன் தன்னை அவமதித்து விட்டாளே என்ற ஆதங்கம் அவனை அவமானமாக உணரவைத்தது அதை எதையும் புரிந்து கொள்ள நிலையில் இல்லாத மதுமிதா தன் இருக்கையில் இருந்து எழுந்து," ஷட் அப் ஆனந்த் இந்த ஆஃபிஸ் ஃபுல்லா உன் அதிகாரம் இருக்கலாம் ஏன் ஆஃபிஸே உன்னோடதாவே இருக்கட்டும் பட் திஸ் இஸ் மை கேபின் இங்க உள்ள வர என் அப்பாய்மென்ட் தேவை அட் லீட் கதவை தட்ற பேசிக் மேனேர்ஸாவது தேவை மைன் இட், அப்பறம் இன்னொன்னு நீ எனக்கு இப்ப இல்லை எப்பவுமே ஃபியான்சி கிடையாது உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும்னு கனவுலயும் நினைக்காத ,"என்று பதிலுக்கு சீறினாள்.
" இதான் இந்த திமிருதான் உன்னை அழிக்க போகுது அதுனால தான் நீ இந்த நிலையில நிக்கிர உன் திமிராலதான் நீ இவ்வளவு கஷ்டப்படற அப்பகூட உன் திமிரு குறையலை பாரு, இதுலாம் உனக்கு பத்தாது இன்னும் அனுபவிப்ப என் கேடோ கெட்டு போ," என்றவன் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான்.
அதுவரை அவனிடம் வீரமாக பேசியவள் தன் சக்தி மொத்தமும் வடிந்ததுபோல போன உணர்ந்தாள்.கண்கள் இருண்டு கொண்டு வர மேஜையை இருக்கி பிடித்தாள்.
அதுவரை அங்கே நட்ந்தவற்றை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் மேஜையை பிடிக்கவும் இரண்டு எட்டில் அவளை தாங்கி பிடித்தான்.அவன் மீது சாய்ந்தவள் கண்கள் சொருக மூடும் வேளையில் ,"ஆதி......என்னால முடி...." என்று வாக்கியத்தை முடிக்கும் முன்னே மயங்கினாள்.
அவள் கடைசியாக தன் பெயரை உச்சரிக்க அதிர்ந்துபோனான் விக்ரம்.பின் அவளை இயுக்கையில் அமர்த்தி அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான்," மிது....மிது......மிது கண்ணை திறந்து பாரு...மிது..."
அவனது செய்கைக்கு விடை கிடைத்தது போல மெதுவாக கண்கள் திறந்தாள் மதுமிதா மிகவும் சோர்வாக உணர்ந்தவள் தன் அருகே விக்ரம் நிற்பதை பார்த்து பின் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
" எதுக்கு இவ்வளவு டென்ஷன் மது...., காலையிலயே நான் என்ன சொன்னேன் டென்ஷன குறை பாரு எவ்வளவு சோர்ந்து போயிருக்க ?? எதாவது சாப்பிடியா?"
அவனது அக்கரை அவளுக்கு தற்சமயம் தேவையிருப்பதால் அவனை அவள் எதுவும் கூறவில்லை அவனது அழைப்பு ஒருமைக்கு தாவியிருந்ததை உணர்ந்தாலும் அதை ஆட்சேபிக்க தோன்றவில்லை, அவனது கேள்விக்கு இல்லை என்ற இடவலமாக தலையை ஆட்டியவள் அமைதியாக இருந்தாள்.
அவளை எதுவும் கேட்காமல் அவள் மேஜையிலிருந்த இண்டர்காமை உயிர்பித்தவன் ," ஹலோ கேன்டீன்??"
" ம்...ஒரு நெய் ரோஸ்ட் இர்ணடு இட்லி ஒரு கப் காஃபி இம்மீடிய்ட்லி எம்.டி கேபினுக்கு அனுப்புங்க ,"என்றவன் பின் மதுவை பார்த்து," இப்ப சாப்பாடு வந்திடும் உடனே சாப்பிடனும் மிச்சம் வைக்காம புரியுதா? இப்ப நான் கிளம்பறேன் டேக் கேர்," என்று கூறி அவள் தலையை தடவி கொடுத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அவன் செல்வதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மதுமிதா.அவனது உரிமையான செய்கையை தன்னால் ஏன் தடை செய்ய இயலவில்லை ,அவன் தன்னை ஒருமையில் அழைத்து தனக்கு ஏன் வித்தியாசமாக தோன்றவில்லை தனக்கு பிடித்த உணவு அவனுக்கு எப்படி தெரிந்தது.தன் மேல் ஏன் அவனுக்கு இவ்வளவு அக்கரை கடைசியில் அந்த தலை வருடலில் தான் எத்தனை கரிசனம்.இவையெல்லாம் ஏன்???இப்படி பல ஏன் கள் மனதில் தோன்றிய போதும் எதுக்கும் அவளிடத்தால் பதில் இல்லாதது மேலும் சோர்வை கொடுக்க கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துக்கொண்டாள் மதுமிதா ஆதித்யன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro