3
நாட்கள் கடந்து செல்ல செல்ல.... ரேகாவை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான். அது அவனுக்கு நல்லாதாகவே இருந்தது ...தனது முழு கவனத்தையும் பிஸினஸில் காட்டினான்.
எளிய முறையில் ஆப்ரேஷன் செய்ய உபகரணங்கள் தயாரிப்பதில் ஆராய்ச்சி செய்தான் ,பல டாக்டர்களின் ஆலோசனை கேட்டான்......அவனது புதிய முயற்சி வெற்றி ஆனது...பல மருத்துவமனைகள் அவனது தயாரிப்பை வாங்கியது..
"அருண் த கிரேட்"னு ஒரு டாக்டர் பாராட்டி அவனுக்கு விருந்து அளித்தார். இப்படி ஒரு பெயர் சம்பாதித்து விட்டான் . அவனுடைய தொழிலில் நல்ல மாற்றம். பின்ன சும்மாவா bsc (instrumentation ) படிப்பு படிச்சவனாச்சே...இது கூட பன்னலனா எப்படி.
மேலும் படிக்க ஆர்வம் இருந்தாலும் தொழிலில் ஆர்வம் அதிகமானதால் படிப்பு தொடராமல் பிஸினஸில் கவனம் செலுத்தினான்...இன்று மிக பெரிய பிஸினஸ் மேன் .😀ஆனால் பர்ஸ்னல் லைப் ஜீரோ ஆகிவிட்டது. இதனை சரி செய்ய தனக்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்தான் ஆனால் அதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை. அன்று ஒரு நாள் ....
"டேய் அருண் ஊரில் இருந்து நம்ப சிந்து வராலாம் போய் பஸ் ஸ்டாண்ட் ல அழைச்சிட்டு வா டா...னு பங்கஜம் சொல்ல..
மா....யாரு மா...சிந்து ???
அய்யோ ....டேய் உன் மாமன் பொன்னு டா ...கோயம்புத்தூர் ல இருக்காலே அவ..தான்..
ம்ம்ம் ஓ...ஓ..அவளா...என்னவா திடிரென்று சென்னை வரா....???
அது வந்து இங்க ஏதோ பியூட்டிஷன் கோர்ஸ் படிக்கனுமா அதான்....
ஏன் கோயம்புத்தூர் ல அந்த கோர்ஸ் இல்லையாமா....என்ன மா கதை விடுற நைஸாக.
அருண்...அவளுக்கு இங்க வந்து படிக்க ஆசை டா...அதான்... அதுமட்டுமின்றி பிளஸ் டு முடிச்சிட்டு 6 வருஷம் சும்மா வீட்டில் இருந்தா ...இப்ப தான் அவளுக்கு எதாச்சும் பன்னனும் னு தோனிருக்கு அதான் வரட்டும் விடு டா...
ம்ம்ம் க்கும்.....😀நீ வர வைக்கிறது எதுக்கு னு புரியுது ஆனால் இப்போ எனக்கு எதும் வேண்டாம் தாயே...ஆள விடு....மறுபடியும் கிணறு ல விழ நான் தயாராக இல்லை...
ம்ம்ம் ரொம்ப தான் உனக்கு..... எங்க இன்னொரு கல்யாணம் பன்னனும் னு உனக்கு ஆசை இல்லை னு சொல்லு பார்ப்போம்😀
இருக்கு ஆனால் உடனே அவசர பட விரும்பல மா...நல்லா அலசி ஆராய்ஞ்சி அப்புறம் தான்.....
அதுவும் சரி தான்.... ஆனால் சிந்து வருவது காரணம் சாராக்கும் ஒரு ஆறுதல் இருக்கும்னு தான்.
ம்ம்ம் இப்ப சொன்னியே இது வாஸ்தவம்😀
உடனே அவன் அப்பா குறுக்குல வந்து "பங்கஜம் .....நானும் உன்னை டிவோர்ஸ் பன்னிட்டு இன்னொரு கல்யாணம் பன்னலாம் னு இருக்கேன் 😀😀😀😀😀😀😀
ம்ம்ம்... ஒருதருக்கு எழுந்து நிக்கவே வக்கு இல்லையாம் ...அதுக்குள்ள...
ஐயோ போதும் டி...நீ போய் காப்பி கொண்டா....
ஹாஹா.... அப்பா ஏன் பா அம்மா கிட்ட தேவை இல்லாத பேசி கலாய் வாங்குறீங்க...😀
ம்ம்ம் பின்ன என்ன டா சும்மா கல்யாணம் கல்யாணம் னு உன் அம்மா அவசர படுறா...பாவம் நீயே ரேகா மூலமாக பட்ட அவஸ்தை போதாதா....
கரெக்ட் தான் பா...நீங்க சொல்றது...அதுக்கு தான் அவசர பட வேண்டானு நான் நினைக்கிறேன்.
சரி டா ...சிந்துவை கூட்டிட்டு வா..பாவம் வயசு பொன்னு தனியா பஸ் ஸ்டாண்ட் ல நிக்கும்.
ஓகே பா.....நீங்க சாரா வை ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வந்துருங்க..
நான் கிளம்புறன்😉
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro