Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7.அவனுடன்

"டாக்டர்!!"
அவன் அதிர, அவள் கைகாட்டித் தடுத்தாள்.

"அட, இது temporary state தான். நிறைய treatment options இருக்கு. அதைப் பத்தி தான் நான் பேச வந்தது.. பதற வேணாம்."

"ஓ..." என நிம்மதிப் பெருமூச்சு விட்டவனைப் பார்த்து லேசாக சிரித்தாள் அவள்.

"என்னனென்ன ட்ரீட்மெண்ட்ஸ்?"

"ம்.. Arthroplasty செய்யலாம், ligament replacement surgery பண்ணலாம், artificial ligaments பொருத்தலாம், இல்லன்னா, அதிகம் அசையத் தேவைகள் இல்லைன்னு நினைச்சா சிம்பிளா physiotherapy மட்டுமே பண்ணலாம். எங்க ஹாஸ்பிடல்ல எல்லா ஆப்ஷன்சுமே இருக்கு. நீங்க டிசைட் பண்ணா போதும்."

"அ.. அது.. நீங்களே சொல்லுங்க, என்ன பண்ணலாம்?"

"That's not my ethics. I can give you options. But choices are yours. நான் ஒவ்வொரு ப்ரொசீஜரையும் விளக்கமா சொல்றேன். நீங்க கேட்ட பிறகு முடிவெடுக்கலாம். கதை கேட்கறது உங்களுக்கு புதுசு இல்லையே!"

சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

"So you know me! And you pretended that you didn't!!?"

அவன் மேலும் ஏதோ கத்த முயன்றான். ஆனால், அவள் பார்வையே அவனை அமைதியாக்கியது.

"Don't have ideas. உங்களை இங்க கொண்டு வரதுக்கு முன்னாடி உங்க மேனேஜர் முழிச்சிட்டார். அவரைப் பார்க்க போனேன். அவர்தான் சொன்னார், that.. you are some actor"

அந்த 'some actor' அவனது தன்மானத்தைத் தட்டியது.

"Some actor? நான் ஒரு National award winning actor. தமிழ்நாட்டோட most favourite Screen persona. இந்த வருஷத்தோட Most successful fresh face of Kollywood--"

"Stop this nonsense!"
பொறுமையிழந்து குரலை உயர்த்தினாள் அவள். செவிலியர்கள், உதவியாளர்கள் என, அவ்வறையில் நின்றிருந்த அனைவரும் ஒரு கணம் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

அவன் முகம் கோபத்தில் சிவந்தது. ஆனால் கொடுக்கப்பட்டிருந்த மயக்க மருந்தின் ஆற்றல் இப்போது விலகியதால் மீண்டும் காலில் சுள்ளென வலித்தது. முகம் லேசாக சுருங்கியது. ஆனாலும் கண்கள் கோபத்திலும் குரோதத்திலும் அவளைக் கீறின. அவளும் எரிச்சலாக நின்றாள்.

"Mister, I don't give a damn about whoever the hell you are. நீங்க யாரா வேணா இருந்துட்டுப் போங்க. இங்க, இந்த இடத்துல, எனக்கு நீங்க ஒரு பேஷண்ட். அவ்ளோதான்."

அத்தோடு அவள் எழுந்து சென்றுவிட, கோபத்தை தன் நாற்காலியின் மீது காட்டினான் அவன். அவனது பிடியில் அதன் கைப்பிடிகள் வளையாதது அதிசயம்தான்!

-----------

சங்கர் சுயநினைவு பெற்றதும் முதலில் தேடியது அவனைத் தான்.

"நிவீஷ்... நிவீஷ் சார்.."

ஒரு இளநிலை மருத்துவர் வந்து அவரை ஆசுவாசப்படுத்தினார்.

"டாக்டர், என்னோட வந்தாரே ஆக்டர் நிவீஷ். அவர் எப்படி இருக்கார்? நாங்க ஒரு ஃபங்ஷன் அட்டெண்ட் பண்ணணும்.. லேட்டாச்சு, நான் கிளம்பணும்!"

"அட, கொஞ்சம் பொறுங்க சார்.. அவருக்கு ஒண்ணும் ஆகல. He is safe. செக்-அப்புக்காக கூட்டிட்டுப் போயிருக்காங்க. உங்களுக்கும் ஒரு complete routine examination பண்ணணும். நான் போய் உங்க attending doctorஐ அழைச்சிட்டு வரேன் இருங்க.."

அவரது அழைப்பின்பேரில் செவிலியர் வந்து ப்ரகதியை அழைக்க, ப்ரகதி வந்து அவரை மேலோட்டமாகப் பரிசோதித்துவிட்டு, மற்ற பரிசோதனைகளைச் செய்யுமாறு கட்டளையிட்டாள். சங்கர் ப்ரகதியைப் பார்த்து வினவினார்.

"டாக்டர், என்னோட வந்தாரே நிவீஷ்.. அவருக்கு ஒண்ணும் ஆகலையே?"

"Nothing. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. அதிர்ச்சியால மயக்கம். அவ்ளோதான். எழுந்துட்டார். எழுந்ததும் விழுந்துட்டார். X-ray எடுக்கக் கூட்டிட்டுப் போயிருக்கோம். உங்களுக்கு எப்படி இருக்கு இப்போ?"

"பரவால்ல. எனக்கும் அதிர்ச்சியில தான் மயக்கம் வந்திடுச்சு. மத்தபடி ஒண்ணும் இல்ல. சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணினா பெட்டர்"

"Sure. Eveningக்குள்ள பாக்கலாம். உங்க ஃபேமிலிக்கு, இல்ல அவரோட ஃபேமிலிக்கு சொல்லணுமா?"

"தேவையில்லை. ஏற்கனவே நிறைய மீடியா தொல்லை. அப்றம் இதுவும் சேர்ந்து, 'அமெரிக்காவில் இருந்து நடிகர் நிவீஷின் பெற்றோர் வருகை. சாகப் போகிறாரா நிவீஷ்? இறந்துவிட்டாரா நடிகர் நிவீஷ்?' இப்படில்லாம் பேப்பர்ல நியூஸ் வரும்"

"என்னது? அந்த ஆள் நடிகரா?"

"ஆமா, உங்களுக்குத் தெரியாதா டாக்டர்? பட்டிதொட்டி எல்லாம் ஃபேமஸ் அவரு, அவரைத் தெரியாத--"

"ப்ச்.. போதும். இருந்தா என்ன? எனக்கு தெரியாது. சிஸ்டர்! இவரை மத்த செக்கப்புக்குக் கூட்டிட்டு போங்க"

----------

தன் அறைக்கு வந்தவள் தலையைப் பிடித்துக்கொண்டு தன் நாற்காலியில் அமர்ந்தாள். ஜன்னல் வழியாகக் காற்று வந்து அவள் முகத்தை வருடியது.

'சே... ஒரு நாளில் எத்தனை அலைச்சல்!? ஒன்றுமே இல்லாததுக்குப் போய் இவ்வளவு பரபரப்பு.. அவஸ்தை. புதன்கிழமையாம்... கேசுவாலிட்டிக்கு ஆளே வராதாம்! நேரம்!! நாளைக்கு லோகேஷ் டாக்டர் வரட்டும். நன்றாக வாங்கி விடுகிறேன்!'

"டாக்டர்...?"

தன் உதவியாளர் இருமுறை அழைத்ததும் தன்னிலை திரும்பினாள் அவள்.

"என்ன?"

"இன்னிக்கு பண்ணவேண்டிய சர்ஜரில ரெண்டு தான் முடிஞ்சிருக்கு மேடம். ஒண்ணு நீங்க பண்ணது, இன்னொன்னு டாக்டர் சேரன் பண்ணனினார். உங்க லிஸ்ட்ல இன்னும் ரெண்டு சர்ஜரி இருக்கு.."

"ம்..சரி, நீங்க அடுத்த பேஷண்ட்டை ப்ரெப் பண்ணி, ஆபரேஷன்க்கு ரெடி பண்ணிடுங்க, நம்ம OT no.1லயே வைங்க. அப்றம் லஞ்ச் முடிச்சு வேணா அடுத்த சர்ஜரிய பாத்துக்கலாம்"

"சரி மேடம்"

அவர் சென்றதும் அவள் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு நடந்தாள். மணி பன்னிரெண்டு ஆகியிருந்தது.

அரைமணி நேரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த அறுவை சிகிச்சை முடிந்ததென்றால் நேரத்துக்கு சாப்பிடலாம்... இல்லையென்றால் வழக்கம்போல தண்ணீர் குடித்தே உயிர்வாழ வேண்டும்.

அவளது அதிர்ஷ்டமும் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டது.

எதிர்பாரா விதமாய் அந்த நோயாளிக்கு சிகிச்சையின்போது இரத்தப் போக்கு அதிகமாக, அறுவை சிகிச்சை முடிவடைய ஒன்றரை மணி ஆனது. எப்படியோ போராடி எந்த சேதமும் இன்றி கச்சிதமாக சிகிச்சையை முடித்திருந்தாள் அவள். அந்த மகிழ்ச்சியில் பசி காணாமல் போனது.

அவள் சிகிச்சை அறையிலிருந்து, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஏப்ரனைக் கழற்றிவிட்டு வெளியே வந்த போது மணி இரண்டு. வேகமாக வந்து தனது கணினியின் மென்பொருள் பதிவேட்டில் தனது இருப்பைப் பதிவிட்டு உறுதிசெய்தாள். அவளது உதவியாளரை அழைக்க முயன்ற நேரத்தில், வேறொரு செவிலியர் அவள்முன் வந்து நின்றார்.

"டாக்டர், எமர்ஜென்சி யூனிட்ல உங்களைக் கூப்டாங்க.."

"வரேன் .. போங்க"

சற்றே சோர்வுடன் எழுந்து தரைத்தளம் சென்றாள் அவள்.

இளநிலை மருத்துவர் ஒருவர் சில தாள்களை அவளிடம் தந்து,
"சங்கரோட டிஸ்சார்ஜ் ஃபார்ம். எல்லா செக்கப்பும் பண்ணியாச்சு டாக்டர். எந்த பாதிப்பும் இல்லை. நீங்க ஒருதடவை பார்த்து சைன் போட்டுட்டீங்கனா டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்" என்றார்.

அவள் படிவத்தை வாங்கி அதைக் கவனமாகப் படித்துவிட்டு, அதில் கையெழுத்திட்டுத் தந்தாள்.

"மத்த procedure எல்லாம் நீங்களே பாத்துடுங்க. என்னைக் கூப்பிட வேணாம்"

"இல்லை மேடம்.. இன்னொரு விஷயம்..."

"ப்ச்.. இப்ப என்ன?"

"நிவீஷ்.
அவருக்கும் செக்கப் எல்லாம் பண்ணினோம். கார் விபத்து, Sudden impact அப்டின்றதால, கழுத்து எலும்பில mild whiplash injury. இப்ப எந்த complicationsசும் இல்ல...ஆனா பின்னாடி பிரச்சனை ஆகும்னு தோணுது. டீன் இப்பதான் வந்து பாத்துட்டுப் போனார்."

"சரி, அவர்கிட்ட சொன்னீங்களா?"

"டீன் தான் உங்க instructions கேட்டு அதுபடி செய்ய சொன்னார் டாக்டர்."

"பேஷண்ட் இப்ப எங்க?"

"Critical care வார்ட்ல தான் இருக்கார் மேடம்"

"Let's go see the patient."

அவரைப் பின்தொடர்ந்து மீண்டும் சிகிச்சை அறைக்குள் சென்றாள் ப்ரகதி. அதற்குள் சங்கரும் அங்கே வந்திருந்தார்.

நிவீஷ் அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro