Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

இயலாமை

அந்த விசாலமான அறையின் நடுவே போடப்பட்டிருந்த உயர் ரக கட்டிலில் நிர்மூலமான முகத்துடன் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் மதுமிதா.அவளை சுற்றி கவலை அப்பிய நிலையில் அவளின் பாட்டி கற்பகதேவி மற்றும் ஆனந்த் நின்றுகொண்டிருந்தனர்.

அலுவலகத்தில் மயங்கி விழுந்தவளை எழுப்ப செய்த முயற்சி தோல்வியடைய அவசரமாக வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.அங்கு நிலவிய அமைதியை குழைக்கும் வண்ணம் இண்டர்காம் ஒலி எழுப்ப அதை தன் காதுகளில் பொருத்திய ஆனந்த," ஓ...ஒகே அவங்களை மேல அழைச்சுகிட்டு வா..."

".........."

" ஆமா மதுவோட ரூமுக்குதான், சீக்கிரம் வா.."என்று கூறி ரிசீவரை வைத்தவன் தன் பாட்டியை பார்த்து," டாக்டர். வ்நதுடாங்களாம் பாட்டி நான் முருகன் கிட்ட மேல கூட்டிட்டு வர சொல்லியிருக்கேன்."என்று கூறிவிட்டு அமைதியாக நின்றுகொண்டான்.

அவன் கூறியதை செவிமடுத்த அவர் பதிலேதும் கூறாமல் மயங்கி இருக்கும் தன் பேத்தியை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அறை கதவை நாசுக்காக தட்டிவிட்டு உள்ளே நுழைந்த மருத்துவர்," நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் வெளியே இருங்க,"என கூறி மதுவை பரிசோதிக்க தொடங்கினார்.

" பாட்டி... ரிலாக்டா இருங்க நீங்க எங்க கல்யாணத்தை பத்தி சொன்னதும் அதிர்ச்சி ஆகியிருப்பா அதில மயக்கம் வந்திருக்கும், ,பீ கூல்.."

" எப்படி கூல்லா இருக்க முடியும்...நீ நினைக்கிறது தப்பு, நீதான் அவளோட ஃபியான்ஸி னு சொன்னதுக்கு அப்பறம் விருப்பமில்லைனாலும் கூட பொது மேடையில தன்னோட ஃபீலிங்சை வெளிப்படுத்தகூடாது னு அமைதியாதான் இருந்தா, ஆனால் எதையோ பார்த்து முகம் வெளி போச்சு , அதுதான் என்னனு தெரியலை,"

"என்ன சொல்றீங்க பாட்டி?'என்று அவன் வெளியே வினவினாலும் மனதினுள் ,"ஆமால அவ எங்க அமைதியா இருந்தா யாருக்கும் தெரியாம நம்ம கால பதமில்ல பார்த்தா ,"என்று தோன்றிய எண்ணத்தை அவனால் தடுக்க இயலவில்லை.

" ஆமா ஆனந்தா..அவ எதையோ இல்லை யாரையோ பார்த்து பயந்துதான் மயங்கி இருக்கா, அது என்ன?? இல்லை யாருனு?? நாம கண்டுபிடிக்கனும்,"திடமாக கூறிய பாட்டியை குழப்பத்துடன் நோக்கியவன்," பாட்டி இவ்ளோ நாள் அவகிட்ட ஏதாவது மாறுதல் தெரிஞ்சதா?"

" அவ இங்க ஆறு மாசமா இருக்கா....,"அவரை மேலும் தொடர விடாமல் மதுவின் அறையிலிருந்து செவிலி ஒருவர் பின்தொடர வெளி வந்த மருத்துவர்,"அவங்க எதுவும் மெடிகேஷன்ல இருக்காங்களா? அவங்களோட மெடிக்கல் ஹிஸ்டரி என்ன?"

( இதற்கு முன்பாக அந்த நபருக்கு ஏதேனும் பெரிய சர்ஜரி செய்ததுண்டா அல்லது அவரது உடலில் ஏதேனும் நோய் இருந்திருக்கின்றதா அப்படி இருந்திருந்தால் அதற்கு அவர் மருந்துகள் உட்கொண்டாரா? என்ற விவரங்கள் நாம் மருத்துவரிடம் சிகிச்சையின் போது மறக்காமல் கூற வேண்டும். இந்த விபரங்கள் தான் மெடிக்கல் ஹிஸ்டரி)

" ஆனந்தா என்னோட ஆஃபிஸ் ரூம் டேபிள்ல ஒரு ஃபைல் இருக்கும் எடுத்திட்டு வா," என அவனை அனுப்பி விட்டு," கொஞ்சம் வருஷம் முன்னாடி நடந்த ஆக்ஸிடென்ட்ல அவ பழைசை மறந்துட்டா, ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த ஒரு நிகழ்வுல திரும்பி பழைய நியாபகம் வந்திடுச்சு , ஆனால் அவளுக்கு இடையில நடந்தது எதுவும் நியாபகம் இல்லை,"அவர் கூறி முடிக்க ஃபைலுடன் ஆனந்தன் வந்தான்.

அவனிடமிருந்த ஃபைலை வாங்கி அதை மெதுவாக புரட்டி பார்த்தவர் பின்," அவங்களுக்கு பழைய நியாபகம் வந்திருக்கனும் அப்போ ஏற்பட்ட மனக்குழப்பத்தினால மயங்கிருப்பாங்க , அவங்க ப்ரெஷர் இன்னும் குறையலை நான் செடேடிவ்(sedative) போடுறேன்.நல்லா தூங்குவாங்க அவங்களை தொந்தரவு செய்ய வேணாம்."

" சரி டாக்டர் அவளுக்கு இப்ப நியாபகம் வந்திருக்குமா??"பாட்டி

" அப்படி சொல்ல முடியாது, அவங்க பார்த்ததுல ஏதாவது ஒரு ஒற்றுமை இருந்திருக்களாம் இல்லை எதையாவது நினைவு படுத்திருக்களாம், எதையும் நம்மாள யூகிக்க முடியாது அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்."

" ஓ....அவளுக்கு நியாபகம் திரும்ப வர வாய்ப்பே இல்லையா டாக்டர்," குரலில் மிகுந்த வருத்தம் தெரிய கேட்ட அந்த முதியவரை பார்த்த டாக்டர்," எதுவுமே உறுதியா சொல்ல முடியாதுமா நாளைக்கு வரலாம் இரண்டு நாளைக்கு அப்பறம் வரலாம் இரண்டு மாசம் அப்பறம் வரலாம் ஏன் இருபது வருஷம் கழிச்சு கூட வரலாம். வராமலே கூட போகலாம்.இவ்வளவு ஏன் இப்போ மயக்கமா இருக்காங்களே எதுனால அவங்க மயக்கமானாங்கனு கூட அவங்களுக்கு நினைவு இல்லாம போகலாம்," என்று நீண்ட விளக்கம் கூறியவர் அதிர்ச்சி யோடு தன் முன் நின்றிருந்த இருவரையும் பார்த்தவர் ஒரு சிறு பெருமூச்சு விட்டு," இதான் நிதர்சனம் உங்ககிட்ட எதையும் மறைக்காம சொல்லிருக்கேன்.அவங்களுக்கு தேவையெல்லாம் அமைதியான சூழல் தான்.வலுக்கட்டாயமா யோசிச்சா தலைவலி வரும் பயந்திடாதீங்க அவங்களை ரிலாக்ஸ் பண்ண வைங்க இல்லை டைவெர்ட் பண்ணுங்க சரியாகிடும்,நான் இன்ஜெக்ஷன் போட்டுட்டு கிளம்புறேன்," என்று தன் நீண்ட விளக்கங்களை கூறிவிட்டு விடைபெற்றார்.

அவர் சென்று சில நிமிடங்கள் ஆகியும் அவர் கூறி சென்ற விஷயத்தின் தாக்கம் குறையாமல் இருவரும் நின்றிருந்தனர்.அந்த நிலையை முதலில் மாற்றிய ஆனந்த," ஏன் பாட்டி இந்த ஆறுமாசமா அவ உங்ககிட்ட எப்படி நடந்துக்கிறா?"

" ம்....என்னத்தை சொல்ல ஆறு மாசத்துக்கு முன்னாடி அவளை நான் பெங்களூருக்கு கூட்டிட்டு வந்தேன், ஒரு வாரம் அமைதியா எதையோ பறி கொடுத்த மாதிரியே நடந்துகிட்டா ரூமை விட்டு வெளிய வரலை என்னை தவர யாரையும் பார்க்க அனுமதிக்கலை ஏன் அவங்க அம்மா அப்பாவே ஃபோன் பண்ணாலும் பேச அவ தயாரா இல்லை."

" என்ன பாட்டி இப்படி சொல்றீங்க என் கிட்ட இதைபத்தி நீங்க ஏன் சொல்லலை நம்ம ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போயிருக்களாமே."

" ம்..நீ இந்த மாதிரி அசட்டுதனமான யோசனை சொல்லுவ னு தான் உங்கிட்ட சொல்லலை, அவ பைத்தியம் இல்லை அவளுக்கு சைக்யாட்ரிஸ்ட் தேவையும் இல்லை, அவளுக்கு தேவை டைவேர்ஷன்(diversion)."

" நீங்களும் பைத்தியமா இருந்தாதான் சைக்யாட்ரிஸ்ட பார்க்னும் னு பாமர மக்கள் மாதிரி நினைக்களாமா? மன நலனுக்காக டாக்டர பார்க்குறோம் அவ்ளோதான்."

"இவ்ளோ பெரிய கம்பெனியை நிர்வகிக்கிற எனக்கு அது தெரியாதா? நான் அந்த அர்த்தத்தில சொல்லை அவளோட தேவை தெரிஞ்சதுக்கு அப்பறம் ஏன் டாக்டரை பார்க்கனும்?அவளோட நாலு வருஷ வாழ்க்கையில என்ன நடந்துச்சுனு யோசிக்க வைக்க கூடாது அதான் நான் அவளை வலுகட்டாயமா ஆபிஸ் கூட்டிட்டு போனேன்," என்று கூறிய கற்பகதேவியின் குரலில் சிறு கோபம் எட்டி பார்க்க அதை புரிந்துகொண்டவன் ," பாட்டி ஓகே நீங்க பண்ணதுதான் சரி ," என்று கூறியவன் மனதில்," இந்த பிடிவாதம், தப்பை ஒத்துக்காத தன்மை தான் உங்க பேத்தி கிட்டயும் இருக்கு ," என்று கசப்புடன் எண்ணிவிட்டு ," சரி பாட்டி மது தூங்கட்டும் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போய்டுவந்திடறேன் எதாவது தேவைப்பட்டா என்னை உடனே கூப்பிடுங்க," என்று கூறிய அவனை பார்த்து சிறு தலைஅசைவு மட்டுமே கொடுத்த அந்த முதியவர் தன் எண்ணங்களில் மூழ்கியிருந்தார்.

அவரது இந்த செய்கையை தவறாக நினைத்த ஆனந்த்," அவ்வளவும் தலைகனம் இருக்கட்டும் உங்க பேத்தியை கல்யாணம் பண்ணி உங்களை என் கைபாவையா ஆக்குறவரை இதெல்லாம் பொறுத்துதான் ஆகனும்,"என்று நினைத்தவனாக புயலென வெளியேறினான்.

***********

தன் கண்முன்னே தன் மனைவி இருந்தும் அவளை உரிமையுடன் வேறொருவன் மடி சாய்த்து ஆதித்யனை கொதிப்படைய செய்தது.அவள் தன் நினைவில்லாமல் இருக்கிறாள் என்பதையோ ஆதித்யனை அறியாமல் இருக்கிறாள் என்பதையோ அவன் வசதியாக மறந்துவிட்டான்.

முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்ட ஆத்திரத்துடன் அவன் வேகமாக எழுந்து சென்றது அவன் அருகே அமர்ந்திருந்த நரசிம்மனை சிந்திக்க வைத்தது மட்டுமன்றி அவன் பின்னே அமர்ந்து அதுவரை அவனது ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டிருந்த ஜாக்கையும் குழம்ப வைத்தது.

அவள் மீராவுடன் இணைந்து அந்த கான்ஃபிரன்ஸ் அறைக்குள் நுழைந்தது முதல் ஆதித்யனின் ஒவ்வொரு அசைவைவும் கவனிக்க தவறவில்லை. அவளின் மனதில் விடைதெரியாத பல கேள்விகள் உதிக்க அதற்கு விடைதெரியும் ஆவலுடன் அந்த நொடி முதல் ஆதித்யன் அவளது முழு கவனத்திற்குள் நுழைந்துவிட்டான்.

அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திருக்காமல் பலருககும் பல விதமான அனுபவங்களை கொடுப்பதற்காக உதயசூரியன் கிழக்கிலே தன் ஆட்சியை அழகாக தொடங்கினான்.

தனது படுக்கையில் இருந்து எழுந்த மதுமிதாவின் மனதில் நேற்றைய நிகழ்வுகள் துணிகொண்டு துடைத்துபோல் இருந்தது எவ்வளவு யோசித்தும் தான் மேடையில் நின்றதும் தன் பாட்டியின் உரையும் மட்டுமே நினைவில் நிற்க அதை தாண்டி எதைவும் அவள் நினைவில் பதியவில்லை இரு கைகளால் தலையை தாங்கிபிடித்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்துகொண்டாள்.நேரே குளியலறை நோக்கி சென்றவள் குளிர்ந்த நீரால் முகம் கழுவ தலைவலி சிறிது மட்டுபட்டது சிறு பெருமூச்சுடன் குளித்துவிட்டு ஆகாய நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டாப்ஸ் அனிந்து எல்ல முடியையும் சேர்ந்து கிளிப் செய்தாள். முகத்தில் சிறு ஒப்பனையுடன் அறையை விட்டு வெளியேறியவள் சாப்பிட பிடிக்காமல் வீட்டைவிட்டு தன் காரில் அலுவலகம் நோக்கி விரைந்தாள்.

அந்த பிரமாண்ட அலுவலகத்தை பார்த்த நொடி மனதில் என்றும் ஏற்படும் பெருமை இன்றும் ஏற்பட சிறு தலைகனம் எட்டிபார்க்க கடுமையான முகபாவனையுடன் லிப்ட் நோக்கி சென்றாள்.

தன் முன் திறந்து கொண்ட லிப்ட் கதவை மூட போகும் நொடி நீண்ட கால்கள் லிப்ட் கதவின் இடையே வந்து லிப்டை நிறுத்தியது. தன் முன்னே கால்களை கொடுத்து லிப்டின் ஓட்டத்தை தடை செய்த அந்த கால்களுக்கு சொந்தமானவனை கோபத்துடன் நிமிர்ந்து நோக்கியவள்," அறிவில்லை ஒரு எம்.டி முன்னாடி இப்படி கால் நீட்டகூடாதுனு பேசிக் மேனர்ஸ் இல்லை சை...உங்களலாம் யாரு வேலைக்கு அப்பாய்ன்ட பண்ணாங்க , " என்று முகத்தில் அப்பட்டமான எரிச்சல் தெரிய கூறியவள் அவன் முகத்தை நோக்கி "ஜஸ்ட் கெட் லாஸ்ட் நான் மேல போனதுக்கு அப்பறமா நீ தனியா போய்கோ இல்லைனா படியில ஏறி போ இப்படி என் கூட சரி சமமா வர்ற தகுது உனக்கு இல்லை கெட் அவுட்," என சீறினாள்.

அவளது எரிச்சல் நிறைந்த முகத்தை கண்கொட்டாமல் பார்த்த அந்த மனிதனோ அவள் கூறியது சிறிதும் காதில் நுழையாதவனாய் அவன் அருகே வந்து நின்று அவன் செல்ல இருக்கும் தளத்தின் எண்ணை அழுத்தினான்.

அவனது இந்த செய்கை அவளை மேலும் ரௌத்திரமாக்க ," ஹவ் டேர் யூ ஒரு எம்.டி பேசறேனு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பிகேவ் பண்ற நீ என்ன பொறுக்கியா?? நீ யாருனு சொல்லு இப்பவே உன்னை வேலையில இருந்து டிஸ்மின் பண்றேன்."என கத்த அவனோ மிக அமைதியாக ," காலையிலயே எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற மதுமா?? உடம்பு என்ன ஆகும்??ரிலாக்ஸ் ரிலாக்ஸ்," என கூற அதற்கும் அவள்," ஹவ் டேர் யூ என் பேர சொல்லி கூப்பிட?? என்று பொரிய ," உன் பேரை நான் சொல்லயே உன்னை ஷார்டாதான் கூப்டேன்," என்று அதற்கும்ஒரு விடை சொல்ல," யூ..யூ..உன்னை என்ன பண்றேனு பாரு," என சபதம் போட அவன் இறங்க வேண்டிய தளமும் வந்தது. ,"பை டியர் அப்பறம் பார்கலாம் ," என்று கூறி அவள் எதிர்பார்கா நேரம் கண்ணத்தை செல்லமாக தட்டிவிட்டு அவளை கொதிநிலையில் விட்டுவிட்டு கூலாக இறங்கி சென்றான் விக்ரமாதித்தன்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro