5
கோவிலுக்கு தயாராக சிந்து புடவை அணிந்து கொண்டாள்...அது ரேகா அலமாரியில் இருந்த புடவை....முதன் முதலில் அவளுக்கு அருண் வாங்கி தந்தது.
"சிந்து...நீ ஏன் இந்த புடவை கட்டிருக்க??☺️
இல்லை அத்தை தான் ஏடுத்து தந்தாங்க ...
உன் அத்தை க்கு அறிவு இல்லை... முதலில் இதை கழட்டி வை வேற புடவை அத்தை ரூம்ல இருக்கும் பாரு அது எதாச்சும் கட்டு.
ம்ம்ம் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற??
ம்ம்ம் இது ரேகாவுக்கு நான் வாங்கி தந்த புடவை..
இருக்கட்டும் அதான் இப்ப ரேகா இல்லையே...
அதுக்கு????நீ முதலில் கழட்டி வை.
ம்ம்ம் கழட்டிருவேன் ஆனால் அதெல்லாம் பார்த்து நீ பயந்துறாத மாமா..😀(குறும்புடன்)
நான் எல்லாம் பார்த்தவன் தான் .பாக்கமையா சாரா பிறந்தா..நீ மூடிட்டு வேற புடவை மாத்து.
சரி சரி கோபப்படாத....நீ வெளியே போ..நான் புடவை மாத்திக்கிறேன்.
"என்ன தைரியம் எங்க அம்மாவுக்கு ரேகா புடவையை போய் அவளுக்கு கொடுத்துருக்கு....இரண்டு ல ஒன்னு கேக்குறன்..
மா.....மா....
ஏண்டா கத்துற..
ம்ம்ம் ..கடிச்சி குதறுல னு சந்தோஷ படு என்ன காரியம் பன்னிருக்க நீ ரேகா புடவையை சிந்துக்கு கொடுத்துருக்க
ம்ம்ம் இவ்வளவு தானா.....நான் என்னமோ னு பயந்துட்டேன்.
ஏன் மா...இப்படி பன்ற???
இதுல என்னடா இருக்கு நம்ப சிந்து தானே...
இங்க பாரு எல்லாத்தையும் எதார்த்தமா லா எடுத்துக்க முடியாது. ரேகா என்ன விட்டு போனவ தான் அதுக்காக சிந்து ரேகா ஆகிட முடியாது.
நான் வெளிபடையா கேக்குறன் டா...சிந்து உனக்கு பிடிக்கலையா??
பிடிச்சா...உடனே கட்டிக்கனுமா??
ம்ம்ம்...போடா லூசு.
நீ தான் மா...லூசு...இங்க பாரு ரேகா எடத்துக்கு சிந்து வர வைக்க நீ முயற்சி பன்றனு பச்சை யா தெரிது...ஆனால் உடனே சிந்தவை ஏத்துக்க நான் ஒன்னும் பச்சோந்தி இல்லை... நானும் மனிஷன் தானே.
அப்படி னா...நீ ரேகாவை மறக்கலையா?
ம்ம்ம் எனக்கு என்ன short memory loss ah..😀😀😀
அப்படி... இல்லை டா...
நீங்க எதுவும் பேசாதிங்க மா...ரேகா வை நினைக்காம இருக்கிறேன் அவ்வளவு தான் ஆனால் அதுக்காக மறந்துட்டனு அர்த்தம் இல்லை...நான் ரேகாவை மறந்தாலும் அவளோட நினைவுகள் இன்னும் இருக்கு மா....இப்ப கூட சிந்து அந்த புடவையை கட்டினப்ப மனசு ஏதோ தடுமாறுச்சு ஆனால் சுதாரிச்சன்.
சாரி டா கண்ணா.....சரி வா கார் எடு கோவில் போவோம்
ம்ம்ம் என்னை கார் ட்ரைவர் ஆக்கியாச்சா????😊😊😊😊
சிந்து - ஹே மாம்ஸ்.... இந்த சுடிதார்... ஓகே வா...இது ஒன்னும் உங்க டார்லிங் டிரஸ் இல்லை... என்னோட ட்ரஸ்
அருண் -அம்மாடி நீ எந்த ட்ரஸ் வேனாலும் போட்டுக்க...😀
வாங்க வாங்க... கார் எடுங்க மாம்ஸ்...
நீயுமா டி...😀😀😀😀😀ஒரு தொழிலதிபர் கிட்ட இப்படியா பேசுவது.. ச்ச...என்னோட இமேஜ் போச்சு.
உன்னோட இமேஜ் டேமேஜ் பன்ன தானே நான் வந்துருக்கன்...😀
நீ ஓடு...முதல்ல கோயம்புத்தூர் க்கு....
ஹாஹா.... போ மாம்ஸ்... ஆமா நீ என்ன வேட்டி சட்டை ல கலக்குற..??😊
என்ன டி சைட் அடிக்கிறியா...ம்ம்ம்...
ஆமா நல்லா இருக்கீங்க மாம்ஸ்...
...
கோவிலில் சாமி கும்பிட்டு பிராசதம் வாங்கி சாராக்கு ஊட்டி விட்டு நெற்றியில் விபுதி பூசி கண்ணீல் படாதவாறு ஊதிவிட்டாள்...அதை பார்த்த அருண் "ப்ப்பா... செம்ம பொன்னு சிந்து...இவ்ளோ சீக்கிரமே சாராவை தன் வசம் இழுத்து விட்டாள்😀
கடவுளே இந்த இரண்டு பேரையும் சேர்த்து வச்சிரு - பங்கஜம்.
அருண் - கடவுளே இப்ப இருக்கிற இந்த நிம்மதி இருந்தாலே போதும் என் லைப் ல....
அத்தை...நான் போய் விளக்கு ஏத்திட்டு வரேன்...
ம்ம்ம் அருண கூட்டிட்டு போ மா சிந்து
அருண் - மா....என்ன இதெல்லாம்...என்று தன் தாயிடம் சினுங்கினான்
அருண் மாம்ஸ் வா விளக்கு ஏத்தலாம்.
வரேன் போடி....அய்யோ இந்த வேட்டி வேற கழண்டுர மாதிரி இருக்கு...
இருவரும் ஆளுக்கொரு விளக்கம் ஏற்றி வந்தனர்..முடிவில் ஒரு விளக்கு மற்றும் தனித்திருக்க ..யார் ஏற்றுவது என்று யோசித்த போது...வெடுக்கென்று சிந்து ஏற்றினாள்...ரொம்ப பிரகாசமாக இருந்தது அந்த விளக்கு...
"மாமா.....என்ன அப்படி பாக்குற??என்று கேட்டவளிடம் ..ஒன்னுல இந்த விளக்கு மட்டும் இவ்வளவு பிரகாசமா இருக்கேனு பாக்குறேன்....ஆமா சிந்து "என்ன திடிர் னு விளக்கு லா ஏத்துற எதாச்சும் வேண்டுதலா???
ஆமா....ஆனால் அது என்னனு இப்ப உனக்கு சொல்ல மாட்டேன்.
ஏன்??
சொன்னா பலிக்காது😀
(தொடரும்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro