Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

19.அவள் மனம்

சங்கர் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தவன் அவர்புறம் திரும்பினான்.

"என்னாச்சு சங்கர்? அப்படிப் பாக்கறீங்க?"

"இல்ல... எப்போதும் அந்த டாக்டர் கிட்ட சண்டை போட்டுட்டே இருப்பீங்க... இன்னிக்கு என்னடான்னா அவங்க ஃப்ரெண்ட் கூட செல்ஃபி எடுத்துட்டு அவங்களுக்காக செய்றேன்னு சொல்றீங்க... அவங்க கண்டுக்காமப் போறதப் பார்த்து சிரிக்கறீங்க... என்னவோ ஆயிடுச்சு சார் உங்களுக்கு!"

"ஹாஹாஹா... அவங்க ஒண்ணும் என் பரம விரோதி இல்லையே சங்கர்.. நான் அவங்க கூட நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கணும்னு தான் ஆசைப்படறேன்."

"அதுனால தான் அவங்களை டீன்கிட்ட மாட்டி விட்டீங்களா, மீடியாவுல சிக்க வெச்சீங்களா? ஃப்ரெண்டா இருக்கணும்னு சொல்லிட்டு எப்போதும் தகராறா தானே பேசுவீங்க..?"

"அவங்க பேசினா தானே நான் திருப்பிப் பேசறேன்? என் ஆட்டிட்யூட் அப்டிதான் சங்கர். கண்ணாடி மாதிரி. சிரிச்சா சிரிப்பேன், முறைச்சா முறைப்பேன்"

"அதெல்லாம் சரி சார்... சிரிச்சா தானே சிரிக்கணும், நீங்க சும்மாவே சிரிக்கறீங்களே?"

"சும்மா எங்கே சிரிச்சேன்.. எல்லாரும் தானே சிரிச்சுப் பேசிட்டு இருந்தோம்?"

"அவங்க உங்ககிட்டப் பேசவே இல்லையே சார்.." அவர் விடாமல் கேட்கவும் அவனுக்கு எரிச்சல் மூண்டது.

"இப்ப என்ன அதுக்கு? சும்மா சிரிக்க வேணாம்னா காசு வாங்கிட்டு சிரிக்கவா? அத விடுங்க, நான் கேட்டது என்னாச்சு? வர சொல்லீட்டிங்களா?"

"சார்...அது..டீன்கிட்ட பேசிட்டு தான் எதுவா இருந்தாலும்..."

"ம்... நான் சொன்னதை இன்னும் செய்யல... ஆனா இங்க நின்னு கதை பேசிட்டு இருக்கீங்க.. போங்க, சொன்னதை செய்யுங்க சங்கர்"

"சரி சார்" என்றவாறு அவர் கதவை நோக்கி நடந்தார்.

"பாயிண்ட் கிடைக்கலன்னு இப்டி ப்ளேட்ட மாத்த வேண்டியது" என அவர் முணுமுணுத்தது அவன் காதையும் எட்டியது. கதவை முறைத்து உதட்டை சுழித்தான் அவன்.

அதன்பின் தன் கைபேசியில் லயித்தவன் இரவு உணவுக்கு மட்டுமே வாயைத் திறந்தான்.

மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடின.

'எப்போதும் இருக்கும் நிவீஷ் ஏன் இப்போது இல்லை... ஏன் ஒரு மருத்துவரை, நான் பழி வாங்க நினைத்த ஒரு பெண் மருத்துவரை, நண்பர்கள் ஆக்கிக் கொள்ள நினைக்கிறேன்?  அவளை சந்தோஷமாக பார்க்க வேண்டும் என நான் ஏன் யோசிக்கிறேன்? எப்போதிருந்து எனக்கு அவளைப் பிடித்தது? பத்திரிக்கையாளர்களிடம் பேசியதில் இருந்தா? அவள் என்னை விட்டுக் கொடுக்காமல் ஏன் பேசினாள் காலையில்? அவளுக்கும் என்மீது ஏதாவது...

அட, நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்? ஒரு டாக்டரை நண்பராக்க எண்ணுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? ஏன், நான் அவளோடு ஒரு நல்ல உறவுப்பாலம் அமைக்கக் கூடாதா? நாளை பின்னர் தேவைப்படும் அல்லவா?

சேச்சே.. அதற்காகவா அவளோடு பேசத் துடிக்கிறோம்? அவளுக்கும் எனக்கும் ஏதோ பிணைப்பு இருப்பதுபோல் தோன்றுகிறது... கண்களில் திமிர், நடையில் மிடுக்கு, பேச்சில் அலட்சியம், செயலில் சுத்தம்... இதெல்லாம் என்னைப் பற்றிப் பிறர் கூறுவதுதானே... அவளுக்கும் இதெல்லாம் எப்படி அழகாய்ப் பொருந்துகிறது.. எனவே அவளில் என்னைப் பார்க்கிறேனா..?'

யோசனையாக இருந்தவன் எப்போது உறங்கிப் போனான் என்று தெரியவில்லை. சங்கர் அவனறைக்கு வரும்போது, புருவங்கள் கசங்கி, உதடு சுழித்து, ஏதோ பலத்த சந்தேகம் கொண்டவன்போல் தூங்கிக் கொண்டிருந்தான் அவன். கைபேசி அவனது சரிந்த கையில் சுகமாய் அடங்கியிருந்தது.

அவனைப் பார்த்துப் பெருமூச்செரிந்துவிட்டு, எதிரே இருந்த கட்டிலில் அவர் படுத்துக் கொண்டார்.

__________________________________


காலை இயல்பாக விடிய, மருத்துவமனையும் மெல்ல எழும்பத் தொடங்கியது. அவனது அறையை ஊழியர்கள் இருவர் சுத்தப் படுத்திவிட்டுச் சென்றனர். சத்தத்தில் எழுந்தவன் அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான்.

அவனுக்கு வேண்டியது நடந்திருந்தது. சங்கர் தன் வேலையைக் கச்சிதமாக செய்திருப்பதைக் கண்டு புன்னகைத்தான் அவன்.

அவரிடம் நன்றி சொல்லலாம் என அவரைத் தேடினான். ஆனால் அறையில் அவர் இல்லாமல் போகவே, பிறகு பார்க்கலாம் என்று மெதுவாக எழுந்து தத்தித் தத்தி நடந்து குளியலறைக்குள் நுழைந்து பல்துலக்கத் தொடங்கினான். வெளியே அவரது குரல் கேட்கவும், அவசரமாகத் தன் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தான்.

"நான் கேட்டபடி செஞ்சிட்டீங்க! சூப்பர் சங்கர்... தேங்க்ஸ்!" என்றவாறு அவன் நுழைய, அவருடன் மேத்தாவும் நிற்பதைக் கண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

"குட் மார்னிங் டீன் சார்.. நான் உங்க கிட்ட கேட்டுட்டுத் தான் எடுத்துட்டு வர சொன்னேன்.. சங்கர் சொல்லியிருப்பார்னு நெனைக்கறேன்..."

"ம்..நேத்தே சொன்னார்...அதான் பாத்துட்டுப் போலான்னு வந்தேன். Good work Niveesh... I'm really impressed that you do all these"

"Part of the profession, sir"

"Keep it up.. ஆனா, ப்ரகதி கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கங்க... you know, whether you can do it or not. "

"நான் பாத்துக்கறேன் சார்."

"சரி, நான் வரேன். டேக் கேர்"

மணியைப் பார்த்தபோது எட்டாகியிருந்தது. மெல்லிய புன்னகை அவன் முகத்தில் பரவியது.

அவள் வரும் நேரம்தான்...

சரியாக இருபது நிமிடங்கள் கழித்து அவள் வழக்கம்போல் கதவை இருமுறை தட்டிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே வந்தாள்.

உள்ளே வந்தவள் அவனைக் கண்டு ஒருகணம் திகைப்பில் உறைந்தாள்.

மறுகணமே தன்னிலை திரும்பியவள் பதறியவாறே அவனிடம் ஓடி வந்தாள்.

"மை காட்! மிஸ்டர் நிவீஷ்! என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? You can't do it! எப்படி இதெல்லாம், ப்ச், யாரு உங்க gym instruments எல்லாம் இங்க கொண்டு வந்தது? Niveesh... please get off  the treadmill!"

கருப்புநிறக் கால்சராய் மட்டுமே அணிந்து, சட்டை கூடப் போடாமல் வேகமாக அந்த ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தான் அவன். வியர்வை மினுமினுப்பிலும், காலை வெளிச்சத்திலும் அவன் அங்கம் தங்கமாகப்  பளபளத்தது. தேக்குமர உடற்கட்டு. பயமுறுத்தும் மாமிசமலையாகவும் இல்லாமல் ஒல்லிப்பிச்சான் போலவும் இல்லாமல், அளவெடுத்து செதுக்கியதுபோல் இருந்தது அவனது தேகம்.

இத்தனை நாள் அவன் அமர்ந்திருந்தே பார்த்தவள், இன்று அவன் தன் ஆறடி முழு உயரத்திற்கு நிற்பதை விழிவிரித்துப் பார்த்தாள். அவளே ஐந்தடி ஏழு அங்குலத்தில் சராசரிக்கு சற்றே அதிகமான உயரம்தான். ஆனால் அவன் ட்ரெட்மில்லில் ஏறி நின்றிருந்ததால் அவள் தலை நிமிர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது.

அருகே நெருங்கியிருந்த ப்ரகதி அவனது புஜங்களையும் மார்பையும் அவ்வளவு நெருக்கத்தில் பார்த்துத் தடுமாறி நின்றாள். அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவன் சிரிப்புக் குறையாமல் ஓடிக் கொண்டிருந்தான்.

அவனது உடலிலிருந்து சிரமப்பட்டுத் தன் கண்களை மாற்றியவள், "நிவீஷ்... உங்களுக்கு முட்டியில சர்ஜரி பண்ணியிருக்கோம்.. லிகமெண்ட் மாத்தி ரெண்டு நாள் கூட ஆகலை. மத்த பேஷண்ட்க்கு எல்லாம் crutch கொடுத்து தான் நடக்கவே சொல்லுவோம்.. நீங்க கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்ததால குடுக்கல...

நீங்க இவ்ளோ ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கக் கூடாது.... அப்றம் ஆபரேஷன் பண்ணுன இடம் வீங்கி வலிக்க ஆரம்பிச்சுடும். அந்தக் காலுக்கு ஒரு வாரம் பாரமே குடுக்கக் கூடாது. தயவுசெய்து இறங்குங்க!"

அவளது பதற்றம் தோய்ந்த குரலும், கரிசனம் ததும்பும் கண்களும் அவனை ஏனோ ரசிக்க வைத்தன.

"You asked 'please'?"

ட்ரெட்மில்லை நிறுத்திவிட்டு அவளை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான் அவன். திடுக்கிட்டாலும் உடனே சுதாரித்துக் கொண்டாள் அவள்.

"நான் ப்ளீஸெல்லாம் சொல்லல. இறங்குங்கன்னு தான் சொன்னேன்"

"தயவுசெய்து இறங்குங்கன்னு சொன்னீங்க"

"So, you wanted me to plead you?"

"No, It happened, and I just pointed it to you"

"Whatever...."

அவளது முகத்தை அலட்சியமாகத் திருப்ப, அதைப் பார்த்துக்கொண்டே அவன் நாற்காலியில் அமர்ந்து இருகைகளிலும் dumbbells எடுக்கத் தொடங்கினான்.

அவனது கை தசைகள் சுருங்கி விரிவது அவள் கவனத்தைக் கலைத்தது. கோர்வையாகப் பேச முடியாமல் கண்கள் அலைமோதின.

"இது பண்ணலாம்ல டாக்டர்?"

"அ... அது... அது எல்லாம் பண்ணலாம். காலுக்கு மட்டும் ரெஸ்ட் குடுங்க"

"என்ன... காலைல சாப்டலையா நீங்க...வார்த்தை வரவே மாட்டேங்குது?"

"நத்திங்.. நான் கிளம்பறேன். Call me when you're ready to be checked. I don't have all day"

விடுவிடுவென நடந்து வெளியே வந்தவளின் மூச்சு எகிறியது.

'சே...என்ன பழக்கம் ப்ரகதி இது? அவனை விழுங்கி விடுவது போல் பார்க்கிறாயே... அவன் கண்டிப்பாக கவனித்திருப்பான். அவன் உன்னைப் பத்தி என்ன நினைப்பான்?

அவனை யார் இப்படி அரையும் குறையுமாக நிற்கச் சொன்னார்? நான் வந்த பிறகாவது ஒரு சட்டை மாட்ட மாட்டானா? திமிர் பிடிச்சவன்... கெஞ்ச வைக்க நினைக்கிறான்!'

வேகமாகத் தன்னறைக்கு வந்தவள் அப்போதுதான் தனது அன்றைய வருகைப் பதிவைக் கூடச் செய்யாமல் அவனைப் பார்க்கச் சென்றதை உணர்ந்து திகைத்தாள்.

***

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro