11
சிந்து அருண் கண் விழிச்சத பார்த்து சந்தோஷபட்டா...ஆனால் சாரா இன்னும் கிடைக்கல னு வர்த்தம்..அந்த நேரம் வந்தா நம்ப ரேகா....
அருண் என்ன ஆச்சு?????😢
கார்...டிவைடர் ல...மோதிட்டு...
ஏய்..அருண்...உனக்கு எதாவது ஆயிருந்தா நான் செத்தே போயிருப்பேன்..னு அவனை தன் மடியில் தலை சாய்க்க வைத்தாள்...உடனே சிந்து இடத்தை விட்டு நகர்ந்தாள்... ஆனால் சிந்து மனதில் சாராவை பற்றின சிந்தனை மட்டுமே.... உடனே போன் செய்தாள் தன் மாமாவிற்கு...
மாமா......சொல்லுங்க சாரா கிடைச்சாளா??????😢
அம்மாடி இப்ப தான் போலிஸ் இன்பார்மேஷன் சொன்னார் நம்ப சாரா கிடைச்சாச்சு ....
ஆனந்த கண்ணிரில் மிதந்தாள் சிந்து....உடனே அருணை கட்டி அணைத்து சந்தோஷத்தை பறிமாற ஆசை ஆனால் ரேகா இருப்பதினால் ஏனோ உணர்வு தடுத்தது...அவனுக்கு குறுச்செய்தி அனுப்பினாள் "சாரா கிடைச்சிட்டா என்று"
அதை பார்த்து புன்னகை சிந்திவிட்டு ரேகாவிடம் காட்டிக்கொள்ளாமல் இருந்தான்....
ரேகா- ஆமாம் ...சாரா குட்டி நான் பாக்கனும் 😯
ம்ம்ம் பாக்கலாம் ரேகா செல்லம்....நான் முதல்ல வீட்டுக்கு போகனும் இந்த ஆஸ்பிட்டல் வாசனை சுத்தமா பிடிக்கல....
அதுக்குள்ள நர்ஸ் வந்தாங்க ஊசி போட...
"சார்...பேண்டு கீழ இறக்குங்க...
நர்ஸ்... இந்த மேடம கொஞ்சம் வெளியே நிக்க சொல்லுங்க... (நக்கலா😌)
ஓ....இவங்க உங்க மனைவி னு தானே நினைச்சன்..
இல்லை மேடம் மீண்டும் நக்கலாக...
அப்ப சரி...மா...நீ வெளியே போ...நான் ஊசி போடனும்...
ரேகா மைன்டு வாய்ஸ் -😊ம்ம்ம் க்கும் என்னமோ நான் எல்லாம் பாக்காத மாதிரி தான் ஓவர் ஸீனு...மூஞ்சியை பாரு ......வெளில போனுமா வெளில....போய் தொலைவும்.
🍁🍁🍁🍁சிந்து.....வீட்டுக்கு வந்து சாராவை தூக்கி கொஞ்சியபடி கேட்டாள் "எங்கடி போயிருந்த டி நீ...ம்ம்ம்..."
ஆண்டி...நான் நானே வீட்ட விட்டு போயிட்டன் ..என்னை யாரும் எதும் பன்னல....அப்புறம் போலிஸ் அங்கிள் என்னை வீட்டுக்கு கூட்டு வந்துட்டாரு.
எதுக்கு வீட்டு விட்டு போன??
பங்கஜம் பாட்டி...எப்ப பாரு வஞ்சிட்டே இருக்கும்....அப்பாவும் நீங்களும் சேருவதற்கு நான் தடையாமா...
இங்கே பாரு இனிமே இப்படி பன்னாத புரியுதா... உங்க அப்பா உன் மேல உசுரே வச்சிருக்காரு.
ம்ம்ம்......
🌹🌹
டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிட்டு அருண் கிளம்பி வீட்டுக்கு வந்தான்... மணி அப்போ இரவு 8...எல்வலாரும் சாப்பிட்டு டிவி பார்த்துட்டு இருந்தாங்க....
சிந்து அவனுக்கு சாப்பாடு பறிமாற வந்தா....அவனும் போய் கை அலம்பிட்டு உக்காந்தான்....ரேகா பற்றி கேக்க வேண்டும் என்று அவளுக்கு ஆர்வம் ...
மாமா....
சிந்து ப்ளீஸ் சாப்பிடுற வரைக்கும் எதும் பேசாத....சாப்பிட்டு நானே கூப்பிடுறன் அப்புறம் பேசு.
சரி......
சிந்து...சட்னி கொஞ்சம் ஊத்து....அவ உடனே சட்னி எடுத்து ஊத்துறப்ப ..தடுமாறி அவன் மேல விழுந்துட்டா....பாவம் எழுந்திருக்க மனமில்லை போலும்...அவன் கண்களை பார்த்தபடி அப்படியே இருந்தாள். வேறு வழியின்றி அவன் அவளை விலக்கி விட்டான் ...சாப்பிட்டது போதும் கையை கழுவுவோம் என்று எழுந்து நிற்க.... சாரா ஓடி வந்தாள்....
"அப்பா......என்னை தூக்குங்க......
அவளை தூக்கியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். சாராவை தட்டி தூங்க வைத்துவிட்டு .... சிந்துவிற்கு குறுச்செய்தி அனுப்பினான்
"சிந்து ...மொட்டை மாடி...வா....பேசனும்"
பதில் "வரேன் மாமா..."
🌹🌹🌹என்ன பேசுறாங்க இரண்டு பேரும் பார்ப்போம் (தொடரும்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro