Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

4.அவள் பார்க்க

அலமாரியில் தனது கைபேசி அடித்ததும் பார்வை திருப்பி அதை எடுத்து யாரென்று பார்த்தாள் அவள்.

லோகேஷ் டாக்டர். அதிகம் பரிச்சயமற்ற சக மருத்துவர்.

"ஹலோ, சொல்லுங்க டாக்டர் "

"ப்ரகதி, நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்...."

"என்ன ஹெல்ப்னு முதல்ல சொல்லுங்க"

"இன்னிக்கு எனக்கு Casualty duty மேடம். எங்க வீட்ல இன்னிக்கு ஒரு சின்ன ஃபங்ஷன். அதனால டீன்கிட்ட இன்ஃபார்ம் பண்ணாம லீவ் எடுத்துட்டேன்.."

"ஓ... இப்ப நான் டீன் கிட்ட அதை சொல்லணும். அதானே? "

"அதில்ல டாக்டர்... அதாவது.. நீங்க... அது.. எனக்காகக் கொஞ்சம் கவர் பண்றீங்களா? ப்ளீஸ் ப்ரகதி... இன்னிக்கு புதன்கிழமை தான? Casualty ஈயோட்டிட்டு தான் இருக்கும். யாருமே வர மாட்டாங்க.. நீங்க ஜஸ்ட் தலையை காட்டுனா போதும்."

"என்ன விளையாடறீங்களா? நான் எப்படி?"

அவள் டில்லியில் படித்தபோது கூடுதல் படிப்பாக "Emergency and Critical care" படித்ததை எண்ணி மனதுக்குள் நொந்துகொண்டாள்.

இவருக்கு அது தெரிஞ்சதால தானே இப்டிக் கேக்கறார்!

அவள் ஜன்னல் வழியே பார்த்தாள். அந்த ஆம்புலன்ஸ் அவர்கள் மருத்துவமனையை நோக்கி தான் விரைந்து கொண்டிருந்தது.

இன்னும் சில நிமிடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை என்று தெரிந்துவிடும். லோகேஷ் டாக்டருக்கு சீட்டு கிழிந்துவிடும்... ஏதோ பெரிய ஆள்தான் அடிபட்டிருப்பதுபோல் தெரிகிறது. கண்டிப்பாக டிவியில், பேப்பரில் நாளை செய்தி வந்துவிடும்..

"ப்ரகதி..ப்ளீஸ்..." ஃபோனில் அந்த மருத்துவர் கெஞ்ச, அவளுக்கும் பரிதாபம் வந்தது.

"சரி சார். நான் பாத்துக்கறேன்"

அவர் பலவாறாக நன்றி கூற, அதை நாசூக்காக மறுத்தபடி கைபேசியை அணைத்தாள் அவள்.

அவளது உதவியாளரை அழைத்தவள்,
"இன்னிக்கு பண்ண வேண்டிய எலக்டிவ் சர்ஜரி எல்லாத்தையும் reschedule பண்ணுங்க. வேற டாக்டர்ஸ் யாராவது ஃப்ரீயா இருந்தா அவங்களுக்கு குடுங்க. முக்கியமா, பேஷண்ட்டுக்கு அதை இன்ஃபர்ம் பண்ணிடுங்க"

அவள் மருத்துவமனையின் தரைத் தளத்துக்கு விரைந்தாள். அதற்குள் ஆம்புலன்ஸ் அங்கே வந்து நின்றிருந்தது.

அதனுள்ளிருந்து இரண்டு ஸ்ட்ரெட்சர்கள் மிக அவசரமாக உள்ளே கொண்டுவரப் பட்டன. ஒன்றில் நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதரும், இன்னொன்றில் இளம் வாலிபன் ஒருவனும் இருப்பதைக் கண்டாள் அவள்.

"என்ன நடந்தது?"

"கார் ஆக்ஸிடெண்ட் மேடம், சைதாப்பேட்டை பக்கத்துல."

"போலீஸ்க்கு சொல்லியாச்சா?"

"போலீஸ் மட்டுமில்லை... மொத்த மீடியாவும் இங்க தான் இருக்கு" வேறொரு குரலில் பதில் வர, அவள் திரும்பிப் பார்த்தால், அங்கே அவர்களது மருத்துவமனையின் தலைவர் (dean) நின்றிருந்தார்.

"மார்னிங், சார்"

மரியாதை நிமித்தமாக அனைவரும் தலைவணங்கினர்.

"அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்.. Now get these men into Emergency care. Pragathi, are you in charge now?"

ஒருகணம் தயங்கி, பின் ஆமாமென ஒத்துக்கொண்டு தலையாட்டினாள் அவளும்.

"Good! நீங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க. மீடியா பப்ளிக் எல்லாரையும் நான் பாத்துக்கறேன் "

ஸ்ட்ரெட்சர்களை இரு பணியாளர்கள் அறைக்குள் தள்ளிக்கொண்டு சென்றனர்.

"ஒரு நிமிஷம் சார்..." ப்ரகதி டீனை அழைத்தாள்.

"ம்..?" நடந்துகொண்டே அவர் கேட்டார்.

"யார் இது?"

அவர் சட்டென்று நின்றார்.

"என்ன?"

"இல்லை... VIPனு தெரியுது.. ஆனா ஆள் யாருன்னு தெரியல சார்" அவள் சங்கர் இருந்த ஸ்ட்ரெட்சரைப் பார்த்தவாறு சொன்னாள்.

அவரது முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது. ஆனால் ஒரு நொடியில் அது மறைந்து சின்னதொரு சிரிப்பு மட்டும் நின்றது.

"நாளைக்குப் பேப்பர் பாருங்க...தெரியும்"

அவள் சற்றே திகைத்தாலும் அதிகமாக யோசிக்கவில்லை.  தாமதிக்காமல், சுகாதார கவசங்களை மாட்டிக்கொண்டு அவசர சிகிச்சை அறைக்குச் சென்றாள்.

"Primary examination பண்ணீங்களா? Triage? ரிப்போர்ட் எங்க?"

ஒரு ஜூனியர் டாக்டர் பணிவாக அவளிடம் ஒரு தாளைத் தந்தார்.

'Casualty 1:
Estimated age - 25
Vitals - hypotensive
Major injuries- blunt trauma
                             Bruises
                             Syncope by shock
                             No  Susp. internal haemorrhage
Serious complications - nil
External bleeding - epistaxis
Time of accident - 30 mins ago

Casualty 2:
Estimated age - 45
Vitals - abnormal (bradycardia)
Major injuries- blunt trauma
Serious complications - nil
External bleeding - nil
Time of accident -30 mins ago

முழுவதுமாகப் படித்துப் பார்த்தாள் அவள். அந்த இள மருத்துவரும் தனக்குத் தரப்பட்ட தகவல்களை சொன்னார்.

"கார் மரத்துல மோதி ஆக்சிடெண்ட் ஆச்சுன்னு கூட்டிட்டு வந்தவங்க சொல்றாங்க மேடம். ஏர்பேக் ஓப்பன் ஆனதால, டிரைவர் சீட் அண்ட் பக்கத்து சீட் ஆளுங்களுக்கு அடி இல்ல. ஆனா பின்சீட்டுல இருந்தவருக்கு தான் தலைலயும், கால் மூட்டுலயும் காயம். மூக்குல இருந்து ப்ளீட். ஆள் மயக்கமாகி எந்திரிக்கவே இல்லை."

"BP நார்மலா?"

"இல்ல, கம்மிதான் மேம். 90/60. சலைன் போட்டுருக்கோம். Nose packing பண்ணியிருக்கோம். இரத்தம் இப்ப நின்னுடுச்சு."

"சரி, வேற என்ன?"

"Pupils responsive. Reflexes positive."

"ஓகே.. எந்த சீரியஸான பிரச்சனையும் இல்ல.. அப்றம் ஏன் அவ்வளவு அவசரமா critical careக்கு கூட்டிட்டு வந்தீங்க?"

"மேடம்... அது... வந்து... இது கொஞ்சம் high-end case. வி ஐ பி.  நாம சாதாரணமா விட முடியாது... மீடியா எல்லாம் இருக்கு.."

"அட! அதுக்குன்னு, இல்லாத பிரச்சனைக்கு ட்ரீட்மெண்ட் குடுப்போமா? என்னன்னு குடுக்கறது?"

"அது...."

"See, I'm in charge today. I tell what to do and what not to do. அனாவசியமான ட்ரீட்மெண்ட்ஸ் தேவையில்ல. ரெண்டு பேருக்கும் ட்ரிப்ஸ் போட்டிருக்குல்ல? அந்த nosebleed-ஐயும் கன்ட்ரோல் பண்ணியாச்சு.  இன்னும் அஞ்சு நிமிஷத்துல முதல் ஆள் எழுந்துருவான். ஒரு full body medical check up, Xray, CT Brain, electrolytes  எல்லாம் பாத்துடுங்க. இரண்டாவது ஆளுக்கு ஒரு para injection குடுங்க. Stabilze ஆனதும் அப்சர்வேஷன்ல வையுங்க. நிஜமாவே அவசர ட்ரீட்மெண்ட் தேவைப்படற பேஷண்ட்களை கவனியுங்க."

"ஓகே மேடம். அப்றம்..."

"நான் இன்னும் பத்து நிமிஷத்தில வர்றேன். அதுக்குள்ள எதாவது complication வந்தா மட்டும் கூப்பிடுங்க. வைட்டல்ஸ் பாத்துட்டே இருங்க."

அவரை அனுப்பிவிட்டு அவசரமாக முன்னறைக்கு வந்தவள், மருத்துவர் பணி குறிப்பேடை எடுத்து தன் பெயரை அவசர சிகிச்சை ட்யூட்டியில் பதிவிட்டாள். அதற்குள் விபத்துப் பதிவேட்டை ஒரு செவிலியர் எடுத்துவர, அதையும் பார்வையிட்டுப் பின் கையெழுத்திட்டாள்.

"அவங்க ஃபேமிலிக்கு இன்ஃபர்ம் பண்ணிட்டீங்களா?"

"பண்ண முடில மேடம். அவங்களை இங்க சேர்த்த ட்ரைவர் எங்கயோ கிளம்பிப் போயிட்டான். திரும்ப வரல. அவங்க ஃபோன் லாக் ஆயிருக்கு"

"ப்ச்... எமர்ஜென்சி கான்டாக்ட்ஸ் யாரும் இல்லையா சிஸ்டர்?"

"மேடம்... அது... எதோ ஃபாரின் மாடல் ஃபோன் ஒண்ணு. அதை சுத்தமா ஒண்ணுமே பண்ண முடியல. இன்னொன்னுல எந்த எமர்ஜென்சி கான்டாக்ட்டும் இல்ல"

"ஓகே... Leave it. அவங்களே கொஞ்ச நேரத்தில எழுந்திருவாங்க"

அவள் வெளியே வந்து பார்த்தபோது கூட்டம் பயங்கரமாகக் கூடியிருந்தது. டீன் மேத்தா முன் இருபது கேமராக்களும் மைக்குகளும் இருந்தன. அவர் கோபமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பிரபல நாளிதழ்கள் முதல் மஞ்சள் பத்திரிக்கைகள் வரை அனைத்துமே அங்கே குவிந்திருந்தன. செக்யூரிட்டி ஊழியர்கள் இருவர் பொதுமக்களை தடுத்துத் தள்ளியவாறிருந்தனர்.

அவள் ஒரு பெருமூச்சு விட்டபடி மீண்டும் உள்ளே வந்தாள். ஜூனியர் மருத்துவர் இவளிடம் வந்தார்.

"டாக்டர்... பேஷண்ட் எழுந்துட்டார். உங்களைப் பார்க்கணும்னு சொல்லறார்."

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro