10
சக்தி அப்பொழுது தான் உறங்கி எழுந்தவன் சஞ்ஜீவ் எங்கோ வேகமாக செல்வதை பார்த்து " ஞாயித்து கிழமை கொசு கூட quarter அடுச்சுட்டு தூங்கிட்டு இருக்கும் நீ எங்க டா கெளம்பிட்ட ?" என்று கேட்க
அவனோ ஒரு சிறு சிரிப்புடன் " அத்து பார்க் கூப்பிட்டா போய்ட்டு வந்துருரே" என்று கூற
சக்தியோ எழுந்து அமர்ந்தவன் " எது என் தங்காய் வந்துருக்காளா இரு டா நானும் வரேன் " என்று கூற
சஞ்ஜீவோ மனதில் சத்தென்று உற்சாகம் வடிந்து விட அவனை என்ன கூறி வர வேண்டாம் என்று தெரியாமல் அமைதியாக இருக்க அதுல்யாவோ அவனிற்கு வேண்டி கீழே தயாராகி நின்றவள் தங்கச்சி என்ற சக்தியின் குரலில் உற்சாகமானவள் " அண்ணே எப்படி இருக்கீங்க ?" என்று கேட்டு பேசிக்கொண்டிருக்க சஞ்ஜீவ் கீழே இறங்கி வந்தவன் அவர்கள் தன்னை கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து மேலும் கடுப்பாகி விட்டான் .
சக்தி " வரேன்னு சொல்லவே இல்ல நேத்து கூட text பண்ணேன் " என்று கேட்க சஞ்ஜீவோ தினம் பேசுகிறார்களா என்று அதிர்ச்சியாய் பார்த்தவன் அவளை பார்க்க
அவளோ " அட surprise பண்ணலாம்னு தான் அண்ணா சொல்லல " என்று கூற
சஞ்ஜீவோ கையை கட்டி அவர்கள் பார்த்தவன் " பேசி முடுச்சுட்டேங்கன்னா போகலாமா " என்று எழுந்த கோபத்தை கட்டுப்படுத்தியபடி கேட்க அவர்களோ அப்பொழுது தான் அவனை பார்த்தார்கள் .
சக்தி " வாடா மச்சான் " போகலாம் என்று கூறி முன்னே நடக்க சஞ்ஜீவோ அவன் பின்னே செல்லப்போன அதுல்யாவின் கையை பிடித்து தன்னுடன் வைத்துக்கொண்டான் .
அவள் அவனை கேள்வியாய் பார்க்க அவளை ஒரு ஊடுருவும் பார்வை பார்த்தவன் அவள் கையை பற்றியபடியே நடக்க ஆரம்பித்தான் . இது அனைத்தும் அவளின் அத்தையின் கண்களில் இருந்து தப்பவில்லை எனில் ஏதும் கேட்க முடியாது என்று உணர்ந்தவர் அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தபடி உள்ளே சென்றார் .
சக்தி ஏதோ பேசியபடி சென்றவன் இவர்கள் இருவரும் கையை பற்றியபடி பின்னே வருவதை பார்த்தவன் அதன் பின்பே வந்த சிரிப்பை அடக்கியவன் சஞ்சீவி வெறுப்பேற்ற துவங்கினான் . அதுல்யாவின் மறுபுற கையை பற்றியவன் " தங்கச்சி உனக்கு ஊஞ்சல்ல ஆட பிடிக்கும்ல நா ஆட்டி விடுறேன் வாடா " என்று இழுக்க
சஞ்ஜீவோ அவனை பல்லை கடித்தபடி பார்த்தவன் " அப்பறோம் ஆடிக்கலாம் எங்கயாது போய் உக்காரலாம் வா " என்று சொல்ல
சக்தியோ " ஏன்டா இப்டி ஒரு பாசமலர்களுக்கு நடுவுல வர பொறாமை புடுச்சவனே நீ வா டா தங்கச்சி " என்று கூறி அவளை இழுக்க அத்துல்யாவோ சஞ்ஜீவை பார்வையாலேயே கெஞ்சினாள் . அவளின் கெஞ்சல் நிறைந்த கண்களை பார்த்தவன் அவள் கையை மெதுவாக விட அவளோ சக்தியுடன் அரை மனதாக சென்றாள்.
சக்தி சஞ்ஜீவின் முகபாவனையில் வந்த சிரிப்பை அடக்கியவன் அதுல்யாவை அழைத்துக்கொண்டு ஒரு ஊஞ்சலிற்கு சென்றான் . சஞ்சீவ் சிறிது நேரம் பொறுத்தவன் ஐந்து நிமிடம் கூட பொறுக்க முடியாமல் சக்தி மற்றும் அதுல்யாவின் அருகில் வந்தவன் சக்தியை பார்த்து " ஹே நா உன்னை presentation upload பண்ண சொன்னேன்ல பண்ணியா ?" என்று கேட்க
க்தியோ அவனை குழப்பமாய் பார்த்தவன் " ஏய்ய் புதன்க்கெழமை தானடா presentation " என்று கூற
சஞ்ஜீவோ" அதுக்காக வெட்னெஸ்ட்ய தான் பண்ணுவியா போ போய் upload பண்ணு "என்று கூற சக்தி மட்டுமல்லாது அதுல்யாவிற்குமே சிரிப்பு எட்டிப்பார்க்க துவங்கியது .
சக்தி ஊஞ்சலை விட்டவன் "" சரி சரி கத்தாத " என்றபடி செல்ல அதுல்யா ஊஞ்சலில் இருந்து இறங்க பார்க்க சஞ்ஜெவோ அந்த ஊஞ்சலில் கம்பியை பற்றியவன் அதை மெல்லமாக ஆட்ட துவங்கினான் .
அதுல்யா அதில் ஆச்சர்யம் அடைந்து அவனை விழிவிரித்து பார்க்க அவனோ அப்பொழுது தான் தான் செய்து கொண்டிருந்த செயலை உணர்ந்தவன் " அது அது ... வேகமா ஆடிட்டு இருக்கேல அப்டியே நிறுத்துனா கீழ விழுந்துருவ அதான் " என்று கூற
அவளும் சிரிப்பை அடக்கியபடி " ஆமா ரொம்ப வேகமா நின்னுடிருந்துச்சு இப்போ நீங்க மெதுவா அதை ஆட்டி விடுங்க " என்று கூற சஞ்ஜீவ் ஒரு வெட்கப்புன்னகை சிந்தியவன் பின் சிறிது நேரத்தில் ஊஞ்சலை நிறுத்திவிட்டான் .
அதுல்யா ஊஞ்சலிலிருந்து இறங்கியவள் அவனிடம் வந்து நிற்க அவனோ அவளை பார்த்து புன்னகைத்தான் . அதுல்யா அவனின் கையை பற்ற அவனோ சுற்றிமுற்றி பார்த்தான் . அதுல்யா அவன் செய்கையில் சிறிது கோபம் எட்டிப்பார்க்க " இது வீட்டுல இருந்து இங்க வர என் கைய உடைக்கிற மாதிரி பிடிச்சுட்டு வரேல தெரியலையோ?" என்று கேட்க சஞ்ஜீவோ அசடு வழிந்தவன் அவள் கையை தானும் மென்மையாய் பற்றிக்கொண்டான் .
இருவரும் அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர அவனோ சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன்" அத்தை வீட்ல இருந்து தான் போய்ட்டு வர போறியா ?" என்று கேட்க
அவளோ " ம்ம் அப்டி தான் நெனச்சுருக்கேன் ஆனா அம்மாக்கு இதுல அவளோ இஷ்டம் இல்ல ... அதுனால ஒரு ஒரு வாரம் பார்த்துட்டு அப்பறோம் ஹாஸ்டல் போறதுனா பொய்க்குறேன்னு சொல்லிருக்கேன் " என்று கூற
சஞ்ஜீவோ ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் பின் " நா அம்மா அப்பா தங்கச்சி தான் என் வீட்ல .. அம்மா housewife அப்பா டீச்சரா ஒர்க் பண்ணாரு ஆனா ரொம்ப கம்மியான வருமானம் தான் . அப்பா கூட பிறந்தவங்க எல்லாரையும் அப்பா தான் படிக்க வச்சாரு அதுனால பெருசா எங்களுக்கு சேமிப்புனு ஏதும் இல்ல . அவங்கவங்க இப்போ அவங்கவங்க familyoda செட்டில் ஆயிட்டாங்க என் அப்பா தேவை இல்லாதவரா ஆயிட்டாரு . .... சின்ன வயசுல இருந்து அதுனால என்னால முடுஞ்சளவுக்கு பார்ட் டைம் ஜாப்ஸ் பண்ணி தான் என் செலவை நா பார்த்துப்பேன் . படிச்சது எல்லாமே கார்பொரேஷன் ஸ்கூல்லயும் ஸ்சோலர்ஷிப்லயும் தான் . இப்போ தங்கச்சி பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி வருஷம் படிச்சுட்டு இருக்கா.. அவளுக்கு நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் . கொஞ்சம் கொஞ்சமா நகை ஒரு 20 சவரன் இப்போ தான் சேர்த்துருக்கேன் .salary hike வந்துருச்சுனா இன்னொரு 2 இல்ல மூணு வருஷத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்டு வீடு வாங்குற ஆசை இருக்கு " என்று கூற
அதுல்யா அவன் கூறுவதை பொறுமையாக கேட்டவள் அடுத்து அவன் கூறப்போவதை கேட்கவும் அவன் முகத்தை பார்க்க அவனோ அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் " இதெல்லாம் ஏன் உங்கட்ட சொல்றேன்னா.... i wish to spend my lifetime with you " அதுல்யா இதை அவனிடம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை .
அவனின் கட்டுக்கோப்பான மனநிலைக்கும் மிகவும் சாதாரணமான உரையாடல்களை கூட பேச தயங்கும் தயக்கமும் இத்தனை விரைவில் அவன் மனதில் இருப்பதை உரைப்பான் என்று அவள் நினைக்கவில்லை . அவளின் அதிர்ந்த விழிகளை பார்த்து புன்னகைத்தவன் " என்னடா ரூல்ஸ் ராமானுஜம் இப்டி காலேஜ் first இயர் கூட போகாத பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானேன்னு பாக்கறியா? " என்று கேட்க அவளோ தலையை ஆம் என்பதை போல் ஆட்டினாள் .
அவனோ ஒரு பெருமூச்சை விட்டவன் " நீ வேலூர்ல படிப்ப எப்படியும் நான் செட்டில் ஆகா ஒரு அஞ்சு வருஷமாவது ஆகும் சரி நீ படிச்சு முடிச்ச பிறகும் எனக்கு இதே மாதிரி ஒரு எண்ணம் இருந்து நீயும் வேற லவ் ஏதும் இல்லாம இருந்தா அப்போ ப்ரொபோஸ் பன்னலாம்னு நினைத்தேன் .... நீ காலைல வந்து நின்னப்போய் புருஞ்சுருச்சு ..... இனியும் நீயும் நானும் ஒரே வீட்ல இருந்தா நல்லா இருக்காது .... அதான் தெளிவா என் மனசையும் வாழ்க்கையும் சொல்லிட்டு வீடு மாறிறலாம்னு நெனச்சேன் " என்று கூற
அவளோ அவனை புன்னகையுடன் பார்த்தவள் " sirku என்ன காலைல பார்த்ததும் என்ன புருஞ்சுச்சு ?" என்று கேட்க
அவனோ சிரித்தவாறு "உங்களுக்குள்ளயும் அப்டி ஒரு எண்ணம் வந்துருச்சுனு புருஞ்சுச்சு" என்று கூற
அவளோ சிரித்தவாறு அவன் கையை பற்றியவள் " புரிஞ்சது சரி தான் ..... நீங்க ரூம் வெளிய எடுத்தா டிஸ்டன்ஸ் ஜாஸ்தியாகும் வாடகையும் ஜாஸ்தி ஆகும்ல ?" என்று கேட்க
அவனோ அதை யோசித்தவன் ஆம் என்னும் விதமாக தலை ஆட்டினான்.
அவன் கையில் அழுத்தத்தை கூட்டியவள் " நா ஹாஸ்டல் போய்க்கிறேன் " என்று கூற
அவனோ அவளை பார்த்தவன் " இல்ல மா வேண்டாம் ... ஹாஸ்டெல்ல பொருந்தி போகிறது அவளோ ஈசி இல்ல .. நீ ரொம்ப செல்லமா வேற வளந்துருக்க " என்று கூற
அவளோ " அட என்னப்பா நீங்க நா சரி கொஞ்ச நாளாச்சு இந்த படத்துலலாம் வர மாதிரி முஸ்தபான முஸ்தபானு பாடலாம்னா விட மாட்டிங்க போலயே ... அதெல்லாம் முடியாது நா ஹாஸ்டல் தான் போவேன் .... நீங்க இங்கயே இருந்துக்கோங்க " என்று கூற
அவனோ இந்த புரிதலில் தானடி உன்னில் தொலைந்தேன் என்று நினைத்தவாறு "சரிங்க மேடம் தங்கள் சித்தப்படியே " என்று கூற அவளும் சிரித்தபடி அவன் தோளில் தலை சாய்க்க வர
அவனோ அவள் தலையை பிடித்து சற்று மென்மையாய் விலக்கியவன் அவளின் குழப்பமான முகத்தை பார்த்து " டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணுங்க மேடம் ... we have years to go " என்று கூற
அவளோ " அதானே பார்த்தேன் ரூல்ஸ் ராமானுஜம் ரொமான்டிக் ஹ்ரித்திக் ரோஷனாயிருச்சேன்னு ..... நீ திருந்த மாட்ட பா " என்று கூறியபடி விலகி அமர்ந்துகொண்டாள் .
பின் சிறிது நேரம் பேசியவர்கள் பூங்காவை விட்டு வெளியேற அவன் அவளிடம் பேசியபடி வந்தான் " அத்து நான் உனக்கு தெரியணும்னு சொன்னேனே தவிர இது எதுமே உன்னோட studiesah disturb பண்ண கூடாது ... நான் textlaam பண்ண மாட்டேன் ... மணி கணக்குல phoneum பேச மாட்டேன் ... மொதல்ல எப்படி இருந்தேனோ அப்டி தான் இருப்பேன் ...i don't want you to get distracted " என்று கூறியபடி இருக்க
அவளோ அவன் கையை பிடித்தவள் அவன் என்ன என்று திரும்பி பார்க்க " வீக் டேஸ் உங்களால பேச முடியாதுனு எனக்கே தெரியும் .... ஆனா வீக் எண்ட் அதாவது சண்டே .... கண்டிப்பா உங்கள நா மீட் பண்ணனும் ... சாட்டர்டே எனக்கு உங்களோட வீடியோ கால் பேசணும் ..... டிஸ்ட்ராக்ட் ஆக மாட்டேன் ஆனா எனக்கு ஏதும் கஷ்டமா இருந்தா உங்களுக்கு தான் கால் பண்ணுவேன் ... ஐ expect தி same from யு டூ இதெல்லாம் follow பண்ணுவேன்னு சொல்லுங்க நானும் நீங்க சொல்றதுக்கு ஓகே சொல்றேன் "
சஞ்ஜீவ் கை கட்டி கன்னக்கதுப்பில் நாக்கை ஒதுக்கியபடி அவளை பார்த்தவன் " அப்டி இல்லேனா ?" என்று கேட்க
அவளோ " பிரேக்கப் பண்ணிருவேன். i need a transparent relationship . " என்று தீவிரமாக கூற
அவனோ அவள் கண்ணில் தெரிந்த தீவிரத்தில் அவள் ஒரு வெளிப்படையான உறவை எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து அவள் தலையில் கை வைத்து செல்லமாய் ஆட்டியவன் " தங்கள் கட்டளையே என் சாசனம் தேவியாரே " என்று கூறியபடி அவளுடன் வீடு நோக்கி நடந்தான் .
அதுல்யா வீட்டிற்குள் நுழைய அவளின் அத்தையோ அவளை கூர்ந்து நோக்கினார் . அவளிடம் திரும்பியவர் ஜாடையாக பேசுவது போல் " யாரையும் இந்த காலத்துல நம்ப முடியுறதில்ல .... எந்த புத்துல எந்த பாம்பிருக்குனு தெரியுதா என்ன ? " என்று கேட்க
அதுல்யாவோ அவர் சம்மந்தமில்லாமல் பேசமாட்டார் என்பதால் அவரை நோக்கியவள் " புரியுற மாறி சொல்லுங்க அத்தை " என்று கேட்க
அவரோ " நா இன்னைக்கு அந்த பசங்கள காலி பண்ண சொல்ல போறேன் ... எப்படியும் இன்னும் நாலு வருஷத்துக்கு நீ இங்க தான் இருப்ப . என் மகனுக்கு என்னவோ இப்போ தான் அம்மா தனியா இருக்கானு புத்தி வந்து கூட இருக்க சொல்லி கூப்டுட்ருக்கான்.நீ தனியா இருந்து ... ஏதாச்சு ஆச்சுன்னா என் அண்ணனுக்கு நா தான் பதில் சொல்லணும் " என்று கூற
அவளோ அவர் காலையில் தனக்கும் சஞ்ஜீவிற்கும் நடுவில் நடந்த சம்பாஷனையில் எதையோ உணர்ந்து கொண்டார் என்று நினைத்தவள் . அதுல்யா " அதுக்கு எதுக்கு அத்த அவங்க காலி பண்ணனும் ... நான் தான் ஹாஸ்டல் போறேனே " என்று கூற
அவரோ அவளை கேள்வியாக பார்த்தவர் " ஏன் ஹாஸ்டல் போற ?" என்று கேட்க
அவளோ " ஜீவா கூட பார்க்கல பேசுனேன்ல அத்த அப்போ அவர் கிட்ட suggestion கேட்டேன் . அவர் தான் ஹாஸ்டெல்ல இருந்தா சீனியர்ஸ் இருப்பாங்க , கூட இருக்குற பசங்களும் இருப்பாங்க சேர்ந்து படிக்கேல நல்லா இருக்கும் அதோட ஹாஸ்டல் funlaam வேற எங்கயும் கெடைக்காதுன்னாரு அதான் போலாம்னு முடிவு பண்ணிட்டேன் " என்று கூற
அவரோ சஞ்ஜீவையும் இவளையும் தான் தான் தவறாக எண்ணி விட்டோம் போல அவ்வாறு எண்ணம் இருந்திருந்தால் விடுதிக்கு செல்ல சொல்லி இருக்க மாட்டானே என்று மனம் தெளிந்தவர் விரிந்த சிரிப்புடன் " சரி டா ஒரு ஒரு வாரம் இங்கிருந்தே போய்ட்டு வா அதுக்கு அப்பறோம் ஹாஸ்டல் போய்க்கோ procedurelaam பார்த்து வச்சு செய்ய correctaa இருக்கும் " என்று கூற
அவளோ அவரை குழப்பிவிட்டதற்கு சிரித்துக்கொண்டாள் . இது தான் அதுல்யா தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும் எந்த பிரெச்சனையும் வராமல் இருக்க தன்னாலான வரை போராடுவாள் ஆனால் அது எல்லையை மீறும் பொழுது அவள் பாஷை என்னவோ மெளனமாக தான் இருக்கும்.
naan reads and votes paathen ... 86 ,67 per padikureenga vote en poda maatreenga ? story nalla move aagama slow pacela pogura maari iruka illa edhuku vote podanumnu nenaikureengala ? yes i write for my satisfactio but votes are something which boost the interest to write ... reads illenaa ok but readskum votesku ivloo difference... i seriously can't understand what's the problem . please do say what is lagging over here apo dhaan ennaala edhaachu figureout panna mudiyum .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro