2
ரேகா தனது சுதந்திர காற்றை சுவாசிக்க சிங்கப்பூர் புறப்பட்டாள்..அவளுக்கு இனி அவளது பணியே வாழ்க்கையானது. பணி நிமிர்த்தமாக சிங்கப்பூர் வந்தவள் அங்கே யே தனது வாழ்க்கை யை துவங்கினாள் தனி மரமாக...
சாரா அடிக்கடி ரேக்காவை கேட்டு அழ துவங்கினாள்.... அவளது அழுகையை பார்த்து மனம் இறங்கி அருண் அவளை தொடர்பு கொண்டான் தொலைபேசி யில்
ரேகா...ப்ளீஸ் எனக்காக இல்லாட்டி நம்ப பொன்னுகாக ஒருவாட்டி இந்தியா வா...வந்து சாரா வை பார்த்துட்டு போ...
இங்க பாருங்க ....நீங்களே எனக்கு வேண்டானு நினைக்கிறேன்... இதில் எனக்கு சாரா எதற்கு????உங்க பொன்னு நீங்க தான் வேணும்னு வந்தா தானே.... நீங்களே பார்த்துக்கோங்க...சாரி போன் பன்னி டிஸ்டர்ப் பன்னாதீங்க....
ச்ச.....என்னடா இவ....புரிஞ்சிக்க மாட்டேங்குறா
நாட்கள் நகர நகர வாழ்க்கை மீது பயம் தொற்றி கொண்டது அருண் க்கு...இனி சாராவை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தினறினான்...தனக்கு ஒரு ஆறுதல் வேண்டும் என நினைத்து பெங்களூர் சென்றான் பிஸினஸ் மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள....
மீட்டிங் முடிந்தது.... தனக்கு ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்பதற்காக ஸ்பா ....சென்றான்...வாழ்க்கை யில் முதல் முறையாக ஸ்பா சென்றான்...உடலுக்கும் மனதுக்கும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது...ரூமிற்கு வந்து ஒரு குளியல் போட்டான்.......ஏதோ நினைத்தப்படி படுக்கையில் படுத்தான்.....
இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமா????👍மனதுக்குள் எழுந்தது....
ஆனால் யாரை மணந்து கொள்வது என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க....மறுபக்கம் இது சரிவருமா வராதுன்னு ஒரு கேள்வி... மனதை போட்டு பிசைந்தான். அதற்குள் நித்திரை அவனை தழுவியது.
மறுநாள் புத்துணர்ச்சியுடன் கிளம்பி சென்னை வந்தான்....அவனை பார்த்த சாரா
"அப்பா...என்று கட்டி அணைத்தாள்"
அவளை தூக்கி கொஞ்சியபடி இருக்க பங்கஜம் அவனிடம் "அருண் உனக்காக உன் பொன்னு இன்று பள்ளி க்கு கூட போகலை.....அவளை கூட்டிட்டு வெளியே போயிட்டு வா டா "
ம்ம்ம் சரி மா ...இருங்க ப்ரஷ் அப் ஆயிட்டு வரேன்...
ப்ரஷ்அப் ஆகிட்டு தன் மகளை காரில் அழைத்து கொண்டு லாங் ட்ரைவ் சென்றான்..
சாரா - ஐ.....ஜாலி......செம்ம வேகமா போறீங்க பா....😀அந்த பைக் ஓவர்டேக் பன்னுங்க ....
அருண் - குட்டி மா...பைக் என்ன பைக் அந்த கார் ஓவர்டேக் பன்றேன் பாரு அப்பா...
இரண்டு பேரும் மனதுக்குள் இருக்கும் சோகத்தை மறைத்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.....
"அப்பா கொஞ்சம் கார் நிறுத்துங்க..😀
ஏன் டியர் என்ன ஆச்சு..
அப்பா அங்க பாருங்க ...அந்த குடிசை ல ஒரு அம்மா அவங்க பாப்பா க்கு சோறு ஊட்டுராங்க....
ம்ம்ம்... சாரா குட்டி...அதுக்கு என்ன.. அப்பா உனக்கு ஊட்டி விடுறேன் செல்லம் ...இங்க பாரு உனக்கு பிடிச்ச லெமன் ரைஸ் ....உங்க பாட்டி டிபன் பாக்ஸ் ல போட்டு அனுப்பியிருக்காங்க..😀 இந்தா....ஆ...வாங்கிக்கோ...
ஆ......அப்பா....போதும்..
இன்னொரு வாய்...அப்பாக்காக....ப்ளீஸ்..
ம்ம்ம்... அப்பா..உனக்கு ஒரு வாய்.
மாறி மாறி அப்பாவும் மகளும் ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விட்டு கொண்டு இருந்தனர்...நேரம் போனதே தெரியவில்லை.
திடிரென்று கைபேசி அழைப்பு.. எதிர் முனையில் "ரேகா"
"என்னங்க..... ம்ம்ம் சாரி சாரி மிஸ்டர் அருண்...
ம்ம் சொல்லுங்க மேடம்...
அது வந்து நான் சாரா கிட்ட பேசலாமா...???
ஏன் இந்த திடிர் பாசம்...
இன்னைக்கு சாரா வின் ஸ்டார் பிறந்த நாள்... அதான் விஷ் பன்னலானு ...
ஓ.....ஸ்டார் பிறந்த நாள்... இந்த அளவு சாரா மேல ஆசை வச்சிகிட்டு எதுக்குடி இப்படி பன்ன?????டைவர்ஸ் வாங்குற அளவு ஏண்டி இப்படி நடந்துகிட்ட...???
அருண் பழையசு லாம் பேசி நேரம் வீனடிக்காதிங்க.....சாரா கிட்ட போன் தாங்க...
தரேன் ஆனால் அதுக்கு முன்பு ஒன்னு சொல்றேன் கேளு...இனி சாரா கிட்ட பேசனும் னா எங்க அம்மா நம்பருக்கு கால் பன்னி பேசு...என்னோட நம்பருக்கு பன்னாத.....நான் எல்லாத்தையும் மறக்கனும் னு நினைக்கிறேன்.
அருண் இங்க பாருங்க....சிங்கப்பூர் போகனும் னு என்னோட கனவு அதற்கு தடையா இருந்தீங்க... குடும்பம் அது இது னு காரணம் காட்டி.... வேற வழி தெரியவில்லை அதான் டிவோர்ஸ் வேணும்னு பிடிவாதம் பிடிச்சேன்.
ம்ம்ம் (நமட்டு சிரிப்புடன்) உனக்கு சிங்கப்பூர் போறது தானே முக்கியம்னு நினைச்ச ...சாரா பற்றிஅப்போ நீ யோசிக்க கூட இல்லை ல....அதுமட்டுமின்றி என்னோட சக பெண் பிஸினஸ் பார்ட்னர் கிட்ட பேசினா கூட உடனே சந்தேகம் ...ச்ச..கொஞ்சம் நஞ்சமா டி நீ எனக்கு பன்ன டார்ச்சர்....
சாரா - அப்பா...ப்ளீஸ் போதும் போன் தாங்க நான் பேசனும்..
"அம்மா...எப்படி மா இருக்க???
நல்லாயிருக்கேன் சாரா...நீ எப்படி இருக்க????நீ தான் அப்பா கிட்ட இருக்க போறேனு கோர்டு ல சொன்ன ல....அதான் அம்மா உன்னை என் கூட கூட்டிட்டு போகல ...
ஆமா மா...எனக்கு அப்பா னா உயிறு...அதுக்காக உங்களை பிடிக்காது னு அர்த்தம் இல்லை..
கண் கலங்கியபடி ரேகா அழைப்பை துண்டித்தாள். அருணுக்கு ஏனோ மனம் வாடியது. "ரேகா ஐ மிஸ் யூ டி னு மனதுக்குள் சொல்லியபடி காரை கிளப்பினான்"
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro