யாதிரா - 10
வருண் மும்பை திரும்பி ஒரு மாதமாகி இருந்தது. பிஸியோ சென்றான். பிஸியோ தாண்டி ஜிம் இல் வொர்ட் அவுட் செய்தான். விட்ட இடத்தைப் பிடிக்க வெறியோடு வேலை செய்தான் வருண். ஓரளவுக்கு உடம்பு தேறியதும் ஒப்பந்தம் போட்ட படங்களில் ஒன்றை முடித்து தருவதாக வாக்குறுதி அளித்து கெஞ்சி மீண்டும் ஷூட்டிங் இடத்தில் கால் வைத்தான். இருட்டை கிழித்துக்கொண்டு சூரியன் ஒளிரத் தொடங்கியது. அவனின் உலகமும் பிரகாசமடைய தொடங்கியது.
கேமரா முன் நின்றதும் வெற்றிக் கிட்டுமா என்ற சந்தேகம் மறைந்து புது உற்சாகம் பூத்தது. தனக்கான இடத்தில், பழக்கப்பட்ட இடத்தில், தன் திறமைக்கு அங்கீகாரம் வழங்கப்படும் இடத்தில் மீண்டும் நிற்பது ஒரு வித போதை. நம்மை யாராலும் அசைக்கமுடியாதென்ற போதை.
திறமையுடன் கடின உழைப்பும் உள்ளவரென பெயர் எடுத்த வருண் தன் பழைய பெயரைக் காப்பாற்றுவதில் முனைப்பாய் இருந்தான். இரண்டு ஹீரோ படம் அதில் இவன் தான் பெரிய ஹீரோ. ஒரே ஸ்டார் வருவதைவிட இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகம் என்பதால் இதை ஒரு முறை முயற்சி செய்யலாமென நினைத்தான். இநநிலமையில் வெற்றி முக்கியம், அதை இரண்டாய் பிரித்தாலும் பரவாயில்லை.
பாதி பட ஷூட்டிங் முடிந்தது. திடீரென அன்று வருணின் வயிற்றுப் பகுதி ஊசி குத்துவது போல் வலிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நடித்தான் பின் அம்மிகப் பெரிய நடிகனால் கூட வலியை மறைக்க முடியவில்லை. பிரேக் கேட்டுவிட்டு காரவேன் உள் நுழைந்தது தான் தாமதம் வலியின் தாக்கத்தில் டபாரென மயங்கி தரையில் விழுந்தான். நல்ல வேளை அங்கு மேனேஜர் இருந்தார். யாருக்கும் தெரியாமல் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பேக்-அப் சொல்லிவிட்டார்.
சுமூகமாக போய் கொண்டிருந்த பயணம் இப்படி மீண்டும் தடங்கலாகும் என வருண் நினைக்கவில்லை. இனிமேல் மூன்று நாட்களுக்கு பெட் ரெஸ்ட் எடுக்குமாறும் அதற்கு பின் நடித்தாலும் இந்த அளவுக்கு உடம்பை வருத்தக்கூடாது எனவும் மருத்துவர் கண்டிப்பாக சொல்லிவிட்டார். அவரின் பேச்சை மதிக்காமல் நடிக்க வருணுக்கு வெறியாக இருந்தாலும் அவனுக்கே தெரிந்தது அவன் உடம்பு ஒத்துழைக்காது என. நொறுங்கிய கனவை சேகரித்துக்கொண்ட மனம் அதை ஒட்ட வைக்க யாதிராவைத் தேடியது. அவளைத் தொடர்பு கொள்ள வழி தெரியவில்லை. தன் போன் நம்பரை வாரி வழங்கிய டீன் தன் ஊழியர் அதுவும் பெண் டாக்டர் என்றதும் முடியாதென சொல்லிவிட்டார் அன்று ப்ளைட் ஏறும்போதே. இருந்தும் மனம் அவளின் குரலுக்காக ஏங்கியது.
போன் செய்தான் ஆல் வெல் மருத்துவமனையின் 24 மணி நேர எமெர்ஜன்சி வார்ட் கு.
"யாதிரா உனக்கு போன்!"
மருந்து மாத்திரைகளை தேடிக்கொண்டிருந்தவள் ஒரு கணம் திகைத்தாள், "ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணி நம்மள கேட்குறாங்க? பழைய பேஷண்ட் ஆ?"
"ஹலோ டாக்டர் யாதிரா ஹியர்."
"டாக்டர், நான் திரும்ப ரொம்ப டிரை பண்றேன். ஆனா விதி விளையாடுது. என்னால இனிமே நடிக்கவே முடியாதா?"
"வருண்?"
"யா, வருண் தான்."
யாதிரா தன் குரலைத் தாழ்த்தினாள். வருண் இங்கு இவளைத் தேடி போன் செய்வது மற்றவர்களுக்கு தெரிந்தால் இருவருக்கும் நல்லதல்ல மற்றும் அனாவசிய கவனமும் வரும்.
"எப்படி இருக்கீங்க வருண்?"
"உன்னால முடியும்னு சொன்னீங்களே... நான் டிரை பண்றேன் ஆனா ஒவ்வொரு முயற்சியும் வீணாகுது. இப்ப என்ன பண்றதுன்னே தெரியல," குரலை கண்ணீர் அடைத்தது.
"வருண், திரும்ப வர்ரது சுலபம் இல்ல. It is difficult. ஆனா இந்த புயலைத் தாண்டினால் தான் கரை சேர முடியும் வருண்."
"தெரியும் டாக்டர் ஆனா நான் தொடுற எல்லாமே வீணாகுது."
"வருண் அப்படி நினைக்காதீங்க. வருண் psychologist பார்க்குறீங்களா? பல நேரம் ரிகவரிக்கு அதுவும் முக்கியம்."
"இல்ல பார்க்க விருப்பம் இல்ல."
வருணின் பிடிவாதம் யாதிராவின் பொறுமைக்கு சவால்விட்டது. Psychologist பார்க்க விரும்பாதவரை கட்டாயப்படுத்தி போக வைப்பது எதற்கும் உதவாது. அவர் தானாகவே முன் வந்தால் தான் counselling பயனாக இருக்கும். ஆனால் வருணுக்கு counselling கொடுக்க யாதிரா psychologist அல்லவே. ஆனால் இப்பொழுது அடிப்பட்ட மனிதனுக்கு பலம் கொடுக்க வேண்டும்.
"வருண், I know it is hard. We will take one day at a time. நான் இருக்கேன்."
வருண் மறுமுனையில் மூக்கை உறிந்தான். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியதும் போன் செய்யுமாறு யாதிரா சொல்லிவிட்டு போனை வைத்தாள். அங்கு மருந்துக்காக ஓர் உயிர் காத்திருக்க போனில் இன்னொரு உயிர் காத்திருந்தது.
மூன்று நாட்கள் கழித்து வருண் ஆல் வெல் கு போன் செய்தான்.
"வீட்டுக்கு வந்துட்டேன் டாக்டர்."
"எப்படி இருக்கீங்க வருண்?"
"பாதில விட்ட படத்தை பத்தி தான் பயந்துட்டு இருக்கேன். துரோகம் பண்ணிட்டோமோ நு தோனுது. 30 நாள்ள முடிச்சு தர்ரேன்னு சொல்லி தான் இந்த புது இயக்குனரின் படத்தில் நடித்தேன். இப்ப என்னை எல்லாரும் வெறுப்பாங்கல்ல?"
"வருண், மேனேஜர், தயாரிப்பாளர், டைரக்டர் நு மூனு பேரையும் கூப்டு வச்சு பேசுங்க. மன்னிப்புக் கேட்பதும் விட்டுக்கொடுப்பதும் தப்பில்ல. அப்புறம் இன்னைக்கு வீல்சேர்லயாவது வாக்கிங் போங்க."
ஐந்து நிமிடங்களுக்கு மேல் யாதிரா பேசுவதில்லை ஆயினும் அன்பாகத் தொடங்கி கடைசியில் நெற்றியில் அடித்தாற்போல் பேசி முடிப்பாள். அவளுடைய பரபரப்பான வேலையும் பேஷண்ட் உடன் ஒரு வித தூரத்தில் நிற்கும் அவளின் கொள்கையும் காரணம்.
யாதிரா சொன்னது சரியாக தோன்றியது. உடனே மூவரையும் கூப்பிட்டு மீட்டிங் போட்டான் வருண். முதலில் கத்தினார்கள், என்ன இப்படி சொல்றீங்க, ஹெல்த் முடியலைன்னா மற எதுக்கு சைன் பண்ணீங்க. மன்னிப்புக் கேட்பது தவறல்ல, யாதிராவின் குரல் ஒலிக்க வருண் மன்னிப்புக் கேட்டான். கோபத்தில் தயாரிப்பாளர் இவன் தொடர்ந்து பேசுவதைக் கேட்க பொறுமையின்றி எழுந்து சென்றார். சொந்த பணத்தில் படம் எடுப்பவன் கோபித்துக்கொள்ளலாம்.
புது முக டைரக்டர் நொந்துபோயிருந்தார்.
"சிகண்ட்(second) ஹீரோவுக்கு என்னோட ஸ்கிரீன் டைம் ஐ கொடுங்க. என்னோட கதாபாத்திரத்த எப்படியாவது கொன்னுடுங்க, ஒரு த்ரில்லர் மாதிரி கொண்டு போங்க. தயாரிப்பாளருக்காக உங்க ஒரிஜினல் கதைக்கு நிறைய மாற்றங்கள் பண்ணிருக்கீங்க. இப்போ இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு உங்களுக்குப் பிடித்த மாற்றங்களை செய்யுங்க. பாதி படம் பண்ணிட்டோம் ரிலீஸ் பண்ணால் தான் காசை மீட்க முடியுமென தயாரிப்பாளர் குறுக்கிட மாட்டார்." வருண் தனக்கு தோன்றியதை சொல்லி இயக்குனரின் மனதை தேற்றினான். அறிவொளி கிடைத்தது போல் இயக்குனர் நிமிர்ந்தார். உடனே வருணைக் கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். நன்றி சொல்லி உற்சாகத்தில் கிளம்பினார். தனது கஷ்டம் இன்னொருவருக்கு உதவியாய் அமைந்ததை எண்ணி சிரித்தான் வருண்.
டாக்டர் வாக்கிங் போக சொன்னது நியாபகம் வர ஆனால் வீல்சேரில் செல்வது அவமானமாய் தோன்ற அதைக் கைவிட்டுவிட்டு தூங்கினான் வருண்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro