Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

part - 27

தூங்கும் நிலாவை தன் வீட்டில் உதவியாளராக இருக்கும் துளசி பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு தன் பெற்றோருடன் கிளம்பினான் ஆதி.

வழி நெடுக அந்த மூவருக்கும் இடையே அமைதி மட்டுமே நிலவ அதை கலைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை.பெற்றோரை விமான நிலைய வாசலில் இறக்கிவிட்டவன்," பத்திரமா போயிட்டு வாங்கமா வீட்டுக்கு போய்ட்டு எனக்கு கால் பண்ண மறந்துடாதீங்க,"

" சரி ஆதி நீ சீக்கிரமா வீட்டுக்கு போ நிலா முழிச்சா உன்னை தேடி அழப்போறா."என்று ஆதியின் அன்னையும் ஆதியின் தந்தையோ சிறு தலையசைப்புடனும் விடை பெற்றுக்கொண்டனர்.

இருவரும் கிளம்பிய பிறகும் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் விமான நிலையத்தை இலக்கில்லாமல் வெறித்து பார்த்த ஆதி திடீரென மதுவை போன்ற ஒரு பெண் விமான நிலையத்திலிருந்து வெளியே வர திகைத்தான்.பின் கூர்ந்து கவனிக்க அது மதுவே என்று உறுதி செய்தவன் அவளை நெருங்காமல் கவனிக்கலானான்.

முதலில் நன்றாக நடந்த மது பின் தடுமாறுவது போல தோன்ற வேகமாக அவளிடத்தில் விரைந்தான்.அவள் மயங்கி விழுகவும் இவன் அவளை அணைத்துக்கொண்டான்.

" மது...மது...."அவளது அவள் கண்ணத்தில தட்டி எழுப்ப முயற்சித்தும் அவளிடம் எந்த வித அசைவும் தெரியாமல் போக அவளை அனைத்த வாறே அருகில் இருந்த தன் வாகனத்திற்கு அழைத்து சென்றான்.

அவளை முன் இருக்கையில் அமர வைத்து இருக்கையை நன்கு சாய்த்து அவளுக்கு வசதி செய்து கொடுத்தவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்து மிதமான குளிருட்டலை ஏற்படுத்தினான்.மீண்டும் அவளை எழுப்ப முயற்சி செய்து தோற்றவன் பதட்டமடைந்தான். அவளை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே ஒரே வழி என்று எண்ணி காரை வேகமாக கிளப்பிக்கொண்டு சாலையில் விரைந்தான்.

ஒரு கண் மதுவின் மேலும் மறு கண் சாலையிலும் இருக்க காரை விரைவாக செலுத்தினான்.சிறிது நேரத்தில் மதுவின் முகம் வலியில் சுறுங்க அவளது கைகள் காற்றில் எதையோ தேடியது.அடுத்த நொடி ," ஆதி....ஆதி....ப்ளீஸ் ஆதி...." என்று புலம்பியவள் ," ஆதி......" என்று அலறியவாறு எழுந்து அமர்ந்தாள்.அதே நேரம் அவள் கத்துவதை கேட்ட ஆதியோ செய்வதறியாது சடன் ப்ரேக் போட்டு வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

எழுந்து அமர்ந்த மதுமிதா தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தாள் பின்பு ஆதியை கண்டவள் கேள்வியுடன் அவனை நோக்க ஆதியின் இதயதுடிப்போ எகிறியது.

" விக்ரம்..... நீங்க எப்படி இங்க ? நான் உங்க கூட ? எங்க இருக்கோம்.? எனக்கு என்னாச்சு?" ஈன்று கேள்விகளை அடுக்க அவளின் விக்ரம் என்ற அழைப்பு ஆதியின் போன உயிரை மீட்டு வந்தது.அதை வெளிக்காட்டாமல்," அதை தான் உன்னை கேட்கனும்.ஏர்போர்ட் வாசல்ல மயங்கி விழுந்துட்ட என்னாச்சு?"

அவன் பேசுவது காதுகளில் விழுந்தாலும் பதிலேதும் கூறாமல்," நம்ம எங்க இருக்கோம்.?"

" ம்...செவ்வாய் கிரகத்தில இருக்கோம்"

" விக்ரம்....."

" பார்த்தா தெரியலையா என்னோட.கார்ல இருக்கோம்."

" நீங்க எப்படி சென்னையில அதுவும் கரெக்டா நான் மயங்கி விழும்போது என்னை தாங்கி பிடிச்சீங்க?"

" உனக்கு தெரியாதா நான் உன்னைதான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.அதான் கரெக்டா டைமுக்கு ஆஜராகிட்டேன்."

" சரி என்னோட கார் ஏர்போர்ட் ல நிக்குது என்னை அங்க ட்ராப் பண்ணிடுங்க."

அவன் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக வண்டியை ஓட்ட," விக்ரம்.... உங்களைதான்."

" நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலைனு நினைக்கிறேன்."

" ஹம்.....," என்று பெருமூச்சு விட்டவள்," எனக்கு ரெண்டு நாளா  நல்ல அலைச்சல் னு நினைக்கிறேன் அதான் மயங்கிட்டேன்."

" எதாவது சாப்டியா?"அவன் பேச்சை மாற்ற ," மதியம் சாப்டாச்சு இன்று வீட்டுக்கு போய் தான் சாப்பிடனும் நீங்க சீக்கிரம் ஏர்போர்ட் போனா நல்லா இருக்கும்."

" ம்......ஏர்போர்ட் தானே காலையில யாரையாவது அனுப்பி எடுத்துட்டு வர சொல்லு.இப்ப மணி என்ன தெரியுமா? பதினொன்னாக போகுது இதுக்கு மேல ஆச்சுனா நீ வீட்டுக்கு ஸ்ட்ரெச்சர்ல.தான் போகனும் பேசாம வா," என்று கூறியவன் மேலும் ,"அமைதியா சீட்டில சாய்ஞ்சு கண்ண மூடிக்கோ ஹோட்டல் வந்ததும் எழுப்பறேன்." என்றவன் சாலையில் கவனமானான்.

பத்தே நிமிடத்தில் ஒரு உணவகத்தில் காரை பார்க் செய்தவன் மதுவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்," நீ மொதல்ல போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா நான் ஆர்டர் பண்றேன்." என்றவன் அவளது பதிலுக்கு காத்திராமல் உள்ளே சென்றான்.

அவனது செய்கையில் அளவு கடந்த உரிமை தெரிந்த போதும்  அவை அவளுக்கு சுகமானதாகவே தோன்றியது.முகத்தில் சில்லென்று நீர் பட்டவுடன் உடம்பின் அலுப்பெல்லாம் வடிந்ததுபோல இருந்தது.

புத்துணர்வுடன் விக்ரமின் முன்னே அவள் அமர அவளுக்கான உணவை பேரர் கொண்டு வந்தார் .

அனைத்து வகை உணவுகளும் அவளுக்கு பிடித்தமானதாகவே இருக்க ," எனக்கு இதெல்லாம் பிடிக்கும் னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

" அப்பாடி இதெல்லாம் உனக்கும் பிடிக்குமா ? எனக்கும் ரொம்ப பிடிக்கும் .எங்க உனக்கு பிடிக்காம போயாடுமோனு பயந்திட்டேன்.சீக்கிரம் சாப்பிடு ."என்றவன் மனதினுள்," இன்னைக்கு ரெண்டாவது எஸ்கேப் ஆதி கவனமா இரு ," என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

மது உணவு வகைகளை ருசித்து சாப்பிட ஆதியோ மதுவை ரசித்து பார்தான். அவள் நிமிர்ந்து ஆதியை பார்தாலும் அவன்  வேறுபுறம் திரும்பாது அவளையே விழுங்கிவிடுவது போல பார்ப்பது மதுவை ஏதோ செய்தது.

" விக்ரம் ப்ளீஸ்....."

" என்ன மது என்னாச்சு?"

" என்னை கொஞ்சம் சீக்கிரமா ஏர்போர்ட்ல விடுங்க இப்பவே ரொம்ப லேட் ஆகிடுச்சு."

" ஒரு தடவை உனக்கு சொன்னா புரியாதா?"

"உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்."

" ம்ச்....." இந்த வார்த்தை கூறி அவளை முறைத்து  பார்த்த விக்ரம் ," ஒகே..ஒகே...கூல் நான் முதல்ல போறேன் நீங்க பின்னாடி வாங்க ," என்றவாறு அவனிடமிருந்த கார் சாவியை பெற்றுக்கொண்டு அவ்விடம் விட்டு வேகமாக விரைந்தாள்.

அவனது காரை அடைந்து முன் இருக்கையில் அமர்ந்தவள் காரின் ஜி.பி.எஸ். ஸில் தன் வீட்டு முகவரியை செட் செய்தவள் பின் காரின் ப்ளேயரை ஆன் செய்து கண்கள் மூடிக்கொண்டாள்.சிறிது நேரத்தில் விக்ரம் முன் இருக்கையில் அமர்ந்தபோதும் வண்டியை கிளப்பியபோதும் கூட கண்களை அவள் திறக்க வில்லை.

தன்னவளின் அருகாமையின் மெல்ல மெட்டுக்கள் கேட்டுக்கொண்டே உதட்டில் புன்னகையுடன் மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.
மதுவின் வீட்டு வாசலுக்கு அருகே காரை நிறுத்தியவன் ," மது....மது...எந்திரி வீடு வந்தாச்சு."

" ம்...." என்று.பதிலுரைத்துவிட்டு மீண்டும் தூங்க துவங்கினாள்.

" இப்ப நீ எந்திரிக்கிறியா? இல்லை உன்னை தூக்கிட்டு போகனுமா," என்றவாறு அவளது கழுத்திற்கடியில் கைகளை.நுழைக்க முயல ," தோ..... எந்திரிச்சிட்டேன்...அதுக்குள்ள வீடு வந்திடுச்சா?"என வினவியவளை பார்த்து கடகடவென சிரித்தவன் அவள் காதை பிடித்து  திருகி," தப்பு பண்ணா சரியா பண்ணணும்."

" ஆ....வலிக்கிது விக்ரம்.. எப்படி கண்டுபிடிச்சீங்க நான் தூங்கலைனு?"

" தூங்கிறவங்களோட கருவிழி அசையாது."என்று புன்னகையுடன் கூறியவன் அவளது உடைமைகளை எடுத்து நீட்டி,"இனி தனியா எங்கயும் போகாத துனைக்கு யாரையாவது கூட்டிட்டு போ."

" யாரும் வரலைனா?"

" எனக்கு ஒரு கால் பண்ணு நானே வரேன்."

அவளிடமிருந்த அமைதியே பதிலாக வர சீட் பெல்டை நீக்கிவட்டு அவளருகே நெருங்கி அமர்ந்தான்.அப்பொழுதும் அவள் அமைதியாகவே இருக்க அவளின் தாடையில் ஒரு விரல் வைத்து தன்னை நிமிர்ந்து பார்க்க வைத்தவன்," என்னாச்சு மது ஏன் அமைதியாகிட்ட ,"

" எனக்கு தெரியலை "

" மது........." என்று அழைத்தவாறு அவள் சற்றும் எதிர்பாரா வண்ணம் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டான்.அவளிடமிருந்து எதிர்ப்பு வராதது அவனை ஆச்சரியமூட்டியது.

" மது எதைபத்தியும் கவலைபடாத மனச போட்டு குழப்பிக்காத எப்ப வேணாலும் எதுக்கு வேணாலும் என்னை கூப்பிடு கண்டிப்பா நான் வருவேன். நேத்தில இருந்து சரியா தூங்காம ரொம்ப வீக்காவும் தெரியுற முதல்ல போய் நல்லா ரெஸ்ட் எடு.மனசுல இருக்கிற எல்லாதையும் ஓரமா ஒதுக்கி வை.குழம்புன மனசுல தெளிவே பிறக்காது.காலையில யோசி உனக்கே புரியும்." என்று கூறியவன் அவளது நெற்றியில் தன் உதடுகளை பதித்தான்.

" விக்ரம்...." அதிர்தவளை மென்மையாக பார்த்து சிரித்தவன்." போ நல்லா தூங்கு." என்று கூறி புன்னகையுடன் அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டான்.அவன் கார் மறையும் வரை வாசலிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவள் முகத்தில் மாறாத மென்னகையுடனும் மனம்.முழுக்க ஒரு வித சந்தோஷத்துடனும் வீட்டினுள் சென்றாள்.

அவள் அறைவாசலை அடையவும் வேகமாக மதி ஓடி வரவும் சரியாக இருந்தது.

" என்னாச்சு ஏன் இப்படி ஓடி வர?"

" நீ முதல்ல உள்ள வா கா நான் சொல்றேன்.சீக்கிரம் வா."என்று தன் தமக்கையை அழைத்துக்கொண்டு அறையினுள் நுழைந்தாள்.

" மதிமா பயங்கர டயர்டா இருக்கு சீக்கிரம் என்னனு சொல்லுமா."

" அக்கா நீ போன காரியம் என்னாச்சு? யாரு உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்கனு தெரிஞ்சிடுச்சா??"

அதுவரை இதை பற்றி நினைவில்லாதவளாக இருந்த மது ,"இல்லை மதி நான் இன்னும் அந்த ஃபைலை பார்கலை.இப்ப ரொம்ப லேட் ஆகிடுச்சு நாளைகக்கு பார்கலாம்.நீ தூங்க போ." பட்டும்படாமல் கூறிய தமக்கையை விசித்திரமாக பார்த்த மதி," அக்கா காலையில வரை உங்கிட்ட இருந்த வேகம் இப்ப காணாம போயிடுச்சு என்னாச்சு உனக்கு.நீ இவ்வளவு நேரம் எங்க போயிருந்த."

" ஏர்போர்ட் ல ஒரு பழைய ஃப்ரெண்ட பார்த்து பேசிட்டே இருந்துட்டேன் நேரம் போனது தெரியல டா. இப்ப வேணாம் மதி காலையில பார்கலாம். "

" உனக்கு என்னமோ ஆச்சுகா.சரி நீ ரெஸ்ட் எடு." என்றவாறு விடைபெற்றாள் மதி.

மதி வெளியே சென்றதும் தனிமையில் இருந்த மதுவிற்கு தன் மனநிலையை கணிக்க இயலவில்லை. மாலை வரை தன் நான்கு வருட  நினைவுகளை திரும்ப பெறும் முனைப்புடன் செயல் பட்டவள் தற்போது அந்த நினைவை திரும்பி பெறுவதில் தயக்கம் காட்டுவது ஏனென்று அவளுக்கு புரியவில்லை. தன் நினைவுகளில் இல்லாத ஆதித்யனுக்கும் தன் மனதில் சலனம் ஏற்படுத்திய விக்ரமனுக்கும் நடுவே மதுமிதா போராடுவதை அவளால் புரிந்த கொள்ள இயலவில்லை.

முகமறியா ஆதித்யனும் மனதில் பதிந்த விக்ரமனும் மாறி மாறி அவளின் நினைவுகளில் வந்து போக உடலும் மனமும் ஒரு சேர சோர்ந்து போக விரைவிலே தூங்கிப்போனாள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக உறங்கிய மது காலையில் வெகு நேரத்திற்கு பிறகே எழுந்தாள்.சூடாக காஃபியை ரசித்தவள் மருத்துவமனையின் கொடுத்த கோப்புகளை திறந்தாள்.அவள் எதிர் பார்த்ததுபோலவே மருத்துவமனையில் சேர்த்தவரின் பெயர் ஆதித்யன் என்று போட்டிருந்தது அவன் பெயருக்கு எதிரே அவன் தொலைபேசி எண் குறிப்பிட்டிருந்தது.

நெஞ்சம் படபடக்க அந்த  எண் ஐ தன் செல்பேசியில் அழுத்தினாள். அந்த புறம் தொலைபேசி மணி அடிக்கும் ஒலியை தொடர்ந்து," ஹலோ...." என்ற ஆண் குரல் கேட்க செல் ஐ தவறவிட்டாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro