Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

யாதிரா - 6

மூன்றாம் நாள்

அதிகாலையில் சூரியன் மட்டும் தோன்றினான் ஆனால் யாதிரா தோன்றவில்லை. வேறொரு மருத்துவர் இவனை பரிசோதனை செய்தார். பரிசோதனை செய்ய எதுவுமில்லை என்பது தான் உண்மை, வருணுக்கு ஓய்வு மட்டுமே மருந்து. ஒரே ஒரு மருத்துவர் மட்டும் என்னை கவனிக்கட்டும் எனக் குறிப்பிட்டிருந்தேனே, என் ரிக்குவஸ்ட்(request) எதுவும் செய்யாமல் இருப்பது தான் அழகா என வருண் எரிச்சலாய் கேட்க அந்த பாவப்பட்ட டாக்டர் யாதிரா இன்று நைட் ஷிப்ட் என்பதால் இரவு 8 மணிக்கு மேல் தான் வருவார் என பதில் அளித்தார்.

யாதிராவின் இல்லாமையில் அவளைப் பற்றிய ஆர்வம் அதிகரித்தது. கூகிள் தொடங்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எல்லாவற்றையும் நோண்டினான் வருண். யாதிரா எனும் பெயரில் லட்சக்கணக்கான பெண்களின் ப்ரொபைல்கள் வந்தன. டாக்டர் யாதிரா என்று தட்டியவனின் தேடல் சில நூறுகளில் முடிந்தது. ஆயினும் அவளைப் பற்றி எதுவும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஸ்டார் என்பது சும்மாவா. மதிய உணவை எடுத்து வந்த நர்ஸிடம் அவனே கேட்டு செல்பி எடுத்தான். யாரும் வருணிடம் செல்பியோ வேறு படமோ எடுக்கக்கூடாது இல்லையெனில் வேலைப் போய்விடுமென்ற டீனின் எச்சரிக்கையால் ஆசைகளப் புதைத்து வைத்திருந்த அந்த நர்ஸ் ஆனந்தத்தில் மிதந்தாள். செல்பி எடுத்துவிட்டு பின் நைஸாக யாதிராவின் முழு பெயரைக் கேட்டான். அவளுக்கோ தெரியவில்லை. எதாவது official பேப்பரில் பார்த்து சொல்லுமாறு அவன் குழி விழும் சிரிப்போடு கேட்க அக்குழியில் விழுந்த நர்ஸ் எப்படியோ கண்டுப்பிடித்துவிட்டாள்.

யாதிரா வாசுதேவன். கூகிள் இப்போ உன் வேலையைக் காட்டு!

அவளின் முழு பெயரை அடித்ததுமே கூகிள் இமேஜஸில்(images) மானிறமாய், கூர்மையான மூக்கும், சிறு சிரிப்பில் தெரிந்த முன் பற்களும் அதை ஒளித்த உதடும், கருக்கூந்தலும் லட்சணமாய் ஒரு முகம் வருணைப் பார்த்தது. மின்னிய அக்கண்களை வைத்து யாதிராவைக் கண்டுக்கொண்டான் வருண். இக்கலைநயமான முகத்தை மாஸ்க் கயமாய் மறைத்திருந்தது. அவன் அவளை அடையாளம் கண்டுக்கொண்டாலும் எதற்கும் சரிபார்த்துக்கொள்வோமென அப்புகைப்படத்தை க்ளிக் செய்தான். அமெரிக்காவின் சியாட்டல்(Seattle) மானிலத்தில் Annual Emergency Medicine Conference இல் அவளின் ரீசர்ச் போஸ்டரைக்(research poster) காட்டவும் presentation கொடுக்கவும் அவள் சென்றிருந்தாள் என அறிந்தான். அந்த கான்பிரன்ஸ் வெப்சைட்டில் தான் இவளின் முகம் இவனைப் பார்த்து புன்னகைத்தது.

இம்முகத்தை இப்பொழுதே பார்க்க வேண்டுமென ஆசைத் தொற்றியது. ஆனால் அவள் அங்கு இல்லை. ஒவ்வொரு நிமிடமும் இவனின் பொறுமையை சோதித்துவிட்டே முடிந்தன. இரு நாட்களாய் வசதியாய் இருந்த அறை இன்று சலிப்பைத் தந்தது. இவ்வறையில் இருந்தால் நேரம் இன்னும் கொடூர ஸ்லோவாக(slow) செல்லும் என நினைத்த வருண் மேனேஜரைக் கூப்பிட்டு வீல்சேரை(wheelchair) எடுத்துவர சொன்னான்.

----------

இரவு பத்து மணி இருக்கும். யாதிரா மருத்துவமனையின் லேப்களைத்(lab) தேடி அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தாள். இன்னேரத்தில் lab technician யாராவது இருக்க வேண்டுமென அவளின் மனம் பிராத்தனை செய்தது. அவசரமாக ஒரு டெஸ்ட் செய்ய வேண்டும். வழக்கமான டெஸ்ட் ஆக இருந்தால் வெளி லேப்புக்கு அனுப்பியிருப்பாள் ஆனால் இது அரிய வகை டெஸ்ட் அதுவும் ஓரிரு பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் லேப் டெஸ்ட். இவள் வேலைப் பார்க்கும் மருத்துவமனையில் கிடைக்கும் ஆனால் இன்னேரத்தில் லேப் ஆட்கள் கிளம்பியிருப்பர்.

லேப் கதவைக் கண்டதும் ஒரு நிமிடம் மூச்சை இழுத்தாள் பந்தயத்தில் ஓடும் தன் இதயத்தை கட்டுக்குள் கொண்டுவர. லேப் கதவை திறந்து லைட் ஐ ஆன்(on) செய்தாள். வெளிச்சம் கண்ணைக் கூசியது. கிட்ட தட்ட எல்லா டாக்டர்களும் பேஷண்ட் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள ஆராய்ச்சியிலும் புதுவித கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டியவள் யாதிரா. லேப் இனுள் சென்றால் பைப்பட்(pipette) எந்த ஸைசில்(size) வரும் என்று கூட தெரியாத மருத்துவர்களிடையில் லேப் வேலையும் அறிந்திருந்தாள் யாதிரா. அவள் வாழ்னாள் முழுக்க நோயாளிகளைப் பார்த்தாலும் Sir Banting கண்டுப்பிடித்த இன்சுலின்(Insulin) காப்பாற்றிய 1 விழுக்காடு மக்களைக் கூட அவளால் காப்பாற்ற முடியாது என அறிந்திருந்தாள்.

டெஸ்ட் டியூப்(test tube), பைபட்(pipette), கெமிக்கல் ஆகியவற்றை எடுத்து மேசையில் பரத்த கைகள் நடுங்கின. அவள் கடைசியாய் ஓர் வருடத்துக்கு முன் ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். தன் எண்ணங்களை ஒருமுகப்படுத்திக்கொண்டு testing protocol பின்பற்றி டெஸ்ட் செய்தாள் யாதிரா. டெஸ்ட் ரிசல்ட் வரும் வரை அம்மிஷின் அருகே அமர்ந்தாள். மீண்டும் அவளின் கைகள் நடுங்கின.

சரியாக ஒரு வருடம் முன்பு ஒரு பேஷண்ட் இன் செல் (cell) களை சேகரித்து, வளர்த்து, அதிலிருந்து DNA, RNA எடுத்து ஜீன்(gene) குறைபாடுகள் இருக்கிறதா என டெஸ்ட் செய்துக்கொண்டிருந்தாள். அப்போது DNA sequence மிஷின் ஒன்றை மருத்துவமனை புதிதாக வாங்க அதை முதலில் பயன்படுத்தும் வாய்ப்பு யாதிராவுக்கு கிட்டியது, வாய்ப்பு அல்ல சுமை. முதலில் பயன்படுத்துபவர் மிஷினை calibrate செய்ய வேண்டும் அதோடு சரியாக வேலை செய்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அதற்காக விளையாட்டுதனமாக தனது எச்சிலில் இருந்து DNA எடுத்து அதில் ஜீன்(gene) குறைபாடுகள் உள்ளனவா என டெஸ்ட் செய்தாள்.

டெஸ்டின் முடிவுகளை அவள் எதிர்பார்க்கவில்லை. வேறு யாரோ இம்முடிவுகளை கையில் வைத்து இவளுக்கு கவுன்சிலிங்க் உடன் விஷயத்தை உடைத்திருந்தால் இந்த அளவுக்கு அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க மாட்டாள். தனது துரதிஷ்டத்தை தானே தெரிந்துக்கொள்வது வேதனை தான். டெஸ்டில் யாதிராவுக்கு மார்பக புற்றுனோய்க்கான(breast cancer) ஜீன் குறைப்பாடு(gene mutation) இருப்பதாக போட்டிருந்தது. புது மிஷின் மக்கர் பண்ணுகிறதென நினைத்தவள் மீண்டும் டெஸ்ட் செய்தாள். விதி மாறவில்லை. பின் DNAஐ விட்டு விட்டு RNA, protein டெஸ்ட் செய்தாள். அவை இவளின் மிச்ச நம்பிக்கையையும் உடைத்தன. எத்தனையோ பேரின் டெஸ்ட் முடிவுகளைக் கொடுத்து அவர்களின் கண்ணீருக்கு தோள் கொடுத்தவள் லேப் இன் தரையில் விழுந்து தனியாய் கதறி அழுதாள். அடுத்த நாள் சீனியர் breast surgeon ஒருத்தரை அணுகினாள் ரிப்போர்ட் உடன்.

"நான் சொல்லி தெரியனும்னு இல்ல. உனக்கே தெரியும் இந்த gene mutation இருந்தால் மூன்றில் இரு பெண்களுக்கு மார்பக புற்றுனோய் வரும் நு. 6 மாசத்துக்கு ஒரு தடவ MRI scan போ. எதாவது tumour சின்னதா தெரிஞ்சாலும் சர்ஜரி பண்ணி எடுத்துடலாம். Early detection will save your life." சீனியர் டாக்டர் அவளுக்கு தெரிந்ததையே மீண்டும் கூறினார்.

கிர்ர்ர்ர் எனும் சத்தத்துடன் மிஷின் தன் வேலை முடிந்ததென தெரிவித்தது. டெஸ்ட் ரிசல்ட் நெகடிவ் வாக இருந்ததைக் கண்டு மகிழ்ந்த யாதிரா அம்மகிழ்ச்சியில் தன் சோகத்தை மறந்தாள்.

லேப் லைட் ஐ அணைத்துவிட்டு வெளியே வந்தவள் யாரும் நடமாடா லேப் பில்டிங் இல் வீல்சேரை ஒருவர் தள்ளிக்கொண்டு செல்வது பீதியைத் தந்தது.

"ஹலோ.. யார் நீங்க?" யாதிரா முன்னால் சென்றுக்கொண்டிருந்தவரைக் கூப்பிட்டாள். மணி பத்து, பேயாக இருந்துடப்போகுது என சின்னதாய் ஒரு குரல் மண்டையில் ஒலித்தது.

நல்ல வேளை, திரும்பியது மேனேஜர். வீல்சேரில் கருப்புக் கண்ணாடியும், ஹூடியும்(hoodie) அணிந்திருந்த வருணைக் கண்டு யாதிரா கலகல வென சிரித்தாள்.

"நடிகன்னு சொல்லிட்டு இந்த சில்லி மாறுவேஷம் போட்டிருக்கீங்க. நான் பெருசாவுல எதிர்பார்த்தேன்."

யாதிராவைக் கண்டதும் வருணின் முகம் இரவில் பூக்கும் மல்லியாய் மலர்ந்தது.

"ரூம்லயே இருக்க போர் அடிச்சது அதான்," நீயில்லாமலும் போர் அடித்தது என எப்படி சொல்வான் வருண்.

"சர்ஜரி முடிஞ்சு 3 நாளு அதுக்குள்ள கிளம்பியாச்சு ம்ம்ஹூம். இப்போ ரூமுக்கு போறீங்களா இல்ல உங்க பேன்ஸ்(fans) கிட்ட சொல்லவா அப்புறம் எல்லா நர்ஸுகளும் உங்கள ரவுண்ட் கட்டிருவாங்க."

"என்னயா பார்த்துட்டு இருக்க. தள்ளு ரூமுக்கு." வருண் மேனேஜரிடம் ஆர்டர் போட்டான்.

சில நிமிடங்கள் கழித்து தன் வேலைகள் குறைந்ததும் வருணின் அறைக்கு வந்தாள் யாதிரா.

"எப்படி இருக்கீங்க" என ஒற்றைக் கேள்வியில் நேரத்தை ஒதுக்கி எல்லாவற்றையும் கேட்கபவளாக மாறிடுவாள் யாதிரா. பேனாவை கீழே வைத்துவிட்டு, ரிப்போர்ட் ஐ மூடிவிட்டு சற்று முன்னாடி சாய்ந்து எத்தனை நிமிடங்களாயினும் அசராது முகத்தை மட்டும் கவனிப்பாள் அவள். ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பாள், அவ்வார்த்தை சொல்லாக் காயங்களையும் கேட்பாள். வருணும் அக்கேள்விக்காக தான் காத்திருந்தான்.

"எப்படி இருக்கீங்க? எதாவது கேட்கனும்னா கவலைன்னா சொல்லுங்க, நான் இருக்கேன்

"இது நீங்க தானே?" வருண் போனை நீட்டினான். யாதிரா யாதிராவைப் பார்த்து சிரித்தாள்.

***Calibration is not done with your own DNA. Machine manufacturer provides already calibrated sample to run on the machine. This part has been added for story purposes.****

Insulin is one of the most wonderful discoveries. ஆயிரம் கும்பிடு போட்டாலும் தகும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro