Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

யாதிரா -2

வருண் அன்று முழுக்க கண் திறக்கவில்லை. காலை 8 மணிக்கு துவங்கிய ஷிப்ட் வேலை இரவு 8 மணிக்கு முடிந்தது. டீனிடம் வருணின் நிலைமையை சொல்லலாம் என நினைத்தால் அந்த மனுஷன் 6 மணிக்கே வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆம், இத்தனை வருடங்கள் இரவு பகலாய் உழைத்தவர் இப்பொழுது தான் ஓய்வை சுவைக்க ஆரம்பித்திருந்தார், இனித்தது.

பன்னிரண்டு மணி நேரமாய் தன் உயிரைக் காத்த மாஸ்க், face shield, gloves என அனைத்தையும் கழட்டி பிரத்தியேக குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு ஓலா ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவள் அக்குளிர் காற்றிலும் மூடிய பனியிலும் துயிலிலும் விழித்திருக்க சிரமப்பட்டாள். ஆனால் பெண் ஆகிற்றே, தன் பாதுகாப்பை ஒரு நொடியும் கைவிட முடியாததால் விழித்திருக்க போனை நோண்டினாள். அம்மா அப்பாவிடம் வாய்ஸ் நோட் வந்திருந்தது. ட்விட்டரில் கோரோனா தடுப்பூசி பற்றிய நம்பகத்தன்மையான சில ட்வீட்ஸ் Retweet செய்தாள். தடுப்பூசி போட்டால் ஜுரம் வரும், காய்ச்சல் வரும் என ஒருவன் பினாத்திக்கொண்டிருக்க அதற்கு தெளிவாய் சிலருக்கு மட்டுமே நிகழும் rare adverse reactions பற்றி ட்வீட் செய்தாள். வருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதும் 'hot news' ஆக ட்விட்டரில் வந்தது.

ஆட்டோ வீட்டின் முன்னால் நின்றது. வீட்டின் கதவு இவளின் வருகைக்காக திறந்திருந்தது. உள்ளே வந்ததுமே மிகக் கவனமாக எதையும் தொடாமல் குளிக்க சென்றாள் யாதிரா. ஈரக் கூந்தலை டவலில் மடித்துகொண்டு வெளியே வர அங்கே அம்மா இட்லியை தட்டில் பரப்பிக்கொண்டிருந்தாள்.

"ஏம்மா.. பாலிவூட் ஆக்டர் வருணை உங்க ஹாஸ்பத்திரில சேர்துக்காங்களாமே?" அப்பா ஹாலிலிருந்து குரல் கொடுத்தார்.

"அதான் நியூஸ்ல பார்த்துட்டீங்கள்ள, மற என்ன தெரிஞ்சுட்டே கேள்வி?" அம்மா யாதிராவின் இடத்தில் பதில் அளித்தார்.

"அதான, நல்லா கேளு மா. பேஷண்ட் பத்தி நான் ஒன்னுமே பேச மாட்டேன் நு தெரிஞ்சும் கேட்குறாரு."

"சும்மா டெஸ்டிங்" அப்பா சிரித்தார். மூன்று மணிக்கு சாப்பிட்ட ஆறிப்போன புளியோதரை முன் அமிர்தமாய் இருந்தது தேங்காய் சட்னி கடலில் மிதந்த இட்லி.

"எதுக்கும் முன்னாடியே சொல்லிடுறேன். என் மக தான் வருணுக்கு வைத்தியம் பார்த்தா நு உன்னோட யூடியூப்(YouTube) சானல்ல போட்டுராத எனக்கு வேலை போயிடும். அப்புறம் உனக்கு போட்டியா நா ஒரு சானல் தொடங்கிடுவேன்." யாதிரா நக்கலாய் சொன்னாலும் அதில் முழுக்க உண்மை இருந்தது, வேலை போகிடும் பகுதியில்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதா., அம்மா முறைத்தார்.

"அப்பா, நீங்களும் பார்த்துக்குங்க."

" இவ உளறிட்டா எடிட்டிங் பண்ணும்போது கட் பண்ணிடுறேன்."

அம்மாவும் அப்பாவும் ரிட்டையர்ட் ஆகி பென்ஷன் சம்பளத்தில் அமைதியாய் வாழ்பவர்கள். அதிக நேரம் வெட்டியாய் இருப்பதால் யூடியூப் சானல் ஒன்றை இரு வருடமாய் நடத்திகொண்டிருந்தார்கள். யூடியூப் பாட்டி அண்ட் தாத்தா என காலனியே இவர்களுக்கு பட்டைப் பெயர் வைத்துவிட்டது. ஆயினும் சமையல், கடற்கரையில் நடை, அப்பாவின் பெயிண்டிங், அவ்வப்போது மற்ற தாத்தா பாட்டிகளுடன் மீட் அப் என இளகுவாய் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது ஒரு கவலையைத் தவிர. ஆம், யாதிராவின் திருமணம். அடுத்த மாதம் 2021 வந்தால் ஆதிராவுக்கு 29 வயது.

(முன்னாடி சொன்னேனே அத்தை மகன் கதை அத இப்ப சொல்றேன்)

யாதிராவின் அத்தை மகன், ஆதவனும் ஒரு மருத்துவன். ஆதிரா இறுதியாண்டும் ஆதவன் House officerஆண்டிலும் இருந்தான் அதாவது படித்து முடித்து லைசன்ஸ் வாங்க வேலைப்பார்க்கும் முதல் முக்கிய வருடம். யாதிராவின் பெற்றோர் மாப்பிள்ளை எடுப்பதைப் பற்றி ஆதவனின் பெற்றோரிடம் பேச்சை எடுத்தபோது ஆதவனின் பெற்றோர் மறுத்துவிட்டனர், "உங்க மக வெறும் டாக்டர். உங்க குடும்பத்துனால பெருசா எதுவும் பண்ண முடியாது. ஆனா இன்னொருத்தவங்க இவன மாப்பிள்ளைக் கேட்டு வந்துருக்காங்க. அவங்க இவன அமெரிக்கால Specialist படிப்பு படிக்க வைக்க எல்லா ஏற்பாடும் செலவும் ஏத்துகுறேன்னு சொன்னாங்க. நீங்களே கிளம்பிடுங்க."

அவர்களுக்கு சொந்தத்தை விட பணம் பெரிதாய் தெரிய அங்கிருந்து நகர்ந்துவிட்டனர் யாதிராவின் பெற்றோர். ஆனால் அன்று ஒரு தீ எரிய ஆரம்பித்தது. ஆதவனை விட தன் மகள் யாதிரா பெரிய டாக்டர் ஆகி அவர்களின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என அப்பா தீர்மானம் எடுத்தார். "எது வேணும்னாலும் செய்யு, என்ன வேணும்னாலும் படி. ஆனா ஆதவனே உன் கிட்ட வந்து இந்த சர்ஜரி எப்படி பண்ணனும்னு கை கட்டி நிக்கனும்," அப்பா சொன்னது.

இதற்காகவே காத்திருந்தவளாய் அம்மா அப்பாவின் சம்மதத்துடன் மிகவும் கடினமான, trauma, accident கேஸ் அதிகமாய் பார்க்கும் அதுவும் ஷிப்ட் வேலையாகிய emergency medicineஐ தெரிவு செய்து குறுகிய காலத்தில் தன் திறமையை நிரூபித்திருத்தாள் யாதிரா.  பெண்ணின் வளர்ச்சிக்கு ஆயிரம் முட்டுக்கட்டை போடுபவர்கள் மரியாதை பிரச்சனை என்றதும் எதற்கும் மறுப்பு தெரிவிக்காது அவளை அவள் பாட்டில் விட்டனர். மேற்படிப்பும் வேலையுமாய் சுழன்றவளின் கனவை நிறுத்தி அவளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க அவளின் பெற்றோருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. தான் ஏற்றிய தீ தானே தன் மகளின் திருமண வாழ்க்கை சந்தர்பங்களை எரித்துகொண்டிருந்தது.

சாப்பிட்டு முடித்து அசதியில் உறங்கினாள் யாதிரா அடுத்த ஷிப்ட் டாக்டர்கள் வருணைக் கண்டு அவர்களின் முகம் அடையும் அதிர்ச்சியை கற்பனை செய்தவளாய்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro