பூக்கும் வண்டுக்கும் நடக்கும் கதை
அந்த காட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு அழகான தாமரை இருந்தது.
இந்தக் குளத்துக்கு அருகில் உள்ள மரத்தில் வேண்டும், கிளியும் வாசித்தது.
கிளியும், தாமரையும் நட்போடு வாழ்ந்தன.
வண்டு மட்டும் தாமரையோடு பகையோடு இருந்தது. கிளி தாமரையோடு நட்பு கொள்ள சொல்லியது. ஆனால் வண்டு அதை ஏற்க மறுத்தது.
அந்தக் காட்டில் ஒரு பக்கம் மலர்த் தோட்டம் இருந்தது. வண்டுக்குத் தேவையான உணவை மலர்கள் அளித்து வந்தது. அதனால் அவைகளிடம் வண்டு நட்போடு இருந்தது.
தாமரை தனக்குத் தேவையான உணவை அளிக்காது என்பதால் வண்டு அதனுடன் நட்பு பாராட்ட மறுத்தது.
ஒரு நாள் வண்டு வழக்கம் போல மலர்த் தோட்டத்திற்கு பசியோடு சொன்றது.
தோட்டம் முழுமையாக அழிக்கப்பட்டு இருந்தது. இதைக் அதிர்ந்து போனது வண்டு. அதில் தென்னங்கன்று நட ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது.
எங்கும் அதற்கு உணவு கிடைக்காதால் பசியோடு தன் இருப்பிடம் சென்றது.
வண்டு பசியால் துடித்தபடி அமர்ந்து இருப்பதை கிளி கவனித்தது . அதனிடம் விவரம் கேட்டது.
பின்னர் இரக்கப்பட்டு, தன்னிடம் இருந்த நாவற் பழத்தை கொடுத்தது.
முன்பு எல்லாம் இப்படி கிளி எதையாவது கொடுக்க வந்தால் உன்னிடம் பிச்சை எடுத்துச் சாப்பிடும் அளவு நான் தாழ்ந்து போகவில்லை என்று திமிராக பேசும் வண்டு.
ஆனால் இப்போது அதற்கு உணவு வழங்கிய மலர்த் தோட்டம் அளித்ததால், அதனால் கிளியிடம் திமிராகப் பேச முடியவில்லை. பழத்தை சாப்பிட்டுப் பார்த்தது. இருந்தாலும் தேன் பசியாற்றியது போல பழம் பசியாற்றவில்லை.
நேரம் செல்லச் செல்ல, பேசிக் கொடுமை அதிகமானது. பசி மயக்கம், அதற்கு தாமரையிடம் நட்பு கொள்ளலாமா ? என்று யோசிக்க வைத்தது.
அதனால் தாமரை மலரை பார்த்து, 'தாமரையே உன்னிடம் உள்ள தேனை எனக்குத் தருவாயா ?' என்று கேட்டது.
அதற்குக் தாமரை, "உன் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் என்னால் இப்போது தேன் தர முடியாது. இது தான் குவிந்து உள்ள நேரம். மறுநாள் நான் மலரும் போது என்னிடம் வந்தால் தேனைத் தருகிறேன்" என்றது.
"சரி... நான் உன்னிடம் நட்பு பாரட்டாவிட்டாலும், நீ என்னிடம் பரிவோடு பேசியதற்கு நன்றி. இப்போது என் பசி தீர, கிளி கொடுத்த நாவல் பழம் தவிர வேறு எதுவும் இல்லை. நீ நாளை மலரும் போது நான் உன்னிடம் உள்ள தேனைச் சாப்பிட்டுப் பசியாறிக் கொள்கிறேன் நன்றி" என்றது வண்டு.
நண்பர் பசித்திருக்க , மற்றொரு நண்பர் புசித்திருப்பாரோ, கிளிக்கு நன்றி கூறி, மீண்டும் நாவல் பழத்தையே சாப்பிட்டது.
பசியாறிய வண்டு மீண்டும் பேசியது...
"நண்பர்களே ஒரு பூந்தோட்டமே இருக்குன்னு ஆணவத்தால் உங்களை கிள்ளுக்கீரையா நினைச்சேன்.
இருந்தும் உங்கள் நட்பின் மேன்மையை என்னிடம் காட்டுவதைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன். இனி எப்போதும், எங்கேயும் தேவை கருதி நட்பு பாராட்ட மாட்டேன். தேவையற்றவர்கள் என்று யாரையும் எள்ளி நகையாட மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்றது.
அன்று முதல் அவை நட்புடன் பழகினார்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro