42
"ச்சே.. என்ன?? இவ்வளவு நேரமாச்சி.. இன்னும் இந்த பக்கிய காணோமே.. பசிக்க வேற செய்யுது.. இவன வச்சிக்கிட்டு" என புலம்பியபடி அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருந்தவளை.. பின்னிருந்து அனைத்தவன்.. "வச்சிக்கிட்டு.. வச்சிக்கிட்டு.. ஹ்ம்ம்.. ஹம்ம்.. அதுக்கு தான் பொண்டாட்டி நான் வெய்ட்டிங்" என கழுத்தில் முகம் புதைத்தவன்.. அவன் மீசையால் அவள் கழுத்தை உரச.. அதில் உடல் சிலிர்த்து நின்றவள் ஒரு நிமிடமே..
அடேய்.. உன்னை.. என பல்லை கடித்தவள்.. அவனை தள்ளி விட்டு.. "என்ன அர்ஷா பன்றே.. உனக்கே இது அசிங்கமா இல்லை.. பிடிக்காத பொண்ணை கல்யாணம் பன்னிக்கிட்டு.. இப்படி அசிங்கமா நடந்துக்குறே.. உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு.. நீ தொட்டாலே கருப்பான் பூச்சி என் மேலே ஏறுனாப்ல இருக்கு.. எத்தனை தடவை சொல்றது??. என்னை நிம்மதியா வாழ விடுனு.. உனக்கு எங்கே அதெல்லாம் புரிய போகுது...நீ எல்லாம் ஒரு ஆம்பளை..." என தன்னை அர்ஷா வெறுக்க வேண்டுமென்பதற்காக வாயில் வந்த அனைத்தையும் கொட்டி தீர்த்த அபி... அவன் முகத்தைப் பார்க்க.. அவனோ.. கோவத்தில் கண்கள் சிவக்க..
"என்ன டி.. என்ன சொன்னே.. நான் தொட்டா எப்படி இருக்கு.. ஹ்ம்ம்.. கருப்பான் பூச்சி தொடுற மாதிரி இருக்கா.. உன்னைஐஐஐஐஐஐ.. என்ன பார்த்து என்ன கேட்டா?? நான் ஆம்பளையானா.. அதை நான் நிரூபிக்கட்டுமா??" என கோவத்தில் அபியின் கழுத்தை பிடித்து இறுக்கியவன்.. அடுத்த நிமிடமே..
"ச்சே.. உங்களுக்குலாம் அவன.. அந்த அக்ஸர மாதிரி இனிக்க இனிக்க பேசி ஏமாத்துறவன தானே பிடிக்கும்.. அவன தானே கல்யாணம் பன்னிக்க ஆசை படுவீங்க.. உண்மையா இருக்குறவங்களை உங்களுக்கு பிடிக்காதே.. உங்களையே சுத்தி சுத்தி.. உங்களுக்காகவே காத்து கிடந்து.. மனசுக்கு பிடிச்ச ஒருத்தியவே கட்டிக்கிட்டு காலம் முழுக்க உள்ளங்கைல வச்சி தாங்கினாளும் எங்களை ஏத்துக்க மாட்டீங்க.. எங்களை பார்த்தா ஆம்பளையா தெரியாது.. இதே அவன மாதிரி.. அந்த அக்ஸர மாதிரி பல பொண்ணுங்க கூட தொடர்புல இருக்குறவன தானே பிடிக்கும்... இப்ப என்ன உனக்கு என்னை விட்டு பிரியனும்.. அவ்வளவு தானே.. டிவோர்ஸ் தரேன்.. போதுமா?? நாம்ம பிரிஞ்சிறலாம்" என கூறியவன்.. வேகமாக தன் அறைக்கு சென்று சடாரென கதவை மூடினான்..
அபியோ,.. தன் கழுத்தை பிடித்தவாறு,..
"ஏன் அர்ஷு?? ஏன்?? என்னை விட்டு போவியா?? என்ன டிவோர்ஸ் பன்னுவியா?? நீ அப்படிலாம் பன்ன மாட்டா தானே.. என்னை நீ உண்மையா லவ் பன்னிலே.. எனக்கு தெரியும்.. நான் இல்லாம உன்னால இருக்க முடியாதுனு.. ப்ளீஸ் அர்ஷு.. என்னை விட்டு போய்றாதே அருஷு.. ப்ளீஸ் டா" என தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்..
இரவு வெகுநேரமாகியும் அர்ஷா அறையிலிருந்து வெளியே வராமல் இருக்க.. அவன் வருவான் என எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..
வயிற்றுக்குள் ஏதோ "க்ர்ர்ரர்ர்ர்ர்... க்ர்ர்ரர்ர்ர்ர்" என சத்தம் கேட்க.. "அச்சோ.. பசிக்குதே.. இவன் வேற ரூம்ல போய் உட்கர்ந்துட்டான்.. எப்ப வருவானு தெரியலயே.. அழுதழுது தலை வேற வலிக்குது.. உனக்கு தேவை தான் அபி.. வந்ததும் வாய மூடிக்கிட்டு சாப்டுட்டு சண்டை போட்டிக்கலாம்.. அவசரம் அவசரமா சண்டைய போட்டு என்னெனமோ நடந்துச்சு" என மனதினுள் புலம்பியவாரு சோபாவில் அமர்ந்திருந்தாள்..
"இவ என்ன... இவ்வளவு கோவமா கத்திட்டு வந்திக்கிறேன்.. கொஞ்சம் கூட நம்ம மேலே பாசம் இல்லாம இருக்காலே.. எவ்வளவு நேரம் தான் கதவ தட்டுவானு வெய்ட் பன்றது.. வயிறு வேற பசிக்குது.. ஈவ்னிங் குடிச்ச டீ யோட இருக்கேன்.. பேசாம நாம்மலே கதவ திறந்துட்டு போவோமா?? வேணாம்.. அது ஆண் வர்க்கத்துக்கே அசிங்கம், அவமானம்.. நான் போக மாட்டேன்.. அவ கூப்பிடுற வரை.. நான் இங்கே தான் இருப்பேன்.. இன்னைக்குனு பார்த்து பசிய அடக்க முடியலயே" என புலம்பியவன் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்..
"இவன் எப்ப டோர் ஓப்பன் பன்னுவான்" என அபி அறை வாசலை பார்த்த படி இருக்க.. "இவள் எப்போ டோர க்னாக் பன்னுவாள்" என அர்ஷா கதவை பார்த்தவாரே இருந்தேன்..
இருவரும் இவர்களின் பிடியில் இருந்து இறங்காமல் இருக்க.. இவர்களின் வயிறு பசியால் துடித்தது...
பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே
கண் பார்வை மெல்ல தூண்டில் வீசுதே
ஹே பூக்கள் எங்கு பூக்கும் போதும் காற்றில்
வாசம் வீசுமே...
நாம் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இன்று பேசுமே..
ல ல ல லா.....❤❤❤❤
என அவளின் கைப்பேசி ஒளிக்க... அதை எடுத்து பாத்தவள்.. திரையில் டேட் என வரவும்.. அப்பா.. கால் பன்றாங்க.. என்னவா இருக்கும்?? என யோசித்தபடி எடுக்க சென்றவள்.. ஒரு நிமிடம் யோசனை செய்து அழைப்பை ஏற்க்காமல் வைத்தாள்..
திரும்ப திரும்ப அழைப்பு வர கண்களை மூடி பாடல் வரியை வாய்க்குள் முனுமுனுத்தப்படி இருந்தாள்..
"சீதா.. நான் அபிக்கு கால் பன்னிட்டே இருக்கேன்.. எடுக்க மாட்டிக்கிறா மா.. என்னவா இருக்கும்??" என ராம் கேட்க.. "மறுபடி கால் பன்னி பாருங்க.. ஏதாவுது வேலையா இருப்பா" என தொலைக்காட்சியை பார்த்தவாறு பதில் கூறினார்..
"நான் ஃபைவ் டைம் மேலே கால் பன்னிட்டேன்.. அவ எடுக்கவே மாட்டிக்குறா.. எனக்கு என்னமோ பயமா இருக்கு.. பேசாம அர்ஷாக்கு கால் பன்னவா?" என மறுபடியும் கைப்பேசியை எடுக்க சென்றவரின் கையை பிடித்த சீதா.. "ஏங்க.. உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?" என கேட்டவளை பார்த்து.. "என்ன டி.. பொசுக்குனு இப்படி கேட்டுட்டா?? நீ இப்படி கேக்குற அளவுக்கு நான் என்ன டி செய்ஞ்சேன்" என பாவமாக முகத்தை வைத்து கூறினார்..
"ப்ச்ச்... நீங்களாம் எப்படி தான் என்னை காதலிச்சு கல்யாணம் பன்னி பிள்ளைய பெத்துக்குடீங்களோ?" என சீதா தலையில் கை வைக்க.. "என்ன சீது மா.. அது கூட எப்படினு தெரியலயா?? உனக்கு வயசாச்சிலே மறந்திருக்கும்.. நான் வேணா நாம்ம அபிய எப்படி பெத்தோம்னு சொல்லி காமிக்கவா??" என சீதாவை உற்று பார்த்து ராம் கண்ணடிக்க..
அவரின் கேலி பேச்சில் முகம் சிவந்த சீதா.. பேச்சை திசை திருப்ப எண்ணி,..
"கிழவனுக்கு குசும்ப பாரு.. பேரன், பேத்தி எடுக்குற வயசுல பிள்ளை வேணுமாக்கும்.. ஹூஹூம்" என சீதா கூற.. அவளின் செயலில் கலகலவென சிரித்த ராம்,..
"சரி மா.. எதுக்கு அர்ஷாக்கு கால் பன்ன வேணாம்னு சொன்னே" என கேட்க..
"அது.. அது வந்து.. எப்பவும் ஃபோன் போட்டதும் எடுக்குற பிள்ளை இவ்வளவு கால் பன்னியும் எடுக்கலனா என்ன அர்த்தம்.. மாப்பிளை கூட இருப்பா.. இந்த நேரத்தில அவங்கள போய் டிஸ்டர்ப் பன்றது நல்லாவா இருக்கும்" என சீதா திக்கிதினறி கூற.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்.. "என்ன இருந்தாலும் அபி கிட்ட பேசுனா தான் எனக்கு மனசுக்கு நிம்மதியா இருக்கும்.. நான் ஒரு தடவை அர்ஷாக்கு கால் பன்றேன் என கைப்பேசியை கையில் எடுத்தார்..
"அடடா.. நாம்ம ஒன்னு நினைச்சா.. அது ஒன்னு நடக்குதே... அப்பா.. இந்நேரத்துக்கு அர்ஷா க்கு கால் பன்னனுமே.. ஏன் இன்னும் கால் பன்னலே.. நான் கால் அட்டெண்ட் பன்னலேனா அர்ஷாக்கு கால் பன்னி என் கிட்ட குடுக்க சொல்லுவாங்க.. அப்ப அவன் வெளியே வந்து ஃபோன தருவான்.. பேசலாம்னு நினைச்சேனே.. எதுவுமே நடக்கலயே" என யோசித்தவாரு அறை வாசலில் காதை வைத்து கேட்ட அபி மனதிர்க்குள் புலம்பியபடி நின்றாள்..
சொல்லமால் ரெண்டு நெஞ்சம் பேசுதே...
நில்லாமல் கண்கள் தூண்டில் வீசுதே...
ஹே காலம் வந்து மாயம் செய்து நெஞ்சை மாற்றி போகுதே
என்னுள்ளே இன்று காதல் வந்து கொஞ்சி கொஞ்சி பேசுதே
பேசுதே பேசுதே ஆ ஹ ஹா
பேசுதே பேசுதே நெஞ்சம் பேசுதே❤❤❤
என்ற ஒளி கேட்க..
"கள்ளன்.. என் பாட்ட ஆட்டைய போட்டு அவனும் வச்சிக்கிறான்" என புலம்பியபடி காதை வைத்து கூர்மையாக கேட்டு கொண்டிருந்தாள்..
"மாமா.. கால் பன்றாங்களே.. என்னவா இருக்கும்.. எதாவது முக்கியமா பேசனும்னா மட்டும் தானே நம்மளுக்கு கால் பன்னுவாங்க.. அப்போ.. நாம்ம எடுக்கலனா கண்டிப்பா அபிக்கு கால் பன்னி குடுக்க சொல்லுவாங்களே.. பேசாம நாம கால் அட்டெண்ட் பன்னாம இருப்போம்.. அபிக்கு கால் பன்னுவாங்க.. என் பொண்டாட்டி ஃபோன எடுத்துட்டு என் கிட்ட வந்துருவா.. எப்படி" என அழகாக திட்டமிட்டவன்.. அதை செயல்படுத்த முடிவெடுத்தான்..
"அட கடவுளே.. இவனும் நம்மள மாதிரி கேனதனமா யோசிச்சி ஃபோன எடுக்காம இருக்க ப்ளான் பன்றான் போலயே.. என்ன பன்றது.. ரொம்ப பசிக்கிதே" என தலையில் கை வைத்தாள்..
இது சரி இல்ல.. மாமா.. திரும்ப திரும்ப கால் பன்றாங்க.. ஏதாவது அர்ஜென்ட்டா இருக்கும்.. என்னனு கேட்போம் என அழைப்பை ஏற்றதும்.. "என்ன பா.. அபிக்கும் உங்களுக்கும் ரொம்ப நேரமா கால் பன்றேன்.. ஏன் எடுக்கலே" என ராம் பதற்றமாய் கேட்க.. "அது இல்ல மாமா.. ஃபோன் சைலன்ட்ல இருக்கு.. அபி கவனிச்சிருக்க மாட்டா" என கூறியவன்.. அந்த அபி பிசாசு நம்மள ரூம்ம விட்டு வெளியே வர வைக்க தான் அவ கால் அட்டெண்ட் பன்னாம இருப்பாலோ என மனதில் நினைத்த படி இருக்க.. "அர்ஷா.. அர்ஷா.." என ராம் அழைக்கும் சப்தத்தைக் கேட்டு "ஹான்... சொல்லுங்க மாமா" என்றான்..
"அபி கிட்ட ஃபோன குடுக்குறீங்களா??" என ராம் கேட்க.. "ஹான்.. அவ வேலையா இருக்கா மாமா" என கூறிய அர்ஷா.. பொடிநடையாக பூனை போல் சென்று சடாரென அறைக்கதவை திறக்க..
இதை சற்றும் எதிர்பாராத அபி கதவில் சாய்ந்த படி அர்ஷா பேசுறதை கேட்டுக்கொண்டிருந்தவள் அவன் கதவை திறந்ததும் அவன் மேலே விழ.. தன் மேலே அபி விழுவாள் என எதிர்ப்பார்க்காதவன் தரையில் விழ.. அவன் கைப்பேசியும் தரையில் விழுந்து.. விழுந்த வேகத்தில் தெறித்தது..
தன் மேல் பூ படர்வதை போல் உணர்ந்தவன்.. சிறிது நேரத்திர்க்கு முன் அபி பேசிய காட்சி படமாய் கண் முன் வர.. "ஹேய்.. எந்திரி.. " என கோவமாக அவளை தள்ளி விட்டு எழுந்தவன்.. "நீ ஏன் இங்கே நின்னுட்டு இருந்தா??" என கேட்க.. "ஹான்.. அது.. அது.. சாப்பிட கூப்பிட வந்தேன்" என சமாளித்தவளை கூர்ந்து கவனித்தவன்.. எழுந்து செல்ல போக.. "எனக்காக.. நீங்க ஒன்னும் சாப்பிடாம இருக்க வேண்டாம்" என அபி கூற.. "ஹாஹாஹா.. நான் ஏன் சாப்பிட இருக்க போறேன்.. நான் சம்பாதிக்குறேன்.. நான் சாப்பிடுவேன்.. உனக்காகலாம் நான் சாப்பிடாமல் இருக்க மாட்டேன்" என கூறி சாப்பிட செல்ல.. அவளும் முறைத்து விட்டு சாப்பிட ஆரம்பிக்க.. இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க கூட விரும்பாமல்(நேரமில்லாமல்) சாப்பாட்டில் மும்முரமாக இருந்தனர்..
எனக்கு கிடைத்த நல்ல ச்சான்ஸ்.. நான் கண்டிப்பா இந்த திட்டத்த செயல்படுத்தி வெற்றி அடைவேன்.. நான் உன்னை பார்க்க ஆவலா இருக்கேன் அர்ஷா.. உன் கூட பேச ரொம்ப ரொம்ப ஆவலா இருக்கேன்.. கண்டிப்பா.. நான் நினைச்சது நடக்கும்.. என் ஆசை நிறைவேறும்...
ஜெயம்.. நமக்கே..
என கண்களை மூடி தூங்கினாள் ஷிவானி..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro