🤣🤣🤣வாங்க நண்பர்களே எல்லாரும் ஒண்ணா போலாம் முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும் 🤣🤣🤣
எல்லாம் பார்ட்டுக்குமே எதாவது ஒரு லைன் எழுதிட்டு ஸ்டார்ட் பண்ணறதால இதுக்கு என்ன எழுதுணும்ன்னு யோசிக்கிறப்போ இதான் நியாபகம் வந்துச்ச அதான் எழுதுனேன். சரி வாங்க பேசுவோம்.
யாருக்குள் இங்கு யாரோ பாட்டோட லைன்தான் இந்த கதைக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கா இல்லையான்னு தெரியல ஆனா பிடிச்சிருந்துச்சு வச்சிட்டேன்.
ரொம்ப முக்கியமான கருத்து. Pratilipi or watt pad இந்த இரண்டுலயுமே கதை படிக்கிறப்போ இந்த ஒரு வரி பெரும்பாலும் படிச்சிருப்போம் நான் அந்த லைன் எழுதி இருந்தா முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன் . தப்பு பண்ணலாம் ஆனா அத திருத்திக்கவும் ஒரு வாய்ப்பு கிடைச்சா திருத்திக்கலாம் இல்லையா. நான் இனி திருத்திக்கிறேன். அப்படி என்ன வரின்னு கேக்குறீங்களா. 'தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அழுதான் '
இந்த லைன் தான்.முன்னாடி எல்லாம் இந்த லைன் படிச்சா ப்ப்பா செம்ம அப்படின்னு இருக்கும் ஒரு படத்துல கூட சொல்வாங்களே சிலிர்த்து போய் சில்லறை எல்லாம் விட்டெறிஞ்சன்னு அந்த மாதிரி இருந்துது. ஆனா அது தப்புன்னு எப்போ புரிஞ்சிச்சு தெரியுமா
ஒரு இன்டெர்வியூல ஆங்கர் வந்து டைரக்டர் GVM கிட்ட கேட்டாரு உங்க படத்துல ஹீரோஸ் அழுறாங்கன்னு. அதுக்கு அவர் அழகா சொன்னார் அழுதுதான் ஆகணும் அழாம எப்படி இருக்க முடியும்ன்னு.
அப்போதான் ஒண்ணு யோசிச்ச ஆமால பையன் ஏன் அழ கூடாதுன்னு நம்ம நினைச்சோம். இதயம் ஒண்ணு இருந்தா அங்க வலிச்சா கண்ணுல தண்ணி வந்துதான் ஆகணும்ன்னு. பையன் அழுதுட்டா போதும் உடனே பொண்ணு மாதிரி அழாதன்னு டயலாக் வேற வந்துடும் இப்படி சொல்ல போய்தான் நான் பையன் இப்படி இருக்கணும்னு நினைச்சிட்டு பொண்ணு மேல கை நீட்ட யோசிக்கிறது இல்லை . இனிமே இந்த மாதிரி தப்பா எழுதாம இருக்கணும் நான் மனசுல வச்சிருக்கேன் . படிக்கிறவங்களும் மனசுல வச்சிக்கோங்க. ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
ஒரு தந்தையின் கடைசி கதறல்,காற்றே என் வாசல் வந்தாய் சிறுகதைல ஆரம்பிச்சு. சேர்ந்தே சொர்கம் வரை, இணை பிரியாத நிலை பெறவே இப்போ யாருக்குள் இங்கு யாரோ வர ஓரளவுக்கு எழுதிட்டு இருக்கேன். மிச்சம் எல்லா கதை விட இது கொஞ்சம் யாருக்குள் இங்கு யாரோ பெரிய கதைதான். ஆனாலும் எழுதுறப்போ ரொம்ப தோணுனது என்னன்னா முன்னாடி எழுதுன கதை அளவுக்கு எழுத முடியுமான்னு. எனக்கு வந்துட்டு ஸ்டார்ட்டிங்க்ல கமெண்ட் கம்மியா வந்துச்சு அவங்க எல்லாரும் என்னோட கதைகள் படிச்சவங்க தான். நான் என்ன நினைச்சேன்னா சரி இந்த பொண்ணு வந்து பாவம் எழுதுது நல்லா இருக்குன்னு சொல்லுவோம்ன்னு சொல்றாங்கன்னு நினைச்சேன். ஆனா போக நீ எழுதுற விதம் நல்லா இருக்குமா.மெசேஜ் வரும் நல்லா இருக்கு உங்க ஸ்டோரி அப்டினுலாம். அப்போ சரி உண்மையா நல்லாதான் போகுது போல அப்படின்னு நினைச்சிட்டு தான் இந்த ஸ்டோரி எழுதிட்டு இருக்கேன். இந்த ஸ்டோரில எனக்கு நிறைய நினைவுகள் இருக்கு அப்படி நினைவுகள் இருக்க காரணம் நீங்கதான் அதுக்கு நன்றி.
அப்புறம் நான் பொதுவா எப்போவுமே போன எபிசொட்ல என்ன எழுதுனன்னு கூட மறந்துடுவேன். யாராவது திடிர்னு டவுட் கேட்டு மெசேஜ் பண்ணா கூட எந்த எபிசொட்ன்னு கேட்டுட்டு நான் போய் படிச்சு பாத்துட்டுதான் பதில் சொல்வேன் அந்த அளவுக்கு எனக்கு நியாபகம் சக்தி. அதனாலதான் நான் சத்யா அப்பா சத்யா அம்மா சித்தப்பா சித்தின்னு எழுதுவ பேர் போடல இல்லைன்னா எனக்கே குழப்பிரும் அதான் நான் பேர் அவ்வளவா எழுதல.
என்னோட தங்கச்சிக்கிட்ட தான் முதல்ல ஸ்டோரி இப்படி பண்ண போறேன் சொல்வேன். எதாவது ஐடியா கேப்பேன். அதே மாதிரி இதுவரைக்கும் ஒருமுறை கூட கதை பப்ளிஸ் பண்ண பிறகு அவ படிச்சது இல்லை. அதுக்கு முன்னாடி பாதி கதை எழுதுறப்போ படிச்சுட்டு ஏன் இப்படி இருக்குன்னு என் உயிரை எடுத்துருவா. உதவி பண்ற ஒரு இம்சை.
அப்புறம் நோட்டிபிகேஷன் இருக்கே நீங்க எனக்கு கமெண்ட் பண்ணி நான் ரிப்ளை பண்ண பிறகுதான் பெரும்பாலும் எனக்கு காட்டும்.
இப்போ கதாபாத்திரங்கள் பத்தி பாப்போம்.
சாயா :சாயா கொஞ்சம் ஸ்ட்ராங்கான பொண்ணு அதே நேரம் ரொம்ப சென்சிடிவ்தான் அவளும். அவளுக்கு அவளோட பேமிலி பிரண்ட்ஸ்தான் உலகம்.அவங்களுக்காக அவ என்ன வேணா செய்வா. அந்த மாதிரி ஒரு கேரக்டர் தான் சாயா.
அம்மாடி வந்து என்கிட்ட நிறைய பேர் பிடிச்சிருக்குன்னு சொல்லி இருக்கீங்க நிறைய பேர் பிடிக்கலன்னு சொல்லி இருக்கீங்க அப்படி நான் கூப்பிட காரணம் என்னன்னா என்கூட பேசுற என் பிரண்ட்ஸ் எல்லாமே சொல்வாங்க ன்னா உன்கூட பேசுனா வயசான பாட்டிக்கிட்ட பேசுற மாதிரி இருக்குன்னு சொல்வாங்க.எனக்கு அந்த மாதிரி பழைய பேர் அதுவும் தமிழ் பேர் ரொம்ப பிடிக்கும். நடிகையர் திலகம் படத்துல அம்மாடின்னுதான் ஜெமினி சாவித்ரி அம்மாவ கூப்பிடுற மாதிரி காட்டுவாங்க. எனக்கு அவ்ளோ பிடிச்சிச்சு அதான் நான் அப்படி வச்சேன். மூவி பாத்தவங்களுக்கு தெரியும். அது நல்லா இல்லைன்னு சொன்னதும் ஓகே தான். ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். எனக்கு கூட baby, honey, darling கதைல ஹீரோயின சொல்றது பிடிக்காது. பொண்டாட்டி மாமாங்கிறது செம்பருத்தி பாத்தே வெறுத்தாச்சு. ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பிடிக்கும். அதான் ஹரிணி கூட சத்யா கண்ணம்மா கூப்பிடுவாரு.
ஹரிணி :ஹரிணி என்னோட பிரண்ட் நேம்.அதனாலதான் இந்த கேரக்டர்க்கு ஹரிணின்னு வச்சேன்.
அப்புறம் கொஞ்சம் குறும்பு வெள்ளை மனசு. தன்னை போலதான் உலகம்ன்னு நினைக்கிற மாதிரி அவங்க கேரக்டர் எழுதி இருந்தேன். இந்த உலகம் பத்தி அவ்ளோ தெரியாது. ஆனா அவ உலகத்துல இருக்குற எல்லாரும் நல்லவங்கதான்.
அகரன் :அகரன் கேரக்டர் வந்து எப்படி எழுதுனேன்னா ஹீரோ எப்போவும் அவ்ளோ தப்பு பண்ண மாட்டாங்க. கரெக்ட்டா இருப்பாங்க. ஆனா அகரன் அப்படி இல்லை அவன் நிறைய மிஸ்டேக் பண்ணா ஏன்னா அவனோட கடந்த காலம் அப்படி இருந்துச்சு. அது அவன நிகழ்காலம் வர பாதிச்சிச்சு. அது சாயாவ பாதிச்சாலும் அத சரி பண்ண வாய்ப்பு கிடைச்சப்போ அத யூஸ் பண்ணா.அதுக்கப்றம் அவனுக்கு எல்லாம் நல்லாதான் நடந்துச்சு.
சத்யா :சத்யா கூட என்னோட பிரண்ட் பேர்தான்.லவ் பண்ரான் அப்படிங்கிறதுக்காக திட்டாம இருக்க மாட்டான் ஆனா அவளை ஏதாவது சொன்னா அவளை விட அதிகமா பீல் பண்ணுவான். அந்த மாதிரி கேரக்டர் தான் சத்யா.
விஷால் :நான் ஆரம்பித்துல சின்ன கேரக்டர் பிளான் பண்ண ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அதோட பிரண்ட்ஸ் மூணு பேர் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு அதான் நான் பெருசா எழுதின
பைசல் பர்வீன் ஜோசப் தீக்சா தர்சன் பிரியங்கா எல்லாம் வந்து அப்பப்போ தோணுனத வச்சி எழுதுனது. அவங்க எல்லாருமே இப்படியும் சில நல்ல மனிதர்கள் நம்ம வாழ்க்கைல இருப்பாங்க இல்லையா அதை வச்சி எழுதுனது. நான் அவ்வளவா பண்டிகை திருவிழா எதுவும் எழுதல. ஏன்னா எனக்கு தெரிஞ்சதுக்கும் சராசரியா நீங்க பாக்குறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும் அதான் காரணம். இப்போ கல்யாணம் அப்படின்னா நலங்கு வைப்பாங்கல்ல அது கூட எங்க ஊர் கல்யாணத்துல பண்ண மாட்டாங்க. அப்புறம் எனக்கு இந்த சொந்தம் பத்தி அவ்ளோ தெரியாது அத்தை மாமா பெரியம்மா பெரியப்பா எல்லாம் ஓகே. ஆனா அதுக்கு மேல உறவு முறை எல்லாம் தெரியாது நல்லா குழப்பிடும். நானும் குழம்பி உங்களையும் குழப்ப விரும்பல அதான் நான் அந்த அளவுக்கு உறவு முறை எழுதல.
இவ்ளோ குறை இருக்கு அதை எல்லாம் சமாளிச்சுதான் எழுதி இருக்கேன்.
அப்புறம் நான் படிச்சு இருக்கேன் எழுத்தாளர் எப்போதும் வாசகர்ளின் விருப்பத்துக்காக எழுத கூடாது எழுத்தாளர் எழுதுறது தான் வாசகங்களின் விருப்பமா இருக்கணும். நானும் அப்படிதான் நினைச்சு எழுதுன.எப்போவும் நீங்க சொல்ற கருத்துக்கள் மனசுல வச்சிதான் அடுத்த பார்ட் எழுதுவேன் ஆனா என்னோட மனசும் அது சரினு சொல்ல சொன்னா மட்டும் தான். நான் எழுதுனது உங்களுக்கு பிடிச்சது சந்தோசம்.
ஒரு கதையோட வெற்றி வந்து ஒண்ணு கதை படிச்சதும் வருத்தம் படணும் இல்லைன்னா சந்தோசமா இருக்கணும்.நான் வருத்தபட வைக்க விரும்பல. சந்தோசமா இருக்க வைக்க ட்ரை பண்ண. அது பலன் குடுத்துருக்கும்ன்னு நினைக்றேன். இல்லை அப்படின்னா நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அப்புறம் ஸ்டோரி இதுவரைக்கும் படிச்சு கருத்து சொன்ன எல்லாருக்கும் மதிப்பீடு வழங்கியவர்களுக்கும் கதை படிச்ச நண்பர்கள் சகோதர சகோதரிகளுக்கு. நன்றி 😁.
வேற எதாவது கேள்வி இருந்தா கேளுங்க சொல்லணும்ன்னா சொல்லுங்க.
முடிவு பகுதியில் மீட் பண்ணுவோம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro