யாதிரா - 9
ஆறாம் நாள்
புதுசா எதுவும் நடக்கவில்லை நான் இங்கு கதை எழுத. யாதிரா எப்பொழுதும் போல் செக்-அப் செய்தாள். அன்றிரவு வெளிவரப்போகும் இண்டர்வியூவை எதிர்பார்த்து வருண் ஓரளவுக்கு சந்தோஷமாய் இருந்தான். மாலை 7.30 கு பிரைம்டைம்(primetime) இல் சன் டிவி இல் இண்டர்வியூ ஒளிபரப்பானது. அன்றிரவு முழுக்க இண்டர்வியூவை பற்றி தான் எல்லா சமூக வலைத்தளங்களும் பேசின. வளர்பிறையாய் நிலவு வளர போனை ஸ்க்ரோல்(scroll) செய்த வருணின் நம்பிக்கையும் வளர்ந்தது.
ஏழாம் நாள்
அன்று எதிர்பாரா விதமாய் கார் விபத்து நிகழ ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் இக்கட்டான வேலையில் யாதிரா மூழ்கியிருந்தாள். அக்குடும்பத்தில் ஒருவரையாவது காப்பாற்ற முடியாதா என யாதிராவின் மனம் விம்மியது. ஆயினும் காப்பாற்றப்பட்ட அவ்வொருவர் மட்டும் எவ்வாறு வாழ்க்கையைத் தொடர முடியுமென இன்னொரு மனமும் கேட்டது. பல மணி நேரங்கள் கழித்து தந்தையையும் ஒரு குழந்தையையும் stableஆன நிலைக்கு கொண்டு வந்தாள் யாதிரா. மற்றவர்களைக் கடவுள் பார்த்துக்கொண்டார்.
இவ்வேலை முடிந்து ஒரு நிமிடம் ஓய்வு எடுக்கலாமென நினைக்கும்போது வருணின் முகம் தோன்றியது. கால் வலித்தது. கழுத்தை திருப்பினால் சுர்ரென வலி கை வரை நீண்டது. எல்லாவற்றையும் 10 நிமிடம் பொறுத்துக்கொண்டு வருணின் அறைக்கு பகல் 2 மணிக்கு வந்தாள் யாதிரா.
திரைச்சீலை மூடியிருந்தது. ஒரு துளி சூரியவொளியும் இருளை கெடாமல் இருக்க எல்லாம் மூடியிருந்தது. யாதிராவுக்கு எதுவோ தவறாய் பட்டது.
"மிஸ்டர் வருண்?" மெதுவாய் கூப்பிட்டாள்.
திரும்பி படுத்திருந்த முகம் இப்பொழுது இவளைப் பார்த்தது. கண்கள் சிவந்திருந்தன. முகம் உப்பியிருந்தது.
"என்ன கன்னத்துல ரெண்டு இட்லிய முழுங்காம வச்சிருக்கீங்க?"
வருண் அவளின் மொக்கை ஜோக்குக்கு சிரித்தான்.
"எழுந்திரிச்சு உட்காருங்க வருண்."
வருண் எழவில்லை.
"எப்படி இருக்கீங்க வருண்?"
அவன் எப்படி சொல்வான் அவனின் ஒரு முயற்சியும் பின்வாங்கிய கதையை. குரல் கனத்தது.
"படம் எல்லாம் கேன்சல் ஆச்சு டாக்டர்," என ஒற்றை வாக்கியத்தில் தனது இழப்பைக் கூறினான்.
யாதிரா அவன் கரத்தை தன் கைகளில் பொத்தினாள். தைரியம் தரும் விதமாய் அவன் கையை அழுத்தினாள். இத்தனை நாளாய் எவரின் தீண்டலும் படாத வருணின் உடம்பில் இவளின் அன்பும் பரிவும் பரவசமாய் பரவியது. மௌனத்தின் மூலம் ஆறுதல் அளித்தாள் யாதிரா.
"இண்டர்வியூக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் நான் குணமாக மூன்று மாதங்கள் மேல் ஆகும், இனிமேல் ஸ்டண்ட் வேலை செய்ய மாட்டேன், உடலை வருத்தி நடிக்க மாட்டேன் என்ற கருத்து தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பிச்சிட்டு. சான்ஸ்காக நிறைய பேரு நிக்கிறாங்க அதுவும் தமிழ் மக்களுக்கு என் முகம் அவ்ளோ பழக்கம் இல்ல. முன்னாடி தலை ஆட்டின ஆளுங்க எல்லாம் இப்போ பின்வாங்குறாங்க."
"பயத்தில் அவர்கள் முடிவு எடுக்கிறார்கள் மிஸ்டர் வருண். சேப்(safe) ஆ இருக்க டிரை பண்ணா சேப் ஆன வெற்றி தான் கிட்டும், பெரிய வெற்றி அல்ல."
"வெறுங்கையோடு மீண்டும் மும்பை போனா அங்க என்ன எழுதுவாங்க தெரியுமா? அங்கயும் வாய்ப்பு தருவாங்களா நு தெரியல. நான் இத்தனை வருடம் பட்ட கஷ்டம் ஒரு நாளில் உடையும் என நான் கனவுல கூட நினைக்கல"
"மிஸ்டர் வருண், யெஸ் நோ மட்டும் சொல்லுங்க."
வருண் அவளின் கராரான வார்த்தையைக் கேட்டு திரும்பினான்.
"கை கால் நல்லா இருக்கா வருண்?"
"ம்ம்ம்"
"உயிர் இருக்கா வருண்?"
"ம்ம்ம்"
"மனசுல தைரியம் இருக்கா வருண்?"
"ம்ம்ம்"
"அப்போ மீண்டும் முயற்சி செய்யுங்க. எத்தனை தடவ வீழ்கிறீரோ அத்தனை முறை எழுந்திரிங்க. உயிர் இருக்கும் வரை போராட்டம். உயிர் இருக்கும் வரை தோல்வி. உயிர் இருக்கும் வரை வெற்றி. நீங்க வெற்றி பெறுவீங்கன்னு நான் நம்புறேன்."
"ஈஸியா சொல்லிட்டீங்க டாக்டர்."
"இல்ல, அனுபவத்துல சொல்றேன். எத்தனை விபத்து, இறப்பு பார்த்திருக்கேன். மீள முடியா சோகமென நினைத்தவையெல்லாம் இன்று கடந்து வந்த சுவடாகிவிட்டன. இன்று ஒரு குடும்பமே விபத்தில் மாட்டிக்கொண்டு அப்பாவையும் ஒரு குழந்தையையும் மட்டும் உயிர் பிழைக்க வைத்தேன். அழியா ரணத்திலிருந்து அவர்களும் கடந்து வருவார்கள் என நம்பிக்கை இருக்கு. உங்க வேதனையை கொச்சைப்படுத்தல, சிறுமைப்படுத்தல வருண். பெரிய வலி, சின்ன வலி நு எதாவது இருக்கா என்ன? நீங்களும் மீண்டு வாங்க."
அவனையும் மீறி கண்ணீர் கொட்டி போர்வையை நனைத்து. ஆனால் இவை சுய பரிதாபத்துக்காக அல்ல, சுய மரியாதையை மீட்க முடியுமென்ற நம்பிக்கைக்காக.
சில நிமிடங்கள் கழித்து தன்னை ஒருமுகப்படுத்திக்கொண்டான் வருண்," இப்படி பேச எங்க கத்துக்கிட்டீங்க டாக்டர்?"
யாதிரா புன்னகைத்தாள், "கத்துக்கல வருண். கத்துக்க வச்சிட்டு வாழ்க்கை. உடம்ப பார்த்துக்குங்க. பிட்(fit) ஆனதும் முழு மூச்சா வேலைல இறங்குங்க. I'm rooting for you!"
யாதிரா சென்றதும் அவளின் வார்த்தைகளை வருணின் மூளை அசைப்போட்டது. அவள் சொல்வது போல் உடம்பு தான் முக்கியம் அதற்காக மீண்டும் மும்பை செல்லலாம். உயிர் இருக்கும் வரை முயற்சி செய்வோம் என திடமாகினான். தமிழ்நாடு காத்திருக்கும்.
எட்டாம் நாள்
மருத்துவமனையிலிருந்து கிளம்பும் நாள் அது. (இது என்ன வீடா? இங்கேயே டேரா போட, இது மருத்துவமனை சோ நோ மோர் கதை ஹியர்)
டீனின் உதவியோடு மிச்சம் இருந்த போட்டோகிராபர்களை ஏமாற்றிவிட்டு வேறொரு கேட்(gate) வழியாக ஏர்போர்ட் செல்ல எல்லாம் தயார் ஆனது. பில் கட்டியாச்சு, பேக்கிங் முடிச்சாச்சு, எல்லா தாதியர்களுக்கும் நன்றி சொல்லில்யாச்சு ஆனால் மணி 9 ஆகியதும் டான் என தோன்றும் யாதிரா அன்று வரவில்லை. நர்ஸ் ஹேமாவைக் கூப்பிட்டுக் கேட்டபோது டாக்டர் இன்று லீவ் என்றார்.
டாக்டருக்கு எதுக்கு லீவ் என எரிச்சல் கிளம்பியது வருணுக்கு. பாவம், ஏழு நாள் தொடர்ந்து வேலைப் பார்த்திருக்கிறாள் இன்று ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும் என உள்ளிருந்து ஒரு குரல் எட்டிப்பார்த்தது. நான் இன்று டிஸ்சார்ஜ் ஆகுவது தெரியாமல் அவள் லீவ் போட்டாளா என வருணுக்கு சந்தேகம். தெரிந்து போட்டிருப்பாள் என மீண்டும் அக்குரல் சொன்னது. நன்றி சொல்ல வாய்ப்பில்லை. கையில் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. எதுவாகினும் யாதிராவிடம் விடைப்பெறாமல்செல்வது மனதைக் குத்தியது. அலைக்கடல் ஓய்ந்திருப்பின் அகக்கடல் பொங்குவதேனோ? எதுவும் செய்ய முடியாமல் வருண் ஏர்போர்ட் கு விரைந்தான்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தன் முழு நேரத்தையும் அன்பையும் அர்ப்பணிப்பவள் அவர்கள் குணமாகி சென்றதும் அவர்களிடம் தூரத்தில் இருப்பது சிறந்ததென நினைத்தாள். நோயாளிகள் பலரை பார்ப்பதும் குணப்படுத்துவதும் வேலை அவர்களை நண்பர்களாக்குவதும் சொந்தமாக்குவதுவம் அல்ல. அவ்வாறு பார்த்தால் அடுத்த முறை அவர்களுக்கு சிகிச்சை வழங்குவது சிக்கல் என மருத்துவம் சொல்லிக்கொடுத்திருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro