19
அன்றைய இரவு துரிதமாகவே முடிந்துவிட திருமணம் காலை ஏழு மணி அளவில் கார்த்திக்கின் வழக்கப்படி கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெறவிருந்தது . பெண்வீட்டார் ஆறுமணிக்கே கிளம்பி கோயிலிற்கு சென்றுவிட அங்கே நெருங்கிய சொந்தங்களும் ஒரு சில நண்பர்களும் மட்டுமே வருகை தந்திருந்தனர் அதில் அதுல்யா மற்றும் மேகாவும் அடக்கம் . சஞ்ஜீவ் ஒரு வித நெகிழ்ச்சியில் நின்றுகொண்டிருந்தான் . அவனின் தங்கை என்று இவ்வளவு பெரியவளானாள்? சிறு வயது தொட்டு அவன் கல்லூரி முடிக்கும் வரை அவர்களின் நெருக்கம் அலாதியானது தான் . அதன் பின் அவன் வேலைக்கு சென்றதும் ஏனோ அவள் அவனிடமிருந்து ஒதுங்கவும் அவனை ஏளனப்படுத்தவும் துவங்கி இருந்தாள் .... அதற்கு அவளின் தந்தையும் ஒரு பெரிய காரணமாவார் . அவனிற்கு கண்கள் கலங்கி கண்ணீர் இப்பொழுதோ எப்பொழுதோ விழுந்துவிடுவேன் என்பது போல் இருந்தது அவளை அவள் தந்தை தாரைவார்க்கும் பொழுது .
சுபத்ராவிற்கு இடைப்பட்ட காலத்தில் சஞ்ஜீவ் அவளால் வெளிநாடு செல்வது எப்படி எப்படியோ சென்றிருக்க வேண்டிய வாழ்வு அவனால் அங்கீகரிக்கப்படுவது புதைந்திருந்த பாசத்தையும் உரிமை உணர்வையும் தட்டி எழுப்பி இருந்தது . என் அண்ணன் எனக்காக எதுவும் செய்வான் என்ற மமதையையும் அதிகமாகவே தந்திருந்தது என்று கூறலாம் . மங்கலநாணை அணிவிக்கும் நேரம் வர அவளின் விழிகளோ கண்ணீர் திரையிட காதலனையும் அதன் பின் அவளின் அண்ணனையும் நோக்கியது நன்றியுடன் . அவனோ அந்த நிகழ்வில் பூக்களை அட்சதையுடன் தூவியவன் கண்களில் இருந்து சரேலென்று இறங்கியது கண்ணீர் .
அவனை அவதானித்துக்கொண்டே இருந்த அதுல்யா கூட்டத்தில் அவனின் பின் சென்று நின்றவள் அவனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொள்ள அவனோ அவளின் கரத்தை திரும்பாமலே உணர்ந்தவன் அதில் மேலும் அழுத்தம் கொடுத்து தன் உணர்வுகளை அவளிடத்தில் கடத்திக்கொண்டிருந்தான் .
ஒரு நிமிடம் கரங்களை பிடித்திருந்தவள் மேலும் யாரும் பார்க்கும் முன் கைகளை விடுவித்துக்கொண்டனர் . திருமண முடிந்து ஸ்வாமி தரிசனம் செய்தவர்கள் உறவினர்களை ஒரு வண்டியில் மாப்பிள்ளை வீட்டிற்கு முதலில் அனுப்பி விட்டு சக்தி மற்றும் சஞ்ஜீவ் இருசக்கர வண்டியில் பின்தொடர்வதாக இருந்தது . உறவினர்களின் கூட்டம் மறைந்த பின் சஞ்ஜீவ் தனது இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் நோக்கி அதுல்யாவிடம் கண்ணை காட்டிவிட்டு செல்ல அதுல்யாவும் அவன் பின்னே சென்றாள். சக்தியோ மேகாவையே அவதானித்துக்கொண்டிருந்தான் அவளின் பார்வை தவறி கூட அவன் புறம் திரும்பவில்லை . அவனோ அவளிடம் பேசலாமா வேண்டாமா என்று இருமனதுடன் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான் .
மேகாவிற்கோ நெருப்பில் நிற்பது போல் இருந்தது சக்தியின் பார்வை அவள் மேல் விழுவது உணர்ந்ததில் இருந்து . அவளோ சிறிது நேரம் பொறுத்தவள் அடுத்த நொடி அவனை அனல் காக்க முறைத்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டால் அவன் பார்வை விழாத இடத்திற்கு . சக்திக்கோ முகத்தில் அரை வாங்கிய உணர்வு . அவனுக்கு அவளை விட்டுக்கொடுக்கவும் மனமில்லை அவளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் மனமில்லை . மதில் மேல் பூனை போன்ற மனநிலையுடன் நின்றுகொண்டிருந்தான் விரைவில் இந்த குழப்பம் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றவன் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் நோக்கி சென்றான் . அங்கோ அவன் கண்டா காட்சி அவனின் இறுகிய இதழ்களில் புன்னகை பூக்க வைப்பதாய்.
சஞ்ஜீவ் அவனின் தந்தையின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்க அதுல்யா சுற்றி முற்றி பார்த்தபடி அவனின் முகத்தில் இருந்த வியர்வையை அவள் அணிந்திருந்த துப்பட்டாவில் ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தாள்.
அதுல்யா " ஒரு kercheif வச்சுக்க மாட்டிங்களா பா? வைட் shirtla வேர்வையை தொடச்சா அது போகுமா ? என்ன ஆளோ " என்றபடி துடைத்து முடிக்க அவனோ அவளை ஒரு வித ரசனையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தான் .
இதை தன் அலைபேசியில் பதிவு செய்த சக்தி சத்தமின்றி அவ்விடம் விட்டு அகன்றிருந்தான் .
அவளோ அவனின் இந்த அரிதாய் கிடைக்கும் பார்வையில் சற்றே வெட்கமுற்றவள் " என்னவாம் ? பார்வையெல்லாம் பயங்கரமா இருக்கு " என்று கேட்க
அவனோ தலையை லேசாக ஆட்டியவன் " நெனச்சதை சாதிச்சாச்சு ஆக மொத்தத்துல .... இப்போ உன்னால எங்கம்மா என்ன சந்தேகப்படறாங்க " என்று கூற
அவளோ அவனை பதற்றத்துடன் நோக்கியவள் " ஆமா ஜீவா நேத்து சக்தி அண்ணா சொன்னாங்க . நீங்களும் பட்டுனு என் பக்கத்துல வந்து நிக்கிறீங்க ... அம்மா என்ன நெனச்சுருப்பாங்க ? " என்று கேட்க
அவனோ " ஒரு காரணமா தான் செஞ்சேன் " என்று கூற அவளோ " என்ன காரணமா ? இப்போவே தெரிஞ்சா கண்டிப்பா பிரெச்சனை வரும் .... நா இப்போ தான் பிரஸ்ட் இயர் தெரியும்ல " என்று கூற அவனோ கையில் முகத்தை ஊன்றி அவளை பார்த்தவன் " ஆங் அப்பறோம் .... லூசு எனக்கு அது தெரியாதா..... நான் பாத்துக்குறேன் " என்று கூற அவளோ " என்கிட்டே சொன்னா நானும் தயாரா இருப்பேன்ல " என்று கூற அவனோ " உனக்கென்ன தெரியும் அம்மு ? டென்ஷன் எடுத்துக்காத நான் பாத்துக்குறேன் ...." என்று கூற அவளோ சேரி என்று தலையாட்டியவள் " ஜீவா எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்களேன் .... " என்று கேட்க அவனோ குழப்பத்துடன் " எதுக்கு ? " என்று கேட்க அவளோ " face of the year காம்பெடிஷன்ல சேர ஷோர்ட்லிஸ்ட் ஆகி இருக்கேன் .... இதுல வின் பண்ணேன்னு வைங்களேன் நிறைய chances வரும் மோடெல்லிங்குக்கு .நீங்க கல்யாண அலைச்சல்ல இருந்தீர்களா அதான் சொல்லல " என்று கண்கள் மின்ன கூற அவனோ அவளின் மின்னிய அந்த கண்களை ரசித்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் இந்த மோடெல்லிங் ஆர்வத்தையும் ஏற்க துவங்கி இருந்தான் ...
சஞ்ஜீவ் " சூப்பர் அம்மு ... நல்லா பண்ணு. சேரி இன்னும் கொஞ்ச நேரம் நின்னா என் வீட்ல இருந்து கால் வந்துரும் இன்னும் இங்க என்ன பண்றனு .... மண்டபத்துக்கு வரியா ?" என்று கேட்க அவளோ " இல்லப்பா நான் மேகாவோட அப்டியே அவ வீட்டுக்கு போறேன் எங்களுக்கு 3 மணிக்கு ட்ரெயின் கிளம்புறேன் அவளோடேயே . " என்று கூற
அவனோ அவளை அனுப்ப மனமின்றி சரி என்று தலை ஆட்டியவன் " சரி ட்ரெயின் ஏறிட்டு கூப்புடு நான் நைட் கால் பண்றேன் " என்று அவள் கையை பிடித்தபடி கூறியவன் அவளின் கூம்பிய முகத்தை கண்டு குழம்பினான் .
அவளோ மனதில் அவனை வருத்தவள் " எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்ல " என்று கூற
அவனோ புருவம் சுருக்கி " இந்த சுடிதார் நீ ஏற்கனவே போட்டு இருக்கியே அம்மு ... நல்லா தான் இருக்கு " என்று கூற
அவளோ அவனை முறைத்தவள்" நானா கேட்டா தான் சொல்லுவீங்களா ?" என்று கேட்க
அவனோ முழித்தவன் " கேட்டா தான சொல்ல முடியும் ? இதுக்கெதுக்கு கோவப்படுற ?" என்று கேட்க
அவளோ அவனை எதனால் அடிப்பது என்று யோசித்தவள் அவன் கழுத்தின் அருகில் கையை நெறிப்பதை போல் கொண்டு சென்றவள்" போடா ரோபோ " என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டாள். அவனோ அவள் சென்ற திசையை நோக்கி சிரித்தவன் சக்தியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான் . அன்று திருமணத்திற்கு பின்னான சடங்குகள் முடிந்து பெண்ணை அவர்கள் வீட்டில் சென்று சகல விதத்திலும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப சஞ்சீவியை எதிர்பாராத வகையில் சுபத்ரா அவனை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள். சஞ்ஜீவ் அவனின் கலங்கிய கண்ணை துடைத்தவன் " என்ன குட்டிமா இது .... " என்று கேட்க
அவளோ விசும்பியபடியே " தேங்க்ஸ் அண்ணா " என்று கூறியவள் அவனின் கையை பற்றியபடி நன்றியுடன் நோக்க அவனோ அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவன் கார்த்திக்கிடம் திரும்பி " பத்திரமா பார்த்துக்கோங்க .... " என்று கூற அவனோ " நான் பாத்துக்குறேன் " என்று கூறி அவளை அழைத்து சென்றான் . சஞ்சீவிற்கு ஏதோ பெரும் பாறாங்கல்லை தலையில் இருந்து அகற்றியதை போல் இருந்தது .... இனி அவன் மீண்டும் ஓட வேண்டும் , பட்ட கடனை அடைக்க ஓட வேண்டும் என்று நினைவு வர ஒரு பெருமூச்சு விட்டவன் அன்னை மற்றும் தந்தையை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்து விட்டான் சக்தியும் அவனுடனே வந்து விட்டான் .
அன்று அவர்கள் வீட்டில் இன்னும் வெளியூருக்கு செல்ல வேண்டிய சில சொந்தக்காரர்கள் இருக்க சக்திக்கும் சஞ்சீவிற்கும் மொட்டைமாடி தான் படுக்கை ஆகியது . அவர்கள் இருவரும் நாளை வைகையில் கிளம்புவதாக இருந்தது . அவர்கள் மெத்தையை விரிக்கவும் சஞ்சீவினி அன்னை அங்கு வரவும் சரியாக இருந்தது .
( சஞ்சீவினி அன்னை பெயர் சரண்யா என்று வைத்துக்கொள்வோம் )
சஞ்சீவினி அன்னை மேலே வருவதை பார்த்த சக்தி அவன் காதில் " டேய் மாதாஜி எப்போதானு காத்திருந்து இன்னைக்கே வந்துருச்சு நீ சமாளி என்னால அடி வாங்க முடியாது " என்று கூறிவிட்டு அங்கே மொட்டைமாடியிலேயே தண்ணீர் தொட்டிக்கு செல்லும் ஏணியில் ஏறி தண்ணீர் தொட்டிக்கு சென்றுவிட்டான் வராத அழைப்பை பேச .
சஞ்ஜீவோ அவனை கண்டு தலையில் அடித்தவன் அன்னையை பார்த்து " என்னம்மா இந்நேரம் என்ன தேடி வந்துருக்கீங்க " என்று கேட்க
அவரோ அவன் விரித்து வாய்த்த பாயில் அமர்ந்தவர் " ரொம்ப நிறைவா இருக்குடா .... எப்படி முடிக்க போறோம்... பொட்டப்புல வாழ்க்கைனு ரொம்ப பயந்துக்கிட்டு இருந்தேன்....என்ன தான் திட்டினாலும் அவ இல்லாம வீடே வெறிச்சுனு இருக்கு " என்று கூற அவனும் ஆமோதித்தான் .
பின் சிறிது தயங்கியவர் மகனின் முகத்தை பார்த்து " அந்த புள்ள யாருப்பா ?" என்று கேட்க அவனோ " எந்த பொண்ணு மா ? அந்த மண்டபத்துல 100 பொண்ணுங்க இருந்தாங்க " என்று சொல்ல அவரோ மகனை முறைத்தவர் " அதான் போட்டோ எடுத்தியே ஜோடியா ... அந்த பொண்ணு தான் " என்று கேட்க அவனோ அவரை கூர்ந்து பார்த்தவன் " ஜோடின்னு நீங்களே சொல்லிடீங்களே ... இதுல நா இன்னும் என்ன சொல்ல ?" என்று கேட்க அவரோ மகனின் இந்த பதிலை ஈயாடாமல் அமர்ந்திருந்தார் .
பதறியவர் " என்னடா சொல்ற ? " என்று கேட்க அவனோ அவரை கூர்ந்து நோக்கியவன் " ஏதோ நா foreign போறேன்னு சொன்னதும் உங்க தம்பி பொண்ணு தரேன்னு சொன்னதா கேள்வி பட்டேன் " என்று கூற அவரோ அவனை இது எப்படி உனக்கு தெரியும் என்பதை போல் பார்த்தார் .
சஞ்ஜீவ் " வந்ததும் வராததுமா உங்க தம்பி வந்து என்கிட்டே சொன்ன விஷயம் இதான் ..... இத்தனை நாளா கஷ்டப்பட்டோம் அப்போ எங்க போனார் இவர் ? " என்று கேட்க
அவனின் அன்னையோ " டேய்ய் அதெல்லாம் ... " என்று கூற
அவனோ கையை உயர்த்தியவன்" அம்மா .... எனக்குன்னு நா ஆசைப்படற ஒன்னு .... இவள் தான் . நீங்க என்னை கேக்காம இந்த மூணு வருஷத்துல யாருக்கும் வாக்கு குடுத்துட்டு உக்கார கூடாது ... அப்பா என் கல்யாணத்த பத்தி யோசிக்க கூட மாட்டாரு அது எனக்கு நல்லா தெரியும். எனக்குன்னு அவ இருக்கா ... அதை உங்ககிட்ட சொல்லிட்டேன் " என்று கூற
அவரோ மகனின் இந்த புது பிடிவாதத்தால் உதறல் எடுத்து தான் அமர்ந்தார் . அவரின் கணவனிற்கு தெரிந்தால் சொல்லவே வேண்டாம் ... ஆட்டமாக ஆடி விடுவார் . ஆனால் மகனின் முகத்தை பார்த்தார் ... சிறு வயதில் இருந்து தனக்கென்று எதுவுமே ஆசை கொள்ளாத மகன் முதல் முதலில் ஆசை கொண்டு கூறுவதென்னவோ இது தான் . அதுவும் அவனின் இந்த பிடிவாதம் அந்த பெண்ணை பற்றி ஒரு ஆர்வத்தை தூண்டியதென்னவோ உண்மை . அவரும் பார்த்தார் அவளை அவளின் துறுதுறு விழிகளும் குறும்பு செய்கைகளும் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அழகும் அவரை ஈர்த்ததென்னவோ உண்மை தான் .
பெருமூச்சு விட்டவர் " எனக்கு இதை ஏத்துக்க அவகாசம் வேணும் தம்பி .. " என்று கூற அவனோ அவரின் கையை பிடித்தவன் " நல்லா எடுத்துக்கோங்க .... எனக்கும் டைம் வேணும் ... உங்க மருமகளுக்கும் டைம் வேணும் இப்போ தான் first இயர் படிக்கிறா " என்று கூற அவரோ வயது வித்தியாசத்தில் மீண்டும் வாயில் கை வைத்தார் " ஆறு வயசு வித்யாசமா ... எப்படி டா ?" என்று கேட்க சக்தியோ " மம்மி அதை நான் சொல்றேன் " என்று இவர்கள் கதையை கூற அவரால் தனது மகனா இவற்றையெல்லாம் செய்தான் என்று நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ..
சக்தியோ அவரின் திறந்த வாயை பார்த்தவன் " டேய்ய் மம்மி உறைஞ்சுட்டாங்கடா உன் திருவிளையாடலை கேட்டு " என்று கூற
அவரோ அவனை அடித்தவர் " எங்குட்டோ நல்லா இருந்தா சரி . பாத்துக்கோ டா ..... உனக்கு இனி எந்த தொந்தரவும் வராது ... அம்மா பாத்துக்குறேன் . எப்போ கெளம்பனும் " என்று கூற அவனோ அன்னையின் மடியில் தலை வைத்து படுத்து விட்டான் ஒரு வித நிம்மதியுடன் " இன்னும் ரெண்டு மாசத்துல மா " என்று
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்று சஞ்ஜீவ் us கிளம்புகிறான் . விசா போன்ற அனைத்து formalitiesum முடிய அவன் இன்று சென்றால் திரும்பி வர மூன்று வருடங்கள் ஆகும் . சென்னையிலிருந்து அப்படியே கிளம்பும் முடிவில் அவன் இருக்க . அவனின் அன்னை மட்டும் மதுரையில் இருந்து வந்திருந்தார் அவனை வழி அனுப்ப . சுபத்ராவிற்கு பயணம் செய்யக்கூடாது என்று கூறிவிட அவளால் வர முடியவில்லை . அத்துல்யாவோ அழுது கரைந்தாள் பிரிவை நினைத்து .
அன்று விமான நிலையத்தில் சஞ்ஜீவ் பயணப்பொதியுடன் நிற்க அவனை வழியனுப்ப சக்தியும் சஞ்ஜீவின் அன்னையும் வந்திருக்க அதுல்யா மற்றும் மேகாவும் வந்திருந்தனர் . சஞ்ஜீவி அன்னை இடைப்பட்ட காலத்தில் அதுல்யாவிடம் பேசி இருந்தார் . முதலில் தயக்கத்துடன் பேசியவள் பின் அவரிடம் வாரம் ஒரு முறை என்னும் விகிதத்தில் பேசி அவரையும் மொத்தமாக கவர்ந்திருக்க அவருக்கோ இப்பொழுதே மருமகளின் மேல் அத்தனை பிரியம் வந்திருந்தது .
சஞ்ஜீவிற்கு போர்டிங்கிற்கான அழைப்பு வர அதுல்யாவோ அவனை கண்ணீர் திரையிட பார்த்துக்கொண்டிருந்தாள் . அவனோ அன்னையிடம் பேசிவிட்டு அவளிடம் வந்தவன் அவளின் கையை பற்றி " பாத்துக்கோ .... கால் பண்றேன் ..... " என்று கூற அவளோ அவனை யாரையும் பொருட்படுத்தாமல் கட்டி அணைத்தவள் " i will miss you ... terribly " என்று கூற சஞ்ஜீவின் அன்னையோ சக்தியை கூட்டிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டார் .
அன்னை அவ்விடம் விட்டு அகன்றதை உறுதிப்படுத்திய சஞ்ஜீவ் தானும் அவளை அணைத்தவன்" ப்ச் என்ன அம்மு .. குழந்தையா நீ ?" என்று கேட்டு
அவள் கண்ணீரை துடைத்துவிட அவளோ " அழ கூட கூடாதா " என்று திட்ட அவனோ சிரித்தவன் " சரி அழுதுட்டே இரு பப்ளிக் placela எல்லாரும் வேடிக்கை பாக்கட்டும் " என்று கூற
அவளோ அவனை விட்டு நகர்ந்தவள் அவனின் கையை தன் கைமேல் வைக்க வைத்து " வீக்லி ஒன்ஸ் ஆச்சும் பேசணும் , ஒழுங்கா சாப்பிடணும் , தூங்கணும் , வேற எவளையாவது பார்த்தா கொன்னுடுவேன் .... " என்று கூற
அவனோ அவள் கையை அப்படியே திரும்பியவன் " எல்லாம் செய்வேன் .... நீயும் இப்போ மாதிரியே எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும் , எப்போவும் உன்னை நீயே குறைத்து யோசிக்க கூடாது .... முக்கியமா நல்லா படிக்கணும் " என்று கூற அவளும் தலையை ஆட்ட அவனிற்கு ஏனோ இன்று அவளை விட்டு பிரிய அவன் நினைத்ததை விட கஷ்டமாக இருந்தது . அவள் அழுதுவிட்டால் ... அவனால் முடியவில்லை .
அவன் கையில் அவள் வாங்கிக்கொடுத்த காப்பை வருடியபடி அவள் நின்றுகொண்டிருக்க அவனோ அவளின் கையை பற்றியவன் அவளின் விரலில் அவளிற்காக வாங்கிய ஒரு சிறிய மோதிரத்தை மாட்டினான் "சில்வர் தான் ... பட் தோணுச்சு வாங்கினேன் " என்று கூற அவளோ அந்த மோதிரத்தையே விழி அகற்றாது பார்த்தவள் " தேங்க்ஸ் ... " என்று அவனை மீண்டும் ஒரு முறை இருக்க அணைத்து விடைபெற அவனோ அவளின் நெற்றியில் பட்டும் படாமல் முத்தமிட்டவன் அவள் அதை உணரும்முன்னே அன்னையிடமும் , சக்தியிடமும் ,மேகாவிடமும் விடைபெற்று பறந்து விட்டிருந்தான் .
சஞ்ஜீவின் அன்னையின் கரங்களும் அதுல்யாவின் கரங்களும் பிணைந்து கொண்டன ... அவர்கள் இருவரின் உணர்வுகளும் கண்ணீரை வெளிவர ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொண்டனர் .... அவனின் வெளிநாட்டு பயணம் என்னென்ன கொண்டு வர காத்திருக்கிறதென்று காலம் தான் கூற வேண்டும் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro