இது போதும் எனக்கு!
கண் உறங்கும் நேரம்
உந்தன் காதல் கானம்....
காலத்தைக் கடன் கேட்கும்
உந்தன் வாழ்க்கைப் பயணம்....
ஆசைகளை ஆட்கொள்ளும்
உந்தன் கூந்தல் வாசம்....
அனைத்தையும் அரங்கேற்றும்
உந்தன் அழியா நேசம்....
நீங்கா நினைவுகளாய்
உந்தன் மாயப் புன்னகை....
ஊற்று தண்ணீராய்
உந்தன் ஒருதுளி வெட்கம் ....
இது போதும் எனக்கு....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro