உயிர்ப்பிப்பேன்
புயல் கூட தூறல் ஆகுதடி
உந்தன் புன்முறுவல் கண்டால்,
கடும் வெயில் கூட
காணாமல் போகுமடி
உந்தன் காந்தப் பார்வையைக் கண்டால் ,
கடல் அலை கூட உறையுமடி
உந்தன் பாதம் பட்டால்,
காட்டாறு கூட கரைந்து போகும்மடி
உந்தன் கைவிரல் கண்டால்,
அருவி கூட வற்றதாடி
உந்தன் கருங்குந்தல் கண்டால்,
வான் உயர்ந்த மரங்கள் கூட
மண்டியிடுமடி உந்தன் உதடுகள் குவிந்தால்,
வீச்சரிவாள் எல்லாம் வளையுமடி
உன் புருவம் கண்டால்,
வானம் கூட நிறம் மாறுதடி
உன் கண்கள் சிவந்தால்,
அடியே நானும் மறுபடியும் மழலையாய்
உயிர்ப்பிப்பேன்
உந்தன் மனதின் காதலைக் கண்டால்........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro