1
கருமை படர்ந்த அந்த இரவு நேரத்தில் குளிர் நிலவும் முகில் விலக்கி ஒளி கொடுக்க மின்மிப்பூச்சியாய் மின்னிய நட்சத்திரங்களும் அவன் மனதின் ரணத்தை கூட்டியதோ?
ஊரெங்கும் உறங்கிவிட கூதல் காற்றும் குழல் களைத்து விளையாட அவன் விழி மட்டும் வானமதை வெறித்திருக்க கையில் தவழ்ந்த guitar இல் இருந்து அவன் உணர்வின்றியே அந்த பாடலை இசைத்தபடி இருந்தது.
மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு
பனி விழும் காடு
ஒத்தையடி பாத
உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும்
நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும்
நீ போதுமே
அந்த அமைதியான ஆற்றின் நடுவே பயணித்த படகுவீட்டின் சப்தத்துடன் ஆற்றின் இருபுறமும் அமைந்த மூங்கில் தோட்டமும் மூலிகை வாசமும் நாசியை நிறைக்க நாயகன் மனமோ நங்கையவள் கை கோர்த்து இக்கானமதை கேட்டு ரசித்த நொடிகளை நினைவில் நிறுத்தியது.இதயத்தில் எழுந்த வலி கண்களில் கண்ணீர் நிறைக்க மனமோ அவள் பெயரை இடைவிடாது உச்சரித்தது.
தன் மனதின் போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவனை அவனது செல்போன் சிணுங்கி நிஜ உலகிற்கு அழைத்து வந்தது.
தன்னிலை அடைந்தவன் guitaarai தன் அருகில் இருந்த இருக்கையில் வைத்து விட்டு அழைப்பை ஏற்க அப்புறம் என்ன கூறப்பட்டதோ முகம் தீவிரமான பாவனையை தத்தெடுக்க "no more excuses Mr.Mark I need this to be sorted out within 2 days ."(எனக்கு காரணங்கள் தேவையில்லை திரு.மார்க் எனக்கு இதன் தீர்வு 2 நாட்களுக்குள் கிடைக்க வேண்டும்)
என்று கூற அப்புறம் மீண்டும் என்ன கூறப்பட்டதோ தனது கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தவன் பின் "I need to meet the head persons in half an hour arrange online meeting"(தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நான் இன்னும் அரை மணி நேரத்தில் பார்க்க வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் ) என்று தனது கம்பீரக்குரலில் உரைத்தவாரு தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து தனது வேலைகளில் மூழ்கினான் "சஞ்சீவ்".
பேயாய் தன்னை ஆடுவிக்கும் அவளின் நினைவுகளின் சிறையில் இருந்து அவனுக்கு தற்காலிக விடுதலை அளிக்கும் ஒன்று அவன் அலுவல் மட்டுமே .தற்பொழுது ஒரு புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகின்.றான்.
அவனோ அங்கு அவள் நினைவே சுவாசமாய் ஜனித்திருக்க இங்கு அவனின் நினைவின் நாயகியோ முகம் முழுதும் சிரிப்பில் நிறைந்திருக்க உடலை தழுவி இருந்த புதிய model கடல்பாசி நிற lehengaavodu அதற்கேற்ற முத்து வைத்த நகைகளும் சிகை அலங்காரமும் அவளை மணப்பெண் போல காட்டியது.
அவளின் முன்னே நிறுத்தி வைத்திருந்த விளக்குகள் அவளின் மானிற மேனியை தங்மென ஜொலிக்க வைக்க புகைப்பட கலைஞர் கூறுவதை போல் முகத்தில் அவளின் அக்மார்க் சிரிப்புடன் அந்த பூக்கள் நிறைந்த நந்தவனத்தில் நடுவில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
அரை மணி நேரம் முடிவுற்ற நிலையில் அந்த புகைப்படக் கழைஞர் ஷூட் வெற்றிகரமாக முடிந்தது என்று தனது பெருவிரலை உயர்த்தி காட்ட அவளோ நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
பின் அங்கிருந்து தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து அமர்ந்தவள் கண்களை இருகரங்கள் மூட முதலில் திகித்தவள் பின் ஸ்பரிசம் உணர்ந்து மேகா என்று பின்னிருந்தவளை கட்டிக் கொண்டாள்.
மேகா என்று கூறப்படும் அப்பெண்ணோ இவளை மேல் இருந்து கீழ் வரை ரசனியோடு பார்த்தவள் பின் "செம்மயா இருக்க டி நீ. Modelling side வா வா ன்னு கூப்புடுறேன் ஆனா நீ எதுக்கும் ok சொல்ல மாற்ற. College daysla எவ்ளோ interestedaa இருந்த" என்று கூற
அவளோ சிரித்தவள் தனது கழுத்தில் இருந்த சோக்கரை கழற்றியவாறே "எனக்கு அதுலலாம் interest இப்போ இல்ல மேகா இதுவே உனக்காக உன்னோட bridal wear collectionkaaga நீ கேட்டதால் தான் பண்ணேன் "என்று கூற
மேகாவோ அவள் அணிந்திருந்த lehengaavin நிறத்தை பார்த்தவள் நெற்றி சுருக்கி"ஹே உனக்கு நா collectionla பிங்க் கலர் அனுப்பி விட்டேனே நீ எப்டி இந்த aquamarine கலர் போட்டிருக்க?" என்று கேட்க
அவளோ"என்னவோ அதை விட இது எனக்கு ரொம்ப பிடிச்சது அதான் ஏன் கேக்குற?" என்று கேட்க
மெகாவோ நெற்றி சுருக்கி கையை கட்டி அவளை கண்ணாடியில் பார்த்தவள்"இது புடிச்சதால பொட்டுகிட்டியா இல்ல இந்த colour அவனுக்கு புடிக்குமேனு போட்டுகிட்டியா ?" என்று கேட்க காதனியை கழற்றிக்கொண்டிருந்த கைகள் அங்கேயே உறைய புன்னகை சிந்திய முகம் நொடியில் இறுக கண்களில் அவன் நினைவின் சிறு தாக்கமே நீரை திரட்டி இருந்தது.
மறுநொடி தன்னை சமாளித்துக்கொண்டவள் மேகாவின் கண்ணை தவிர்த்த படி "யார பத்தி பேசுற எனக்கு அப்டிலாம் ஒன்னும் இல்ல " என்று தடுமாறியபடி பதில் உறைத்தவள் குளியலறைக்குள் செல்லப் போக
மேகா அவளின் கையை பிடித்தவள்" மூணு வருஷம் ஆச்சு அத்து இன்னும் எத்தனை வருஷம் உன்னோட பிடிவாதத்தை பிடிச்சுகிட்டு உன் வாழ்கையை அழுச்சுக்க போற ? அவன் கிட்ட போய் பேசு இல்லையா அவன் வேணாம்னு நெனச்சா அதயாசு முடிவு பண்ணு ஏன்டி இப்படி உன்னையும் கஷ்டப்படுத்தி அவனையும் கஷ்டப்படுத்துற ?"என்று கேட்க
அவளோ தனது கண்கள் சிவக்க அவள் புற திரும்பியவள்"எனக்கு என் வாழ்க்கைய எப்டி வாழனும்னு தெரியும் நீ ஒன்னும் advice பண்ண வேண்டாம்." என்று மேகாவிடம் கத்தியவள் தனது உடையை மாற்றிக்கொண்டு வெளியே சென்றாள் அத்து அத்துல்யா .
வானம் தூவாளையாய் மழையதை பொழுந்திட தாய்மடியில் ஆறுதல் தேடும் மழலையாய் மழையதில் நனைந்தபடி மனதின் வலிகளுக்கு ஆறுதல் தேடினாள் மங்கையவள்.
தண்ணீரில் வரைந்த கொலமென நினைத்த அவளின் கடந்தகாலம் மனதில் மாறாத கல்வெட்டாய் பதிந்திறுக்க காரிகை அவள் கண்ணீரும் கார்மேகத்தினின்று பொழிந்த மாரியில் கரைந்து மறைந்து போனது அவள் கொண்ட காதல் போலவே.
வாழ்வில் பெரும் வலியதை தந்த அந்த பக்கங்கள் தான் என்ன?
Hi makkale naan dhaan naan dhaan aaru maadham kazhithu meendum ungal anaivarayum sandhippadhil perumagizhchi adaigiren. மறப்பதில்லை நெஞ்சே
Oru edhaarthamaana love storynga .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro