அவள் ஒரு தொடர் கதை!
அவள் பார்வையால் பரவசம் ஆனேன்!
அவள் வார்த்தைகளால் வர்ணம் தீட்டினேன்!
அவள் புன்னகையால் புது உலகம் கண்டேன்!
அவள் முத்தத்தால் கடலில் மூழ்கினேன்!
அவள் முணுமுணுப்புகளால் மூச்சிறைத்துப் போனேன்!
அவள் கண்ஜாடையால் விழுந்து மயங்கினேன்!
அவள் பரிவுகளால் பைத்தியம் ஆனேன்!
அவள் அனிச்சைகளால் ஆனந்தம் கொண்டேன்!
அவள் அரவணைப்பால் ஆசைகள் கொண்டேன்!
அவள் அழகில் காற்றில் கானம் கண்டேன்!
அவள் நேர்விழிகளால் நேர்த்தி கொண்டேன்!
அவள் கோபத்தால் அடிகள் பல வாங்கினேன்!
அவள் அடாவிடித்தனத்தால் அமைதியானேன்!
அவள் அனுபவங்களில் அதிசயம் கண்டேன்!
அவள் வெட்கத்தால் வேற்றுக்கிரகவாசி ஆனேன்!
அவள் ஆசைகளால் ஆர்பரித்துப் போனேன்!
அவள் ஆவேசத்தால் அதிர்ந்து உறைந்தேன்!
அவள் வேதனைகளால் வெதும்பி புழுங்கினேன்!
அவள் தனிமையால் அழுதுப் புலம்பினேன்!
அவள் அன்பால் அனைத்தையும் மறந்தேன்!
மொத்தத்தில் அவளின் கருவிழிகளில் என்னைக் கண்டேன்!
என்னில் உயிரான அவளைக் கண்டேன்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro