Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

9

அதுல்யா அந்த சென்னை விட் கல்லூரியின் படிவத்தை வருடியவள் தனது அலைபேசியை எடுத்து அதில் சஞ்சீவின் எண்ணை திறந்தவள் " கிளம்பிட்டேன் நீங்க ரீச் ஆயிட்டிங்களா ?" என்று கேட்க

அவனோ அப்பொழுது தான் தனக்கென அந்த வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்றவன் குளித்துவிட்டு மெத்தையில் படுத்திருந்தான் . அலைபேசியின் நோட்டிபிகேஷன் ஓசையில் அதை எடுத்து பார்க்க அதுல்யாவிடம் இருந்து தான் குறுஞ்செய்தி வந்திருந்தது . அதை பார்த்து இதழ் விரித்தவன் " வந்துட்டேன் மா நீ கெளம்பிட்டியா ?" என்று கேட்க

அவளும் அவனிடம் இருந்து உடனே வந்த குறுஞ்செய்தியை படித்து இதழ்விரித்தவள் " இப்போ கிளம்பிட்டேன் இன்னும் 2 மணி நேரத்துல போயிருவேன் மத்தியானம் சாப்டாச்சா இல்ல ட்ராவல்னு சாப்பிடலையா?" என்று கேட்க

அவனோ அவள் கேள்வி மனதில் இளம்சாரல் ஒன்றை வீசச்செய்ய " சாப்டுட்டேன் மேடம் " என்று கூறி சென்றபின் செய்தி அனுப்ப கூறலாமா வேண்டாமா என்று யோசித்தபடி எழுதி எழுதி அழிக்க அவளோ அங்கு அவன் எழுதி எழுதி அழிப்பதை பார்த்து அவன் ஏதும் பதில் அனுப்பாததில் முகம் சுருக்கினாள் .

அவன் அனுப்பவா வேண்டாமா என்பர் பட்டிமன்றம் நடத்த அவளோ " ரீச் ஆயிட்டு text பண்ணுனு கூட சொல்ல மாட்டிங்களா ?" என்று கேட்க

அவனோ சிறு புன்னகையுடன் " நீயே சொல்லிருவ னு தெரியும் . " என்று அனுப்ப அவளோ அப்பொழுது தான் அவன் இதை அனுப்ப தான் அத்தனை நேரம் அழித்து அழித்து எழுதியிருக்கிறான் என்று புரிய மனதில் லேசாய் ஒரு குறுகுறுப்பு எட்டி பார்க்க சிரிப்பும் வந்தது.

அடுத்த குறுஞ்செய்தியாய் " அதெல்லாம் நாங்க அனுப்பிருவோம் உங்கள மாதிரி அனுப்ப நெனச்சு அழுச்சுட்டுலாம் இருக்க மாட்டேன் . பை " என்று கூறி offline சென்று விட

அவனோ அவளின் செய்தியில் கண்களை விரித்தவன் " எப்படி தான் இப்டி என்ன கண்டுபிடிக்குறாளோ ராட்சசி " என்று நினைத்து சிரித்தபடி சிறிது நேரம் உறங்கினான் .

அவனின் தந்தை அவன் உள் அறையில் அசதியில் உறங்குவதைப் பார்த்தவர் அவரின் மனைவியை பார்க்க அவரோ " சஞ்ஜீவ்.. " என்று அழைத்தபடி வந்தவர் அவன் உறங்குவதை பார்த்து கணவனிடம் திரும்பியவர் " என்னங்க நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு காலைலயே போகணும்ல ... போய் இந்த பழம் பாக்கு வெத்தல பூ எல்லாமே வாங்கிட்டு வந்துருங்க " என்று கூற

அவரோ " ஏன் எப்போ பாரு நான் தான் போகணுமா உன் பையன் தான் வந்துட்டான்ல அவனை அனுப்பு " என்று கடுகடுப்புடன் கூறி அங்கிருந்த கதிரையில் அமர

கமலியோ கோபம் கொண்டவர் " இப்போ தான் வந்து புள்ள அசதியா தூங்குறான் சும்மா தான இருக்கீங்க போய் வாங்கிட்டு வரதுக்கு என்ன ?" என்று கேட்க

அவரோ அந்த சும்மா தான உக்காந்துருக்கீங்க என்ற வார்த்தை வெறியேற்ற சரட்டென்று எழுந்தவர் குரலை உயர்த்தி " ஏய்ய் என்ன நா வேலை வெட்டி இல்லாதவன் உன் புள்ள தான் சம்பாதிக்குறான்னு என்ன எடுபுடி வேல பாக்க சொல்றியா " என்று கத்த

சஞ்ஜீவோ அந்த சத்தத்தில் கண்களை பிரிக்க முடியாமல் பிரித்து எழுந்து வந்தவன் தந்தையின் குணம் அறிந்து தாயிடம் வந்தவன் " அம்மா குடுங்க நானே போய் வாங்கிட்டு வரேன் " என்று பையை எடுத்தபடி வெளியே சென்று விட

அவனின் தாயோ கணவனை முறைத்தவர் " இப்போ சந்தோஷமா .... " என்று கத்தியபடி உள்ளே சென்று விட ஆஷிகேசவனுக்கு மனதின் ஓரம் சற்று உறுத்தினாலும் மனம் நிறைந்த அகம்பாவம் அதை உணரவிடவில்லை . ஆதிகேசவன் தனது gpay பார்த்தவர் அதில் 2000 சுபத்ரா டிரஸ் என்ற குறிப்புடன் சஞ்சீவின் என்னிலிருந்து வந்திருப்பதை பார்த்து புன்னகைத்தவர் " சுபத்ரா " என்று அழைத்தவர் அவள் வந்ததும் " வா மா போய் உனக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம் " என்று கூறி மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் இவை அனைத்தும் கமலியின் மனதில் ஒரு கசப்பை தான் உருவாக்கியது .

தன் மகன் என்ன இவர்களுக்கெல்லாம் பணம் சம்பாதித்து கொட்ட மட்டுமே இருக்கும் இயந்திரமா ? எத்தனை அலட்சியம் " என்று நினைத்தவர் ஏதும் செய்ய இயலாமல் வழக்கம் போல் தனக்குள் புலம்பியபடியே வேலை பார்க்க துவங்கிவிட்டார் .

அதுல்யா தனது அறைக்கு வந்தவள் தாய் மற்றும் தமக்கையை கண்டதில் சஞ்சீவின் நினைவுகளை மறந்துவிட்டாள் என்று தான் கூற வேண்டும். அன்று அன்னை சமைத்த உணவை அக்கா ஊட்டிவிட தந்தையின் மடியில் படுத்திருந்தாள் . அதுக்கியாவின் தந்தை சுரேஷ் அவள் தலை முடியை கோதியபடி இருந்தவர் " பாப்பா வேலூர் branchlaye படிக்கிறியா டா ?" என்று கேட்க

அவளோ சட்டென்று சஞ்ஜீவின் முகம் கண் முன் மின்னி மறைய அவள் அனுமதியின்றியே அவள் வாயிலிருந்து வந்திருந்தது " நா சென்னை ப்ராஞ்சுலயே படிக்குறேன் பா " என்ற வாக்கியம் .

அது வரை ஏதோ மூத்தமகளுடன் விவாதித்துக் கொண்டிருந்த அவள் அன்னை அதுல்யாவின் புறம் கூர்மையான பார்வையை பதித்தவர் " ஏன் ? இங்க பண்ணா என்ன உனக்கு ?" என்று கேட்க

அதுல்யாவோ அதன் பின்னே தான் கூறியதை உணர்ந்தவள் அதை சமாளிக்கும் பொருட்டு " மா வீட்லயே இருந்த எனக்கெப்படி மா வெளியுலகம் தெரியும் . அது மட்டுமில்லாம அத்த தனியா இருக்குறத பார்க்க ஒரு மாதிரி இருக்கு . நம்ம வீட்லேந்து காலேஜ் எப்படியும் 1 மணி நேரம் ட்ராவல் ஆனா எனக்கு அத்த வீட்லேருந்து 30 நிமிஷம் தான் "

என்று காரணங்களை அடுக்க அவள் அன்னையோ ஒரு முறை அவளை கூர்ந்து பார்த்தவர் . " சரி ஆனா ஒழுங்கா இருக்கனும் " என்று கூற அந்த ஒழுங்கா வில் இருந்த அழுத்தம் அவளின் மனதில் பயத்தை விதைத்தாலும் அவள் தலை தானாக ஆடியது.

அவள் தந்தையோ " என்னடா அக்காவும் ஹாஸ்டல் போய்ட்டா நீயும் போய்ட்டா அப்பாக்கு போர் அடிக்கும்ல . இந்த நாப்பது நாளே எனக்கு கஷ்டமா இருந்துச்சு " என்று கூற

அவளோ குறும்புடன் " போர் அடிச்சா அம்மாவும் நீங்களும் டேட்டிங் போங்கப்பா " என்று கூறி உள்ளே ஓடி விட அவரோ உள்ளே ஓடும் மகளை வாஞ்சையுடன் பார்த்தார் .

அவளின் அன்னையும் முகத்தில் பூத புன்னகையுடன் அவள் சென்ற திசையை பார்த்தவர் அவளை விடுதியில் சேர்ப்பதற்கான ஆயத்தங்களை செய்ய துவங்கினார்கள் .

அடுத்த நாள் சஞ்சீவ் மற்றும் அவனின் குடும்பம் அனைவரும் வாடகை காரில் அவர்களது குலதெய்வமான அழகர்கோவில் காமாட்சி அம்மன் திருக்கோவிலிற்கு சென்றனர் .

அந்த கோவிலில் அந்த காமாட்சி அம்மன் சிலை மிகவும் சிறியதாக இருந்தாலும் அதை குலதெய்வமாக கொண்டவர்கள் பலர் அந்த கோவிலை சுற்றி கிடா வெட்டுவதற்கு ஆயத்தமாக நின்றனர் .அங்கிருந்த அனைவருமே ஒரே குலதெய்வத்தை கொண்டதால் அங்காளி பங்காளி உறவுமுறைக்குள் வருவார்கள் .

அந்த இடத்தில் பலர் வந்து பேச சஞ்ஜீவோ சிறு சிரிப்புடன் கடந்தவன் யாரும் ஏதேனும் கேட்டால் அதற்கு பதில் மட்டும் கூறிக்கொண்டான். அவனிற்கு கடவுள் பக்தி சிறுவயதில் இருந்தே அதிகம் . அனைவரும் அம்மனை தரிசித்துவிட்டு பின் அமர்ந்து கிடா வெட்டி பூஜை செய்து

பின் அமர்ந்து உண்டவர்கள் அவரவர் அங்காளி பங்காளிகளுடன் வளவளக்க ஆரம்பித்து விட்டனர் .

ஆதிகேசவன் அவரது அண்ணன் தம்பி உறவு முறையில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டிருக்க அதில் ஒருவரோ " நம்ம சுபத்ராவுக்கு மாப்ள பாக்கலைங்களா ?" என்று கேட்க

ஆதிகேசவனோ " இல்ல இப்போ தான கடைசி வருஷம் படிச்சுக்கிட்டு இருக்கா பாக்கணும் " என்று கூற

அதில் இன்னொருவரோ " ஆமா பையன் தலை எடுத்து இப்போ தான மூணு வருஷம் ஆகுது இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போனா அவன் தங்கச்சிக்கு இன்னும் சீரும் சிறப்புமா செய்வான் நல்ல சம்மந்தமும் பாக்கலாம்ல " என்று கூற அவரின் முகமோ கருத்து போனது . தனது மகளிர்க்கு தான் தனது வருமானத்தில் சீர் அல்ல கல்லூரி செலவு கூட செய்ய முடியாது என்று அறிந்திருந்தும் ஏனோ அவரின் தன்மானம் அடிவாங்கியது .

இதை அவதானித்துக்கொண்டிருந்த சஞ்ஜீவ் ஒரு தலைகுலுக்கலுடன் அந்த புறம் நகர்ந்தவன் அங்கே இருந்த மரத்தின் அடியில் இருந்து அரைமணி நேரமாய் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சுபத்ராவை நோக்கினான் . அவன் தொட்டுவிடும் தூரத்தில் சென்றாலும் அவள் பேசியதில் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை . அவள் பேசி முடித்து திரும்பியதும் அவளை தீர்க்கமாக அவன் கை கட்டி பார்க்க அவளோ அவனை ஒரு நொடி திகிலுடன் பார்த்தவள் அதன் பின் அலட்சியமாய் பார்த்து நகர பார்க்க அவனோ " இவ்ளோ நேரமா யார்கிட்ட பேசிகிட்டு இருந்த ?" என்று கேட்க

அவளோ கண்களை உருட்டியவள் " என் பர்சனல் spacekulla மூக்கை நொழச்சுகிட்டே இருப்பியா ? நா யாரோட பேசுனா உனக்கென்ன உன் வேலைய பாரு " என்று கூறி அகன்று செல்ல அவளின் முகத்தில் கோபத்தையும் தாண்டி ஒரு படபடப்பு இருப்பதை கண்டுகொண்டவன் இதை கருத்தில் பதியவைத்துக்கொண்டான் .

அவன் உள்ளுணர்வு ஏனோ சுபத்ராவின் தற்போதய நடவடிக்கைகளை தவறானதாக இடித்துரைத்து . வளர்ந்த தங்கையை ஒரு கட்டத்திற்கு மேல் கேள்வி கேட்க முடியாமல் வீடு வந்தவன் அன்று இரவே ஊருக்கு பயணம் செய்ய ஆயத்தமானவன் தன் அன்னையிடம் தனிமையில் " சுபத்ரா போன் அதிகமா பேசுவாளா மா ?" என்று கேட்க

அவரோ " மொதல்லலாம் அப்டி இல்லடா இந்த ஒரு ஆறு மாசமா தான் எப்போப்பாரு போனும் கையுமாவே திரியுறா ... ஏதாச்சு கேட்டோம்னாலும் எரிஞ்சு விழுறா உங்கப்பாவும் அதுக்கு சிங்ச்சாங் " என்று கூற அவனோ மனதில் இவை அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டவன் ஒரு வித சலனமான மனதுடனேயே சென்னைக்கு கிளம்பினான் .

அதற்கடுத்து வந்த ஒரு மாதமும் எப்பொழுதும் போல கடந்தது . சஞ்சீவ் என்ன தான் சக்தியிடம் அவள் ஒரு பஸ்ஸிங் கிளவுட் என்று கூறி விட்டாலும் மனதில் அவள் சென்ற நாளில் இருந்தே காலையில் மொட்டை மாடியை பார்க்கும் பொழுதோ , அந்த பூங்காவிற்கு செல்லும் பொழுதோ , பெசன்ட் நகர் பக்கம் செல்லும் பொழுதோ மனதில் எழும் ஏக்கத்தை போக்க தான் வழி தெரியவில்லை அவனிற்கு . முதலில் அந்த ஏக்கத்தை விரட்ட நினைத்தவன் அதன் பின் அதனுடன் வாழவும் பழகிக்கொண்டான் .

தினம் காலை மற்றும் இரவு அவனோ அவளோ மாற்றி மாற்றி அனுப்பும் குட் மார்னிங் மற்றும் குட் நைட்டும் அவ்வப்பொழுது கேட்கப்படும் சாப்பிட்டாயா மட்டும் தான் அவர்களுக்குள்ளான அதிகபட்ச உரையாடலை இருந்தது . அதற்கு மேல் பேச அவனிற்கு தயக்கம் என்றால் அவளோ பேச ஆசை இருந்தும் பேசாதவனை மனதில் வறுத்தபடி அவனை காய விட்டாள் .

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அல்லாமல் சற்று நேரம் தள்ளி எழுந்து வந்தவன் கண்டதென்னவோ மாடியில் கைப்பிடி சுவற்றின் ஓரம் நின்று காபி அருந்திக்கொண்டிருந்த அதுல்யாவின் பக்கவாட்டு தோற்றத்தை தான் . கண்களை கசக்கி பார்த்தவன் அது அவள் தான் பித்தும் அன்று என்று உணர்ந்து பெரிதாக விரின்ஷா இதழை கட்டுப்படுத்த நினையாமல் அவள் அருகில் நிதானமாய் சென்றவன் " ஹே நீ என்ன இங்க ?" என்று கேட்க

அவளோ திரும்பியவள் அவனை பார்த்து " விடுஞ்சுருச்சா சார் finally ?" என்று கேட்டு அவனிற்கு ஒரு கோப்பையில் காபியை ஊற்றி கொடுத்தவள் தனதை குடிக்க அவனோ அவளின் trackpant மற்றும் டி ஷர்டில் துடைத்துவைத்தார் போன்ற முகத்தில் வேர்வை வழிய நின்றிருப்பவளை பார்த்து சிரித்தவன் "காலேஜ் ஸ்டார்ட் ஆகலையா உனக்கு ? சண்டே அப்டிங்குறதால வந்துருக்கியா ? இன்னைக்கு ஈவினிங் கெளம்புறியா " என்று கேட்க

அவளோ அவனை இதழில் அடக்கிய சிரிப்புடன் பார்த்தவள் " பார்த்தா கேள்வியா கேட்டு கொள்ள வேண்டியது இதே வேலூர் போய்ட்டேன்னா நா இருக்கேனான்னு கூட கண்டுக்குறதில்ல " என்று சொல்ல

அவனோ மனதில் " நித்தம் உன் நினைவில் தானடி நான் எழுவதும் விழுவதும் " என்று நினைத்தவன் வெளியே எதையும் காட்டாமல் சிரித்து வைக்க

அவளோ "ஆனா இனி எஸ்கேப் ஆக முடியாது அடுத்து நாலு வருஷத்துக்கு என் மூஞ்சில தான் முழிக்கணும் ... " என்று கூற

அவனோ தலையை நிமிர்த்தி அவளை தவிப்பும் கேள்வியும் செரிவிகிதமாய் பார்க்க அவளோ சிரித்தவாறே " சென்னை VIT ல சீட் கெடச்சுருச்சு பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் . இங்க இருந்து தான் போய்ட்டு வர போறேன் ."

என்று கூற அவனோ மனதில் ப்ரவாகமென பொங்கிய மகிழ்வை அப்படியே முகத்தில் காட்டாமல் தடுத்தவன் அவள் புறம் கை நீட்டி " காங்கிராட்ஸ் ஏன் சென்னை ?" என்று கேட்க

அவளோ மனதில் " சந்தோஷத்தை கூட காட்டுறானா பாரேன் ... " என்று சுணங்கியவள் வெளியே " இந்த ஊரும் மனுஷங்களும் புடுச்சுருச்சு அதான் " என்று கூறி காலி கோப்பையை எடுத்துக்கொண்டு கீழே செல்லப்போக

அவனோ தன்னை மீறி " மனுஷங்கள்னா?" என்று கேட்க

அவளோ திரும்பி பார்த்தவள் ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்புடன் " பார்க்குக்கு போகணும் ரெடி ஆகுங்க " என்று கூறி கீழே செல்ல சஞ்ஜீவ் அவளின் சிரிப்பில் வெட்கமுற்றவன் பிடரியை கோதிக்கொண்டான் . அவளை தினம் பார்க்கப்போகிறோம் என்ற நினைவே மனதில் குத்தாட்டம் போட வைத்தது . அவள் சென்ற திசையை சிறிது நேரம் வெறித்தவன் பின் தனது அறைக்குள் செல்ல சக்தியோ இன்னும் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான் . இருவருக்குள்ளும் காதலின் விதை விரவி மொட்டுவிட துவங்கி இருக்கா அது மலர்ந்து மணம் பரப்பும்நாள் வெகுதொலைவில் இல்லை  

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro