5
அர்ஷாக்கு என்ன என கேட்ட அபியிடம் அர்ஷாக்கு பொண்ணு பாக்குறாங்க என ஜரா சொன்னாள்..
ஓய்...இத சொல்லவா தூங்கி கிடக்குறவள எழுப்பி விட்டா என அபி கேட்டு கொண்டிக்க...
மச்சி அபி... என்னையும் இந்த கொடுமைகாரி எழுப்பி விட்டுட்டா டி என ரம்யா கூற.. அப்ப எனக்கு ஹேப்பி என சிரித்தவள்..ஜராவிடம் திரும்பி ஏய் லூஸு..
அர்ஷா என் கஸின் டி...அவனுக்கு பொண்ணு பார்க்குறது எனக்கு தெரியாம இருக்குமா?? என கேட்டாள்....
ஹ்ம்ம்...தெரியும் டா...ஆனால், அவன் உன்னை லவ் பன்றான் என்று கூறி கொண்டிருந்த ஜரா ஒரு நிமிடம் அதிர்ந்தாள்..
( பின்னே... அவள் சொன்னவுடன்.. அபியின் கை ஜராவின் கண்ணத்தில் பதிந்தது)
நாயே...ஏன் டி அடிச்சே என்றவளை உன் மூஞ்சி...நீங்க ஏர்கனவே கொளுத்தி விட்டதாலே தானே அவனுக்கும் எனக்கும் சண்டை வந்து...நாங்க முன்னே மாதிரி பேசிக்காம இருக்குறோம்...
அகைன் அதையே சொல்றே என்றவளை உற்று நோக்கிய ஜரா... அப்ப நீ அர்ஷாவ லவ் பன்னலே... அப்படி தானே என கேட்க..
பக்கத்தில் இருந்த ரம்யாவிர்க்கு எதுவும் குடிக்காமலே பொறை ஏறியது...
என்ன டி சொல்லு..றே...ஹேன்..ஹ..அஹேன் என இரும்பிய படி..இது எப்பம் டி என கேட்ட ரம்யாவை பார்த்து முறைத்த அபி..
இவ தான் ஏதோ உலறுறானா...உனக்கு எங்க டி போச்சி.. அறிவு என அபி ரம்யாவின் முதுகில் ஒரு அடியை போட...
நான் ஒன்னும் உலரலே அபி... நீ எதுக்கு அவனை பார்த்து சிரிக்கிறே... அவன் பர்த் டே க்கு கிஃப்ட் குடுக்குறே என கேட்டு கொண்டு போனவளை... இவளுக்கு முத்திரிச்சி என்பதை போல அபியும் ரம்யாவும் பார்த்தனர்...
என்ன டி அப்படி பார்க்குறீங்க என்று கேட்டவளை...பின்ன என்ன டி...சிரிச்சா லவ்வா...கிஃப்ட குடுத்தா லவ்வா...என்ன டி முட்டாள் தனமா இருக்கு என கேட்ட ரம்யாவிடம்...
அப்படி கேளு டி...என் செல்லக்குட்டி என்றவள்...
ஜரா மா...நீ ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுறே மா... என்ன சுத்தி இருக்குறவங்க எல்லோர் பேர்த் டே க்கும் நான் கிஃப்ட் குடுப்பேன் மா..
கிஃப்ட் குடுக்குறது ஒரு சந்தோஷத்துக்காக.. அதுலாம் லவ் இல்லை டி என்றவளை...
சரி.. நீ என் லைஃப் லாங்க் என் கூட இருக்கனும்னு அர்ஷா கிட்ட சொன்னியா என ஜரா கேட்க...சிரித்து சிரித்து உருண்டவள் கட்டிலில் இருந்து பொத்தென விழுந்தாள் ரம்யா..
என்ன அபி... சினிமா டயலாக் லாம் பேசிக்கிறா போலே... முடியல டி என சிரித்து கொண்டிருந்தவளை காலால் ஒரு மிதி மிதித்தாள் அபி..
நான் அப்படிலாம் சொல்லலே ஜரா...நீ அர்ஷாவ கூப்பிடு...நான் அவன் கிட்ட கேக்குறேன் என்ற படி..ஜராவின் ஃபோனை எடுத்து அவள் மடியில் வீசியவள் கட்டிலில் போய் படுத்தாள்...
அர்ஷா..இங்க தான் இருக்கிறான்... அண்ணா ரூம் ல என ஜரா கூறி அதர்க்கு பதிலாக அபியிடம் இருந்து ஒரு முறைப்பை பெற்று கொண்டவள் அர்ஷாவை அழைத்து வந்தாள்...
.
.
வாங்க சார்...எப்படி இருக்கீங்க என கேட்ட அபியை... ஒரு பார்வை பார்த்தவன் தடுமாறி நின்றான்...
சொல்லு டா... ஊரு ஃபுல்லா என்ன பறையடிச்சி வச்சிக்கிறே என கோவமாக கேட்டவளை...
அது இல்லை அபி... நான் உன்னை என இழுத்தவனை... போதும் அர்ஷா... நீ எதுவும் பேசாதே... என் ஃப்ரெண்ட்ஸயே உனக்கு சப்போர்ட் பன்ற மாதிரி செட் பன்னிட்டே..
ஆனா, ஒன்னு அர்ஷா..
நான் என் பேரண்ட்ஸ் யார சொன்னாலும் மேரேஜ் பன்னிப்பேன்...
உன்னை எங்க வீட்லே மேரேஜ் பன்னிக்க சொன்னா கூட கட்டிக்க மாட்டேன் டா..
நான் சொல்லாததை எப்படி நீ சொல்லலாம்...அதுவும் பொய் சொல்லிக்கிறே என அபி கோவமாக பேசி கொண்டு போக...
அபியை அடக்க வழி தெரியாமல் கையை பிடித்து இழுத்தவன்...ஹேய் அபி மா...எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி..
உன்னை நான் ஏழு வருஷமா லவ் பன்றேன் டி...என்னை புரிஞ்சிகோ டி என்றவனிடம் இருந்து தன் கையை விடுத்து உதரியவள்..
நான் அன்றைக்கே கேட்டேன்லே அர்ஷா...
நீ அப்ப என் கிட்ட...ஏதோ இல்லைனு சொல்லிட்டு போனே...இப்ப எந்த மூஞ்சை வச்சிட்டு என் கிட்ட பேச வந்தே என்றவளிடம்...எனக்கு பொண்ணு பார்க்குறாங்க என்க...சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கோ... அந்த கடவுள் உன் வாழ்க்கைல எல்லா சந்தோஷத்தையும் தருவான் என கூறியவள் அந்த இடத்தை காலி செய்தாள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro