அதிர்ச்சி
கையில் வாங்கிய சாவியை அலட்சியத்துடன் பார்த்த மது அதே அலட்சியத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.வேகமாக வீட்டை விட்டு செல்ல எண்ணியவள் யார் மீதோ மோத நிலை தடுமாறி கீழே விழப்போன நேரம் ஒரு இரும்பு கை அவளை இடையுடன் தாங்கிபிடித்தது.
" என்ன மேடம் எந்த உலகத்தில மிதந்து வர்றீங்க??"கண் சிமிட்டியவாறு கேட்டவனை பார்த்தவள் வேகமாக அவனிடமிருந்து பிரிந்து கன்னத்தில் அறைந்தாள்," ஷட் அப் எத்தனை தடவை சொல்றது டோன்ட் பிஹேவ் லைக் திஸ், "
அறைந்த கைகளை இறுக பிடித்தவனின் கண்கள் கோவை நிறம் பூச,"கட்டிக்க போறவனை கைநீட்டி அடிக்களாமா ," குரலிலும் கோபம் தெரிய கத்தியவனை இடைமறித்தவள," யார யாரு கல்யாணம் பண்ண போறது?எனக்கு தான் ஏற்கனவே"
" வாங்க....வாங்க தம்பி...."
அவள் கூற வந்ததை முடிக்கவிடாமல் இடைமறித்த அவளது அன்னையை எரிப்பது போல பார்த்தாள். அவளது பார்வையை சந்திக்காமல் அவர் அந்த புதியவனை வரவேற்பது மட்டுமே தன் தலையாய கடமை என்பது போல அவனை உபசரிக்க துவங்கினார் அவர்.
" உட்காருங்க தம்பி, வீட்ல அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா? "
"எல்லாரும் நல்லா இருக்காங்க நீங்க எப்படி இருக்கீங்க? மது வை ஹாஸ்பிட்டல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்கல அதான் பார்த்துட்டு போகலாம் னு வந்தேன்,"
யாரும் அறியா வண்ணம் மதுவின் கைகளை விடுவித்தவன் அவளை நோக்கி கண்ணடித்துவிட்டு சுவாதீனமாக சோஃபாவில் அமர்ந்தான்.
" நீ போய் அப்பாவை கூட்டிட்டு வாமா," தன் மகளிடம் உத்தரவிட்டவர் அவனுக்கு எதிரில் அமர்ந்து தனது உரையாடலை தொடங்கினார்.
தன் அன்னையின் செயல் புதிராக இருக்க குழப்பத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்து மீண்டும் தன் தந்தையை காண சென்றாள்.
அவள் வருகைகாக காத்திருந்தது போல," வாமா....வா..அப்பா சொல்றத கொஞ்சம் காது கொடுத்து கேட்பியா? "பீடிகையுடன் தொடங்கியவரை," இப்ப அதை விட்டா எனக்கு வேற வழியில்லையே சொல்லுங்க நான் என்ன பண்ணும்?" குரலில் ஏளனமும் விரக்தியும் போட்டி போட கேட்டவளை," உனக்கு கல்யாணம் நடந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்லக்கூடாது," சத்தமில்லாமல் ஆணையிட்டவரை நோக்கியவளின் விழிகள் கோபத்தில் செந்நிறம் பூசிக்கொண்டது.அவளது நிலையை அலட்சியம் செய்தது போல அவரே மேலும் தொடர்ந்தார்.
" உனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்க வேண்டாம்னு நாங்க நினைச்சாலும் சூழல் அதை செய்ய விடமாட்டேங்குது, "என்றபடி பெருமூச்சு விட்டவர் அவளின் அருகே சென்று அமர்ந்து அவளின் முடி கோதியபடி," அப்பா மேல உனக்கு பாசமும் நம்பிக்கையும் நிறைய இருக்குடா அது எனக்கு நல்லா தெரியும் அந்த பாசத்தையும் நம்பிக்கையையும் ஒரு நாளும் என் சுயநலத்துக்காக நான் உபயோகிக்க மாட்டேன், இந்த ஒரு விஷயம் மட்டும் ஏன் எதுக்குனு கேட்காம நீ எனக்காக செய்வியா??"என்று உணர்ச்சியற்ற குரலில் கூற தொடங்கியதை கெஞ்சலுடன் முடித்தார்.
மதுவின் முகத்தில் குழப்ப ரேகைகள் தென்பட துவங்க அதை கண்மூடி விரட்டியவள் ," ,அம்மா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க அப்பா ஹால்ல விருந்தாளி இருக்கும்போது நம்ம இங்க ரொம்ப நேரம் பேசிட்டு இருக்க முடியாது," என்று கூறியவளிடம் பழைய திடம் மீண்டிருந்தது.
தன் தந்தையை வெளியே அழைத்த வருகையில் அந்த புதியவன் மூவர் அமரும் ஷோஃபாவின் ஒரு புறம் அமர்ந்திருக்க மதுவின் தங்கை மதி மறுபுறமும் ஒருவர் அமரும் சோஃபாவில் அவளின் தாயாரும் அமர்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருந்துனர்.
மதுவின் தந்தையை பார்த்தவன் வேகமாக அவரிடம் விரைந்து ," மாமா..எப்படி இருக்கீங்க?? ஒரே ஊர்ல இருந்தாலும் உங்களை பார்க்க முடியறதில்லை," என்று உண்மையான வருத்தத்துடன் கூறியவன் அவரது பாதம் தொட்டு வணங்க முயன்றான்.
அவனை தடுத்தவர் தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு ," நல்லா இருப்பா அந்த ஆண்டவரோட அருள் உனக்கு எப்பவும் உண்டு," என்று கூறியவர் அவனுடன் நடந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
" அப்பா அம்மாலாம் எப்படி இருக்காங்க அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்களாமே??"
" அவங்களும் வருவாங்க மாமா நான் வேற ஒரு விஷயமா இங்க வந்தேன் ," என கூறி அமைதியானான்.
" என்னாச்சு பா எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு ," என வாய்வார்த்தையாக அவனுக்கு தைரியமூட்டினாலும் அவன் கேட்க நினைப்பதால் ஏற்படக்கூடிய பெரிய விபரீதம் குறித்து அவர் மனம் நடுங்கவே செய்தது.
" புதுசா ஒன்னுமில்லை மாமா எல்லாம் நம்ம ஏற்கனவே முடிவு செஞ்சது தான் , மதுக்கு நியாபகம் இல்லையேனு ஒரு சின்ன உறுத்தல் மட்டும்தான் இருந்துச்சு இப்ப அதுவும் சரியாகி மதுக்கு பழசெல்லாம் நியாபகம் வந்திடுச்சு, அதனால அம்மா முஹூர்த்தத்த கொஞ்சம் சீக்கிரமாவே வச்சிக்க சொன்னாங்க,"
" மதுக்கு இப்பதான் பழசு நியாபகம் வந்திருக்கு உடனே முஹூர்த்தம் வச்சா அவளால சூழ்நிலையை அட்ஜஸ்ட் பண்ண முடியாது அதுமட்டுமில்லாம எங்க அம்மா ஊர்ல இருக்காங்க அவங்ககிட்ட கேட்காம,"
" ஏன் இத்தனை நாள் இந்த அம்மாவை பத்தி நியாபகம் வரலையா உனக்கு??"
தன் பேச்சை வெட்டிய குரலுகுக சொந்தகாரரை அறிந்திருந்தாலும் அனிச்சையாக தன்னிடம் விட்டு எழுந்து வாசலை நோக்கிய மதுவின்.தந்தை சௌந்தரன் அங்கே மடிப்பு கலையாத சில்க் காட்டன் புடவையில் கண்களில் கண்ணாடியுடனும் முகத்தில் அனைவரையும் ஆராயும் பார்வையுடனும் அந்த எழுபது வயதிலும் கம்பீரம் குரையாமல் குரலில் கோபம் கொப்பளிக்க பேசி வாசலிலே தங்கிவிட்ட தன் தாயை வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவர்," உள்ள வாங்கம்மா....ஏன் மா அங்கயே நிக்கறீங்க??" என்றவாறு அவரின் அருகே சென்றார்.
அவருக்கு நேர்மாறான அவரது மகள் மதுவோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல அவரது குரல் கேட்ட அடுத்த நொடி ," பாட்டி.........," என்று கூவியவாறு அவரை சென்று அணைத்து கொண்டாள்.
தாயை பிரிந்து வாடும் கன்று போல அவரிடம் அடைக்கலம் புகுந்தாள்.அவளை அதே உணர்வுடன் அணைத்த அந்த முதியவர் அவளின் செவிகளில்," அம்மாடி ஆனந்த கிளம்புற வரை கொஞ்சம் உன்னை கன்ட்ரோல் பண்ணு ," என்று கூறி அவளை அணைத்தவாறே அங்கிருந்த மற்றொரு சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.
" எப்படி இருக்கீங்க அத்தை," என்றவாறு கைகளில் தண்ணீருடன் வந்த தன் மருமகளை சொந்தமில்லா பார்வை பார்த்தவர்," எனக்கென்னாமா காடு வாவாங்குது வீடு போ போங்குது,"
" பாட்டி...ஏன் இப்படி சொல்றீங்க உங்களை எந்த வீடும் போ போ னு சொல்லல இன்ஃபேக்ட்(infact) நாங்க உங்களை எங்க கூட இருக்க தான் சொல்றோம் நீங்களாதான் தனியா இருக்கீங்க,"என்ற ஆனந்திடம் ," ஆமா... உங்க யாருகிட்டயும் கையேந்திர நிலையைஎன புருஷன் எனக்கு வைக்கலை, நான் இப்படி இருக்கும்போது நீங்க என்னை மதிக்கிறது இல்லை இதுல கைல நயாபைசா இல்லாம உங்களை நம்பி நான் வந்தேனா அவ்வளவு தான்."
" இப்ப என்ன ஆச்சுனு இப்படி பேசறீங்கமா,"
" இன்னும் என்னடா ஆகனும் என் பேத்திக்கு பழசெல்லாம் நியாபகம் வ்நது ஒரு முழு நாள் முடிஞ்சிருக்கு எனக்கு தகவல் சொல்லனும்னு உனக்கு தோனுச்சா?? யாரோ ஒரு மூனாவது மனுஷன் சொல்லி எனக்கு தெரிய வேண்டியதா இருக்கு."
"சொல்லகூடாதுனோ.மறைக்கனும்னோ எதுவும் இல்லை மா காலையிலதானே டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம் மெதுவா சொல்லிக்களாம் வயசான கால்த்தில உங்களை எதுக்கு பதற வைக்கனும்னு தான் சொல்லலை."
" நீ சொல்ற காரணம் எதுவும் ஏத்துக்கிற மாறி இல்லை,"என்று கூறியவர் அதன்மேல் அதைபற்றி பேச விரும்பாதது போல ஆனந்த என்றழைக்கப்பட்ட அந்த புதியவனிடம் திரும்பி," நான் உள்ள வரும்போது நீ எதோ பேசிட்டு இருந்தியே என்ன அது?" என்று வினவினார்.
" அது ஒன்னுமில்லை பாட்டி எங்க கல்யாணத்தை நீங்க எல்லாரும் சேய்ந்து உறுதி மட்டும் தானே பண்ணிருக்கீங்க அதான் இப்ப மதுக்கு பழசெல்லாம் நினைவு வந்திடுச்சே அப்ப சின்னதா ஒரு நிச்சயதார்த்தம் வச்சிட்டு கல்யாணத்தையும் சீக்கிரம் முடிக்கலாமானு அம்மா கேட்டாங்க."
" அம்மா கேட்டாங்களா இல்லை நீ கேட்கறியா??" எனீற பாட்டியிடம்," சே...சே...போங்க பாட்டி அம்மாதான் கேட்க சொன்னாங்க,"
" அட என் பேரனுக்கு வெட்கமெல்லாம் வருது போல, " என்று அவனை பார்த்து சிரித்தவர் அதுவரை தன் தோள்களில் கண் மூடி சாய்ந்திருந்த மதுவின் தலையை வருடி ," அவசரம் வேணாம் பா இப்பதானே அவளுக்கு பழசு நியாபகம் வந்திருக்கு மனசு குழப்பமா இருக்கும் கொஞ்ச நாள் ஆகட்டும் நம்ம பொண்ணு எங்க போயிட போறா?? அம்மாகிட்ட பாட்டி சொன்னேனு சொல்லு"என்றவரின் தெளிவான பதில் அவனை எப்பொழுதும் போல இப்பொழுதும் அந்த முதியவரை கண்டு பெருமிதம் கொள்ள செய்தது.
" அப்ப சரி பாட்டி நான் கிளம்பறேன்."
" இருந்து சாப்பிட்டுட்டு போ ஆனந்தா...,"
" இல்லை பாட்டி ஒரு முக்கியமான இன்டர்வீயூ இருக்கு கண்டிப்பா போயாகனும் நான் இன்னொரு நாள் வரேன், நீங்க கொஞ்ச நாள் இங்க இருப்பீங்கள்ள??"
" இல்லை ஆனந்தா நான் இன்னைக்கு நைட்குள்ள கிளம்பிடுவேன் , போட்டது போட்டபடி என் பேத்திய பார்க்க கிளம்பி வந்துட்டேன்,முடிஞ்சா அம்மா அப்பா எல்லாரையும் கூட்டிட்டு ஊருக்கு வா,"
" சரி பாட்டி கண்டிப்பா வரேன். சரி நான் போய்ட்டு வரேன் ," என்று அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான் ஆனந்து என்கின்ற ஆனந்த் கிருஷ்ணன்.
அவன் போவது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை வெளியிட்ட மது ,"பாட்டி என்னை.உங்க கூடவே கூட்டிட்டு போயிடுங்க என்னால இங்க இருக்க முடியலை ப்ளீஸ்....," என கெஞ்சிய தன் பேத்தியை ," என்னாச்சு மா...ஏன் இங்க இருக்க உனக்கு பிடிக்கலையா?"
" எனக்கு மூச்சு முட்டுது பாட்டி , இங்க எதுவுமே எனக்கு புரியலை யாரையுமே எனக்கு தெரியலை. இவங்க எல்லாரும் என்கிட்ட இருந்து எதையோ மறைக்குறாங்க ப்ளீஸ் பாட்டி...." என மீண்டும் கெஞ்சினாள்.
அவள் கூறியதை உள்வாங்கி கொண்ட அந்த முதியவர் புரியாத பார்வை ஒன்றை தன் மகன்மீது செலுத்தினார்.அவரின் பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்ட மதுவின் தந்தை ," நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்சிடென்ட்ல பழச மறந்த மதுக்கு இப்ப பழசெல்லாம் நியாபகம் வந்திடுச்சு ஆனால் நாலு வருஷமா நடந்தது மறந்திடுச்சு."என்று கண்கள் கலங்க கூறினார்.
அவர் கூறிய விஷயத்தின் வீரியம் அதிகமென்பதால் அதை ஜீரணிக்க முதியவருக்கு ஒரு சில நொடிகள் தேவைப்பட்டது," ஏன் பாட்டி நீங்களும் இவ்வளவு யோசிக்கறீங்க அப்ப நான் உங்க கூட வர வேணாமா??"
" என் ராசாத்தி அப்படி நான் சொல்லுவேனா நீதானே என் உசுரு இந்த நாலு வருஷமா உன்னை பக்கத்தில வச்சிக்க முடியாம நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் , போ உன் டிரெஸெல்லாம் எடுத்திட்டு வா கிளம்பளாம்,"
" ஏன் பாட்டி எனக்கு புது டிரெஸ் வாங்கி தரமாட்டீங்களா இங்க இருக்குற எதுவும் என்னோடது மாதிரியே தெரியலை??"
தன் பேத்தியின் மனபோராடத்தை நனாகு உணர்ந்து.கொண்டவர்," எதுவும் வேண்டாம் வா நம்ம உடனே கிளம்பளாம் ," என்று கூறியவரை ," அத்தை இப்பதானே வந்தீங்க அதுக்குள்ள கிளம்பனுமா??"என்றார் மதுவின் தாய்.
" ஹம்....." என்று பெருமூச்சு விட்டவர்," இப்ப எனக்கு எல்லாத்தையும் விட.என் பேத்தி அவளோட நிம்மதி தான் முக்கியம் அதனால அவளை எவெவளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து வெளிய.கூட்டிட்டு போறேன் இன்னொரு தடவை சாவகாசமா வரேன் ," என்று கூறி தன் பேத்தியை கையோடு அணைத்த வாறே தான் வாகனம் நோக்கி சென்றார்.அடுத்த பத்து நிமிடங்களில் அந்த உயர் தர சொகுசு வண்டி மதுமிதாவையும் அவளது பாட்டியையும் சுமந்து கொண்டு பெங்களூர் நோக்கி விரைந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro