Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

18

மதுரை ,

அன்று சுபத்ராவின் திருமண வரவேற்பு . சஞ்ஜீவ் அன்று காலையில் தான் வந்து இறங்கி இருந்தான் . அவனுடன் சக்தியும் வந்திருக்க மேகாவும் அதுல்யாவும் அன்று காலை கிளம்பி மதியம் வந்து சேர்ந்திருந்தனர் . அந்த கல்யாண மண்டபம் முழுவதும் அழகிய மின்விளக்குகளின் ஒளியில் தகதகக்க அதற்கு குறையாத பொலிவுடன் அந்த நட்சித்திரங்களுடன் போட்டியிடும் வண்ணம் உற்றாரும் சுற்றத்தாரும் குழுமி இருந்தனர் அந்த மண்டபத்தில் .

சஞ்ஜீவுடன் சக்தி இணைந்து வந்தவர்களை வரவேற்பது , பந்தியை கவனிப்பது என்று அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான் . திடீரென்று யாரோ உற்று கவனிப்பதை போல் ஒரு எண்ணம் தோன்ற அந்த உணர்வு எழுந்த திசையை கண்டவன் கண்ணில் விழுந்ததென்னவோ அவள் தந்தையின் பின் அதுல்யாவுடன் அழகிய கரும்பச்சை வண்ண அனார்கலியை உடுத்தியபடி அவனை உறுத்து விழித்தபடி வந்த மேகாவை தான் . அவளின் உருவத்தை 1௦ நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்து முடித்தவன் முகத்தை அந்தப்புறம் திருப்பிக்கொள்ள மேகாவோ அவன் செயலில் எழுந்த விரக்தி சிரிப்புடன் அதுல்யாவின் புறம் தன் கவனத்தை திருப்பிக்கொண்டாள்.

சஞ்ஜீவ் வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்தவன் பார்வை வாயிலிற்கு செல்ல அவன் கண்களிற்கு விருந்தென அமைந்தாள் எளிமையான aquamarine வண்ணத்திலான அனார்கலியை அணிந்திருந்த அதுல்யா . அவனின் பார்வை தன்மேல் விழுவதை உணர்ந்தவள் எப்படி இருக்கிறதென்ற ஜாடையில் வினவ அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி கன்னக்குழி தெரிய ஒரு மெச்சுதல் சிரிப்பை கொடுக்க அவளோ அவன் அதே நிற சட்டையிலும் சந்தன நிற கால்சராயிலும் இருப்பதை கண்டு சூப்பர் என்று ஜாடை காண்பித்தாள் .

சஞ்ஜீவ் மேகாவின் தந்தையை வரவேற்க சென்றவன் " வாங்க அங்கிள் ... எப்படி இருக்கீங்க ?" என்று பேச்சு அவரிடம் இருந்தாலும் பார்வை அதுல்யாவிடம் இருக்க

அவரோ " நல்லா இருக்கேன் சஞ்ஜீவ் . ஒரு வழியா தங்கச்சி கல்யாணத்த நல்லபடியா நடத்த போற. ரொம்ப சந்தோஷம் பா . foreign போக போறதா மேகா சொன்னா. சம்பாதிச்சதை உனக்குன்னு இனி சேர்க்கப்பாரு . எந்த உதவினாலும் என்கிட்டே கேளு. " என்று கூற

அவனும் புன்னகையுடன் "கண்டிப்பா அங்கிள் . வா மேகா . " என்று கூற அவரோ அதுல்யாவை முன்னே அழைத்தவர் " இது மேகாவோட ஸ்நேகிதி அதுல்யா . உன்கிட்ட தான் படிச்சதா சொன்னா . லீவ்க்கு வீட்டுக்கு மேகாவோட வந்துருந்தா அதான் எங்களோட கூப்டுட்டு வந்துட்டேன் " என்று கூற

அவனோ குறும்பு பார்வையுடன் " ஓஒ அப்டியா நிறைய ஸ்டுடென்ட்ஸ் படிச்சதால சரியா ஞாபகம் இல்ல அங்கிள். ஹாய் நீங்களும் உக்காருங்க " என்று கூற மேகாவே அவனின் செயலில் சிரிப்பை மிகவும் பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்தினாள்.

அவளோ அவனை தீயாய் முறைத்தவள் அவனை கடந்து செல்லும் முன் இடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டு செல்ல அவனோ அவள் திடீர் செய்கையை எதிர்பாராமல் அவுச் என்று கத்தியவன் அவளை பார்க்க அவளோ அவரை முறைத்துவிட்டு சென்று அமர்ந்து கொண்டாள். அங்கே மேடையில் சுபத்ரா கார்த்திக்கின் அருகில் நிறைந்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் . எப்படியோ காதலித்தவனையே கல்யாணம் செய்வது , அதுவும் அவர்கள் எதிர்பார்த்த சீர் மற்றும் நகைகளுடன் திருமணம் செய்வது ஒரு வித சந்தோஷத்தை கொடுக்க அந்நிமிடம் அவளிற்கு அவள் செய்த தவறு மொத்தமாக மறந்தது என்று தான் கூற வேண்டும் .

கார்த்திக்கின் அன்னைக்கோ சுபத்ராவை பார்க்க பார்க்க கோபம் கனன்றது . என்ன தான் அவர்கள் அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே செய்திருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அவளின் மேல் அவரிற்கு த்வேஷம் வளர்ந்ததென்னவோ உண்மை . அது எவ்வகையில் அவளின் வாழ்வையும் அவளால் அவள் அண்ணனின் வாழ்வையும் புரட்டி போடப்போகிறதென்பதையும் அவரே அப்பொழுது எதிர்பார்த்திருக்க மாட்டாள் .

சஞ்ஜீவின் தந்தை மகளின் திருமணத்தால் சற்று இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க சஞ்ஜீவின் அன்னையின் விழிகளோ மகனையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது . அவனால் அல்லவே இன்று அவர்கள் குடும்ப மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது . அவனை கவனித்துக்கொண்டிருந்தவர் கண்ணில் அதுல்யா மற்றும் சஞ்ஜீவின் சம்பாஷணைகள் தவறாமல் விழுந்தது .

அவர் புருவம் சுருக்கி யோசித்துக்கொண்டிருக்க அங்கே ஒரு வடையை சாப்பிட்டபடி வந்த சக்தி " மம்மி வாடை சூப்பரா இருக்கு வேணுமா ?" என்று கேட்க

அவரோ அவனை பார்த்தவர் " டேய்ய் அது யாருடா ?" என்று கேட்க

அவனோ அங்கே மேகா அவனையே முறைப்பதை பார்த்தவன் பார்வையை அன்னையின் புறம் திருப்பி " அது மேகா சஞ்ஜீவோட ஸ்டுடென்ட் " என்று கூற

அவரோ " ப்ச் அது இல்ல அந்த பொண்ணுக்கு பக்கத்துல இருக்க பொண்ணு " என்க

சக்திக்கோ அபாய மணி அடிக்க துவங்கியது " அது ... அதுவும் சஞ்ஜீவோட ஸ்டுடென்ட் தான் " என்று கூற

அவரோ அவனின் திருட்டுமுழியை அவதானித்தவர் " ஏய்ய்ய் உண்மையை சொல்லு இல்ல .... "

சக்தியோ " அம்மா உண்மையாமா அவனோட ஸ்டுடென்ட் தான் அந்த பெண்ணும் வேணுனா உங்க புள்ளை கிட்டயே கேளுங்க .... " என்று கேட்க

அவரோ " அப்டியே உன் friend சொல்லிட்டாலும் அவங்கப்பா மாறியே அழுத்தம் ..... நா கூட என்னவோ நெனச்சேன் " என்க

சக்தி சற்று அவர் அருகில் குனிந்தவன் " என்ன நினைத்தீர்கள் " என்று நாடகபாணியில் கேட்க

அவரோ அவனை முறைத்தவர் " போய் வேலைய பாருடா திங்க தூங்க அதை தாண்டி ஒன்னும் தெரியாது நகரு " என்று அவனை தள்ளிவிட்டு செல்ல அவனோ கையில் வைத்திருந்த வடை கீழே சிதறியதில் வடை போச்சே என்றது போல் அதை ஒரு நிமிடம் பாவமாக பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான் தனது நண்பனிடம் இதை கூற .

சக்தி சஞ்சீவைத் தேடி பந்தி நடக்குமிடம் நோக்கி செல்ல அவனை ஒரு கரம் இடை மறித்தது . அந்த வலைக்கரத்தை பார்த்தே யாரென்று அறிந்தவன் சுற்றிமுற்றி பார்த்து " என்ன பண்ணிக்கிட்டு இருக்க மேகா?" என்று பல்லை கடித்தபடி கேட்க அவளோ அவனின் அக்குரலில் பொறுமை இழந்தவள்

" பேசணும் " என்று கூற அவனோ அவள் நின்ற தோரணையில் இங்கிருந்து நகரமாட்டாள் என்று புரிய மண்டபத்தின் பின்னால் அழைத்து சென்றான் கையில் ஆளுக்கொரு கிண்ணம் பனிக்கூழை எடுத்தபடி .

இருவரும் அந்த மண்டபத்தின் பின்னால் வந்து நிற்க மேகாவே பேச்சை தொடங்கினாள் " ஏன் இப்டி behave பண்ற? "

சக்தி " நான் ஒழுங்கா தான் behave பண்றேன் நீ தான் வித்யாசமா பண்ற ... நானா உன்கிட்ட பேச ஆரம்பிச்சேன்? நீ தான பேச ஆரம்பிச்ச " என்று கேட்க

மேகாவோ "நான் சும்மா ஒரு நாள் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தப்போ தெரியாத யார்கிட்டயாவது சொன்னா பெட்டராகும்ன்னு எங்கயோ படிச்சதை வச்சு உன்கிட்ட சொன்னேன் ..... அதுக்கு அப்புறம் என்கிட்டே பேசுனது யாரு ? எனக்கு interest இருக்குற மாதிரியே quotes அனுப்பிச்சது யாரு ? பொசஸிவ் ஆனது யாரு ?என்னோட தாய் மொழி தெலுகு அதை எதுக்கு நீ கத்துகிட்ட ? எல்லாமே நீ பண்ணுவ ... ஹோப்ஸ் குடுப்ப.... அதை நம்பி உன்கிட்ட பேசுனா.... என்ன அலையுறவ அப்படின்ற ரேஞ்சுக்கு பேசுவ அப்டி தான? " என்று கேட்க

அவனிடமோ அவளின் எந்த கேள்விக்கும் பதிலில்லை அவள் அவனின் இந்த சமைந்த தோற்றத்தில் வெறுப்படைந்தவள் " ஏதாவது சொல்லுடா .... ஏன் இதெல்லாம் செஞ்ச ? மனச தொட்டு சொல்லு உனக்கு என்மேல எதுவுமே இருந்ததில்லன்னு " என்று

அவன் நெஞ்சை தொட்டு கேட்க அவனோ சிறிது பின்னே நகர்ந்தவன் " இல்ல .... உன்ன நா அப்படி பார்க்கல . நீயா கற்பனை பண்ணிக்கிட்டதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது ..... " என்று கூற

மேகா" கற்பனை பண்ணிகிட்டேனா ? ஆயிரம் உதாரணம் சொல்லுவேன் சக்தி நான் கற்பனை பண்ணலன்னு நிரூபிக்க ..... சக்தி நெஜமா சொல்லு பிராங்க் தான பண்ற ? அப்பா வேற எனக்கு காலேஜ் முடுஞ்சதுமே மாப்ள பாக்கணும்னு சொல்லிட்டு இருக்காரு டா அதுக்குள்ள.... " என்க

அவனோ ஒரு ஏளன சிரிப்புடன் " ஓஓ அதான் அவர் மாப்பிள்ளை பாக்குறதுக்குள்ள நீயே பார்த்துரலாம்னு என்கிட்டே வந்து பேசிகிட்டு இருக்கியா ? சாரி எனக்கு interest இல்ல " என்று கேட்க அந்த நொடி சரேலென்று நிமிர்ந்தவள்

வெறுத்தே போனாள் அவனின் இந்த போக்கில்" இப்போ கூட ஏதோ ஒரு காரணத்துக்காக நீ பொய் சொல்றியோனு தோணுது .... இதுக்கு எதுக்குடா என் lifela வந்த ? நானே என்ன சுத்தி இருந்த பிரெச்சனையை எல்லாம் சமாளிச்சுட்டு என்னை நானே இறுக்கமா வச்சுக்கிட்டு தான இருந்தேன் .... ஏன் வந்த ? எதுக்கு என்னோட சின்ன சின்ன ஆசையையெல்லாம் செய்ய வச்ச ?அம்மா இல்லாம எவ்ளோ பிரச்சனை அப்பா வீட்ல இருந்து எவ்வளவு பிரேச்சனை...... உன்கிட்ட தான எல்லாத்தையும் சொன்னேன்...  ஏன்? ஏன் ? .... ரொம்ப ஈஸியா பேசுறேன்னு என்ன ரொம்ப ஈஸியா தூக்கி போட்டுடேல? " என்று

கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் "உன்னை நம்பி சொன்ன விஷயத்தை எல்லாம் என்னைக்கு என் character assasinate பண்ண நீ யூஸ் பண்ணியோ அன்னைக்கே உன்ன நான் தூக்கி போட்டு இருக்கணும் . நீ என்னடா என்னை வேணாம்னு சொல்றது ? இனி நீ என் வாழ்க்கைல என்னைக்கும் வேண்டாம் .... கடைசில நீயும் என்ன யூஸ் பண்ணிக்கிட்டியா சக்தி ? " என்றவள் சிறிது நிதானித்து கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுத்தி துடைத்தவள் அவளின் கைப்பையிலிலிருந்த ஒரு சிறிய கீ செயினை அவனை நோக்கி எறிந்தவள் திரும்பி நடக்கத்துவங்கிவிட்டாள் "இனி என்னைக்கும் உன்ன நான் என் வாழ்க்கைல பார்க்கவே கூடாது " என்று கூறிவிட்டு .

அவள் செல்லும் வரை கல் போல் நின்றவன் கண்களில் அவள் கண்ணை விட்டு மறைந்த நொடி வெளிவந்த கண்ணீர் ..... அவனின் வலியா? இயலாமையா ? அந்த நேரம் அவன் தோளில் ஒரு கை விழ கண்களை அழுத்தி துடைத்தவன் திரும்ப அங்கே நின்றிருந்ததென்னவோ அதுல்யா தான் . அவளை கண்டு திகைத்தவன் " ஹே வாலு இங்க என்ன பண்ற ?" என்று கேட்க

அவளோ அவனை ஒரு நொடி உறுத்து நோக்கியவள் அங்கு நடந்த சம்பாஷணைகள் அனைத்தையும் கேட்டிருந்தாள் பின்

ரணத்தை மேலும் கிளறவேண்டாமென்று சிரித்த முகத்துடன் " எங்க அண்ணா உங்க friendah ? மேகாவோட வானு பெருசா கூப்டாரு வந்ததுல இருந்து கண்டுக்கவே இல்ல " என்று கூற

அவனோ அப்பொழுதே சஞ்ஜீவின் அன்னை கூறியவற்றை நினைவு கூர்ந்தவன் " தங்கையே உன் ஆளு கண்டுக்களையோ இல்லையோ உன் மாமியார் நல்லா கவனிச்சுட்டாங்க எதுக்கும் கவனமா இருந்துக்கோ " என்று நடந்தவற்றை கூற

அவளோ அசட்டையாக தோளை குலுக்கியவள் " அதெல்லாம் அவர் பார்த்துப்பாரு " என்று கூற

அவனோ அவளை விழி உயர்த்தி பார்த்தான் " ரொம்ப நம்பிக்கை போலயே " என்று கூற

அவளோ அவனை சற்றும் குறையாத கூர் பார்வையுடன் எதிர்நோக்கியவள் " அவர் என்னைக்கும் என்ன விட்டுற மாட்டார் அண்ணா... எந்த நிலமைலயும் .... " என்று அழுத்தமாக கூறிவிட்டு செல்ல அவளின் சஞ்ஜீவின் மீதான இந்த நம்பிக்கை அவனிற்கு தான் செய்த செயல்களிற்கான குற்றவுணர்வை தூண்டிதான் விட்டது . மிகவும் தாமதமாகவே இதை தவறான முறையில் கையாண்டுவிட்டோமோ என்று யோசிக்க துவங்கினான் சக்தி .

வரவேற்பு நடந்துகொண்டிருக்க மேகா , மேகாவின் தந்தையோடு அதுல்யாவும் மேடை ஏற மேகாவின் தந்தையோ அங்கே கீழே நின்றுகொண்டிருந்த சஞ்சீவையும் புகைப்படத்தில் இணைந்து நிற்க அழைத்தார் . சஞ்ஜீவிடம் அதற்குள் சக்தி நடந்தவற்றை கூறி இருக்க அவனோ அதுல்யாவை ஒரு பார்வையும் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அன்னையையும் ஒரு பார்வை பார்த்தவன் ஒரு முடிவுடன் மேடை ஏறி அதுல்யாவின் அருகில் வந்து நின்றான் புகைப்படத்திற்கு .

அவனின் இந்த செயலை அதுல்யாவே எதிர்பார்க்கவில்லை என்பதே மெய். அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ வெகு இயல்பாக புகைப்படத்திற்கு சிரித்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான் அன்னையை ஒரு பொருள் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு . சஞ்ஜீவின் அன்னையோ மகனின் இந்த செயலில் தானும் அதிர்ந்தவர் பின் அதுல்யாவை ஒருமுறை முழுதாக அலந்துவிட்டு மகனிடம் விசாரிக்கவேண்டும் என்பதை மனதில் உறுதி செய்துவிட்டு அங்கிருந்து அகன்றார் .

அன்று பரபரப்புகள் அனைத்தும் முடிந்து அனைவரும் உறங்க செல்ல மணி பன்னிரெண்டாகி விட்டது . சஞ்ஜீவ் ஓடிக்கொண்டே இருக்க அவளோ மேகாவின் தந்தையுடன் விரைவிலேயே கிளம்பும் சூழலில் சிக்கிக் கொண்டவள் அவனை சக்தியின் மூலமாக உணவுண்ண வைத்த பின்பே நிம்மதியுற்றாள் .அவர்களின் இந்த சின்ன சின்ன பரிமாற்றங்களை இப்பொழுதே அருகில் இருந்து கண்ட சக்தி தான் என்னென்ன செய்திருக்கிறோம் என்று யோசிக்க துவங்கினான் ( ரொம்ப லேட் டா அம்பி ) . அடுத்த நாள் விடியல் சுபத்ராவின் காதலிற்கு மட்டுமல்ல சஞ்ஜீவி காதலிற்கும் ஒரு அஸ்திவாரத்தை தரவிருந்ததை எவருமே அறிந்திருக்க மாட்டார்கள் . 

hi everyone .... i guess inga neraya perukku sakthiyoda portion padikkela kovam varalaam .... just wanted to share this ... namma generationla ippo therinjo theriyaamalo   situationshipla irukuradhu common aayruchu... but make sure both sides are in for situationship.... if it's one sided remember... you are gonna break a heart in worst way because people waiting for old school romance do exist. 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro