Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

44

ஏதேதோ யோசனையில் இருந்த அர்ஷாவிடம்,. "என்ன அர்ஷா.. டிவோர்ஸ்க்கு ஏற்பாடு பன்னிட்டியா??" என அபி கேட்க..கோவத்தில் கையில் வைத்து தண்ணீர் குடித்து கொண்டிருந்த கண்ணாடி க்ளாஸை மேலே தூக்கி கீழே வீசவும்.. அது சரியாக அபியின் இடது கால் மேல் விழுந்து உடைந்து தெறித்தது..

அந்த பளிங்கு கண்ணாடி அபியின் இடது காலில் விழுந்து முழுதாக உடைந்து.. குருதி வெளியேற.. வலியில் கண்கள் சொறுகி கீழே விழ போகவும்.. அப்பொழுது தான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய பதறிபோய் அவளை தாங்கி பிடித்து,. "ஹேய், அபி.. இங்கே பாரு மா" என அர்ஷா கூறிக்கொண்டிருக்க.. அவளோ மயக்க நிலையில்,. "லவ் யூ அர்ஷூ.. ப்ளீஸ்.. எ...ன்...னை விட்..டு போ..யி..றா... என அவனின் மேலே மயங்கி சரிந்தாள்..

"என்ன அர்ஷா செய்ஞ்சி வச்சிக்கிறே" என தலையில் அடித்து கொண்டு வேகமாக அபியை தூக்கி கொண்டு செல்ல.. எதார்த்தமாக அங்கே வந்த ஸ்ரேயா "என்ன ஆச்சி அர்ஷா" என கேட்கவும்.. "இல்ல மா.. க்ளாஸ் கால்ல விழுந்து மயங்கிட்டா.. தண்ணி தெளிச்சியும் எந்திரிக்கல.. நான் ஹாஸ்பிடல்க்கு போறேன்" என கூறி சாவியை கையில் குடுத்து.."கொஞ்சம் கதவை பூட்டிருங்க மா" என கூறி விட்டு மருத்துவமனையை நோக்கி வாகனத்தை செலுத்தினான்..

"ஏன் இவ.. என்ன விட்டுட்டு போயிறாதேனு சொன்னா?" என வழி நெடுகிலும் யோசித்த படியே சென்றான்..

மருத்துவர் வந்து பரிசோதித்து பார்த்து விட்டு,. "பெரிசா ஒன்னும் இல்லை.. க்ளாஸ் பீஸ் கால்ல குத்தி உள்ளே போயிருக்கு, உடம்புல ஸ்ட்ரென்த் இல்லாததால பெய்ன்ல மயங்கி விழுந்துட்டாங்க" என கூறி கொண்டு காலில் கட்டு போட்டவர்.. "ஒரு பாட்டில் போட்றுவோம்".."டென் மினிட்ஸ்ல கண் முளிச்சிறுவாங்க" என கூறவும்.. அபிக்கு க்ளூகோஸ் ஏற்றப்பட்டது..

அபி தூங்கி கொண்டிருக்க,. "சாரி அபி.. கோவத்துல பன்னிட்டேன் டா.. மன்னிச்சிறு டா.. நான் எப்படி உன்னை விட்டு போவேன்,. நீ ஏன் டா இப்படிலாம் நினைக்கிறா.. நீ மனசுல என்ன நினைக்கிறானு சொல்லு டா.. நான் உனக்கு எல்லாத்தையும் தெளிவு படுத்துறேன்" என மனதிலே நினைத்து கொண்டு அவளின் முடியை கோதிவிட்டவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"என்ன அர்ஷா.. எதுவும் ப்ராப்ளம் இல்லையே" என கேட்டபடி வந்த ஸ்ரேயாவிடம்... "இல்ல மா.. ஸ்ட்ரென்த் இல்லாம மயங்கி விழுந்துட்டா.. டென் மினிட்ஸ்ல முழிச்சிருவானு டாக்டர் சொல்லிக்றாங்க" என அர்ஷா கூறவும்.. "சரி பா" என அருகில் இருந்து சோஃபாவில் அமர.. கூடவே ஷிவானியும் அமர்ந்து..அர்ஷா அபியின் முடியை கோதிவிட்டபடி இருப்பதை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்..
பல பல எங்ணங்களோடு..

ஸ்ரேயா கழிப்பறைக்கு சென்று விட.. இத்தனை நேரம் அபிக்கு எதனால் காலில் அடிப்பட்டிருந்திருக்கும் என யோசித்தவள்... அர்ஷாவிடம் கேட்கலாமா என எண்ணி "அர்ஷா.. " என அழைக்க.. சரியாக கண் விழித்தாள் அபி..

கண் விழித்த அபி..சுற்றி முற்றி பார்த்து விட்டு.. "நாம்ம ஏன் இங்கே இருக்கிறோம்??" என சிறிது யோசித்தவள்.. தங்கள் ஃப்ளேட்டில் நடந்தது நினைவு வரவும்.. திரும்பி அர்ஷாவை பார்க்க.. அப்பொழுது தான் ஷிவானியையும் பார்த்தாள்..

"நான் மயங்குனதும் ஏன் அர்ஷா ஷிவானியை கூப்பிட்டு வரனும்?? துணைக்கு கூப்பிட்டு வந்திருப்பானோ?? இல்லை இல்லை.. அப்படினா... எதுக்கு ஷிவானிய கூப்பிட்டு வந்திரக்கனும்.. ஸ்ரேயா அம்மா வ கூப்பிட்டு வந்திருக்கலாமே.. அப்போ ஷிவானிய கூப்பிட்டு வந்துருக்கானா.. அவனுக்கு என்னை விட ஷிவானி தான் முக்கியமா?? அதுக்கு தான் இந்த மாதிரி நேரத்திலயும் ஷிவானிய கூப்பிட்டு வந்திருக்கான்.. அப்போ ஷிவானி லவ்வ சொல்லிருப்பாலோ?? அதுனால தான் டிவோர்ஸ் அப்ளை பன்ன துடிக்கிறானோ.. அப்ப ஷிவானி தானே அவனுக்கு இம்பார்ட்டன்ட்.. அவளுக்காக என் கிட்ட டிவோர்ஸ் வாங்க வந்திருக்கான்" என பலதையும் யோசித்தவாரு பார்த்தபடி இருந்தாள்..

"அபி மா.. அபி.. என்ன யோசிச்சிட்டு இருக்கே" என கேட்ட அர்ஷாவிடம் தலையை அசைத்து ஒன்றும் இல்லை என்பது போல் செய்ய.. "சாரி டா.. நீ அப்படி கேட்கவும் கோவத்துல க்ளாஸ எரிஞ்சேன்.. உன் கால்ல விழும்னு நினைக்கலே டா" என உண்மையான வருத்தத்துடன் அர்ஷா கூற.. அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

பாவம்.. அவன் சொன்னதை சரியாக கவனித்திருந்தால் அர்ஷா தன்னை தான் விரும்புகிறான்னு தெரிந்து கொண்டிருப்பாலோ?? என்னவோ??

அவளோ.. அங்கே இருந்த ஷிவானியை பார்த்து கொண்டிருக்க.. "இப்ப எப்படி கா இருக்கு.. உங்களுக்கு பரவாயில்லையா??" என கேட்டவளை பார்த்து பொய்யாக சிரித்தவள்.. கண்களை மூடிக்கொண்டாள்..

பின்னர் ஸ்ரேயா மற்றும் ஷிவானி மருத்துவமனையிலிருந்து அர்ஷாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்..

அபிக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிவிட்டு அபியிடம் வந்தவன்.. "வா அபி.. போகலாம்" என கூற..அவளோ, கீழே காலை எடுத்து வைத்தவள் நிற்க முடியாமல் போக மெத்தையில் அமர்ந்தாள்..

அவள் வலியை புரிந்து கொண்டவள்.. அவளை கையால் தூக்க.. "ஹேய்.. விடு.. என்ன பன்ற..எல்லோரும் பார்க்க போறாங்க பாரு" என பதறியவளிடம்.. "யாரு பார்த்தா எனக்கு என்ன?? நான் என் பொண்டாட்டிய தானே தூக்குறேன்.. அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கலையே" என அபியை கையில் தூக்கியவாரு ஊர்தியை நோக்கி செல்ல.. அங்கு இருந்தவர்கள் இவர்களை பார்த்து சிரிக்கவும்.. கூச்சம் வர கீழே இறங்குவதிலேயே குறியாக இருந்தாள்.. ஒரு வழியால ஊர்திக்குள் அமர வைத்தவன் தாங்கள் இருக்கும் ஃபளேட்டை நோக்கி சென்றான்..

"நீ இறங்கு அபி.. கார்ர பார்க்கிங்ல விட்டுட்டு வரேன்" என கூறியவனிடம்.. "என்னால நிக்கலாம் முடியாது.. நீ தான் தூக்கிட்டு போகனும்" என மேலே நின்று கொண்டிருந்த ஷிவானியை பார்த்ததும் கூற.. அவளின் பார்வை சென்ற திசையை கவனிக்காதவன்,. "இவ்வளவு நேரம் இறக்கி விடுனு அளப்பரை பன்னா.. இப்ப சின்ன பிள்ளை மாதிரி தூக்க சொல்லுறா" என நினைத்து சிரித்து விட்டு அங்கே இருந்த வாட்ச்மேனை அழைத்து காரை பார்க்கிங்கில் விடுமாறு கூறிவிட்டு அபியை தூக்கி கொண்டு சென்றான்..

இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த ஷிவானி,. வேகமாக உள்ளே சென்று விட்டாள்..

தங்கள் அறையில் அபியை படுக்க வைத்தவன்.. அப்பொழுது தான் பசியை உணர்ந்தான்.. " மதியம் சாப்பிட்டு முடிந்ததும் நடந்த கலோபுரம்,. இப்ப நைட் ஆச்சி.. இன்னும் ஒன்னும் சாப்பிடலே.. வயிறு வேற பசிக்குதே" என புலம்பியவனுக்கு அப்பொழுது தான் ஒன்று உறைத்தது..

"இதை எப்படி மறந்தேன், மதியம் நான் மட்டும் தானே சாப்பிட்டேன்.. அபி என் கூட சேர்ந்து சாப்பிடலயே..! அப்படினா?? அவ காலைல சாப்பிட்டது தானா??.. அதுக்கப்புறம் சாப்பிடவே இல்லைலே..இப்போ நைட் ஆச்சி.. அவ தான் ரொம்ப பசியில இருப்பா.. எனக்கு வேறே செம்ம டயர்டா இருக்கே.. என்ன செய்ய??" என யோசித்தபடி இருக்கவும்.. "என்ன ஆச்சி அர்ஷா??.. என்ன யோசிச்சிட்டு இருக்கே??" என அபி கேட்க.. "அது........." என அர்ஷா வாயை திறக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு.. "இதோ வரேன்" என வெளியே சென்றான்..

"அர்ஷா.. உங்க ரெண்டு பேருக்கும் தோசை இருக்கு இதுல.. அம்மா குடுக்க சொன்னாங்க" என கூறி ஷிவானி ஹாட் பாக்ஸை குடுக்க.. "அது" என தடுமாறியவனிடம்..கட்டாயம் படுத்தி குடுத்து சென்றாள்..

"அர்ஷா" என ஷிவானி அழைத்த அழைப்பை உள்ளிருந்து கேட்டவள்.. இதுவரை அர்ஷா கிட்ட பேசுனது கூட இல்லைனு அர்ஷாவே சொல்லிக்கிறான்..
அப்படி இருக்கும் போது,.. "இவ எப்படி இவ்வளவு உரிமையா அர்ஷானு சொல்லுவா?? அதுவும் என் அர்ஷூ வ.. " என மனதில் கோவத்துடன் அமர்ந்திருந்தாள்..

"செம்ம பசி" என இரண்டு தட்டில் தோசையுடன் வந்த அர்ஷா அபியிடம் ஒன்றை நீட்ட.. அவள் அமைதியாக இருக்கவும்.,. ஒரு தோசையை பிய்த்து அவள் வாயில் வைக்க போக அதை அபி தட்டி விடவும் தட்டுடன் தோசையும் சேர்ந்து கீழே விழுந்தது..

ஏற்கனவே செம்ம பசியில் இருந்தவன்.. அபி தட்டி விடவும் கோவம் வர,. "என்ன டி.. உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கிறே?? உன் இஷ்டத்துக்கு பன்றே.. ஒரு ஆம்பளை எவ்வளவு டி பொறுத்து போவான்??" என அபியை பிடித்து உலுக்கியவன்,. "இப்ப என்ன தான் டி உன் ப்ரசன்னை" என கேட்க.. "நீ தான் டா.. நீ தான் என் ப்ரச்சனை" என கூறவும் அர்ஷா அதிர்ந்திருக்க.. அவளோ அவன் முகத்தை பார்க்காமல் இரு கையிலும் முகத்தில் மூடி அழுது கொண்டே.. "நீ ஏன் டா.. என் லைஃப்ல வந்தே.. நீ என் கிட்ட லவ்வ சொல்லும் போது உன்னை எனக்கு பிடிச்சிருந்தாலும் அப்ப உள்ள நிலமைல என் பேரன்ட்ஸ மட்டுமே நினைச்சி இதை விட்டு ஒதுங்கி இருந்தேன் டா.. அதுக்காக அப்ப உன்னை லவ் பன்னேனு சொல்லலை.. அக்ஸர் என் லைஃப்ல வந்ததும்,. நீ ஏன் என்னை விட்டுட்டு கத்தார் க்கு போனா.. உன் லவ் அவ்வளவு தானானு எனக்குள்ளயே நான் கேட்பேன்.. நான் அக்ஸர் கூட பேசி பல நாள் கஷ்டப்பட்டு அழுதிக்றேன் டா.. அப்போ என்னை நானே திட்டிக்குவேன்.. அர்ஷாவ நீ ஏன் டி வேணாம்னு சொன்னா.. நீயே உன் தலைல மண்ண அள்ளி போட்டுடியேனு.. என் ஃப்ரெண்ட்ஸ் ரம்யாவும், ஜராவும் சொல்லுவாங்க.. ஏன் டி இவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறா?? அர்ஷா உன்னையே நினைச்சிட்டு இருக்கானு.. ஆனா, அவுங்க கிட்ட அக்ஸர் கூட என்கேஜ்மென்ட் ஆகிடுச்சி.. இத பத்தி பேசாதேனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருவேன்.. ஆனா, அப்படி சொன்ன அடுத்த நிமிடமே.. இவுங்க சொன்ன மாதிரி உன் கிட்ட வந்துரனும்னு தோனும் டா.. குடும்பத்துல உள்ள மொத்த பேரையும் நிக்க வைச்சி,. எனக்கு அக்ஸர் வேணாம்.. அர்ஷாவ கல்யாணம் பன்னி வச்சிருங்கனு நடுவுல நின்னு கத்தனும் போல தோனும் டா.. ஆனா, என் மனச நான் யார் கிட்டையும் காமிக்கலே.. திறந்து சொல்லலே.. நான் செய்ஞ்ச ஒரே தப்பு அக்ஸர் கூட பேசுனது தான்.. ஆனா, அக்ஸர் கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் உன்னை லவ் பன்றத நான் உணர்ந்தேன்.. அக்ஸர் என்னை கஷ்டப்படுத்தும் போதுலாம் என் கண் முன்னாடி நீ பயந்துக்கிட்டே என் கிட்ட லவ் சொல்ல வந்த காட்சி தான் டா நியாபகம் வரும்.. எல்லாம் முடிஞ்சி.. நம்மளுக்கு கல்யாணம்னு முடிவு ஆனதும் நான் அவ்வளவு சந்தோஷம் பட்டேன் டா.. இந்த படத்துல சொல்லுவாங்களே.. உண்மையான காதல் கண்டிப்பா ஜெய்க்கும்னு.. அதே மாதிரி என் லவ் ஜெய்ச்சிருச்சினு.. ஆனா, என்னால அதை அனுபவிக்க முடியல டா.. என் கூட படிச்ச ஒருத்தி என் கிட்ட கேட்டா.. ஒருத்தன் கூட பேசிட்டு இன்னொருத்தவன கல்யாணம் பன்னிக்க வெக்கம் இல்லையானு என் கிட்ட கேட்டியே?? இப்ப நீ என்ன பன்றானு.. அவ கேட்டது என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி டா.. அதுனால தான் நான் அப்பவே உன்னை விட்டு பிரியனும்னு நினைச்சேன்.. அதுக்காக தான் உன்னை திட்டி உன்னை கஷ்டப்படுத்துனேன்.. அப்புறம் தான் ஷிவானி உன்னை லவ் பன்றானு தெரிஞ்சதும் அவ கூட உன்னை சேத்து வைச்சு உன் லைஃப்ப நல்லா ஆக்கனும்னு நினைச்சி அவ கிட்ட பேசுனேன் டா.. நான் சொன்ன மாதிரி தான் அவளும் நடந்துக்குட்டா.. பட் இதெல்லாம் தாங்கிக்குற சக்தி எனக்கு இல்லை டா.. எனக்கு நீ வேணும் டா.. எனக்கு நீ கண்டிப்பா வேணும்.. நீ இல்லாட்டி நான் பைத்தியமா போயிருவேன்.. என்னை மன்னிச்சிரு டா.. நான் இனி உன் பேச்ச கேட்டு அமைதியா இருப்பேன்.. உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன்.. என்னை விட்டு போயிராதே அர்ஷூ.. லவ் யூ டா.. லவ் யூ" என கண்களை மூடி குழுங்கி குழுங்கி அழுது கொண்டே சொன்னவளை பார்த்தவனின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்தது..




அர்ஷாவை சுற்றி நடந்த கலோபுரத்தில் விஷ்வா கூறியதை அபிடம் சொல்ல முற்றிலும் மறந்து விட்டானே..
பாவம்.. விஷ்வா..
ஸ்வேதாவின் நிலை என்னவோ??

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro