சன்னல் வழியே
நூலக சன்னல் வழியே இரசிக்கிறேன் வான்வெளியின் அழகை (நீல பெருங்கடல் போல் உள்ளதால் )
பதறினேன் படபடவென அடிக்கும் பறவையின் இறக்கைச் சத்தம் கேட்டு....
சத்தம் இல்லாமல், இசையில்லாமல் ஆடுகின்றன மரத்தின் கிளைகள்
புத்துயிர் அளிக்கின்றன மரங்களில் மலர்ந்திருக்கும் வெள்ளைப் பூக்கள்....
மனம் குளிர்கின்றது தென்னை ஓலையின் பாடல் வரிகளால்....
பேனா மையோ சொல்கிறது படிப்பதில் கவனம் செலுத்து என்று...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro