Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2 டாக்டர் சினேகா

2 டாக்டர் சினேகா

ஒரு மணி நேரத்திற்கு பிறகு...

ஹோலி கிரிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்டெஃபானியா, டாக்டர் ரோஸுடன் தனது அருகிக்குள் நுழைவதை கண்ட சினேகா, திடுக்கிட்டு எழுந்து நின்றாள். 

"குட் ஆஃப்டர்நூன், டாக்டர்"

"குட் ஆஃப்டர்நூன்... எதுவும் பிரச்சனை இல்லயே?"

"நோ, டாக்டர்"

"நீங்க ஒரு திறமையான டாக்டர். ஆனா உங்களுடைய திறமை, யாருக்குத் தேவையோ அவங்களுக்கு பயன்படணும். நீ எதுக்காக இந்தியாவுக்கு போக விரும்ப மாட்டேங்கிறேன்னு எனக்கு தெரியாது. அது என்ன காரணமா வேணும்னாலும் இருக்கட்டும். ஒரு டாக்டரா, உயிரை காப்பாத்த வேண்டியது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு டாக்டருடைய வாழ்க்கையிலயும் அது எழுதப்படாத விதியாய் இருக்கணும். உன்னோட சொந்த பிரச்சனையெல்லாம் ஓரமா வச்சிட்டு, இந்தியாவுக்கு போய் அந்த குழந்தையோட உயிரை காப்பாத்து. என்னுடைய வார்த்தைக்கு நீ மரியாதை கொடுப்பேன் நம்புறேன்" என்றார் ஸ்டெஃபி.

அவர் அருகில் நின்றிருந்த ரோஸை சினேகா பார்க்க, அவளோ ஸ்டெஃபியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சினேகாவுக்கு தெரியும், இதைப்பற்றி ஸ்டெஃபியிடம் கூறியது ரோஸ் தான் என்று. ஸ்ஃடெபி கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. நோயாளியின் உயிர் என்று வரும் பொழுது, மருத்துவர்கள், தன்னுடைய சொந்த பிரச்சினைகளை அதில் கொண்டு வந்து இணைக்க கூடாது.

"போவல்ல?" என்றார் ஸ்டெஃபி.

ஆம் என்ற தலையசைத்தாள் சினேகா. சினேகாவை பொருத்தவரை, ஸ்டெஃபி, அன்னையைப் போன்றவர். சினேகா லண்டன் சென்ற பொழுது அவளுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுத்து ஆதரித்தவர் ஸ்டெஃபி தான். அவரை மறுத்து பேசும் தைரியம் சினேகாவுக்கு வந்ததே இல்லை, அது என்ன விஷயமாக இருந்தாலும் சரி.

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு. அங்கே இருக்கிறவங்களை தவிக்க விடாதே. ஏன்னா, இது ஒரு குழந்தையோட உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இங்க உனக்கு எந்த மேஜர் சர்ஜரியும் இப்போதைக்கு இல்ல. உன்னோட எல்லா செட்யூல்ஸையும் நான் வேற டாக்டர்ஸை வச்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்"

சரி என்று தலையசைத்தாள் சினேகா. அவளது அறையை விட்டு வெளியேறினார் ஸ்டெஃபி. ரோஸும் அவரை பின்தொடர முயன்ற போது, சினேகாவின் குரல் அவளை தடுத்தது.

"ரோஸ், வெயிட்..."

உதட்டை கடித்த படி அசையாமல் நின்றாள் ரோஸ்.

"நினைச்சதை சாதிச்சிட்ட போல இருக்கு...!"

"ஹே, பட்டி... நான் வந்து..."

அவள் பேச்சில் இடைப் புகுந்து,

"எனக்கு அந்த நம்பரை கொடு"

"யாரோட நம்பர்?"

"யாருக்காக நீ ஸ்டெஃபி கிட்ட போனியோ, அவங்க நம்பர் தான்"

"ஓ எஸ்... நான் உனக்கு டெக்ஸ்ட் பண்றேன். பை தி வே, தேங்க்யூ"

மென்மையாய் புன்னகைத்தாள் சினேகா.

"டோன்ட் ஒரி... எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட். நீ உன்னோட பிரச்சனைகளில் இருந்து ஓடுறதை நிறுத்தாத வரைக்கும், அது உன்னை துரத்திக்கிட்டே தான் இருக்கும்" என்றாள் ரோஸ்.

அதற்கும் ஒரு புன்னகையை பரிசாய் தந்தாள் சினேகா.

"நான் உன்னை ஹர்ட் பண்ணி இருந்தா, ஐ அம் ரியலி சாரி..."

"தட்ஸ் ஓகே..."

சினேகாவின் அறையில் இருந்து வந்த ரோஸ், உடனடியாக மகேந்திரனுக்கு அந்த விஷயத்தை குறுஞ்செய்தியாய் அனுப்பினாள். அந்த செய்தியை படித்து, புன்னகையுடன் அதை, மதிவதனியிடம் காட்டினான் மகேந்திரன். அதை பார்த்தவுடன் மதிவதனியின் முகம், அந்த வான்மதியை போலவே ஜொலித்தது.

சினேகாவின் அழைப்பை எதிர்பார்த்து அவள் அங்கேயே காத்திருந்தாள். அவள் எதிர்பார்த்து காத்திருந்ததைப் போலவே, சினேகா மகேந்திரனை அழைத்தாள். தன் கைபேசியை மதிவதனியிடம் கொடுத்து பேசும்படி சைகை செய்தான் மகேந்திரன். ஒரு நொடி கூட வீணாக்காமல் அந்த அழைப்பை ஏற்று பேசினாள் மதிவதனி.

"ஹலோ, டாக்டர் சினேகா, நீங்க இந்தியாவுக்கு..."

"உங்க டாட்டரோட மெடிக்கல் ரிப்போர்டை எனக்கு உடனே அனுப்பி வையுங்க. நான் முதலில் அதை படிச்சு பாக்கணும்"

"ஷ்யூர் டாக்டர், உடனே அனுப்பி வைக்கிறேன். உங்க ரெஸ்பான்ஸ்க்கு ரொம்ப நன்றி" என்று தட்டு தடுமாறி பேசி முடித்தாள் மதிவதனி.

"மை பிளஷர்" என்று அழைப்பை துண்டித்தாள் சினேகா.

மதிவதனியின் முகத்தில் ஒரு மாற்றத்தை உணர்ந்தான் மகேந்திரன். அவள் ஏதோ தீவிரமாய் யோசித்தபடி இருந்தாள். திடீரென்று அவளுக்கு என்ன ஆனது? சினேகா இந்தியா வர ஒப்புக்கொண்டு விட்டதை, அவள் இந்நேரம் கூத்தாடி கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை.

"என்ன ஆச்சு, மதி? என்ன யோசிக்கிறீங்க?"

"அவங்க வாய்ஸை நான் எங்கயோ கேட்டிருக்கேன், ரொம்ப நாளைக்கு முன்னாடி. அவங்க குரல் எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட மாதிரி தெரியுது"

"அப்படியா?"

"ஆமாம். எனக்கு ரொம்ப நிச்சயமா தெரியும். ஆனா ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா, இப்போ அந்த குரலில் பொறுப்பு தெரியுது"

"என்ன சொல்றீங்க?"

"எனக்கு எதுவும் நிச்சயமா சொல்ல முடியல. அவங்களுக்கு முதல்ல நம்ம மமதியோட ரிப்போர்டை அனுப்பி வையுங்க."

சரி என்று தலையசைத்த மகேந்திரன், மமதியின் ரிப்போர்ட்டை சினேகாவுக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தான்.

.......

சினேகாவின் குரலை எங்கு கேட்டோம் என்று தனது மூளையை கசக்கி பிழிந்து கொண்டிருந்தாள் மதிவதனி.

"உங்கள பாத்தா எனக்கு விசித்திரமா இருக்கு, மதி. உங்க குழந்தையை பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு, ஏதோ ஒரு பொம்பளையோட குரலை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கு"

"அவங்க குரலை நீங்க கேட்டிருந்தாலும் இப்படித் தான் செய்வீங்க. அவங்க குரல் நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க குரல் மாதிரி இருக்கு."

மகேந்திரனின் தலைக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. யோசனையுடன் முகத்தை சுருக்கிய அவன்,

"அடுத்த முறை, சினேகா கால் பண்ணா, ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க" என்றான்.

"சரி"

மகேந்திரனின் அறையிலிருந்து அசையவே இல்லை மதிவதனி. அது மகேந்திரனை மேலும் ஆச்சரியப்படுத்தியது. என்ன பெண் இவள்? என்று தோன்றியது அவனுக்கு.

சரியாய் முப்பத்தி ஐந்து  நிமிடங்கள் கழித்து சினேகாவிடம் இருந்து மகேந்திரனின் கைபேசிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரை ஆன் செய்தாள் மதிவதனி.

"ஹலோ டாக்டர்..."

"மிஸஸ் மதிவதனி... " என்று சினேகா உச்சரித்த உடனேயே, மகேந்திரனின் விழிகள், ஆச்சரியத்தில் விரிந்தன.

அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவன் முகத்தில் வியர்வை முத்துக்கள் துளிர்த்தன. அவன் மனதை பதற்றம் ஆட்கொண்டது. அவன் பதற்றத்தை கண்ட மதிவதனியும் பதற்றமானாள்.

கிட்டத்தட்ட, ஏழு வருடங்கள் அவர்களையே சுற்றி சுற்றி வந்த அதே குரல் அல்லவா அது? அவன் மென்று முழுங்குவதை கண்ட மதிவதனி, என்ன என்று செய்கையால் கேட்க, ஒன்றும் இல்லை என்று தலை அசைத்த மகேந்திரன், பேச்சை தொடருமாறு சைகை செய்தான் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

"உங்க டாட்டரோட ரிப்போர்ட்ஸை நான் பார்த்தேன். அவ டயாபட்டிக் அப்படிங்கிறதால, கொஞ்சம் கிரிட்டிக்கல் தான். ஆனா எனக்கு எப்போ டிக்கெட் கிடைக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியல..."

தன்னால் நாளைக்கே டிக்கெட்டை ஏற்பாடு செய்ய முடியும் என்று சைகையால் கூறினான் மகேந்திரன்.

"நாளைக்கு ஃபிளைட்டிலயே கூட உங்க டிக்கெட்டை எங்களால அரெஞ்ச் பண்ணி  கொடுக்க முடியும், டாக்டர்"

"நாளைக்கு காலையில எனக்கு ஒரு சர்ஜரி இருக்கு. என்னால நாளை மறுநாள் தான் இங்கிருந்து கிளம்ப முடியும். அதோட மட்டும் இல்லாம, நமக்கு ஒரு டோனர் வேணும். அதுக்கு பிறகு தான் நம்ம ஹார்ட் பிளானிடேஷனைப் பத்தி யோசிக்க முடியும்"

"என்னோட தம்பிக்கு இந்தியாவில ரொம்ப பெரிய காண்டாக்ட் இருக்கு. அவனால ரொம்ப சீக்கிரமே ஹார்ட் பிளான்டேஷனுக்கு தேவையான ஏற்பாட்டை செய்ய முடியும்"

"ஐ சி... "

"உங்களுடைய டிக்கெட்டை நாளை மறுநாள் ஃப்ளைட்ல புக் பண்ணலாமா டாக்டர்?"

"சரி, பண்ணுங்க"

"தேங்க்யூ சோ மச், டாக்டர். நீங்க தான் என்னோட கடவுள்"

"நான் என் கடமையை தான் செய்யறேன்"

அழைப்பை துண்டித்தாள் சினேகா. ஆழ்ந்த யோசனையுடன் இருந்த மகேந்திரனை பார்த்து,

"உங்களால சினேகாவுடைய குரலை அடையாளம் தெரிஞ்சுக்க முடிஞ்சிதா?" என்றாள்.

அதற்கு மகேந்திரன் கூறிய பதில் அவளை ஆட்டம் காண செய்தது.

"அவங்க வாய்ஸ் நம்ம ஆரத்தி வாய்ஸ் மாதிரியே இருக்கு"

"ஆமாம்... நீங்க சொல்றது சரி... ஒருவேளை அவங்க நம்ம ஆரத்தி தானோ?" என்று துள்ளி குதித்தாள் மதிவதனி.

"பொறுங்க... அவங்க வாய்ஸ் நம்ம ஆர்த்தி வாய்ஸ் மாதிரியே இருக்கிறதால மட்டும் அவங்க நம்ம ஆரத்தி ஆயிட முடியாது. அவங்க டாக்டர் சினேகா, நம்ம ஆரத்தி இல்ல"

ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தாள் மதிவதனி.

"முதல்ல அவங்களுக்கு டிக்கெட் அரேஞ்ச் பண்ணணும்"

யாருக்கோ ஃபோன் செய்து, சினேகாவின் டிக்கெட்டை ஏற்பாடு செய்தான் மகேந்திரன். மதுவதனி அவனுடைய அறையிலேயே அமர்ந்திருப்பதை கண்டு அதிசயமாய் புருவம் உயர்த்தினான்.

"நம்ம ஆரத்தி கூட கார்டியாலஜி தான் படிக்கணும்னு ஆசைப்பட்டா இல்ல?" என்றாள்.

அதைக் கேட்ட மகேந்திரனின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது.

"ஆமாம். அவ கர்டியாலஜிஸ்ட் ஆகணும்னு முடிவெடுத்தது ரொம்ப எமோஷனலான ஒரு சிச்சுவேஷன்ல"

"அப்படியா?"

"ஆமாம். அது ஒரு க்ரிட்டிக்கலான  ஹார்ட் சர்ஜரி. எங்க காலேஜ் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் சுந்தர் கூட, ஆர்த்தி அந்த சர்ஜரியை அட்டென்ட் பண்ணா. பேஷன்டோட சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப டென்ஷனா இருந்தாங்க. ஏன்னா, பேஷன்ட் பிழைக்கிறதுக்கு ரொம்ப கம்மியான சான்ஸ் தான் இருந்தது."

"ஒ..."

"ஆப்பரேஷன் சக்சஸ் ஆயிடுச்சு. ஆப்பரேஷன் தியேட்டரை விட்டு டாக்டர்  வெளியே வர்றதுக்கு முன்னாடி, பேஷன்ட் பிழச்சுகிட்ட விஷயம் வெளியே வந்துடுச்சு. அவரோட சொந்தக்காரங்க எல்லாம் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயிட்டாங்க. ஆப்ரேஷன் தியேட்டர் கதவு திறந்துது. வழக்கமான ஸ்மைலோட நம்ம ஆரத்தி ஃபர்ஸ்ட் வெளியில வந்தா. அந்த பேஷண்டோட வைஃப், ஓடிப்போய் அவ கால்ல விழுந்துட்டாங்க. அவ்வளவு வயசானவங்க தன்னோட கால்ல விழுறதை பார்த்து பதறிப் போயிட்டா ஆர்த்தி."

"அப்புறம்?"

"தன்னோட புருஷன் உயிரை மீட்டு குடுத்ததுக்காக அந்த அம்மா அவளுக்கு கை கூப்பி நன்றி சொன்னாங்க"

"அதுக்கு ஆர்த்தி என்ன சொன்னா?"

"டாக்டருக்கு நன்றி சொல்ல சொல்லி சொன்னா. ஆனா, அந்த அம்மா அதை எல்லாம் காது கொடுத்து கேட்கிறதாவே இல்ல. அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இருந்தாங்க. அங்கிருந்து நழுவி வர்றதுக்குள்ள ஆர்த்திக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. அந்த சம்பவத்திலிருந்து அவளால் அன்னிக்கு முழுக்க வெளிய வரவே முடியல. டாக்டரா இருக்கிறதோட வேல்யூ என்னன்னு அன்னைக்கு தான் முழுசா உணர்ந்ததா சொன்னா. எல்லா நாளையும் போலவே, அன்னைக்கும் உங்க தம்பி தான் அவளை சமாதானப்படுத்தினான். அன்னைக்கு தான், கார்டியாலஜிஸ்ட் ஆகணும்னு அவ தீர்க்கமா முடிவெடுத்தா." என்று பெருமூச்சு விட்டவன்,

"அவ எங்க இருக்கா, எப்படி இருக்கா ஒன்னுமே தெரியல... உலகத்தோட எந்த மூலையில் இருந்தாலும் அவ நிச்சயம் உயிர்களை காப்பாத்திக்கிட்டு தான் இருப்பா"

மகேந்திரனை பார்த்து புன்னகை புரிந்தாள் மதிவதனி.

"ஏன் சிரிக்கிறீங்க?"

"சினேகாவுடைய குரலை கேட்டா நீங்களும் இப்போ இருக்கிற சூழ்நிலையை மறந்துடுவீங்கன்னு நான் சொன்னேன் இல்ல?"

"அதான் பெஸ்ட் கார்டியாலஜிஸ்ட் இங்க வராங்களே, அப்புறம் எதுக்கு கவலைப்படணும்?" என்றான் மகேந்திரன்.

ஆமாம் என்று தலையசைத்த படி அவள் அங்கிருந்து செல்ல எண்ணிய போது,

"சினேகாவுக்கு நம்ம வீட்டிலேயே ஒரு நல்ல ரூம் அரேஞ்ச் பண்ணி வச்சிடுங்க" என்றான் மகேந்திரன்

"நம்ம வீட்லயா?" என்றாள் மதிவதனி ஆச்சரியமாக.

"ஆமாம். அவங்களுக்கு ஹோட்டல் சரிப்பட்டு வருமான்னு நமக்கு தெரியல. நம்ம வீட்ல இருந்தா அவங்களுக்கு தேவையான வசதியை நம்மளே பார்த்து செஞ்சு கொடுக்கலாம். அதே நேரம், அவங்களும் மமதி கூட இருக்கிறது நல்லது."

சரி என்றபடி, யோசனையுடன் அங்கிருந்து சென்றாள் மதிவதனி.

மகேந்திரனுக்கு இருப்பு கொள்ளவில்லை. சுத்தமாய் நிம்மதி இழந்து விட்டிருந்தான். அது எப்படி சினேகாவின் குரல் அப்படியே ஆரத்தியின் குரலை ஒத்திருக்க முடியும்? இரண்டு பேருக்கு ஒரே குரல் அமைவது எப்படி சாத்தியம்? ஒருவேளை, மதிவதனி கூறியது போல், சினேகா, ஆர்த்தியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா? எதையோ சிந்தித்தவன் சட்டென்று கைபேசியை எடுத்து டாக்டர் ரோஸுக்கு ஃபோன் செய்தான். அவரும் அந்த அழைப்பை ஏற்றார்.

"தேங்க்யூ சோ மச், ரோஸ்"

"சினேகா ஒத்துக்கிட்டாங்களா?"

"ஆமாம், உங்களால தான்..."

"உங்களுக்கு ஹெல்ப் பண்றதுல எனக்கு சந்தோஷம்"

"அப்படின்னா எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணுங்களேன்"

"என்ன ஹெல்ப்?"

"எனக்கு டாக்டர் சினேகாவுடைய போட்டோவை அனுப்பி வைக்க முடியுமா?"

"போட்டோவா? எதுக்கு?"

"அவங்க இந்தியா வரும் போது, அவங்களை அடையாளம் கண்டுபிடிக்க"

"சரி, நான் உங்களுக்கு அவங்க ஃபோட்டோவை அனுப்பி வைக்கிறேன்"

"தேங்க்யூ சோ மச்" என்று அழைப்பை துண்டித்தான் மகேந்திரன்.

சினேகாவின் புகைப்படத்திற்காக காத்திருந்தான் மகேந்திரன். சினேகாவின்  புகைப்படத்தை ரோஸ் அவனுக்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்த மகேந்திரனின் இதயம், சில நொடி துடிப்பதை நிறுத்தியது. திக் பிரம்மை பிடித்தவனை போல் நின்றான் மகேந்திரன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro