Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

43 பாதுகாப்பில்லா உணர்வு

43 பாதுகாப்பில்லாத உணர்வு

அழகு நிலையத்திலிருந்து வந்த ஆர்த்தியின் முகத்தைப் பற்றி, இடம் வலமாய் திருப்பி பார்த்த யாழினியன்,

"எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல" என்றான்.

"ஆஃப் அன் ஹவர்ல, என்னுடைய ஃபேஸ் ஒன்னும் மிஸ் யூனிவர்ஸ் மாதிரி மாறிடாது..." என்றாள் சிரித்தபடி.

"நீ நார்மலாவே அழகுதான்னு நான் தான் சொல்றேனே..."

"ஆமாம் சொன்ன..."

"அப்புறம் எதுக்கு பார்லருக்கெல்லாம் போற?"

"அதைப் பத்தி நம்ம அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். இப்போ கிளம்பலாமா?"

"எல்லாரும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க"

"நம்மளும் போகலாம். நான் மமதியை பாக்கணும்"

"சரி" என்றபடி மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான் யாழினியன்.

வெகுவேகமாய் குணமாகிக் கொண்டிருந்தாள் மமதி. *பெயின் கில்லர்* மருந்துகள் அவளது வலியை கொன்று, அவளை வலியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆர்த்தியை பார்த்தவுடன் புன்னகை புரிந்தாள் மமதி, அவளை சினேகா என்று எண்ணி.

"எப்படி இருக்க டா செல்லம்?" என்றாள் ஆர்த்தி.

"நல்லா இருக்கேன். தேங்க்யூ"

"எதுக்கு தேங்க்ஸ்?"

அவளது தோளை பிடித்து லேசாய் அழுத்தினான் யாழினியன். ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள் ஆர்த்தி.

"அம்மா, நீங்க தானே அவளுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேஷன் பண்ணிங்க? அதுக்காக தான் அவ உங்களுக்கு தேங்க்ஸ் சொல்றா" என்றாள் தியா.

அப்பொழுது தான், அவள் தனக்கு நன்றி சொன்ன காரணம் புரிந்தது ஆர்த்திக்கு.

"உன்னோட தேங்க்ஸ், யாரெல்லாம் சேர்ந்து இந்த ஆபரேஷனை பண்ணாங்களோ, அந்த எல்லா டாக்டர்ஸ்க்கும் போய் சேரும்" என்றாள் ஆர்த்தி.

"நீங்க எனக்கு சாக்லேட் தருவீங்க தானே?" என்றாள் மமதி.

"நிச்சயமா தரேன். நீ சீக்கிரமா குணமாயிட்டு வந்துடு... நம்ம மூணு பேரும் சேர்ந்து நிறைய சாக்லேட் சாப்பிடலாம்" என்றாள் தியாவை பார்த்தபடி.

"அம்மா, நான் மமதி கூட இங்கேயே இருக்கட்டுமா?" என்றாள் தியா.

தயக்கத்துடன் மதிவதனியை பார்த்தாள் ஆர்த்தி.

"அவ இங்க எந்த பிரச்சனையும் பண்ணல. அமைதியா தான் இருக்கா. அவளை எங்க கூட இருக்க விடு ஆர்த்தி. நான் அப்புறமா யார் கூடயாவது வீட்டுக்கு அவளை அனுப்பி வைக்கிறேன்" என்றாள் மதிவதனி.

"மமதி கூட ரொம்ப பேசி அவளை தொந்தரவு செய்யக் கூடாது, தியா. அவளுக்கு ரெஸ்ட் வேணும்" என்றாள்
 ஆர்த்தி.

சரி என்று சமர்த்தாய் தலையசைத்தது குழந்தை. ஆர்த்தியும், யாழினியனும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

"வானதியும், மைதிலியும் எங்க இருக்காங்க?" என்றாள் ஆர்த்தி.

"மைதிலி, ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல, பீடியாட்ரிக் செக்ஷன்ல இருப்பா. வானதி செகண்ட் ஃபுளோர்ல, அவுட் பேஷன்ட்ஸை அட்டன் பண்ணிக்கிட்டு இருப்பா"

"நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்"

"சரி, சீக்கிரம் வா. நான் போய் நிலவனை பார்த்து, அவன் செய்ய வேண்டிய வேலை எல்லாம் சொல்லிட்டு வரேன்" என்று நிலவனின் அறையை நோக்கி சென்றான் யாழினியன்.

வானதி இருக்கும் இடம் நோக்கி சென்றாள் ஆர்த்தி. ஒரு சிறுமியின் வயிற்றை அழுத்தி பார்த்து, *வலிக்கிறதா?* என்று கேட்டுக் கொண்டிருந்தாள் வானதி. அவளைப் பார்த்தபடி கதவின் மீது சாய்ந்து கொண்டு, புன்னகையுடன் நின்றாள் ஆர்த்தி. ஆர்த்தியை பார்த்தவுடன் வானதியின் முகம் பிரகாசமானது. *ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்* என்பது போல் அவளை பார்த்து சைகை செய்தாள் வானதி.

அந்த நோயாளியை, பரிசோதித்து, மருந்து சீட்டு எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டு, ஓடி வந்து ஆரத்தியை அணைத்துக் கொண்ட வானதி,

"ஏய்... உன் உடம்பு கொதிக்குது... என்ன ஆச்சு?" என்றாள்.

"ஆமாம். லேசான ஜுரம் இருக்கு. அதான் உன்கிட்ட ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டு போகலாம்னு வந்தேன்"

"இன்ஜெக்ஷனா?"

"ஆசிட்டமெனஃபின் தானே?" என்று அந்த ஊசியின் பெயரை கூறினாள்.

ஆமாம் என்று சிரித்தபடி தலையசைத்தாள் வானதி.

"நல்ல காலம், படிச்சது எதுவும் எனக்கு இன்னும் மறக்கல"

"நீ மறக்க மாட்ட... ஏன்னா, நீ கடமைக்குன்னு படிக்காம, டெடிகேஷனோட படிச்ச..." என்றாள், மருந்தை சிரஞ்சியில் ஏற்றியபடி வானதி.

அதை ஆர்த்திக்கு போட்டுவிட்டாள்  வானதி.

"ஐஸ்கிரீம் ஏதாவது சாப்பிட்டியா?" என்றாள் வானதி 

"இல்லடா, எதுவும் சாப்பிடல"

"அப்படின்னா, நேத்து ராத்திரி ரொம்ப ஓவரா போயிடுச்சா?" என்றாள் கிண்டலாக.

சிரித்தபடி அவள் தோளில் ஒரு அடி போட்டுவிட்டு,

"நீ பிஸியா இருக்க நம்ம அப்புறம் பேசலாம்" என்றாள் ஆர்த்தி.

"ஓகே டா. சி யூ இன் தி ஈவினிங்"

அவள் அறையை விட்டு கிளம்பினாள் ஆர்த்தி. அவளுக்காக மைதிலியின் அறையில் காத்திருந்தான் யாழினியன்.

"ஹாய் ஆர்த்தி" என்றாள் மைதிலி.

"ஹாய்..."

"எங்க போயிருந்த?" என்றாள் மைதிலி.

"வானதியை பார்த்துட்டு வரேன்"

"நான் தான் சொன்னேன்..." என்றான் யாழினியன் .

"நீ எப்போ டூட்டில ஜாயின் பண்ண போற?" என்றாள் மைதிலி.

"சீக்கிரமே..."

"உன்னோட கார்டியாலஜி என்ன ஆச்சு? அதை படிக்கிற ஐடியா இல்லையா உனக்கு?"

"இப்போதைக்கு அதை செய்ய முடியும்னு எனக்கு தோணல. மறுபடியும் தியா என்னை மிஸ் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்"

"நல்ல டெசிஷன்" என்றாள் மைதிலி 

அப்பொழுது அடுத்த நோயாளி அவளது அறையின் கதவை தட்ட,

"நாங்க கிளம்புறோம். யூ ஜஸ்ட் கேரி ஆன்" என்றாள் ஆர்த்தி.

வானதி சரி என்று தலையசைக்க, அவர்கள் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். வீட்டிற்கு வந்து யாழினியன் காரை நிறுத்தியவுடன், காரை விட்டு இறங்கி உள்ளே சென்றாள் ஆர்த்தி. அப்பொழுது யாழினியனுக்கு வானதியிடம் இருந்து  ஃபோன் வந்தது.

"சொல்லு வானதி "

"யாழ், நான் ஆர்த்திக்கு மாத்திரை கொடுக்க மறந்துட்டேன். உன்னோட ஃபர்ஸ்ட்-எயிட் கிட்ல ஜுர மாத்திரை இருந்தா அவளுக்கு ஒன்னு கொடு."

"ஜுரமா? ஆர்த்திகா ஜுரம்?"

"உனக்கு தெரியாதா?"

"இல்ல, எனக்கு தெரியாது"

"நான் அவளுக்கு இன்ஜெக்ஷன் பண்ணி இருக்கேன்"

"சரி, அவளுக்கு நான் டேப்லெட் கொடுத்துக்கிறேன்"

அழைப்பை துண்டித்து விட்டு, உள்ளே வந்தான் யாழினியன். தங்கள் அறைக்கு வந்தவன், கதவை சாத்தி தாளிட்டுவிட்டு, ஆர்த்தியின் நெற்றியை தொட்டுப் பார்த்தான். அவளுக்கு காய்ச்சல் இருந்தது.

"உனக்கு ஃபீவர் இருக்கு"

"ஆமாம், லேசா இருக்கு"

" உனக்கு ஊசி போட்டேன்னு வானதி சொன்னாளே..."

"ஆமாம்..."

"காலையில ஹாஸ்பிடல் கிளம்பி போகும் போது, நீ நல்லா தானே இருந்த?"

"இது ஜுரம்... வரப் போறேன்னு சொல்லிட்டு வர இது ஒன்னும் கெஸ்ட் இல்ல..." என்று சிரித்தாள் ஆர்த்தி.

"பைத்தியம்..." என்று அவளை இறுக்கமாய் கட்டி அணைத்தான் யாழினியன்.

"இஸ்ஸ்..." என்ற ஆர்த்தியை பார்த்து,

"என்ன ஆச்சு?" என்றான்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் ஆர்த்தி.

"ஆர்த்தி, நீ என்கிட்ட எதையோ மறைக்கிற..."

"உன்கிட்ட என்னால எதையுமே மறைக்க முடியாது"

"அப்படின்னா உண்மையை சொல்லு"

"இப்போ இல்ல... அப்புறம் சொல்றேன்"

"அப்படின்னா நீ எதையோ மறைக்கிற..."

அமைதியாய் இருந்தாள் ஆர்த்தி.

"என் மேல சத்தியம். உண்மையை சொல்லு, ஆர்த்தி"

பெருமூச்சு விட்டு தன் தலையில் கை வைத்தாள் ஆர்த்தி.

"சொல்லுன்னு சொன்னேன்..."

"சொல்றேன் பா... "

தான் அணிந்திருந்த குர்த்தியின் மேல் இரண்டு பொத்தான்களை கழட்டி, அதை லேசாய் விலக்கி காட்டினாள். யாழினியனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவனது பெயரை, இதய சின்னத்துடன், அவளது நெஞ்சில் டாட்டூவாக வரைந்திருந்தாள் ஆர்த்தி. அது வீக்கத்துடன் காணப்பட்டது.  அவளது திடீர்  காய்ச்சலுக்கு காரணமும் புரிந்தது. அது யாழினியனுக்கு சொல்லவொனா கோபத்தை தந்தது.

"பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு? என்ன வேலை செஞ்சு வச்சிருக்க நீ? இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் செய்றதை விடவே மாட்டியா நீ? இன்னும் சின்ன குழந்தை மாதிரியே ஏன் நடந்துக்கிற? இப்போ இதை செய்ய என்ன அவசியம் வந்தது?"
என்று கத்திய யாழினியனை, அவனது சட்டை காலரைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள் ஆர்த்தி.

"உனக்கு தெரியாதா? நான் எந்த அளவுக்கு உன் மேல பைத்தியமா இருக்கேன்னு உனக்கு தெரியும் தானே? நான் எல்லாத்தையும் இழந்துட்டேன் யாழ்... திரும்ப பெற முடியாத பல வருஷங்களை இழந்தேன்... என்னோட கேரியர்... என்னோட குழந்தை... என்னோட அப்பா... ஆனா உன்னை என்னால இழக்க முடியாது... நிச்சயம் முடியாது..."

"நீ என்னை இழக்க மாட்ட டா..."

"இல்ல... உனக்கு அவளை பத்தி தெரியாது. அவ பார்க்க என்னை மாதிரியே இருக்கா. அந்த ஒற்றுமையை பயன்படுத்தி, அவ சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக்க முயற்சி செய்வா. என்னால கேர் லெஸ்ஸா இருக்க முடியாது..."

"இல்ல ஆர்த்தி..."

அவனது பேச்சை வெட்டி,

"நீ அவளை தொடக்கூடாது... நீ என்னுடைய யாழ்... என்னோட புருஷன்... எனக்கும், அவளுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியனும். இந்த ரகசிய அடையாளம், உனக்கு என்னை அடையாளம் காட்டும். இதைப் பத்தி உன்னையும், என்னையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. அதனால நீ நிச்சயமா, யார் ஆர்த்தி, யார் சினேகான்னு தெரிஞ்சுக்க முடியும். இதுக்கு அப்புறம் நான் எதையும் விட்டுக் கொடுக்க தயாரா இல்ல... போராடுற தெம்பும் எனக்கு இல்ல" என்று கண்ணீர் மல்க, உணர்ச்சி பெருக்குடன் கூறிய ஆர்த்தியின், முகத்தை தன் கையால் ஏந்தி,

"ஆர்த்தி, நீ தேவையில்லாம பயப்படுற.  நான் உன் கூட இருக்கேன். ஒரு தடவை நடந்த தப்பை மறுபடியும் நடக்க நான் விடமாட்டேன்..."

"எனக்கு தெரியும்... நீயும் ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கோ... என்னை தவிர வேற யாரையும் நீ தொடக்கூடாது"

"சத்தியமா மாட்டேன் டா... "

"ஆனா, அவ ட்ரை பண்ணுவா... உன்னை ஏமாத்த பார்ப்பா... அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டா, உனக்கு எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. அதுக்காகத்தான் உன் பெயரை டாட்டுவா குத்திக்கிட்டேன்... அது தப்பா?" என்றாள் பரிதாபமாக.

அவன் இல்லை என்று தலையசைக்க, அவனை அணைத்துக் கொண்டு நெஞ்சில் சாய்ந்தாள் ஆர்த்தி. அவளது தலையை மென்மையாய் வருடி கொடுத்தான் யாழினியன். அவளது பயம் நியாயமானது தான். சினேகா பிடிபடும் வரை அவள் பதற்றத்துடன் தான் இருப்பாள்.

"உனக்கு ஃபீவர் இருக்கு. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றான் யாழினியன்.

"நீயும் என் கூட வந்து படுத்துக்கோ"

"தியா வந்துட்டு இருக்கிறதா மகா மெசேஜ் பண்ணியிருக்கான்... அவ எப்ப வேணாலும் இங்க இருப்பா. ( என்று பொய் கூறினான் யாழினியன்) நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு"

உணர்ச்சி குவியலாய் காணப்பட்ட ஆர்த்தி, அவன் அவள் அருகில் படுத்தால், உறங்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். காய்ச்சலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்த்தி, மேற்கொண்டு எதுவும் செய்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. தியாவின் பெயருக்கு தான் அவள் கட்டுப்படுவாள் என்று அவனுக்கு தெரியும். அதனால் தான் பொய் கூறி அவளை உறங்கச் செய்தான். ஆர்த்தியின் மனதில் எழுந்திருக்கும் ஆழமான பயத்தை போக்க வேண்டியது தான் அவனது முதல் வேலை என்பதை நினைத்தபடி அவள் அருகில் அமர்ந்தான் யாழினியன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro