2
அந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்களுடன் கலந்து அலோசித்தவன் சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு meetingai முடித்துவிட்டு நெட்டி முறித்தான்.
மணியை பார்க்க அது இரவு பன்னிரண்டு என்று காட்டியது.உறக்கம் மட்டும் கண்களை தழுவவில்லை.சற்று நேரம் நடக்கலாம் என்று நினைத்தவன் அந்த படகு வீட்டின் டெக் அமைப்பிற்கு வந்து சலசலக்கும் நீரை பார்த்தபடி நடக்க துவங்கினான்.
பௌர்ணமி நிலவு அவனை பார்த்து சிரிக்க அந்த கைப்பிடியை பிடித்தவனின் காதில் அவளின் தேன் குரல் இன்றும் ஒலித்தது "எவ்ளோ அழகா இருகுள்ள ஜீவா பௌர்ணமி நிலவு.அதுவும் இன்னைக்கு நிலா இன்னும் வித்தியாசமா என் கண்ணுக்கு தெரியுது "என்று அவன் தோளில் சாய்ந்தவாறு மொட்டை மாடியில் இருவரும் அமர்ந்திருந்த வேளையில் அவள் மொழிந்திருக்க
சஞ்சீவ் அந்த நிலவை பார்த்தவன் "என்ன புதுசா இருக்கு அதே நிலா அதே வெளிச்சம் இதுல என்ன வித்தியாசத்தை பாத்த நீ?" என்று கேட்க
அவளோ அவன் தோளில் இருந்து நிமிர்ந்து நெற்றி சுருக்கி அவனை முறைத்தவள்"உன்கிட்ட போய் சொன்னேன் பாரு"என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவன் கையை விட்டு விலகி அமர
அவனோ சிரிப்புடன்" ஹே சும்மா சொன்னேன் உடனே முறுக்கிக்காத " என்றவன் அவளை அருகில் அமரவைத்து அவள் சிகையை கோதிக் கொடுக்க வழக்கம் போல் அமைதியானவள்
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து "ஏன் ஜீவா நா நிலா அழகா இருக்குனு சொல்லும் போது உனக்கு எதுவும் சொல்லனும்னு தோணலயா?"என்று எதிர்பார்ப்புடன் கேட்க
அவனோ " அதுல என்ன அத்து இருக்கு நிலா எப்போவுமே அழகு தான்.வளர்ந்தாலும் தேய்ந்தாலும் ஏதோ ஒரு வகைல அது அழகு தான் அதுல நா என்ன தனியா சொல்ல?" என்று கேட்க
அவளோ தலையில் அடித்துக் கொண்டவள்" அந்த நிலாவ விட என் கண்ணுக்கு நீ தான் தங்கம் அழகா தெரியுரனு கூட சொல்ல தெரியாதாடா உனக்கு ?"என்று கேட்க
அவனோ எது என்பதை போல் பார்த்தவன் பின் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்"ஏன்டி உனக்கே இது ஓவரா தெரியலையா ?எங்க இருந்து இவ்ளோ நாடகத்தனமான வசனத்தை எல்லாம் யோசிக்கிற?நீ அழகு தான் ஆனா அதுக்குனு இதெல்லாம் டூ மச்"என்று கேட்டு சிரிக்க
அவளோ கோபத்துடன் ஏமாற்றமும் சேர அவனை முறைத்தவள்"hahaha சத்தியமா சிரிப்பு வரல .அதான மனிஷன பார்த்து love பண்ணிருந்தா இந்த romancelaam பண்ண தெரியும் ,நா தேடி தேடி ஒரு ரோபோவை தான love பண்ணிருக்கேன் உன்கிட்ட இதெல்லாம் எதிர் பார்க்கிறது தப்பு தான்." என்று கூறி எழுந்து செல்ல
அவனோ அவளின் ரோபோ என்னும் சொல்லில் சீண்டப்பட்டவன் "யாருடி ரோபோ" என்று கேட்க
அவளோ திரும்பி "நீ தான்டா ரோபோ metal மண்டையா "என்று கூறியபடி கீழே ஓட அவனோ அவள் ஓடுவதை பார்த்து புன்னகைத்தவன் அலைபேசி ஒலி எழுப்ப அதை எடுத்தவன் அலுவலகத்தில் இருந்து manager அழைத்ததால் எழுந்து நின்று மொட்டை மாறி கை சுவற்றை பிடித்தபடி அவரிடம் பேச ஆரம்பித்தான்.
சிரித்துக் கொண்டே ஒடியவள் அவன் தன்னை பின் தொடரவில்லை என்பது உரைக்க லேசான ஏமாற்றத்துடன் மொட்டை மாடிக்கு மீண்டும் வந்தாள்.
அவன் தீவிரமான முகபாவத்துடன் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி சங்கிலியின் டாலரை அப்படியும் இப்படியும் இழுத்தபடி பேசுவதை பார்த்ததும் புரிந்து கொண்டாள் அவன் அலுவல் தொடர்பாக யாருடனோ உரையாடுகின்றான் என்று. மனதில் தோன்றிய ஏமாற்றம் மறைய அவன் பேசும் வரை காத்திருந்தவள் அவன் பேசி முடித்ததும் பின்புறமாய் சென்று அவனை அணைத்துக் கொண்டு முதுகில் முகத்தை வைத்துக் கொண்டாள்.
அவள் செய்கையில் சிரித்தவன் "என்ன ரோபோவை வந்து கட்டிப் புடிக்குற ?" என்று கேட்க
அவளோ போலியான சலிப்பு தொனிக்கும் குரலில்"என்ன பண்ண இந்த ரோபோவை தான எனக்கு பிடிச்சிருக்கு."என்றவள் அவனின் முதுகில் ஒரு அடி வைத்து"ஒருத்தி கீழ போனா அவளை சமாதானப்படுத்த அவ பின்னாடி போகனும்னு தெரியாதா monkey" என்று கேட்க
தன் இடுப்பை சுற்றி பிடித்திருந்த அவள் கையை விலக்கி தான் முன்னே நிருத்தியவன் சிறு சிரிப்புடன்"நீ திரும்பி வருவனு தெரியும்"என்று கூறி அவளிற்கு மிகவும் பிடித்த கண்ணக்குழி விழும் சிரிப்பை உதிர்க்க
அவன் கன்னத்தில் விழுந்த குழியை ஆட்காட்டி விரலால் குத்தியவள்"சிரிச்சு சிரிச்சு கவுத்திரு"என்று கூறியபடி அவன் நெஞ்சில் தஞ்சமடைந்து கொண்டாள்.அந்த இனிய நினைவுகளில் குறுநகை பூக்க நிலவை வெறித்திருந்தவன் இப்பொழுது அவள் அருகில்லாத வெறுமை மனதை ஈட்டியாய் தாக்க உள்ளே சென்றான்.
பின் உள்ளே நுழைந்து படுக்கையில் விழுந்தவன் தனது செல்போனில் இருந்த விமான சீட்டை பார்த்து சிரித்துக் கொண்டான்."எத்தனையோ முறை என்னை தேடி நீ வந்திருக்க இந்த முறை உன்னை தேடி நா வரேன் .எனக்காக காத்திருப்பியா அத்து?" என்று திரையில் அவனின் தோள்களை சுற்றி மாலையாய் கைகளை கோர்த்து முகம் முழுதும் நிறைந்த சிரிப்புடன் இருவரின் கண்ணில் நிறைந்த காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு மொட்டைமாடித் தோட்டத்தின் நடுவே நின்ற படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வருடியவன் அப்படியே உறங்கிப் போனான்.மனம் அவளைக் காணப் போகும் நொடி தன்னை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தது.
இங்கு அவன் யாரை காணத் துடித்துக் கொண்டு இருக்கின்றானா அவளோ
மேகாவிடம் கத்தி விட்டு வந்தவளை வீட்டின் வெறுமை வரவேற்க தனது அறைக்குள் வந்தவள் மடை திறந்த வெள்ளமாய் அழத்துவங்கினாள்.
அவள் அன்னையும் தந்தையும் அவளின் தமக்கையின் பிரசவத்திற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது அவளிற்கு அன்னையின் கேள்விக்கணைகளில் இருந்து விடுதலை அளித்திருக்க அழிக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் இருக்கும் அவன் நினைவுகளை மறக்க மனதுடன் மான்றாடினாள்.
பின் சற்று நேரத்தில் நிதானத்திற்கு வந்தவள் கண்ணீரை துடைத்துவிட்டு அவள் அறையோடு இணைந்திருந்த நூலக அறைக்கு சென்றாள்.தனது நாளைய விரிவுறைக்கான நோட்ஸ் தயாரிக்க ஒரு புத்தகத்தை எடுத்தவள் கைகள் அனிச்சயாய் அதை உள்ளே வைத்துவிட்டு மேலே இருந்த கதவை திறந்து அதிலிருந்த புத்தகம் ஒன்றை வெளியில் எடுத்தது.
அவள் கையில் இருந்தது clean code என்று ராபர்ட். சீ. மார்ட்டின் எழுதிய புத்தகம்.அது அவள் கையில் கிடைத்த நாளின் நினைவு இன்றும் பசுமரத்தாணியாய் அவள் நெஞ்சில் இருந்தது.
அன்று ஞாயிறு வழக்கம் போல அவர்கள் சந்திக்கும் பூங்காவில் மாலை நான்கு மணியில் இருந்து அமர்ந்திருந்தாள் அத்துல்யா.
கடிகாரத்தையும் பூங்காவின் வாசலையும் மாற்றி மாற்றி பார்தவலிற்கு சலிப்பு தோன்ற சரியாய் நான்கு முப்பதிற்கு அவள் அருகில் மூச்சு வாங்க வந்து நின்றான் சஞ்சீவ்.
அவன் அந்நிலையில் அவளை பார்த்து புன்னகைக்க அவளோ அரைமணி நேரம் தாமதமாக வந்ததற்கு அவனை முறைத்தாள்.சஞ்சீவ் அவளின் முறைப்பின் காரணம் அறிந்தவன் அவள் அருகில் அமர்ந்து"sorry di வர்ற வழியில bike puncture ஆய்ருச்சு அதான் லேட் ."என்று கூறி அவள் கையை பிடிக்க
அவளோ அவன் கையை தட்டி விட்டவள்"ஒரு phone பண்ணி சொல்ல தெரியாதா?நா லூசு மாதிரி இங்கேயே அரை மணி நேரமா உக்காந்துறுக்கேன்" என்று கூற
அவனோ"sorry di அப்போ எதுவும் தோணல"என்று கூறி அவள் கையை தொட மீண்டும் மீண்டும் அவன் கையை தட்டி விட்டாள் அத்துல்யா.
முதலில் கோபத்தில் தட்டி விட்டவள் அவன் sorry கேட்ட உடனே சமாதானம் ஆகி இருந்தாள் எனினும் அவனை கெஞ்ச வைத்து பார்க்கும் ஆசை எழ பொய் கோபம் பூசி அவன் கையை மீண்டும் மீண்டும் தட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.
அவனோ வண்டி puncture ஆகி நேரம் ஆகி விட்டதே என்று அந்த நேரம் பார்த்து ஆட்டோ பேருந்து எதுவும் கிடைக்காமல் ஓட்டமும் நடையுமாக 3 கிலோமீட்டர் வந்திருக்க இவள் தன் நிலையை புரிந்து கொள்ளாமல் கையை தட்டி தட்டி விடுவது அங்கு போவோர் வருவோரல்லாம் ஒரு மாதிரியாக பார்த்து செல்வது தந்த எரிச்சலில் அவளிடம் அடிக்குரலில் சீரத் துவங்கினான் " ஒரு தடவ சொன்னா உனக்கு புரியாதா அத்துல்யா maturity அப்டின்னு ஒன்னு உனக்கு கொஞ்சமாவது இருக்கா.எதுக்கு public placela scene create பணிக்கிட்டு இருக்க ச்ச "என்று அவளை விட்டு தள்ளி அந்த இருக்கையில் அமர்ந்து அந்த இருக்கையின் கைப்பிடியை ஆத்திரத்தொட தட்ட துவங்கினான்.
அவளோ தான் விளையாட்டாக செய்வதை கூட அவனால் புரிந்து கொள்ள முடியவில்லையா என்று மனதில் சட்டென்று வலி தாக்க அதை மறைத்தவள் அவன் தோற்றத்தை பார்த்தாள்.
சட்டையில் தோள் பட்டை முழுவதும் வியர்வையால் குளித்திருக்க நெற்றியில் வியர்வை நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.அவன் மூச்சிரைக்க வந்து நின்றது நினைவில் வர தன்னை காண ஓட்டமும் நடையுமாக வந்திருக்கிறான் என்ற எண்ணமே மனதில் பூங்காற்று வீசியது.
அவன் அத்தனை மெனக்கெட்டு வந்திருக்கும் பொழுது தான் இப்படி செய்தால் யாராய் இருந்தாலும் எரிச்சல் தான் தோன்றும் என்று உணர்ந்தவள் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கைகளை பற்ற அவனோ அவள் கையை தட்டி விட்டான்"இப்போ மட்டும் எதுக்கு புடிக்குர?" என்று
அவளோ அவன் ஒரு கையை இரு கைகளாலும் சுற்றிக்கொண்டவள்" நா புடிக்காம வேற யார் புடிப்பாங்களாம்?" என்று மேலும் நெருங்கி அமர
அவனோ அவள் நெற்றியில் ஒற்றை விரல் வைத்து தள்ளியவன்" public placela ரொம்ப க்ளோஸ் உக்காராதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்?" என்று கேட்டவன் தன் கையை சுற்றி வளைத்திருந்த அவள் கைகளை விலக்கி ஒற்றை கையை மட்டும் தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.
சுற்றி முற்றி பார்த்து அங்கிருந்த காதலர்களின் லீலைகளை பார்த்து முகம் சுறுக்கியவளா " நீ ஆனாலும் ரொம்ப ஓவரா ரூல்ஸ் போடுற " என்று கூறி அவன் கையில் இருந்த ஒரு கவரை அப்பொழுதே பார்த்தாள்.
அதை பார்த்து புன்னகைத்தவள்" ஹே என்ன அது கவர்ல " என்று கேட்க
அவனோ சிரித்தவாறு அவள் கையில் கொடுத்தவன்" உனக்கு தான் பாரு" என்று கொடுக்க
அவளோ ஆச்சர்யத்துடன் அதை வாங்கினால்"என்னடா கிப்ட்லாம் குடுக்குற என்ன இருக்கு இதுல?"என்று கேட்க
அவனோ கையை கட்டியபடி"பிரிச்சு பாரு" என்று கூறினான். நல்ல கனமாக இருக்கவும் காதலர்களுக்கு கொடுக்கப்படும் மிட்டாய்கள் அடங்கிய பெட்டி என்று நினைத்தவாறு பிரித்தவளிற்கு அதில் இருந்த புத்தகத்தை பார்த்து அய்யோ என்றாகி விட்டது.
அதை கையில் எடுத்தவள்" என்னடா இது?ஒரு லவ்வர்க்கு குடுக்குற கிப்டா இது "
என்று கேட்க
அவனோ குழப்பமாய் அவளை ஏறிட்டவன் " நீ தான semester start ஆய்ருசு பயமா இருக்கு அப்டின்னு சொன்ன .எனக்கு இந்த book ரொம்ப உபயோகமா இருந்துச்சு அதான் உனக்கும் உபயோகமா இருக்கும்னு வாங்கி குடுத்தேன் .கிப்ட்னா உபயோகமா தான இருக்கணும்" என்று கூற
அவளோ அவன் கழுத்தை நெரிப்பதை போல் சென்றவள்" நா கூட chocolate collectionனு நெனச்சேன்" என்று ஏமாற்றமாக கூற
அவனோ அவளின் கையை சிரித்தபடி பிடித்தவன்" chocolate இல்ல எதாச்சும் பொம்மை வாங்கி குடுத்தா அதை எவ்ளோ நாள் வச்சுக்க முடியும் ?இல்ல அதால என்ன பிரயோஜனம் சொல்லு.எப்போவுமே நாம குடுக்குற gift உபயோகமா இருக்கணும்." என்று கூற அவனின் குணம் அறிந்த அவளும் சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள்.
அந்த நினைவுகளில் மூழ்கி இருந்தவள் இதழ்கள் ஒரு சிறு புன்னகையை சிந்த மனம் அவனை பற்றி சிந்திக்க துவங்கியது.
வித்தியாசமானவன் அவனும் சரி அவன் காதலும் சரி மிகவும் வித்யாசமாக இருக்கும் .இனிமையான நினைவுகளின் தொடர்ச்சியாய் கொடுமையான பிரிவின் நினைவு மனதை தாக்க புத்தகத்தை அதன் இடத்தில் வைத்தவள் மனம் அவனை இனி நேரில் பார்க்கவே கூடாதென்று கடவுளிடம் வேண்டுதல் விதித்தது.
யாரின் வேண்டுதல் ஏற்கப் படும்?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro