1. முத்தம்மாள்
நல்லிரவு இரண்டு மணிக்கு முத்தம்மாள் (60வயது) காவல் நிலையத்தின் முன் அழுகையுடன் நிற்க்க... காவலாளி ஒருவர் அவளைக் கண்டு... வெளியில் நிற்க்கும் அவளிடம் பேசுகிறார்.
காவலாளி: யாரு மா நீங்க?? இந்த நேரத்துல ஏன் மா இங்க நிக்கறீங்க??
முத்தம்மாள்: ஐயா நா ஒரு தப்பு பண்ணீட்ட,,, அதுக்காக இங்க சரணடைய வந்துருக்க...
காவலாளி: என்ன பண்ணீங்க மா??
முத்தம்மாள்: சொத்துக்கு ஆசப்பட்டு நா பெத்த பையன அடுச்சு கொன்னுட்டேன்.... கொன்னதுக்கு அப்றம்தா நா பண்ணது தப்புனு தோனுச்சு.... என்ன கைது பண்ணுங்க (ரெண்டு கையையும் நீட்டுறாங்க)
விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த காவலாளி அவரை உள்ளே அழைத்து விசாரிப்பு அறையில் அமர வைத்துவிட்டு, ஒரு பெண் காவலாளி (கவிதா) மூலம் விசாரணை மேற்க்கொள்கிறார்.....
கவிதா: சொல்லுங்க மா??? எதுக்காக உங்க பையன கொன்னீங்க??? எங்க, எப்டி கொன்னீங்க??
முத்தம்மாள்: என் பையன் பேரு செல்வராசு (40வயது),,, அவன் **** கம்பெனில வேல பாக்கறா... அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுட்டு என்ன கண்டுக்காம இருந்தான்,, இப்போ கொஞ்ச நாளா அவனுக்கு, என்மருமகளுக்கு சண்ட,, அவ கோவுச்சுட்டு அவளோட அம்மா வீட்டுக்கு போயி டிவர்ஸ் நோட்டீஸ் அணுப்பீட்டா,,, என் பையனுக்கு கொழந்த இல்ல... டிவர்ஸ் பண்ணதுக்கு அப்றம் பாதி சொத்த என்மருமகளுக்கு குடுக்கனுமாம்,,, நா சொத்த குடுக்ககூடாதுனு சொல்லி என் பையன்கிட்ட சண்ட போட்ட,, அவன் கோவத்துல எல்லா சொத்தையும் என்மருமகளுக்கு குடுக்கறனு சொன்னா.... எனக்கு பணத்து ஆசைல புத்தி கெட்டு போயி கோவத்துல அவன கொன்னுட்ட...
கவிதா: ஏன் மா பணத்துக்காக பெத்த பையனையே கொன்னுருக்கீங்க ச்சே.... நீயெல்லா ஒரு பொன்னா???
.👿
.👿
எப்டி கொன்னீங்க??
முத்தம்மாள்: அவன் பேசீட்டு இருக்கும் போதே ஒரு பெரிய கம்பியால அவன் தலைல அடுச்சுட்டேன்.... பின் மண்டைல அடிபட்டனால ஒரே அடீல இரத்தம் வந்து செத்துட்டான்...
கவிதா: இப்போ டெட் பாடி (dead body) எங்க இருக்கு???
முத்தம்மாள்: எங்க வீட்டுக்கு பின்னாடி திண்ணைல....
கவிதா: எத்தன மணிக்கு கொன்னீங்க??👿👿
முத்தம்மாள்: 1.30 இருக்கும்.... மூக்க தொட்டு பாத்த மூச்சூ இல்ல அதா நானே சரணடைய வந்துட்டேன் பயந்துகிட்டு😢..
விசாரணை மூலம் கெடச்ச தகவல வெச்சு பொணத்த எடுத்து அப்புறப்படுத்தீ.... அவனோட மனைவிக்கு தகவல் குடுக்கப்படுது..
மறுநாள் காலை அந்த காவல் நிலையமே பரபரப்பா இருக்க... ஒரு பக்கம் "சண்டையாவே இருந்தாலும் கணவனுக்காக கதறி அழுகும் மனைவி" இன்னொரு பக்கம் பத்திரிக்கையாளர்கள் காவலாளியை கேள்வியால் துளைக்க
1." பணத்துகாக பெத்த பையனையே கொன்னுருக்காங்களே சார் இவங்களுக்கு கோர்ட்ல என்ன தண்டனை கிடைக்கும்னு எதிர் பாக்கறீங்க??"
2. "ஒருவேல இந்த அம்மா பைத்தியமா??"
3. " இந்த கொலைக்கு பின்னாடி யாராவ்து தூண்டுதல் இருக்கும்னு சந்தேகப்பட்றீங்கலா?"
4. " காவல்துறைக்கு யாராவ்து மேல சந்தேகம் இருக்கா?"
5. " அவங்கதா குற்றம் செஞ்சாங்கனு ஆதாரம் இருக்கா?"
இந்த மாதிரி கேள்விகள் தொடர்ந்து கொண்டே போக... காவல்துறையினர் அனைவரையும் சமாளித்து அனுப்பினர்....
செய்தி, வளைதளம், நாளிதழ் எல்லாவற்றிலும் இந்த செய்தி பறவியது... முத்தம்மாவிற்க்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தது...
அனைத்து விசாரணையிலும் முத்தம்மாவின் ஒரே வாக்குமூலம் " "பணத்துக்காக நா பெத்த பையன அடுச்சு கொன்னுட்டேன்,, என்கையாலா அடுச்சுக்கொன்னேன்" இது தான்... கொலையை பண்ணிவிட்டு அதை அவளே ஒப்புக்கொன்டது அனைவருக்கும் ஆச்சர்யமே...
முத்தம்மாவின் சார்பில் எந்த வழக்கறிஞரும் வாதாட வரராததால்,, விசாரணைக்குப்பின் முத்கம்மாவிற்கு மரணதண்டனை என்று தீர்ப்பு வந்ததும்...
நாட்கள் நகர முத்தம்மாவின் தண்டனைக்கான நாள் நெருங்கியது..
காலை 9.30 மணி,,, தண்டனையை நிறைவேற்ற முத்தம்மாவை தூக்கு மேடைக்கு அழைத்து வந்து கடைசி ஆசையை கேட்டபோது "நா செத்ததுக்கு அப்றம் என்னோட அஸ்த்திய இராமேஸ்வரத்துல கரச்சுருங்க" . அதைக்கேட்ட ஒரு பெண் அதிகாரி "பெத்த பையன கொன்ன உனக்கு இது ஒன்னுதா 👿 கேடு " அவள் காது படவே பேசிக்கொண்டனர்...
முகத்தில் கருப்புத்துணியை மூடியபின் முத்தம்மாவின் நினைவுகள்
"ரொம்ப சரியாதா சொன்னீங்க,, பெத்த பையன கொன்ன எனக்கு அது ஒன்னுதா கேடு....😢😢
ஆனா நா அவன கொன்னது சொத்துக்காக இல்ல...
😭😭 நா ஆசையா என் தோளுளையும், மடீலையும் போட்டு வளத்த என்னோட ஒத்த பையன் அவ....
என்புருசன் செத்ததுக்கு அப்றம் என் பையன் தா என் உலகம்னு அவன படிப்ப வெச்சு,, நல்ல வேலைக்கு போக வெச்ச....
அவன் நல்லா வாழட்டும்னு நல்ல பொன்னா பாத்து கல்யாணம் பண்ணி வெச்ச... ஆனா அவன் என்மருமககூட சண்ட போட்டு அவள அடுச்சு விறட்டீட்டா..... அதகூட நா பொருத்துக்குட்ட... ஏன்னா பெத்த பாசம்😢😢...
தினமும் வேலைக்கு போயிட்டு குடுச்சுட்டு ரோட்ல கெடப்பான், அவன தேடி கண்டுபுடுச்சு சாப்ட வெச்சு தூங்க வெப்ப...
ஒவ்வொரு நாள் குடிபோதைல என்ன போட்டு அடிப்பான் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன்,,, ஏன்னா பெத்த மனம் பித்து....😢😢
சொகத்துக்காக கண்டவகிட்டலா போறனு ஊரே பேசிக்கிட்டாலும்,,, எல்லா தெறுஞ்சும் அவனுக்கு ஆதரவா பேசுன,,, நீ பண்ண அசிங்கத்த எல்லா பொருத்துகிட்ட...😢
ஆனா அன்னைக்கு நீ முழு சுயநெனவோட தா இருந்த... அப்போ ராத்திரி நா தூங்குனதுக்கு அப்றம் எங்கையோ எந்திரிச்சு போன... திரும்பி வரும் போது கைல ஒரு மூட்டை இருந்துச்சு....
அத நீ வீட்டுக்கு பின்னாடி எடுத்துட்டு போயி பிருச்ச,,, நா உனக்கு தெறியாம மறஞ்சு இருந்த.... அந்த மூட்டைல எதிர் வீட்டு குட்டி பொன்னு (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அவ தூக்கத்துல இருந்தா....
அந்த கொழந்தைய பாத்ததும் எனக்கு அதிர்ச்சீல படபடக்க... அதுக்குல்ல நீ அந்த கொழந்தகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ண,,, நா சுதாருச்சு உன்ன வந்து தடுக்கும் போது நீ என்னைய கீழ தள்ளிவிட்டுட்ட..... அதுல நா மயங்கீட்ட....
அந்த கொழந்த முழுச்சு "ஐயோ யாராவ்து என்ன காப்பாத்துங்க.... ப்ளீஸ்.... பாட்டி அங்கிள்ள போக சொல்லுங்க.... முத்து பாட்டி பயமா இருக்கு..... ஐயோ யாராவ்து காப்பாத்துங்க" னு உன்பிடீல இருந்து தப்பிக்க நெனச்ச கொழந்தையோட சத்தம் கேக்க நா முழுச்சுட்ட... உன்ன தடுக்க வரவும் நீ என்ன "ஏய் கெளவி பேசாம அந்த பக்கம் போ,,, நானே அவள என் வேல முடுஞ்சதும் வீட்ல விட்டற" னு சொன்ன....
எனக்கு கோவம் தலைக்கு ஏற "ஏன் டா,,, நா உன்ன இப்டியா வளத்துன,,, பாவம் 9வயசு கொழந்த டா... நீ என்ன மிருகமா??" நா பேச பேச என்ன மருபடியும் கீழ தள்ளிவிட்டுட்ட...
அந்த கொழந்தைய நீ நெருங்கவும் "" ஐயோ பாட்டி.... பயமா இருக்கு... அங்கிள்ள போக சொல்லுங்க... பாட்டி காப்பாத்துங்க... " பயத்துல அழுகற கொழந்த சத்தம் எனக்கு கேட்டுச்சு..
அந்த குரல கேட்ட நான், திண்ணை ஓரமா இருக்க பொருள தேடுன,,, ஒரு பெரிய கம்பி கைல கெடச்சுது அத எடுத்து கைய ஓங்கி " இப்படிப்பட்ட ஒரு அரக்கன் இந்த உலகத்துலையே இருக்ககூடாது,, 9வயசு கொழந்தைய பழவந்தப் படுத்தற நீ கண்டிப்பா ஒரு மிருகமா தா இருக்கனு ,,, செத்துரு நீ ஒரு மிருகம் " னு ஓங்கி பின் மண்டைல ஒரு அடி வெச்ச...
அடிபட்ட அடுத்த நொடியே கீழ விழுந்த நீ உயிர் போற நேரம் "அம்மா ஏன் மா??" னு சொல்லி முடிக்கறதுக்குள்ள உயிர் போயிருச்சு....
அந்த கொழந்தைய சமாதானம் பண்ணீ இத யார்கிட்டையும் சொல்லாத பாட்டி போலீஸ்ல போயி சொல்லிக்கற... நீ பத்தரமா வீட்டுக்கு போனு அந்த கொழந்தைய வீட்ல விட்டுட்டு போலீஸ்கிட்ட போன...
யாரு என்ன வேனா சொல்லட்டும்... ஆனா அத பத்தி நா கவலபடமாட்டேன்..... கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்குதுனா நா தட்டிக்கேப்பேன்,,, தட்டிகேட்டதுக்கு தண்டனையா என் உயிரே போனாலும் நா பயப்பட மாட்ட.
இந்த விஷயம் வெளிய தெறுஞ்சா அந்த கொழந்தைக்குதான் கஷ்டம், அந்த கொழந்தையோட வருங்காலம் பாதிக்கப்படும்,,, அதா நா வெளிய சொல்லல... அவன் தப்பு பண்ணா,,அதா நான் பெத்த பையனாவே இருந்தாலு அவன அடுச்சு கொன்ன...
இப்டி ஒரு மிருகத்தப் பெத்து வளத்துன பாவத்துக்கு தா நா இப்போ சாகப் போற..... அவன கொன்னது தப்பே இல்ல..... அவனோட அம்மாவா அந்த அரக்கன இந்த உலகத்துக்கு கொன்டு வந்த பாவத்தப் போக்கிக்கதா இராமேஸ்வரத்துல என்ன கரைக்க சொன்ன......
இந்த காலத்துல எந்த பொன்னும், எதுக்கும்,,, யாருக்காகவும் பயப்படக்கூடாது.... கண்ல தப்புனு பட்டா அத தைரியமா தட்டிக்கேக்கனும்.... எந்த உறவு முறைய காரணம் காட்டியும் அந்த தப்ப பொருத்து போகக்கூடாது...
எனக்கு இந்த அறிவுரைய சொல்ல எல்லா அருகதையும் இருக்கு.... இது பெண்களுக்கு மட்டும் இல்ல மனிதன மனிதனா மதிக்கற ஆண்களுக்கும் தா.... நா போற..... "
முத்தம்மாளுக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றப்பட்டது.....
-- முற்றும் --
இந்த கதை யாரு மனதை புண்படுத்தீருந்தாலும் மணிப்பு கேட்டுக்கொள்கிறேன் 🙏....... என் அருமை சகோதரிகளே😊 அனைவருக்கும் ஒரு சிறிய விழிப்புணர்ச்சி, தைரியத்தை ஏற்ப்படுத்த இந்த சகோதரனின் ஒரு சிறிய கதை........
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை,,,, இதில் வசனம், கதாப்பாத்திரம் மட்டுமே பொய் ஆனால் கதை உண்மை....
நன்றி
Edavthu hurt agara mathiri dialogue iruntha manuchurunga pa 😢 sorry
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro