4
இவ தாங்க நம்ப சிந்து (sindhu) நல்ல மலர்ச்சியான முகம்...கூந்தல் அழகி 😀😀இயற்கை யை ரசிப்பதில் அலாதியான பிரியம். பஸ் ஸ்டாண்டுல நம்ப அருண பார்த்தவுடன் "ஹாய் அருணாச்சலம் மாமா... எப்படி...இருக்க னு ஓடி வந்து கட்டி அணைத்தாள்" அவனை முழு பெயரிட்டு கூப்பிடும் ஒரே ஜீவன் இவள் மட்டுமே....சின்ன வயசுல இருந்தே அப்படி தான்...குறும்பு தனமும் கொஞ்சம் அதிகம்😀 ஆனால் நம்ப அருண் தான் அவளை கண்டுக்கவே மாட்டான்.
ஹே...மாமா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீ போனும் கையுமா திரியிற....😀
பிஸினஸ் கால் வைட் பன்னு....
ம்ம்ம் அது சரி...
கொஞ்சம் நேரம் கழித்து அவன் பேசினான்..."சொல்லு சிந்து எப்படி இருக்க"
அப்பாடி இப்பவாச்சும் கேட்டிங்களே...சரி சரி எப்படி இருக்காங்க ரேகா உங்க டார்லிங்😀
கடுப்பு ஏத்தாத ....கார் ல ஏறு ...
அட சொல்லு மாமா....
ம்ம்ம்... டிவோர்ஸ் ஆயிடுச்சு ..
என்ன???டிவோர்ஸ் ....
ஆமாம் வாய பொளக்காத ...
இவ்வளவு சாதாரண மா சொல்ற மாம்ஸ்....என்ன.??.. துரத்தி விட்டு கதை சொல்றீயா...😀
ரேகா பத்தி பேசாத ப்ளீஸ்...
அது சரி ....ம்ம்ம் அப்புறம் ஆளே ஒரு ரேஞ்சுல இருக்க...செம்மயா இருக்க மாமா நீ.
அப்படியா.....சரி வா கோவில் கிட்ட நின்னு தாலி கட்டிக்க....😀
என்னது தாலி கட்டிக்கிறதா???ஐயோ...இதுக்கு நீ என் கழுத்துல தூக்கு கயிறு மாட்டிடு😋
ஏண்டி நான் என்ன அவ்வளவு மோசமான ஆளா?ஹாஹா
ம்ம்ம்.... அப்படி எல்லாம் இல்லை.. ஆனால் கொஞ்சம் மோசம் தான் ...என்ன பன்றது உன் வளர்ப்பு அப்படி..😁
ஐயே...ச்சி போ....நீயே வந்தாலும் உன்னை கட்டிக்க மாட்டேன் நானு....
அப்படியா...சரி நான் தப்பிச்சேன் மாம்ஸ்..😀
ம்ம்ம் வீடு வந்துருச்சு...இறங்கு...
ஹாய் அத்தை......னு ஓடி போய் பங்கஜத்தை கட்டி அணைத்தாள்....தன் தம்பி மகளை முத்தமிட்டு வரவேற்றாள் பங்கஜம்..."வாடி என் ராசாத்தி..."
அதுக்குள்ள அருண் அப்பா வந்தாரு "ஏய் வாயாடி.....எப்படி இருக்க"
ம்ம்ம் உங்களை மாதிரியே அழகா இருக்கேன் மாமா...ஹாஹா.
அடிப்பாவி குசும்பி😀
இதை சாரா பார்த்து கொண்டிருந்தாள்...அருணிடம் சென்று "அப்பா இந்த ஆண்டி யாரு "
ஹாஹா... இவங்க பெயர் சிந்து ...உன்னுடன் விளையாட வந்துருக்காங்க....ஓகே வா....
ஐ....ஜாலி😀
இடையில் சிந்து வந்தாள்..."சாரா குட்டி வா நான் நீ இரண்டு பேரும் ரூமுக்கு போலாம்"
சிந்து ஒரு நிமிஷம். ....
என்ன மாமா சொல்லு....
இனி...சாரா வை நீ தான் பாத்துக்கனும்
கண்டிப்பா மாம்ஸ் ஆனால் அதுக்காக உனக்கு பொண்டாட்டி யா இருக்க சொல்லிடாத😋😋😋😋
ஹாஹா... ஹேய் வாலு உன்னை😀
காது வலிக்குது அப்படி திருகாத மாமா... ஆஆஆ...வலிக்குது..
நல்லா வலிக்கட்டும்.
சரி சரி நான் ஆபிஸ் கிளம்புறன் பை பை....
டேய் அருண் நில்லு....பங்கஜம் கூப்பிட்டாள்.
என்ன மா...???
ஒன்னுல.....இன்னைக்கு சாய்ங்காலம் கோவில் ல பூஜை கொடுத்திருக்கேன் எல்லாரும் போலாம்.
ஓ....என்ன விசேஷம்?
இன்னைக்கு சஷ்டி டா...😀
சஷ்டி என்று சொன்னவுடன் ரேகா நியாபகம் வந்தது....சஷ்டி அன்று முருகன் கோவிலில் பஜனை பாட ரேகா செல்லுவாள்...அந்த ஞாபகம் தொற்றி கொண்டது.
என்னடா ஒரு மாதிரி ஆயிட்ட??
ஒன்னுல மா...சரி நான் ஆபிஸ் போயிட்டு சீக்கிரமே வரேன் கோவில் போகலாம். ...
அவன் ஆபிஸுக்கு புறப்படுகையில் அதை நினைத்து பார்த்தான் ..கோவில் ல அனைவரும் அவளது பக்தி பாடலை கேட்டு பூரித்தனர் என்ன கைத்தட்டு ...ம்ம்ம் ரேகா நல்ல திறமையான பொன்னு தான் ஆனால் எனக்கு தான் அவளை சரியாக புரிஞ்சிக்க முடியல..போல...ச்ச...சிங்கப்பூர் போறேனு சொல்லும் போதே அவளை அனுப்பி வச்சிருக்கலாம் டைவர்ஸ் ஆகாமல் இருந்திருக்கும்..
ச்ச...நான் ஏன் அவளை நினைக்கிறேன்????அவளை மறக்க முடியலையோ..என்ன தான் இருந்தாலும் அவ கூட வாழ்ந்தவனாச்சே அவ்வளவு ஈஸியாக மறக்க முடியுமா.
தொடரும்😀
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro