40
ஏதோ புரிந்தும் புரியாததும் போல அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த அபி...திடீரென கைப்பேசியை எடுத்து பார்க்க...அதில் "ஹேப்பி ஜேர்னி" என்று ஒரு புதிய நம்பரிலிருந்து குறுஞ்செய்தி வந்தது...
"என்ன டா...இது அபிக்கு வந்த சோதனை".."யாரா இருக்கும் இது..கரேக்ட்டா நம்மளுக்கு மெஸேஜ் வந்துட்டு இருக்கு...நம்மள யாராவது நோட் பன்றாங்களோ" என நினைத்தவள்...
"பேசாம அர்ஷா கிட்ட சொல்லிருவோமா??..இல்ல..இல்ல.. வேணாம்..அப்புறம் அந்த பக்கி ஓவர் அட்வென்டேஜ் எடுத்துக்குவான்...ஹ்ம்ம் ஆமா...முன்னாடிலாம் இந்த அபிய பார்த்தாலே நடுங்குவான்..இப்ப என்னன்னா என் கிட்டயே ரொம்ப ஆடுறான்...இவனுக்கு சீக்கிரம் ஒரு ஸ்கெட்ச் போடனும்" என யோசித்தவள்..
"ச்சே...கடைசியா நம்மள வில்லியா ஆக்கிட்டானே" என தலையிலடித்துக் கொண்டாள்...
"என்ன... அபி டார்லிங்..என்ன யோசனை??" என குளித்து விட்டு தலையை துவட்டியவாறு கேட்டபடி வந்த அர்ஷாவை...அவனின் முடியில் இருந்து சொட்டும் நீரையும் அவன் மேல் முத்து போல் இருக்கும் நீரை மெய்மறந்து பார்த்தபடி இருக்க...அவளின் பார்வையில் சிறிது நேரம் கரைந்தவன் பின் சுயநினைவிர்க்கு வந்தவனாய்...
"என்ன பொண்டாட்டி..என்ன இப்படி பார்க்குரே..அப்புறம் எனக்கு வெக்கம் வெக்கமா வரும்...எதாவது ஏடாகூடமா செய்ஞ்சிருவேன்" என அர்ஷா கண்ணடிக்க..."ச்சீ பே" என திரும்பி கொண்டாள்...
"ச்சீ பே வா??...ச்சே..அர்ஷா..உன் நிலமை ரொம்ப மோஷம் டா..இவள வச்சிகிட்டு" என புலம்பியபடி இருக்க..."என்ன அர்ஷா... அபி கீழே விழுந்துட்டானு வந்து தைலம் கேட்டியே..இப்ப எப்படி இருக்கு" என்றபடி ஷிவானியின் தாய் ஸ்ரேயா வர.."வாங்க மா" என மரியாதை நிமித்தமாக எழ முயன்ற அபி வலியில் எழ முடியாமல் போக அப்படியா அமர்ந்தாள்...
"என்ன மா..இன்னும் வலி இருக்கா?? தைலம் போட்டியா??" என கேட்க...திருதிருவென விழித்தவள்..."இல்ல மா...போட முடியலே...இடுப்புல" என இழுத்து தடுமாறியவளை..."ஏன் அர்ஷா...பொண்டாட்டிய பார்த்துக்க மாட்டியா?? வலியில இருக்கா...தைலம் தேய்த்து விட மாட்டியா" என ஸ்ரேயா கூறி கொண்டு போகவும்...அர்ஷா தலையை சொரிய..."இல்ல மா..அது சரியாகிரும்" என அபி தடுமாறினாள்...
"அவ அப்படி தான் சொல்லுவா...அதுக்கு நீ அமைதியா இப்படி நிப்பியா?? போ..போய் அவளுக்கு தைலம் போட்டு விடு" என தைலத்தை அர்ஷாவிடம் குடுத்து ஸ்ரேயா அறையிலிருந்து வெளியே சென்றாள்...
"டேய்...வேணாம்..பக்கத்துல வராதே" என முறைத்தவளை...எனக்கே அப்ப அப்ப தான் ச்சான்ஸ் கிடைக்குது...அதை எப்படி கெடுக்கலாம்னே இந்த பக்கி ஐடியா பன்னுது என மனதில் நினைத்தவன்.."அப்டினா அவுங்க கிட்ட சொல்லவா??" என அழைக்க போக.."ஹேய்...வேண்டாம் வேண்டாம்" என பதற்றத்துடன் தடுத்தவளை ரசனையுடன் பார்த்தவன்...
மனதிர்க்குள் நன்றி ஸ்ரேயா மா என கூறியவாறு அவளின் பக்கம் முன்னோக்கி செல்ல...அவளோ பின்னால் செல்ல முயன்று...வலியில் முடியாமல் போக...அவனை அருகில் பார்த்த பயத்தில் "ப்ளீஸ் அர்ஷு" என அவளுக்கே கேட்காத குரலில் கூற...அதை கவனித்தவனில் முகத்தில் சிறு புன்முறுவல் பூத்தது..
"சரி அபி.. அப்ப நீயே போட்டுக்கோ...நான் ஹெல்ப் பன்றேன்...இல்லாட்டி நானே போட்டுவிட்ருவேன்" என கூறியவனை பார்த்து சரி என கூறியவள் அவனை அன்பாக அருகில் அழைத்து அவள் துப்டட்டாவை எடுத்து அவன் கண்களை கட்டி விட்டாள்..
"இதுக்கு தான் டி உன் பேச்ச கேட்க கூடாதுனு சொல்றது...பாவம் பட்டு இறக்கம் பட்டேன் பார்த்தியா?? எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்" என எரிச்ச பட்டு கொண்டே தட்டு தடுமாறி அவளின் இடுப்பு பக்கம் தைலம் தேய்க்க அவளுக்கு வசதியாக இருக்கும் படி அவள் அணிந்திருந்த சல்வாரை விளக்கினான்..
தைலம் தேய்த்த பிறகு அவன் கண்களில் கட்டிய துப்பட்டாவை அபி பிடிங்கி கொள்ள...அவளை பார்த்து சிரித்தவாறு தள்ளி சென்று நின்றவன்..." அபி மா, நான் எதையும் பார்க்கலே, எதையும் பார்க்கலே..நிஜமா எதையுமே பார்க்கலே..முக்கியமா இடுப்புல இருக்குற அந்த குட்டி க்யூட்டான மச்சத்த பார்க்கவே இல்லை" என அர்ஷா கண்ணடிக்க..."ஹ்ம்ம் சரி" என தலையசைத்தவள் சிறிது நேரத்தில்.."அட நாயே...என்ன டா சொன்னே..எருமை மாடு" என அருகில் இருக்கும் பொருட்களை எடுத்து அர்ஷாவின் மேல் வீசினாள்...
"ஓய்...அவுங்க லன்ச்க்கு கூப்பிட்டாங்களே...உன்னால வர முடியுமா?? இப்ப ஓகே வா?? இல்லாட்டி உனக்கு முடியலேனு நான் சொல்லிக்கிறேன்" என அபியிடம் கேட்டபடி வந்த அர்ஷாவை பார்த்து,."நவ் ஓகே.. போகலாம்" என கூற இருவரும் தயாராகி சென்றனர்...
வந்தவர்களை வரவேற்று அமர வைத்த ஸ்ரேயா... ஷிவானியிடம் இரண்டு க்ளாஸ் ஜுஸ் குடுத்து விட்டாள்...
வந்தவள் இருவரையும் பார்க்கும் நிலையில் இல்லாமல் ட்ரேயையே பார்த்தவாறு நீட்ட.. அர்ஷா எடுத்து கொண்டான்... அபி எடுக்காமல் அவளையே பார்த்த படி இருக்க...சிறிது நேரம் அப்படியே நின்ற ஷிவானி அபியை நோக்கி பார்வையை வீச அவளை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தாள் அபி...
பதிலுக்கு சிரிக்க முயன்ற ஸ்ரேயா,."எடுத்துக்கோங்க" என கூற...அவளை கூர்ந்து பார்த்தவள்...எடுத்து கொண்டாள்...
அடுத்து, சாப்பிடும் நேரம் முழுவதும் அபி ஷிவானியை பார்த்த படியே இருந்தாள்..
ஷிவானியின் பார்வையோ,. அர்ஷாவை வேறொரு மனநிலையில் பார்ப்பது...அர்ஷா அபிக்கு சில உணவு வகைகளை குடுத்து சாப்பிடும் சொல்லும் போது, ஷிவானியின் கண்களில் உள்ள ஏக்கம்... அபிக்கு விக்கல் வந்ததும் அர்ஷா பதறியடித்து தண்ணீர் எடுத்து அபியிடம் குடுக்கும் போது, ஷிவானியின் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர்-என அனைத்தையும் கவனித்தபடி இருந்தாள்..
மாலை வீட்டிர்க்கு தேவையான பொருட்களை வாங்க அர்ஷா வெளியே சென்றதும்...தனியாக இருப்பதால் ஷிவானியை அழைத்து பேசினாள்...
அபி சாதாரணமாக பேசியதர்க்கு கூட எதுவும் பேச முடியாமல் திணறி திணறி பேசினால் ஷிவானி..
"என்ன ஆச்சி மா..உடம்பு எதுவும் சரியில்லையா??" என அபி கேட்க...இது தான் சமையமென்று அவளும் தலை வலிக்குது என கூறி சென்றாள்..
இரவு அபி தோசையை கல்லில் ஊத்தியவாரு ஏதோ யோசனையில் இருக்க...அவளை பின்னாலிருந்து அனைத்தான் அர்ஷா..
அதை கூட கவனிக்காமல் இருந்தவளை பார்த்தவன்...இந்நேரம் பேயாட்டம் ஆடிக்கனுமே..இவ என்ன அமைதியா இருக்கா என நினைத்தவன் அவளை கவனித்து விட்டு..."சரி மேடம்..ஏதோ யோசனைல இருக்காங்க..நாம்ம நம்ம வேலைய பார்ப்போம்" என அவளின் கழுத்தில் மீசையால் குறுகுறுத்தவன்...
"ஆஆஆஆஆஆஆ" என கத்தினான்..
அபி அவனை முறைத்து கொண்டிருக்க..
"ஏன் டி...கைல சூடு வச்சே...இராட்ச்சசி" என முறைக்க..."நான் ராட்ச்சசியா நாயே...நீ ஏன் டா என்னை கட்டி பிடிச்சே" என முறைத்தவளை..."அப்டினா நான் கட்டி பிடிச்சது உனக்கு தெரியும் தானே..அப்ப தெரிஞ்சே அமைதியா இருந்துக்குறே..அப்படி தானே" என கண்ணடித்தவனை..."உன் மூஞ்சி...போடா" என திரும்பியவளை..."நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்...உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே தான்" என்றவனின் தலையில் மைதா மாவு முழுவதுமாக சரிந்தது😂
(அபி வேலை தான்😝)
அர்ஷா வேகமாக அபியை கட்டி அணைத்து ...அந்த மாவு அவள் மேல் படுமாறு செய்து ரகலை பன்னி... அபியிடமிருந்து பல அடிகளை வாங்கி...உருண்டு புரண்டு...இருவரும் பேய் கோலத்தில் நிற்க...தோசை கருவி போனது...
"டேய் அர்ஷா, நான் ஒன்னு கேப்பேன்..சொல்லுவியா" என கேட்டபடி வந்த அபியிடம்.."ஹ்ம்ம்..சொல்லாட்டி விடவா போறே..கேளு..சொல்றேன்" என்றான்...
"தப்பா நினைக்காதே...அந்த பொண்ணு ஷிவானி...உன்னை லவ் பன்றாலா??" என கேட்க..."நீ ரொம்ப சார்ப் தான் பேபி..வந்த ஃபர்ஸ்ட் டேயே கண்டுபிடிச்சிட்டா..பரவாயில்லையே...ஆமா டார்லிங்.. அவ என்ன லவ் பன்றா" என அர்ஷா கூறவும்...
"ஓஓஓஓஓஓ" என்றாள்...
"ஹ்ம்ம்...நானும் அவளை லவ் பன்றேன்" என்றான் அர்ஷா...
(என்னவா இருக்கும்😯😯)
Sry frndz...late ud ku...time kidaikalae...rmba tight...exam ku padika solli tourcher vera😕...mudiyalae..me pawam...mannichikonga chella
kuttiezz...
Ta ta
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro