இயற்கையோடு ஒன்றினை
உவமைகள் பல தேடினேன் உலகை ரசிக்க
கள்ளமில்லா உள்ளம் உணர்த்தியது முதலில் உன்னை நேசி என்று
காலமெனும் கட்டுமரத்தால் கவிழ்ந்து நின்றேன்
கானம் மட்டுமே என்னை தாங்கிப் பிடித்தது
வினாக்களால் மனம் மயங்கி நின்றேன்
விடைகள் பரிசளித்தது வியர்ந்து பார்க்கும் வியர்வைத் துளிகளை
ஆசைக்களுக்கிடையே ஆழ்ந்து கிடந்தேன்
அன்னையின் அன்பு மட்டுமே அடைக்கலம் கொடுத்தது
துயரத்தின் வலையில் பிடிபட்டேன்
தூவானம் மட்டுமே மனதினை தூக்கிப்பிடித்தது.
இரசிப்போம் இவ்வாழ்க்கையை இயற்கையின் சுவாரசியங்களோடு
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro