பெண்ணே!...
பூக்களின் மகரந்த மணம்
உணர்ந்தேன் உன் கூந்தலில் பெண்ணே
நீரற்ற நெற்பயிராய் வாடினேன்
உன்னை காணாதததால் பெண்ணே
உறங்கிய நிலையில் உளறினேன்
உன்னுடன் பேசாதததால் பெண்ணே
தடைகள வீரனாய் இதயம் துடித்தது
உன் ஓரப் பார்வையால் பெண்ணே
மூச்சும் நின்று போனது
உன் புன்னகையால் பெண்ணே
புதுப் பித்தனாய் மாறினேன்
உன் கண் ஜாடையால் பெண்ணே
இமையிரண்டும் உறைந்து போனது
உன் பாவனைகளால் பெண்ணே
கோடையிலும் குளிர்ந்து
உன் உதடுகள் பேசாமல் முணுமுணுத்ததால் பெண்ணே
என் தேகம் முழுதும் சாந்தி அடையாது
நீ என்னுடன் சேரா விடில் பெண்ணே
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro