7
கால்(call) இல்:
அபி: அக்ஸர் (அழுகையுடனே)
அக்ஸர்: ப்ச்ச்...எதுக்கு இப்ப அழுதுகுட்டு இருக்கிறே??
அபி: உனக்காக தான் அழுகுறேனு உனக்கு புரியலயா??
அக்ஸர்: என்னமோ நான் உன்னை கொடுமை படுத்துற மாதிரி பேசிட்டு இருக்கே..
அபி: 😢😢😢
அக்ஸர்: ஆள் வந்துருக்காங்க...வைக்கிறேன்..
.
.
ப்ச்ச்...ஃபோன வச்சிட்டான்...வைக்கவானு கேக்க கூட இல்லை...ஏன் அக்ஸர் இப்படி பன்றே என நினைத்தவள் மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்தாள்..
(அதாங்க...அழுகுறது)...
டப்டப்...டப்டப்டப்...டப்டப்டப்டப் என சத்தம் அதிகமாக கேட்டு கொண்டிருக்க..
ப்ச்ச்...யாரு?? யாரு?? என அபி கேட்டும். ...
குரல் கொடுக்கமால் இருக்க...
மறுபடியும் சத்தம் கேட்கவும்...
இந்த நேரத்திலே யாரு இப்படி கதவ தட்டுரா என யோசித்தபடி சென்றவள்... கதவை திறந்தாள்...
அங்கே ஜராவை எதிர்ப்பார்க்காதவள்..
ஜரா என அவளை கட்டி கொண்டு அழுதாள் அபி...
ஹேய்...என்னாச்சி செல்லம்...ஏன் இப்படி அழுவுறா...என்ன ப்ராப்ளம் டி என அவளை சமாதானம் படுத்தி உட்கர வைக்கவும் ரம்யா வரவும் சரியாக இருந்தது...
ஒன்னும் இல்லை டி...என்ன ரெண்டு பேரும் திடீர்னு இந்த பக்கம் என கேட்ட அபியிடம்....
நேத்து தான் ரம்யா சென்னைல இருந்து வந்தா...உன்னை பார்க்கலாம்னு வந்தோம் என கூறியவள்...அவளை உற்று ஜரா நோக்க...
என்னாச்சி அபி... நீ ஏன் இப்படி இருக்கிறே... லாஸ்ட்டா என்கேஜ்மென்ட்ல கூட உடம்பு வச்சி அழகா இருந்தே...
இப்ப என்னன்னா இவ்ளோ மெலிஞ்சி. கண்ணுல கருவளையம் வேற...
என்ன டி இதுலாம் என ரம்யா கேட்க...
அமைதியையே கடைபிடித்தாள் அபி...
சொல்லு அபி... என்ன ப்ராப்ளம்... ஏன் இப்படி இருக்கிறே என கேட்ட ஜராவை கட்டி அழுக...
அழுகுனவளின் முதுகை தடவிவிட்ட ரம்யா... என்ன ஆச்சி சொல்லு டா என கேட்டாள்...
ஜராவை விட்டு எழுந்தவள் அவர்களை நிமிர்ந்து பார்த்து சொல்ல தொடங்கினாள்...
(சீக்கிரம்...வாங்க..வாங்க...கதை கேட்போம்)
ஷா(saaaaaa).... என்னமா மாப்பிள்ளை வீட்டுல சீர் வச்சிக்கிறாங்க...குடுத்து வைச்சவா தான் நம்ம அபி... ஒன்னு ஒன்னையும் பார்த்து பார்த்து வாங்கிக்றாங்களே என வந்தவர்களில் அநேகம் பேர் இதையே சொல்லி சென்றார்கள்...
வீட்டில் எல்லோரும் சந்தோஷம் அடைந்தனர்...
( இவர்களும் ஒன்னும் குறைந்தவர்கள் இல்லை... மாப்பிள்ளைக்கு தேவையானதை பார்த்து பார்த்து வாங்கி சீரில் வைத்தனர்)..
நிச்சயம் முடிந்து வீடு அளங்கோலமாக கிடக்கவும்... வீட்டை ஒதுக்கி வைக்கனும் என நினைத்தவள் ஒவ்வொன்றாய் ஒதுக்கி கொண்டு வர...அவள் கையில் ஒரு நூறு ரூபாய் பாண்ட் பத்தரம் இருக்க...என்னவா இருக்கும் என எடுத்து பார்த்தவள் அதிர்ந்தாள்...
.
.
(என்னவா இருக்கும்??...)
.
.
அதில்... கடம்பா நகரில் வசிக்கும் ராமின் மகள் அபிக்கும்...
காந்தி நகரை சேர்ந்த வேல் மகன் அக்ஸர்க்கும் இன்று வெள்ளி கிழமை நிச்சயமானது..
இந்த திருமணம் மூன்று வருடத்திற்குள் நடக்க இருப்பதால்...அதர்க்குள் மாப்பிள்ளைக்கு வரதட்சனையாக இரண்டு மாடி வீடும், ஐம்பது சவரன் நகையும் பொண்ணு வீட்டு சார்பாக பெண்ணின் தந்தையான நான் கொடுக்கிறேன்...
இப்படிக்கு ராம் என்றிருக்க.. அதிர்ச்சியில் பத்திரத்தை நழுவ விட்டவள் அப்பா என கத்தினாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro