9
அருண்.....கல்யாணம் ஆகி அன்னைக்கு முதல் நாள் உங்க வீட்டுக்கு வந்தேன் ல......அன்று நான் கட்டிருந்த பட்டுபுடவை தீ பிடிச்சது ல??,அது எதார்த்தமா நடந்தது னு நீ சொல்ற ஆனால்... அது எதார்த்தமா நடந்தது இல்லை....... உங்க அம்மா குத்துவிளக்கு ஏத்துறனு சொல்லி நான் நிக்கிறப்ப வேனும்டே.....😥😥😥
ஏய் ....ரேகா.....என்ன சொல்ற..
அதான் அன்னக்கு பூறா அபசுகனம் னு ஒப்பாரி வச்சுதா தாய் கிழவி...என்ன ன வேலை பாத்துருக்கு....பாரு...
வீட்டுக்கு வந்த நேரம் சரியில்லை னு பரிகாரம் அது இதுனு நம்பள சேர விடாம...ச்சி......நான் என்னமோ நல்லது பன்றாங்க னு அப்போ நினைச்சன்.
அது மட்டுமல்ல அருண்.....வரதட்சணை வாங்கிட்டு வர வக்கத்தவ னு என்ன குத்தி குத்தி காட்டுனாங்க.....😥
இதெல்லாம் ஏன் சொல்லல....நீ.??
என்னை எங்க நீங்க சொல்ல விட்டிங்க??,அம்மா பன்னா சரி தானு என்கிட்ட வீம்பு பிடிப்பிங்க...வாயாடி னு எனக்கு பட்டம் கட்டிடிங்க....என் ஆதங்கம் எப்படி கொட்றது னு தெரியாம நானும் வம்பு இழுப்பன்...உங்களுக்கு எப்ப பாரு பிஸினஸ் பிஸினஸ்... வீட்டில் நடக்குறது என்ன னு கூட பாக்க மாட்டிங்க...ல?????,உங்களுக்கு உங்க கெரியர் தான் முக்கியம் அப்படிதானே...
சரி நீ சொல்றது...சரின்னு ஒத்துக்குறன் ...ஆனால் என்னை என்னோட பிஸினஸ் பார்ட்னரோட சேர்த்து வச்சு தப்பா பேசுவியே அது ஏன்??????😢
ஏனா.....நீங்க என்ன விட்டு போயிடுவீங்கனு பயம் தான்... உங்க அம்மா...எப்ப பாரு என் தம்பி மவ சிந்துவா இருந்துருந்த என் புள்ளைய இப்படி தாங்கிருப்பா அப்படி தாங்கிருப்பா...னு...😥😥😥😥என் கிட்ட சொல்லி சொல்லி.... ச்ச.....
ரேகா.....ப்ளீஸ்....போதும் என்னால இந்த அசிங்கத்தை இதுக்கு மேல கேக்க முடியல.....னு அவ காலில் விழுந்து மண்டியிட்ட படி அழுதான்...அவனது கண்ணீர் அவள் பாதத்தில் தெளித்தன....சாரா கிட்ட கூட ஏண்டி இவ்வளவு நாள் நீ பேசல ...
என்னங்க... நான் பல முறை அத்தை நம்பருக்கு போட்டேன் ஆனால் அத்தை கால் கட் பன்னிடாங்க.....இப்ப கூட உங்களுக்கு நிச்சயம் ஆக போதுனு கேள்வி பட்டு தான் ஓடி வந்தேன்.......எனக்கு இனிமே எதும் வேணாம் நீங்களும் சாராவும் போதும் ப்ளீஸ் ...........
ரேகா..........இதுக்கு மேலயும் நான் உன்னை நம்பல னா...நான் உன்னை காதலிச்சது பொய் னு ஆயிடும். எது ஆனாலும் சரி இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. நடக்கவும் விட மாட்டேன்.
🌼🌼
என்னங்க.....
சொல்லு ரேகா...சாரி..உன் பெயர் சொல்ல கூட அருகத இல்லை டி எனக்கு...
ஏன் அப்படி லா சொல்றீங்க இதுல உங்க தப்பு எதும் இல்லை.... ஏங்க இப்ப எனக்கு எங்க போறதுனு கூட தெரியல...டிவோர்ஸ் ஆனது ல இருந்து என் அப்பா என்னை சேக்கல வீட்ல....
அவளது கைகளை பிடித்தவன் ....நான் இருக்கிறேன் உனக்கு என்பது போல் கண் ஜாடை காட்டினான்... "ஐ..யம் சாரி"னு கண்ணீரை துடைத்து விட்டு கட்டி அணைத்தான்.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro