8
நிச்சயம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்பு மலேசியாவில் இருந்து கிளம்பினான்...ப்ளைட்டில் பக்கத்து இருக்கையில் வயதான பெண்மணி...
புத்தகம் வாசித்து கொண்டே வந்தார் அந்த பெண்மணி வந்தார்....
அருணுக்கு ஒன்றும் புரியவில்லை....
"மா...நைஸ் மீட்டிங் யூ.......
ம்ம் நைஸ் மீட்டிங் யூ சார்..
புத்தகம் வாசிக்க உங்களுக்கு அவ்வளவு பிரியமா....?????????
ஆமா.....ஏன் கேக்குறீங்க..
இல்லை.... சலிப்பு எதும் வரலையா...?
ஹாஹா... ஏன் சிரிச்சிங்க..
நமக்கு புடிச்ச எந்த விஷயத்தையும் சலிப்பு னு நினைக்க மாட்டோம் தம்பி...பொறுமையும் நிதானமும் இருந்தா சலிப்பு வராது...
ஏதோ நறுக்குனு சொல்ற மாதிரி இருக்கே...ம்ம்ம் இவங்க சொல்வதில் அர்த்தம் பல உள்ளன... ம்ம்ம் சரி நம்ப வேலைய பார்ப்போம். ..
சற்று நேரத்தில் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கினான்.....வெளியே வந்து டாக்ஸி பிடிக்கும் போது...பின்னாடியில் இருந்து யாரோ கூப்பிடுவது போல் இருந்தது...
"இந்த குரல் எங்கயோ கேட்டுருக்கேன்...
சட்டெனு திரும்பி பார்த்த பின்பு தான் புரிந்தது அது ரேகா என்று....
"ஹே.......ரே..கா..
அருண்...நீங்க இங்க....?
நான் மலேசியா ல இருந்து வந்தேன் ....இப்பதான்.
அ...ருண் (little bit emotion.) நான் இப்ப தான் இந்தியா வந்தேன்....அதுவும் உங்கள பாக்க தான்...உங்களையும் சாராவையும்.
என்ன?? என்ன பாக்க நீ யா???இப்படி சொல்ல வெக்கமே இல்லையா டி...இவ்வளவு நாள் இல்லாம இப்போ என்ன இதுக்கு வந்த??
கோபப்படாத அருண்...ப்ளீஸ் எல்லாரும் பாக்குறாங்க...
(அருண் மனசு) - என்னதான் இருந்தாலும் நம்ப மனைவியா வாழ்ந்தவளாச்சே...இப்படி தெருவில் கத்தி பேசுறது தப்பு...சரி இவ்வளவு நாள் இல்லாத இப்ப என்ன சொல்ல வரா...கேப்போம்.
சாரி....ம்ம் வா அப்படி நடந்துட்டே பேசுவோம் - அருண்.
அருண்...என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டிங்களா????😢
சொல்லு....ரேகா
என்னை நீங்க காதலிச்சு தானே கல்யாணம் பன்னிட்டிங்க???உங்க அம்மா வேண்டானு சொல்லியும் கட்டாய படுத்தி தானே ஒத்துக்க வச்சிங்க...கிட்ட தட்ட அரேஞ்சுடு மாதிரி தானே நடந்தது ??நான் உங்க வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்து என்ன நடந்தது தெரியுமா உங்களுக்கு????
இப்பதான் அவளை நிமிர்ந்து பார்க்க நேரிட்டது அவளது வார்த்தைகள் அவனை மெளனம் ஆக்கியது....பேச முடியாது தடுமாறினான்...
மிஸ்டர் அருண்....உங்களை தான்...
ரே...கா....னு அவன் பெயர் உச்சரிப்பே தடுமாறியது....சுதாரித்து கொண்டு...
"ஐ ...காண்ட் அன்டர்ஸ்டண்டு", ப்ளீஸ் சொல்லு புரியல ...
அவள் கண்களிலிருந்து நீர் ஓடியது...எல்லாவற்றையும் சொல்லி அழனும் போல இருந்தது ...தான் குற்றமற்றவள் என்று நிருபிக்க இந்த சந்தர்ப்பம் கடவுள் கொடுத்தனுப்பியது போல் உணர்ந்தாள்.
அவள் குற்றமற்றவள் என்பது அவள் கண்ணில் தென்பட்டது ...கண்ணீரை துடைக்க அவன் கைகள் ஓங்கியது...அவனது விரல்களால் மெல்ல கண்ணீரை துடைத்தான்....
பல நிமிடங்கள் உரையாடலுக்கு பிறகு "ஐ..யம் ..சாரி டி.."னு அவளை கட்டி அணைத்தான்...
என்ன உரையாடல்????? அது.... ????
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro