Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16 உடைந்த கட்டுப்பாடு

16 உடைந்த கட்டுப்பாடு

இறுதி நாளுக்கு முந்தைய நாள்
அனைவரது முகமும் வாட்டத்துடன் காணப்பட்டது.

"நம்ம எல்லாரும் பிரிய போறோம்" என்றான் கவலையுடன் நிலவன்.

"ஆமாம்... இவ்வளவு நாள் வரைக்கும், ஜாலியா காலேஜ் லைஃபை என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தோம்... இதுக்கு அப்புறம் நமக்கு நிறைய பொறுப்புகள் காத்துக்கிட்டு இருக்கு" என்றாள் மைதிலி.

"நீயும் ஆர்த்தியும் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டடீஸ்க்கு போறீங்க. நாங்க எல்லாரும் வேற வேற ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ண போறோம்" என்றாள் வானதி.

"அது பர்மனென்ட் இல்ல. சீக்கிரமே நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, ஒரே இடத்துல வேலை பார்ப்போம்" என்றான் மகேந்திரன்.

"மகா சொல்றது சரி தான். நம்ம எல்லாரும் யாழ் ஹாஸ்ப்பிட்டல்ல சீக்கிரமே ஒன்னா சேருவோம்" என்றான் நிலவன்.

"நம்ம ஏன் ஒரு பார்ட்டி கொண்டாடக் கூடாது? நம்ம மட்டும் சேர்ந்து?" என்றான் மகேந்திரன்.

"நல்ல ஐடியா" என்றாள் மைதிலி.

"ரிமார்கபிளா இருக்கும்..." என்றான் நிலவன்.

"என்னைக்கு?" என்றாள் ஆர்த்தி.

"இன்னைக்கு சாயங்காலம்" என்றான் மகேந்திரன்.

"எங்க?" என்றாள் வானதி.

"யாரோட வீட்ல வச்சுக்கலாம்?" என்றான் கதிரவன்.

"யார் வீட்டிலயும் வேண்டாம். அது நமக்கு கம்ஃபர்டபிளா இருக்காது. நம்ம வீட்டு ஆளுங்க நம்ம கூட வந்து உட்கார்ந்துகிட்டு, நம்மள என்ஜாய் பண்ண விட மாட்டாங்க." என்றான் மகேந்திரன்.

"சந்தேகமே இல்ல அப்படித் தான் நடக்கும். அப்புறம் அது ஃபிரண்ட்ஸ் பார்ட்டியா இருக்காது" என்றான் யாழினியன்.

"யாழுடைய பார்ம் ஹவுஸில் வச்சுக்கலாமா?" என்றான் மகேந்திரன்

"இது நல்ல ஐடியா" என்றான் நிலவன்.

"அப்படின்னா சரி. ஆர்த்தியை நான் பிக்கப் பண்ணிக்கிறேன்" என்றான் யாழினியன்.

"தேவையில்ல. நானே வந்துடுவேன்" என்றாள் ஆர்த்தி வெடுக்கென்று.

அது யாழினியனை ஊசியால் தைத்தது.

"நெஜமாத் தான் சொல்றியா ஆர்த்தி? நீயே வந்துடுவியா?" என்றான் நிலவன்.

"கரெக்ட் டைமுக்கு இருப்பேன்" என்றாள் ஆர்த்தி.

"நம்ம மூணு பேரும் ஸாரி கட்டிக்கலாமா?" என்றாள் மைதிலி.

"பிளாக் சரி கட்டலாமா?" என்றாள் வானதி.

அதை கேட்ட யாழினியன் புன்முறுவல் பூத்தான். கருப்பு அவனுக்கு பிடித்த நிறம். ஆனால், அவனது புன்னகை மாயமாய் மறைந்தது ஆர்த்தியின் வார்த்தைகளை கேட்டு.

"பிளாக் வேண்டாம்... வேற ஏதாவது கலர் கட்டிக்கலாம்"

அவளுக்கு நன்றாக தெரியும், யாழினியன் அவளை பார்த்து முறைத்துக் கொண்டிருக்கிறான் என்று. ஆனால், அவன் அவனை திரும்பி பார்க்கவே இல்லை.

"சரி, அப்படின்னா அவங்கவங்களுக்கு பிடிச்ச கலர் புடவை கட்டிக்கலாம்" என்றாள் மைதிலி.

"சரி" என்றாள் வானதி.

"எல்லாரும் கரெக்டா எழு மணிக்கு வந்துடுங்க. திடீர் திடீர்னு மழை பெய்யுது. கேர்லெஸ்ஸா இருக்காதீங்க" என்றான் மகேந்திரன்.

சரி என்று ஒப்புக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றார்கள்.

........

தன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான தின்பண்டங்களுடன், எல்லோருக்கும் முன்னதாக வந்து சேர்ந்தான் யாழினியன். ஒரே வீட்டில் இருந்தாலும், நிலவனையும் கதிரவனையும் அவன் தன்னுடன் அழைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பிரிய தோழிகளுடன் வர விரும்புவார்கள் என்று அவனுக்கு தெரியும். யாழினியனுக்கு ஃபோன் செய்த மகேந்திரன், அவன் வீட்டுக்கு திடீர் விருந்தினர் வந்துவிட்டதால், அவன் வருவதற்கு சற்று தாமதமாகும் என்றான். மற்றவர்கள் வருவதற்கு முன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க எண்ணி துரிதமாய் செயல்பட்டான் யாழினியன். அவனுக்கு தெரிய நியாயமில்லை, அவனது நண்பர்கள் யாரும் அங்கு வரப்போவதில்லை என்று. அது தானே அவர்கள் வகுத்த திட்டம்...!

ஆர்த்தி அங்கு வந்தவுடன், அவனுடைய அதிர்ஷ்டம், மற்ற அனைவரும் வருவதற்கு முன், ஆர்த்தியை அங்கு அனுப்பி அவனுக்கு துணை செய்தது என்று எண்ணினான். தனது நண்பர்களை தேடிக்கொண்டு அவள் நேராக மாடிக்கு வந்தாள். அவளைப் பார்த்தவுடன் செயலிழந்து போனான் யாழினியன். அவனுக்கு பிடித்த கருப்பு நிற புடவையை அவள் அணிய மாட்டேன் என்று கூறினாலும் கூட, அவள் அணிந்திருந்த பச்சை நிற புடவை, அவளுக்கு வெகுபாந்தமாய் இருந்தது. யாழினியனை பார்க்காதவள் போல தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆர்த்தி. அதைப்பற்றி பெரிது படுத்தாமல்,

"வெல்கம்" என்றான் யாழினியன்.

"எல்லாரும் வர்ற வரைக்கும் நான் பால்கனியில இருக்கேன்"

"ஏன், ஆர்த்தி?"

"சும்மா தான்"

பால்கனிக்கு சென்று தங்கள் நண்பர்கள் வரும் வழியை பார்த்தபடி நின்றாள் ஆர்த்தி. அவளை பின்தொடர்ந்து வந்த யாழினியன்,

"என்ன ஆச்சு, ஆர்த்தி? எதுக்காக அப்செட்டா இருக்க?" என்றான்.

"ஒண்ணுமில்ல..."

"அது ரோஷன்னால தான்னு எனக்கு தெரியும்"

"நான் அதைப் பத்தி பேச விரும்பல, யாழ்"

"நான் சொல்றதை கேளு, ஆர்த்தி... எனக்காக இத்தனை வருஷம் காத்திருந்த... இன்னும் ஒரே ஒரு நாள் பொறுத்துக்கோ. நான் எல்லா பிரச்சினையையும் தீர்த்திடுவேன். என்னை நம்பு. ப்ளீஸ்"

வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள் ஆர்த்தி.

"கொஞ்சம் சிரியேன்..."

அவள் கன்னங்களை இரண்டு புறமும் பிடித்து இழுக்க, சிரித்தாள் ஆர்த்தி.

"உனக்கு இந்த கலர் ஒன்னும் அவ்வளவு மோசமா இல்ல..." என்ற அவனைப் பார்த்து முறைத்தாள் ஆர்த்தி.

"என்ன சொன்ன?"

"பின்ன என்ன? நீ தான் எனக்கு பிடிச்ச கலர் புடவையை கட்ட மாட்டேன்னு சொல்லிட்டியே"

"நான் ஏன் உனக்கு பிடிச்ச கலர் புடவை கட்டணும்? நீ என்ன எனக்கு புருஷனா?"

சில நொடி திகைத்து நின்றான் யாழினியன்.

"புருஷனா இல்லாம இருக்கலாம்... உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும் இல்ல...?"

"எனக்கு ஒன்னும் அப்படி தெரியல" என்றாள் வேண்டுமென்றே.

யாழினியன் அவளைப் பார்த்து முறைக்க, சிரித்தபடி அங்கிருந்து ஓட முயன்றாள். அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து,

"இந்த புடவையில நீ செம்ம்ம்ம்மையா இருக்க" என்றான்.

அவனை நோக்கி திரும்பிய அவள்,

"எனக்கு தெரியும்" என்றாள்.

"அப்படியா?"

"ஆமாம்... என்னை பார்த்த உடனே நீ உன்னை மறந்துட்ட..." என்றாள்.

அதைக் கேட்டு பளிச்சென்று சிரித்தான் யாழினியன்.

சட்டென்று மழை பெய்ய துவங்கியது.

"மழை பெய்யுது. வா உள்ள போகலாம்" என்றான் யாழினியன்.

"நீ போ, நான் வரல..." மழையில் ஆட்டம் போட துவங்கினாள் ஆர்த்தி.

சட சடவென பெய்த மழையில் தேங்கி நின்ற சிறிதளவு தண்ணீரை காலால் உதைத்து சந்தோஷித்தாள் ஆர்த்தி. யாழினியன் ஒன்றும் செய்யவில்லை, அவள் ஆட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்ததை தவிர. அவனது கண்களில், கருப்புக்கும் பச்சைக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போனது. சொல்லப் போனால், பச்சை, கருப்பை வென்றது, யாழினியனை தன்னிலை இழக்க செய்து...

தன் மனதிற்கு பிடித்த பெண், எப்படி இருந்தாலும் ஆண்கள் ரசிக்கத்தான் செய்வார்கள். அப்படி இருக்க, தன் மனதிற்கு பிடித்த பெண், மிக அழகாக இருந்தால், என்னவாகும்? முழுக்க நனைந்த ஆரத்தி, அவன் உடலில் ஏறிய உஷ்ணத்திற்கு காரணமானாள்.

அவனது குத்திட்ட பார்வையை உணர்ந்த ஆர்த்தி தன் ஆட்டத்தை நிறுத்தினாள். அது அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளே ஓடிச்சென்று, அங்கு இருந்த துண்டினால் தனது தலையை துவட்ட துவங்கினாள். யாழினியன் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அவள், ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவனோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல அவளை அலசி ஆய்ந்து கொண்டு இருந்தான். ஆர்த்தி எதிர்பாராத வண்ணம், அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்தான். அவன் பிடியிலிருந்து வெளிவர முயன்ற அவளது முயற்சி பலன் அளிக்கவில்லை.

அவ்வளவு நாள், அவன் உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த காதல், ஆசை, உணர்வுகள், அத்தனையும் அவனது கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்து குதித்தது. இவ்வளவு நாளாய், யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் ஒரு உலகத்தில் அவன் ஆரத்தியுடன் சஞ்சரித்தானே, அந்த உலகில் தான் இருப்பதாய் எண்ணினான். தன்னிலை இழுந்து விட்டிருந்த அவன் முன் ஒன்றும் செய்ய முடியாத ஆரத்தி, அவன் கூறியதை நினைவு கூர்ந்தாள்.

*வார்த்தைகளை விட நமது செயல்கள் அதிகம் பேசும். நம் மனதில் நினைக்கும் அனைத்தையும் நாம் வார்த்தைகளால் கொண்டு வந்து விட முடியாது. ஆனால் நமது செயல்கள் அவற்றை முன்னிறுத்தும்*

இப்பொழுது அது தான் நடந்து கொண்டிருந்தது. அவன் இவ்வளவு நாள் வார்த்தைகளால் கூற முடியாததை அவன் செயல் பறைசாற்றியது. எந்த அளவிற்கு அவன் அவளை காதலிக்கிறான்... அவனுடைய காதல் எவ்வளவு ஆழமானது... உணர்வுகளால் நிரம்பி வழிந்த அவனுடைய செயல்களை, நிச்சயம் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

ஒரு கட்டத்திற்கு மேல், அவனை எதிர்ப்பதை நிறுத்தினாள் ஆர்த்தி. தன்னை முழுமையாய் அர்ப்பணித்தாள். தன் மனதில் இருந்த காதலை வார்த்தைகளால் கூறுவதற்கு முன், செயலால் கூறினான், உரிமையுடன்... அவளது அனுமதி இன்றி.

தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து தான் இருந்தாள் ஆரத்தி. தான் செய்யக் கூடாததை அவள் செய்து கொண்டிருக்கிறாள்... இழக்கக் கூடாததை இழந்து கொண்டிருக்கிறாள்... ஆனால் அதற்காக அவள் வருத்தப்படவில்லை. யாழினியன் என்று வந்துவிட்டால், அவளைப் பொறுத்தவரை எதுவுமே தவறில்லை. அவளைப் பொறுத்தவரை, திருமணத்திற்கு முன்போ, பின்போ இரண்டும் ஒன்று தான்.

தங்களுக்குள் நடந்தது என்ன என்பதை பற்றி ஆர்த்தி கவலை கொள்ளவில்லை தான். ஆனால் யாழினியன் தன்னைத்தானே கரித்துக் கொட்டிக் கொண்டான். என்ன காரியம் செய்து விட்டான் அவன்...! ஆனால் ஆர்த்தி அவனை தடுக்காதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

"இன்னையிலிருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் நீ என்னுடைய காதலின் ஆழத்தை பாப்ப" என்று அவள் கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

அவளது காதல் எல்லையற்றது. ஆச்சரியங்களின் குவியல் அவள். யாராலும் கையால முடியாத இக்கட்டான சூழ்நிலையை கூட அனாயாசமாய் கையாளும் திறன் கொண்டவள் அவள். அவளிடத்தில் வேறொருவர் இருந்திருந்தால், அவன் சட்டை காலரை பற்றி ஓங்கி அறைந்திருப்பாள். அவள் தன்னை மிகவும் காதலிக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். ஆனால், இந்த அளவுக்கு காதலிக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாது.

ஒரு நாள்... இன்னும் ஒரே ஒரு நாள்... அனைத்தும் சரியாக விடும். நாளை நடக்க இருக்கும் பிரிவு உபசாரத்தின் போது அனைவருக்கும் முன்னிலையில், *ஐ லவ் யூ ஆரத்தி* என்று அவளை கட்டி அணைத்து முழக்கமிட வேண்டும் என்று நினைத்தான் யாழினியன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை மணந்து கொள்ள துடித்தான். அவனது புதிய மருத்துவமனை, அவளது கார்டியாலஜி, அனைத்தும் சற்று காத்திருக்கட்டும்... ஆனால் அவன் இதற்கு மேல் காத்திருக்க தயாராக இல்லை. காத்திருப்பதன் பலனை அவன் வெகுவாய் அனுபவித்து விட்டது போதும். அவனது காதலை அவன் மனதில் அவன் அழுத்தி வைத்திருந்தது போதும்... அவனது காதல், ஆசை, ஏக்கம், அனைத்தையும் அவளிடம் கூறி முடிக்க அவனுக்கு எத்தனை நாள் தேவைப்படுமோ...!

இவ்வளவு நாள் பொத்தி வைத்ததை இன்று செய்ய முடியாமல் அவன் தோற்றான். திருமணத்திற்கு முன் எல்லை மீறுவது என்பது, நிச்சயம் எந்த கோணத்திலும் சரியாக இருக்க முடியாது. அவனுக்கும் அது தெரியும். அவனைப் பொறுத்தவரை ஆர்த்தி தான் அவனது மனைவி. அதை அவன் வார்த்தைகளால் சொல்லவில்லையே தவிர, கடந்த ஆண்டுகளில் தனது ஒவ்வொரு செயலாலும் அதை நிரூபித்துக் கொண்டு தான் வந்திருக்கிறான். அது அவளுக்கும் தெரியும். இன்று, அவனை அவள் ஏற்றுக் கொண்டதற்கு அது தான் அத்தாட்சி. அவன் மனதில் இருப்பதை கூற வேண்டும் என்று அவள் காத்திருக்கிறாள்... அவனது வார்த்தைகளுக்காக அவள் காத்திருக்கிறாள்... அதை அவன் நிச்சயம் செய்யத்தான் போகிறான். ஆனால் அவள் நினைக்கும் படி அல்ல... அவள் சிறிதும் எதிர்பார்க்காத விதத்தில் அவள் வியக்கும் விதத்தில்...!

அன்று யாழினியனோ, ஆர்த்தியோ உறங்கவே இல்லை. இவ்வளவு நடந்த பின் அவர்களுக்கு உறக்கம் எங்கிருந்து வரும்? இருவருமே ஒருவரை ஒருவர் எண்ணியபடி இருந்தார்கள்.

நாளை செய்ய வேண்டியது என்ன என்பதை தீர்மானித்துக் கொண்டான் யாழினியன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro